பயனர்:Arulselvans/மணல்தொட்டி

இங்கோகம் பாலா தேவி
சுய தகவல்கள்
பிறந்த நாள்2 பெப்ரவரி 1990 (1990-02-02) (அகவை 34)
பிறந்த இடம்மணிப்பூர், இந்தியா
ஆடும் நிலை(கள்)Forward (association football)#Striker
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
Rangers W.F.C.
எண்10
2017Eastern Sporting Union3(4)
2017–2018KRYPHSA F.C.7(12)
பன்னாட்டு வாழ்வழி
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2005India U163(5)
2006–2007India women's national under-19 football team8(5)
2010–India women's national football team38(36)
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 6 November 2019 அன்று சேகரிக்கப்பட்டது.

இங்கோகம் பாலா தேவி (Ngangom Bala Devi) ஓர் இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையாவார். 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 அன்று பிறந்தார். இசுக்காட்லாந்து பெண்கள் கால்பந்தாட்ட கூட்டிணைவுப் போட்டிகளில் விளையாடும் ரேஞ்சர்சு கால்பந்து அணியிலும்[1] இந்தியப் பெண்கள் தேசிய கால்பந்தாட்ட அணியிலும் முன்கள வீரராக பாலா தேவி விளையாடி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பாலா தேவி வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பிறந்து வளர்ந்தார். கால்பந்தாட்டம் தேவியின் குடும்பத்தில் ஒரு மரபாகவே இருந்தது. தன் இளம் வயதிலேயே தேவி கால்பந்தாட்டத்தை ஆடத் தொடங்கினார். 11 வயதில் உள்ளூர் பெண்கள் கால்பத்தாட்டக் குழுவில் இணைந்து விளையாடத் தொடங்கினார். இவரது தந்தையின் பிரியமான பொழுது போக்குகளில் ஒன்றும் கால்பந்தாட்டமாகும். தேவி தனது தந்தை, மூத்த சகோதரர், இரட்டையரான சகோதரிகள் ஆகியோருடன் கால்பந்தாட்டம் ஆடிவந்தார். குறிப்பாக ஆண்களுடன் கால்பந்தாட்டம் ஆடியபடியே தேவி வளர்ந்தார். [2] வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம் போன்ற விளையாட்டுகளையும் தேவி விளையாடி வந்தார். மணிப்பூர் மாநிலத்திலுள்ள ஓயினாம் நகரிலுள்ள ஓனம் தம்பல் மார்க் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். குடும்பத்தில் பாலா தேவி மட்டுமே தொழில்முறை கால்பந்தாட்டம் ஆடுமளவுக்கு உயர்ந்தார்.

