பயனர்:Sriveenkat/மணல்தொட்டி

சூச்சே

தொகு

சூச்சே அல்லது யூச்சே (English: /ˈ/ (கேட்க), JOO-chay; கொரிய மொழி[tɕutɕʰe] (கேட்க)) அதிகாரப்பூர்வமாக சூச்சே கருத்தியல், வட கொரிய நாட்டு கருத்தியலும், கொரியத் தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தியலும் ஆகும். வட கொரிய மூலங்கள் இந்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் நாட்டின் நிறுவனரும் முதல் தலைவருமான கிம் இல் சுங் என்று கூறுகின்றன. கிம் இல் சுங்கின் மகன் கிம் ஜாங் இல், 1970களில் இதை ஒரு தனித்துவமிக்க கருத்தியலாக அறிவிக்கும் வரை இதை ஒரு தனித்துவமிக்க கருத்தியலாக அறிவிக்கும் வரை சூச்சே முதலில் மார்க்சியம்-லெனினிசத்தின் வகை சார்ந்த ஒரு கருத்தியலாக கருதப்பட்டது. கிம் ஜாங் இல் 1980கள் மற்றும் 1990களில் மார்க்சிசம்-லெனினிசத்தில் இருந்து கருத்தியல் இடைவெளிகளை உருவாக்கி தனது தந்தையின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதன் மூலம் சூச்சேவை மேலும் வளர்த்தார்.

சூச்சே மார்க்சியம்-லெனினிசத்தின் வரலாற்று பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஒருங்கிணைக்கிறது, ஆனால் தனிநபர், தேசிய அரசு மற்றும் தேசிய இறையாண்மை ஆகியவற்றையும் வலுவாக வலியுறுத்துகிறது. அரசியல், பொருளாதாரம், இராணுவ சுதந்திரம் ஆகியவற்றை அடைவதன் மூலம் ஒரு நாடு தன்னிறைவு பெற்று முன்னேறும் என்று சூச்சே கூறுகிறது. 1970களில் கிம் இல் சுங்கின் வாரிசாக கிம் ஜாங் இல் தோன்றியதால், ஒற்றைக் கருத்தியல் அமைப்பை நிறுவுவதற்கான பத்து கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, தலைவருக்கு விசுவாசம் செலுத்துவதில் சூச்சே இன்றியமையாத பகுதியாக அதிகளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சூச்சே ஒரு போலி மதம், ஒரு தேசியவாத அல்லது பாசிச சித்தாந்தம், மார்க்சியம்-லெனினிசத்திலிருந்து ஒரு பிறழ்வு என விமர்சகர்களால் பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளது. [1] [2] [3] [4]

சொற்பிறப்பியல்

தொகு

சூச்சே என்பது சீன-யப்பானிய சொல்லான 主體 (சின்ஜிடை:主体) என்பதிலிருந்து வந்தது, யப்பானிய வாசிப்பில் ஷுதாய் ஆகும். 1887 இல் இந்தச் சொல் Subjekt என்ற செர்மானிய சொல்லை மொழிபெயர்க்க உருவாக்கப்பட்டது, இதற்கு செர்மான் கருத்தியலில்,"ஒரு பொருள் அல்லது சூழலை உணரும் அல்லது செயல்படும் நிறுவனம்" என்று பொருள். இந்தச் சொல்லானது நூற்றாண்டின் தொடக்கத்தில் கொரிய மொழிக்கு இடம்பெயர்ந்து இந்த அர்த்தத்தைத் தக்க வைத்துக் கொண்டது. [5] கார்ல் மார்க்சின் எழுத்துகளின் யப்பானிய மொழிபெயர்ப்புகளில் இச்சொல் தோன்றின. [6] மார்க்சின் வட கொரிய பதிப்புகள் சூச்சே என்ற சொல்லை 1955 ஆம் ஆண்டில் கிம் இல் சுங்கின் நூல்களில் கூறுவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. [7]

வட கொரியா பற்றிய சமகால அரசியல் சொற்பொழிவில், சூச்சே "சுய-சார்பு", "சுயாட்சி", "சுதந்திரம்" ஆகிய பொருளைக் கொண்டுள்ளது. [8] [9] [10] தென் கொரியர்கள் வட கொரிய கருத்தியல்லை குறிப்பிடாமல் இந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். [11]

