பம்ப்ளிமாஸ்

பம்ப்ளிமாஸ் (Pomelo) என்பது "ருட்டேசியா" குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கிச்சிலிப் பழமாகும். இதன் தாவர பெயர் 'சிட்ரஸ் கிராண்டிஸ்' என்பதாகும். இது, "மலைப் பப்பளிமாசின்" (grapefruit) முக்கிய முன்னோடியுமாகும்.[2] தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது.[2] சாதாரணமாக உண்ணப்படும் பழமான இது, விழக்காலப் பழமாகவும் தெற்காசியாவிலும் கிழக்காசியாவிலும் பயன்படுகிறது.

Pomelo
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. maxima
இருசொற் பெயரீடு
Citrus maxima
(Johannes Burman) Elmer Drew Merrill.

விவரங்கள்

தொகு

பம்பளிமாசு மரமானது 5-15 மீட்டர் (16 - 50 அடி) உயரம்வரை வளரக்கூடியது. இதன் அடிமரம் 10-30 செமீ (4-12 அங்குலம்) பருமனுடன் வளைந்தும் , கிளைகள் ஒழுங்கற்றுத் தாழ்வானவையாகவும் இருக்கும்.[2] இலைக்காம்புகள் தனித்த பிரிவுகளுடன், இலைகள் ஒன்றுவிட்டொன்றாக நீள்வட்ட வடிவில் 5-20 செமீ (2-8 அங்குலம்) நீளத்தில் மேற்புறம் மந்த பச்சை நிறத்தோடும் ரோமங்களுடைய அடிப்பக்கத்தையும் கொண்டிருக்கும்.[2] பூக்கள் தனித்தனியாகவோ அல்லது கொத்துக்களாகவோ நல்ல மணத்துடன் மஞ்சள்-வெள்ளை நிறத்தில் இருக்கும்.[2]

இதன் பழம் 15-25 செமீ (6-10 அங்குலம்) விட்டமும் 1-2 கிலோகிராம் எடையுமுடையது.[3] ஆறுவகையான பம்பளிமாசு பழங்கள் உள்ளன[4] பொதுவாக இதன் பழங்களில் விதைகள் எண்ணிக்கையில் குறைவாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும்; எனினும் சில ரகங்களில் எண்ணற்ற விதைகளும் இருக்கும்.[2]

இதன் பழங்கள் மிக மிகப் பெரியவைகளாக இருக்கும். பழத்தோல் கனமாக இருக்கும். பழத்தோலை உரித்து உள்ளிருக்கும் சுளையை உண்ணலாம். சிவப்பு மற்றும் வெள்ளை சுளைகளைக் கொண்ட இருவகைகள் உள்ளன.

ஊட்டச்சத்து

தொகு
பம்பளிமாசு (பச்சையானது)
 
பம்பளிமாசின் சதைப்பகுதி
உணவாற்றல்159 கிசூ (38 கலோரி)
9.62 g
நார்ப்பொருள்1 g
0.04 g
0.76 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(3%)
0.034 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.027 மிகி
நியாசின் (B3)
(1%)
0.22 மிகி
உயிர்ச்சத்து பி6
(3%)
0.036 மிகி
உயிர்ச்சத்து சி
(73%)
61 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
இரும்பு
(1%)
0.11 மிகி
மக்னீசியம்
(2%)
6 மிகி
மாங்கனீசு
(1%)
0.017 மிகி
பாசுபரசு
(2%)
17 மிகி
பொட்டாசியம்
(5%)
216 மிகி
சோடியம்
(0%)
1 மிகி
துத்தநாகம்
(1%)
0.08 மிகி
நீர்89 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

பம்பளிமாசின் சதைப்பகுதியில் 89% நீர், 10% கார்போவைதரேட்டுகள், 1% புரதம், மிகச்சிறியளவு கொழுப்பு (அட்டவணை) உள்ளது. 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டால், 159 கிலோjoules (38 kilocalories) உணவாற்றலும், மிக அதிகளவு உயிர்ச்சத்து சி (தினசரி அளவில் 73%) பெறப்படுகிறது. வேறெந்த குறைந்த ஊட்டச்சத்துகளும் இல்லை

மேற்கோள்கள்

தொகு
  1. Botanic Gardens Conservation International (BGCI).; IUCN SSC Global Tree Specialist Group (2019). "Citrus maxima". IUCN Red List of Threatened Species 2019: e.T62042732A147027490. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T62042732A147027490.en. https://www.iucnredlist.org/species/62042732/147027490. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Morton, Julia F. (1987). "Pummelo: Citrus maxima". Fruits of warm climates. NewCROP, New Crop Resource Online Program, Center for New Crops and Plant Products, Purdue University. pp. 147–151. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020 – via purdue.edu.
  3. "Pomelo: Growing the granddaddy of grapefruit", SFGate.com, December 25, 2004
  4. Pomelos, grapefruit's sweeter and mellower relative, have a wealth of flavor, by Jeanne Kelley, in the Los Angeles Times; published February 12, 2016; retrieved November 19, 2021 (via இணைய ஆவணகம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்ப்ளிமாஸ்&oldid=4044306" இலிருந்து மீள்விக்கப்பட்டது