தொழில்முறை சாதனைகள்

தொகு
  1. 2002 ஆம் ஆண்டு அசாமில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் சாம்பியன் பட்டப் போட்டியில் பங்கேற்ற மணிப்பூர் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் என்ற சிறப்பு வழங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு போட்டியிலும் இந்த சிறப்பு மீண்டும் இவருக்குக் கிடைத்தது.
  2. இந்திய மகளிர் கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டியில் மணிப்பூர் மூத்த பெண்கள் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
  3. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் கால்பந்து சாம்பியன்பட்டத்தை வென்ற மணிப்பூர் அணியின் ஒரு பகுதியாக தேவி விளையாடினார். மணிப்பூர் ஒடிசாவை இறுதிப்போட்டியில் 3–1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
  4. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு சாம்பியன் பட்டப் போட்டியில் வென்ற இந்திய அணியில் தேவி அங்கம் வகித்தார். [4]
  5. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்டப் பிரிவில் தேவி அங்கம் வகித்த மணிப்பூர் அணி தங்கப் பதக்கம் வென்றது. [5]
  6. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 அன்று ஐரோப்பாவில் நடைபெற்ற ஒரு தொழில்முறை கால்பந்து போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பாலா தேவி பெற்றார். [6]
  7. பல நட்சத்திர வீர்ர்களுடன் போட்டியிட்டு ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு வழங்கும் இந்த வார சிறந்த கால்பந்தாட்ட வீர்ர் என்ற விருதை தேவி வென்றுள்ளார். இவ்விருதை வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பு தேவிக்கு கிடைத்தது.. [7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rangers Sign Indian International Bala Devi". Rangers Football Club. 29 January 2020.
  2. Yen, Samarjit (3 January 2015). "AIFF’s Footballer of the year: Ng Bala Devi". IFP.co.in. http://ifp.co.in/page/items/24749/aiffs-footballer-of-the-year-ng-bala-devi. பார்த்த நாள்: 15 March 2015. 
  3. "International Women's Day Special: Interview with Indian women's football team striker Ngangom Bala Devi". SportsKeeda. 8 March 2015. http://www.sportskeeda.com/football/international-womens-day-special-interview-with. பார்த்த நாள்: 15 March 2015. 
  4. Abbasi, Kashif (20 November 2014). "Indian women close in on hat-trick of SAFF crowns". Dawn. http://www.dawn.com/news/1145551. பார்த்த நாள்: 15 March 2015. 
  5. "Manipur clinch 4 gold, 1 silver and 3 bronze medals Manipur ranked at 7th position on the 10th day". E-Pao. 10 February 2015. http://e-pao.net/GP.asp?src=Sport1..110215.feb15. பார்த்த நாள்: 15 March 2015. 
  6. "Bala Devi becomes first Indian woman footballer to score in Europe". Goal.com. 6 December 2020.
  7. "Bala Devi AFC International player of the week". 20 December 2020. https://footballexpress.in/bala-devi-beats-son-heung-min-to-win-afc-international-player-of-the-week/. 
சஃபாலி வர்மா
Shafali Verma
 
2020 பன்னாட்டு 20/20 துடுப்பாட்டப் போட்டியில் உலகக்கோப்பையில், 6 ஓட்டங்கள் அடிக்கும் வர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சஃபாலி வர்மா
பிறப்பு28 சனவரி 2004 (2004-01-28) (அகவை 20)
ரோத்தக், அரியானா, India[1]
மட்டையாட்ட நடைவலது கை ஆட்டம்
பங்குமட்டைப்பந்தாட்ட வீராங்கனை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019 முதல்ஐபிஎல் வெலாசிட்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் 20/20 துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 18
ஓட்டங்கள் 485
மட்டையாட்ட சராசரி 28.52
100கள்/50கள் 0/2
அதியுயர் ஓட்டம் 73
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/–
மூலம்: Cricinfo, 30 January 2021

சஃபாலி வர்மா (Shafali Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசியப் பெண்கள் அணியில் சஃபாலி விளையாடி வருகிறார். [2][3][4] 2019 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் இந்தியப் பெண்கள் 20/20 அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்காக இவர் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். [5]

தனிப்பட்ட வாழ்வும் பின்புலமும்

தொகு

அரியானா மாநிலத்திலுள்ள ரோத்தக் நகரில் சஃபாலி வர்மா பிறந்தார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஃபாலிக்கு 9 வயதாக இருக்கும்போது சச்சின் டெண்டுல்கரின் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டதால் இவருக்கு துடுப்பாட்டத்தின் மீது ஆர்வம் உண்டானது. இவரது தந்தையும் சகோதரரும் இந்த ஆர்வத்தை மேலும் தூண்டி ஆதரவளித்துள்ளனர். ஓர் உள்ளூர் போட்டியில் உடல்நிலை சரியிலாமலிருந்த தனது சகோதரனுக்குப் பதிலாக அப்போட்டியில் விளையாட சஃபாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் இவருக்கு கிடைத்தன.