வளர்ச்சி

தொகு

வட கொரிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், யப்பானுக்கு எதிரான கொரிய விடுதலைப் போராட்டத்தின் போது, ஏகாதிபத்தியக் கீழ்நிலை ஒன்றியத்தில் கிம் இல் சுங்கின் அனுபவங்கள் இக்கருத்தியலின் தோற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. [12] [13] 1955 ஆம் ஆண்டில் கிம் இல் சுங் "பிடிவாதம் மற்றும் சம்பிரதாயவாதத்தை நீக்குதல் மற்றும் கருத்தியல் வேலையில் சூச்சேவை நிறுவுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், இதுதான் சூச்சே ஒரு கருத்தியலாக ஆவணப்படுத்தப்பட்ட முதல் குறிப்பாகும். சீனாவில் முந்தைய யான் சீர்திருத்தும் இயக்கம் போன்ற அரசியல் சுத்திகரிப்புக்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டது. [14] பின்னர் "சூச்சே உரை" [15] என அறியப்பட்டது, இது கிம் இல் சுங்கின் மிக முக்கியப் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [16]

கிம் இல் சுங்கின் கருத்தியலின் முக்கிய ஆலோசகரான அவாங் ஜாங்-யோப், சூச்சேவின் கருத்தாக்கம் மற்றும் ஆரம்பகால வளர்ச்சிக்கு உண்மையான காரணமாக இருந்தவர் என்று மேற்கத்திய அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். [17] கொரிய ஆய்வுகள் பற்றிய உருசிய அறிஞர் ஆண்ட்ரி லாங்கோவ், சூச்சே ஒரு கருத்தியல் என்ற முதல் குறிப்பு 14 ஏப்ரல் 1965 வரை வரவில்லை என்று வாதிடுகிறார், கிம் இல் சுங் இந்தோனேசியாவில் "கொரியாவின் ஜனநாயக மக்கள் குடியரசில் சோசலிச கட்டுமானம் மற்றும் தென் கொரிய புரட்சி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 1955 பேச்சு "இந்த வார்த்தையை வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது" என்றும் 1965 உரை வரை சூச்சே வட கொரிய அரசியலின் அடிப்படை கருத்தியல் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் லாங்கோவ் கூறுகிறார். [18]

__LEAD_SECTION__

தொகு
Sriveenkat/மணல்தொட்டி
(Lingua Libre)
 
 
Overview of the website's homepage in December 2020
வலைத்தள வகைமொழிசார் ஒலிப்பதிவு கருவி,
இணைய மொழியியல்சார் ஊடகத் தொகுப்பு
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழியாமை
உரிமையாளர்பிரான்சிய விக்கிமீடியா
உருவாக்கியவர்பிரான்சிய விக்கிமீடியா, விக்கிமீடிய சமூகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்பதிவு செய்து பதிவேற்ற தேவைப்படும் மற்றபடி தேவையில்லை
உள்ளடக்க உரிமம்Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0)
வெளியீடுஆகத்து 2016; 8 ஆண்டுகளுக்கு முன்னர் (2016-08)
தற்போதைய நிலைActive


லிங்குவா லிப்ரே என்பது பிரான்சிய விக்கிமீடியாவின் இணைய கூட்டுத் திட்டத்தின்மூலம் உருவக்கப்பட்ட சொற்களை ஒலிப்பதிவுச் செய்ய உதவும் கருவியாகும். இது கட்டற்ற உரிமத்தில் கூட்டுழைப்பு, பன்மொழியாமை, ஒலிக்கட்புல விரித்தரவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது விரைவாக ஒலிப்பை பதிவு செய்ய உதவுகிறது, இது பயனர்களை நூற்றுக்கணக்கிலான கோப்புகளை பதிவேற்ற அனுமதிக்கிறது. இதில் பங்களிப்பாளர்கள் 250 மேற்பட்ட மொழிகளில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கியுள்ளனர்.

விளக்கம்

தொகு

லிங்குவா லிப்ரே எந்த ஒரு மொழியின் சொற்கள், சொற்றொடர்களையும் பதிவு செய்யும். பேசப்படும் மொழியாக இருந்தால் ஒலிபதிவாகவும், சைகை மொழியாக இருந்தால் நிகழ்படமாக பதிவு செய்து உதவுகிறது.

