பயனர்:Santhoshshanmugam19/மணல்தொட்டி
சேராக்குப்பம்
தொகுசேராக்குப்பம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | குறிஞ்சிப்பாடி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 850+ (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சேராக்குப்பம் எனும் கிராமம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நகராட்சியில் உள்ளது, இது வடலூரின் பழம்பெரும் கிராமமாகும்.இந்த கிராமம் 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும்
சேராக்குப்பத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊருக்கு நடுவே கடலூர்-சேலம் தொடர்வண்டிp பாதை செல்கிறது. சேராக்குப்பத்திலிருந்து வடலூர் செல்லும் வழியிலும் குறிஞ்சிபாடி செல்லும் வழியிலும் தொடர்வண்டி பாதை குறுக்கிடுகிறது. இவை ஆளில்லா கடவையாக உள்ளது.
வரலாறு
தொகுஇந்த கிராமம் 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும், இந்த கிராமமே வடலூரின் தாய் கிராமமாகும், வடலூர் எனும் நகரம் உருவாந்திரத்துக்கு முன்னே உருவானது
கோயில்
தொகு- சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில்
இக்கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் செல்லியம்மன் சன்னதியும், அய்யனார், விநாயகர், முருகர், மதுரை வீரன் ,அய்யப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
நீர் நிலைகள்
தொகு13 ஆம் நூற்றாண்டில் கிபி 1243 முதல் கிபி 1279 வரை சேந்தமங்கலத்தைத் தலைநகராக கொண்டு புதுச்சேரி, கடலூர் மாவட்ட பகுதிகளை ஆட்சி புரிந்த பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனால் வெட்டப்பட்டது.மன்னனின் சிறப்பு பெயர் அயன்பெருமாள். அவருடைய சிறப்பு பெயரிலுள்ள அயன் பெயரால் இந்த ஏரி அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மருவி அய்யனேரி என வழங்கப்பட்டு வருகிறது, இம்மன்னனே பெருமாள் ஏரியையும் வெட்டினான் என்று வரலாறு கூறுகின்றது.
- மூத்த ஐயன் குளம்
சந்தை
தொகுசேராக்குப்பம் செல்லியம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பெரிய சந்தை இதுவாகும். இங்கு உழவர் சந்தை தினந்தோறும் செயல்படுகிறது
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகுஅ.தங்கராசு, ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.