தொழில்முறை சாதனைகள்

தொகு
  1. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய மகளிர் இருபது -20 அணியில் சஃபாலி இடம் பெற்றார். [6] இப்போட்டியே இவருக்கு அறிமுகப் போட்டியாகும். 15 வயதில் [7] அறிமுகம் என்பதால் இந்திய அணியில் மிக இளம் வயது வீராங்கனை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. [8]
  2. 2019 ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய மகளிர் இருபது -20 அணியில் சஃபாலி இடம் பெற்றார். இப்போட்டியில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பு சஃபாலிக்கு சேர்ந்தது. [9][10] 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 158 ஓட்டங்கள் எடுத்து தொடர் நாயகி என்ற விருதும் கிடைத்தது. [11]
  3. 2020 ஆண்டு சனவரியில் ஆத்திரேலியாவுக்கு எதிரான பெண்கள் 20/20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இடம்பெற்றார். தற்பொழுது பெண்கள் 20/20 விளையாட்டு வீரர்களின் தரவரிசைப்  பட்டியலில் சஃபாலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Women's T20 World Cup: Rohtak to Sydney, the journey of Shafali Verma". SportStar. பார்க்கப்பட்ட நாள் 21 February 2020.
  2. "Shafali Verma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
  3. "Shafali Verma, the tomboy teen who could be India's next cricket superstar". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
  4. "Women's T20 World Cup: Shafali Verma, India's 16-year-old 'rock star'". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  5. "20 women cricketers for the 2020s". The Cricket Monthly. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
  6. "Fifteen-year-old Shafali Verma gets maiden India call-up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
  7. "1st T20I (N), South Africa Women tour of India at Surat, Sep 24 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
  8. "Hadlee's nine-for". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
  9. "Shafali Verma, India's 15-year-old prodigy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  10. "India's Shafali Verma, 15, becomes youngest player to score a fifty for country". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 12 November 2019.
  11. "Jemimah, Veda help IND blank WI 5-0 in T20Is". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
  12. "Celebrating up and coming cricketers this International Youth Day". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.

புற இணைப்புகள்

தொகு
சோனம் மாலிக்
Sonam Malik
 
மல்யுத்த விளையாட்டு வீராங்கனை
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு14 ஏப்ரல் 2002
மதினா கிராமம், சோனிபட், ஹரியானா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமல்யுத்தம்,எடைபிரிவு:62 கி.கி

சோனம் மாலிக் (Sonam Malik) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீராங்கனையாவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார். [1] தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது மட்டுமின்றி உலக இளையோர் மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் 2 தங்கங்களை வென்றுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கை தோற்கடித்து [2] டோக்கியோ [3]ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அரியானா மாநிலத்திலுள்ள சோனிபத் நகரத்தின் மதினா என்ற கிராமத்தில் சோனம் மாலிக் பிறந்தார். தந்தை ராச் மாலிக்கும் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் மல்யுத்த வீர்ர்களாவர். எனவே 12 ஆம் வயதிலிருந்தே சோனம் மல்யுத்தம் கற்க ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு முதல் சுபாசு சந்திரபோசு விளையாட்டு வளாகத்தில் அச்மீர் மாலிக் என்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் சோனம் பயிற்சி பெற்றார்.

சாதனைகள்

தொகு
  1. 2016 தேசிய பள்ளிகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  2. 2017 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் ஏதென்சு நகரில் நடைபெற்ற உலக இளையோர் மல்யுத்தப் போட்டியில் சோனம் தங்கப் பதக்கம் வென்றார். [4]
  3. 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆக்ராவில் நடைபெற்ற உலக பள்ளிகளுக்கு எதிரான மல்யுத்தப் போட்டியில் சோனம் தங்கப் பதக்கம் வென்றார். இதைதவிர 2017 ஆம் ஆண்டில் தேசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஆகியவற்றையும் வென்றுள்ளார். [5]
  4. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மற்றும் ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  5. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய பல்கலைக்கழகங்க இடையிலாலான போட்டியில் தங்கமும், ஆசிய இளையோர் போட்டியில் வெண்கலமும், உலக இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "பிபிசி தமிழ்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. PTI. "Sonam Malik downs Sakshi again, makes cut for Olympic qualifiers". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  3. "ஒலிம்பிக் கனவு: கைகள் செயலிழந்த பின்னும் மல்யுத்தக் களத்தில் சாதித்த சோனம் மாலிக்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  4. "Sonam Malik Clinches Gold At World Cadet Wrestling Championship - SheThePeople TV" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  5. "Sonam Malik wrestled with paralysis to see out her destiny". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.

4. மானசி கிரீசுசந்திர யோசி

தொகு

மானசி கிரீசுசந்திர யோசி (Manasi Girishchandra Joshi) இந்திய மாற்றுத்திறனாளி வகை இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனையாவார். 2019 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் பசெல் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்ட மாற்ருத்திறனாளி வகை இறகுபந்து போட்டியில் அந்த நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பாருல் பார்மரை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றார்


மென்பொறியாளராகப் பயிற்சி பெற்ற ஜோஷி,  2011இல் நடந்த ஒரு கார் விபத்தில்  ஒரு  காலை இழந்தார். பேட்மிண்டன் அவருக்கு மீள்வதற்கான ஒரு கருவியாக அமைந்து. இறுதியில் புதிய லட்சியத்தை உருவாக்கித் தந்தது.


வாழ்வும் குடும்பப் பின்னணியும்


பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற  தனது தந்தையுடன் இவர் ஆறு வயது முதல்  இறகுப்பந்து விளையாடத் தொடங்கினார். குழந்தையாக இருந்த மானசி, பாடத்திட்டத்திற்கு வெளியே கூடுதலான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும், பேட்மிண்டன் அவருக்கு விருப்பமானதாக இருக்க  தந்தையே  முதல் பயிற்சியாளராகவும்  இருந்தார்.


மானசி அனைத்து வகையான வளர்ச்சிகளிலும் ஆர்வம் காட்டியபோது,  குடும்பத்தினர் கல்வியிலேயே அவரது கவனக் குவிப்பு இருக்க வேண்டும் என விரும்பினர்.  அவரது தந்தையின் விருப்பம், குழந்தைகள் கல்வியுலகில் சிறந்து விளங்க வேண்டும் என்பதாக இருந்தது. அதனால்தான், மானசி கணினி அறிவியலைப் படிக்கவும் பின்னாளில் மென்பொருள் பொறியாளராக உருவாகவும் நேர்ந்தது. [1]


மும்பைப் பல்கலைக்கழகத்தின், கே. ஜே சோமையா பொறியியல் கல்லூரியில்   மின்னணுப் பொறியியலில் 2010 இல் பட்டம் பெற்றுத் தேறிய இவர்  மென்பொறியாளராகப் பணி புரியத் தொடங்கினார்.


2011 டிசம்பரில் மானசி மோட்டார் சைக்கிளில்  அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது, எதிர்ப்புறம் தவறான பாதையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரி   மோதி,  இவரது காலின் மேல் ஏறியது.


ஆம்புலன்ஸசு வந்து சேர மணிக்கணக்கில் தாமதமானதால்,  விபத்து  இவருக்கு ஒரு கொடூரமான நிகழ்வாக அமைந்தது. வேறு வழியின்றி, காவலர்கள் இவரை ஒரு உடைந்து போன தூக்குப்படுக்கையில் அமர்த்தி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த 9 மணி நேரத்திற்குப்  பின்னரே இவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைத்தது.  மானசி 45 நாட்கள் மருத்துவமனை  சிகிச்சையில் இருந்தார்மானசியின் காலைப் பாதுகாப்பதே மருத்துவர்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. 5 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் காலில் சீழ்பிடித்ததால், அனைத்து முயற்சிகளும் வீணாயின. வேறு வழியின்றி இவரது காலை வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று. [1]


புனர்வாழ்வு மிக மெதுவாகவே தொடங்கியது. அவர் நடப்பதற்கு வசதியாக ஒரு செயற்கைக் கால் பெறப்பட்டது. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு வசதியாக, ஜோஷி பேட்மிண்டனில் ஈடுபட முடிவு செய்தார். பாரா- பேட்மிண்டனுக்காக பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தார். இறுதியில் அதுவே இந்திய தேசிய அணியில் அவரை இடம்பெறச் செய்தது.


தொழில்முறை சாதனைகள்


2014இல் தொழில்முறையாக போட்டிகளில் விளையாட  முடிவு செய்தது முதலாகவே, ஜோஷி தேசிய, சர்வதேச போட்டிகளில் பல குறிப்பிடத்தக்க பதக்கங்களைப் பெற்றார்.


2015 ஆம் ஆண்டு இவருக்கு முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது. பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன் பட்டப்  போட்டிகளில் கலப்பு இரட்டையர் போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பின்னர், 2017 இல் இதே போட்டியில் ஒற்றையர் பிரிவில்  வெண்கலம் பெற்றார். [3]


2016 இல், ஆசிய பாரா- பேட்மிண்டன் சாம்பிய பட்டப்   போட்டிகளில் பெண்கள் தனித்துப் போட்டியிடும் பிரிவிலும், பெண்கள் இரட்டையர் போட்டியிலும்    வெண்கலம்  பெற்றார்.


2017 பாரா -பேட்மிண்டன் உலக சாம்பியன் பட்டப்  போட்டிகளில்  மீண்டும் வெண்கலப் பதக்கம் பெற்றார். [5]


2018இல், ஜோஷி ஆசிய பாரா போட்டிகளிலும், தாய்லாந்தில் நடந்த பாரா- பேட்மிண்டன் சர்வதேசப் போட்டிகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.


அதே ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள புகழ்மிக்க இந்தியப் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்தின் அகாடமியில் பயிற்சிக்காக இணைந்தார்.


அடுத்த ஆண்டில் சுட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற உலக பாரா- பேட்மிண்டன் சாம்பியன்போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தைப் பெற்று வந்தார்.


பிபிசியின் உலகின் ஆகச்சிறந்த சாதனைப் பெண்கள் பட்டியல் 23  நவம்பர் 2020இல் அறிவிக்கப்பட்டபோது, ஜோஷி அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.


முன்னதாக, 2020 ஆண்டுக்கான பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இருந்த 5 பேரில் மானசியும் ஒருவர். [4]


மானசியைப் போலவே, வடிவமைக்கப்பட்ட பார்பி பொம்மை, அவரது பெருமைக்குக் கட்டியங் கூறுவதாக அமைந்தது. இந்த பார்பி பொம்மைக்கு ஒரு கால் செயற்கைக் காலாக இருந்தது. சர்வதேச பெண் குழந்தைகள் தினமான 11 அக்டோபர் 2020 அன்று இந்த பொம்மை வெளியிடப்பட்டது. [6]


மேற்பார்வைகள்


Manasi Joshi: The accident that created a world champion (1)

मानसी जोशी: BBC Indian Sportswoman of the Year की नॉमिनी (2)

Who is Manasi Joshi, who won gold at BWF Para Badminton World Championships? (3)

BBC 100 Women 2020: Who is on the list this year? (4)

https://www.bbc.com/tamil/sport-51326745 (5)

https://sportstar.thehindu.com/starlife/barbie-welcomes-indian-para-athlete-manasi-joshi-to-join-the-sheroes-family-dipa-karmakar-badminton-news/article32845892.ece (6)


பெட்டிச் செய்திக்கான தகவல்கள்


தனிப்பட்ட தகவல்கள்


முழுப்பெயர்: மானசி கிரிஷ்சந்தர ஜோஷி

நாடு: இந்தியா

பிறப்பு: 11 ஜூன் 1989 (வயது 31)


இந்தியாவை பிரதிநிதிப்படுத்தும்:

பாரா பேட்மிண்டன் வீராங்கனை


BWF  பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்கள்


தங்கப் பதக்கம் - முதலிடம் 2019 பசெல், ஸ்விட்சர்லாந்து

வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2015 ஸ்டோக் மேன்டெவில், இங்கிலாந்து

வெங்கலப் பதக்கம் - மூன்றாம் இடம் ‍ 2017 உல்சான், தென் கொரியா


ஆசிய சாம்பியன்ஷிப்கள்


வெண்கலப் பதக்கம் ‍- மூன்றாம் இடம் 2016 ஆசிய பாரா-பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்


சர்வதேச சாம்பியன்ஷிப்கள்


வெண்கலப் பதக்கம் - ‍ மூன்றாம் இடம் 2018 தாய்லாந்து பாரா- பேட்மிண்டன் சர்வதேச பெண்கள் ஒற்றையர் போட்டி


ஆசிய பாரா விளையாட்டுகள்


வெண்கலப் பதக்கம் - ‍ மூன்றாம் இடம் 2018 பெண்கள் ஒற்றையர் போட்டி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arulselvans/மணல்தொட்டி&oldid=3108340" இலிருந்து மீள்விக்கப்பட்டது