 
2017 இல் அடிகாமெக்வ் மொழியைப் பேசுபவருடன் ஒரு ஒலிப்பதிவு அமர்வு.மொன்றியல், கனடா

பதிவாளருக்கு ஒரு சொற்கள் பட்டியல் வழங்கப்படுகின்றன, சுயமாகவோ, விக்கிமீடியப் பகுப்புகளைக் கொண்டோ சொற்பட்டியலை உருவாக்கலாம். பதிவாளர் வெறுமனே திரையில் காட்டப்படும் சொல்லைப் படித்து, ஒரு நொடி அமைதி காக்கும் போது அதை கண்டறிந்து மென்பொருள் சொற்பட்டியில் உள்ள அடுத்த சொல்லிற்கு செல்லும். [19] இந்த முறைமை, திறந்த மூல மென்பொருளான français (fr) இலிருந்து கொண்டுவரப்பட்டது. இதனின் உருவாக்குநர் நிக்கோலசு வியோனியால் ஒரு மணி நேரத்திற்கு பல நூற்றுக்கணக்கான சொற்களைப் பதிவுசெய்வது சாத்தியமாகிறது. பதிவுகள் வலை நுகர்வியிலிருந்து விக்கிமீடியப் பொதுவகத்துக்கு தானாகவே பதிவேற்றப்படும்.

2021 வசந்த காலத்தில், இசுதிராசுபூர்க்க்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக லிங்குவா லிப்ரே முடக்கநிலையில் இருந்தது, ஆனால் பதிவுகள் எதுவும் இழக்கப்படவில்லை. [20]

பதிவுகளின் பயன்பாடு

தொகு

பதிவுகளை லிங்குவா லிப்ரே அல்லது பொதுவகத்தில் இருந்து பயன்படுத்தப்படலாம். இவை முக்கியமாக மற்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விக்சனரிகளில்சொற்களின் ஒலிப்பை விளக்குவதற்கும், விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் பெயர்களை சரியான மூலமொழி ஒலிப்பை விளக்குவதற்கும் பயன்படுகிறது. [19]

மொழி கற்பித்தல் சூழலில் பதிவுகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொழி கற்பவர்கள், ஒலிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பிரபலமான அகராதி மென்பொருளான கோல்டன்டிக்ட்-இல் (GoldenDict) பயன்படுத்தலாம். [21]

இயற்கை மொழி முறையாக்கத்திட்டங்களிலும் இப்பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக மொசில்லாவின் பேச்சுணரி கருவிகளை இயக்குவதற்கு பயன்படும். [22]

பதிப்புகள்

தொகு

சனவரி 23, 2015 அன்று லிங்குவா லிப்ரே தொடங்கப்பட்டது. [23] மூன்று தொடர்ச்சியான பதிப்புகளைக் கொண்டுள்ளது:

லிங்குவா லிப்ரே ப.1 (2016)

தொகு

பிரான்சின் மொழிகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்கிமீடியா மற்றும் பொதுவாக இணையத் திட்டங்களில் பிரான்சின் பிராந்திய மொழிகளை ஆவணப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, Lingua Libre லிங்குவா லிப்ரே கருத்தாக்கம் நவம்பர் 2015 இல் தொடங்கியது, இதில் மொழிக்கான பொது பிரதிநிதிகள் குழு மூலம் ஓரளவு நிதியளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் பதிப்பு ஆகத்து 2016 இல் வெளியிட்டது.

அப்போது ஒலிப்பதிவுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருந்தது, லிங்குவா லிப்ரே திசம்பர் 2016 இல் ஓக் மொழி குறித்த பட்டறையின் போது காட்டப்பட்டது, [24] [25] பின்னர் 2017 இல் சர்வதேச நிகழ்வுகளில் இணையத்தில் விக்கிமீடிய சமூகத்துக்கு வழங்கப்பட்டது. [26]

லிங்குவா லிப்ரே ப.2 (2018)

தொகு

2017 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு முழுமையான மறுகட்டமைப்பு லிங்குவா லிப்ரேயில் தொடங்கப்பட்டது. லிங்குவா லிப்ரேயின் புதிய பதிப்பு மீடியாவிக்கியை அடிப்படையாகக் கொண்டது, விக்கிமீடிய சூழலைச் சிறப்பாக ஒருங்கிணைக்க விக்கித்தளம் (Wikibase), திறந்த உரிமை நல்குதலை (OAuth) பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டது. இடைமுகம் Translatewiki.net வழியாக மொழிபெயர்க்க கொண்டுவரப்பட்டது, இதனால் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான சமூகங்கள் பயன்படுத்தி மொழிபெயர்க்க முடியும். தளத்தின் புதிய பதிப்பு சூன் 2018 [27] இல் தயாராகி, ஆகத்து 2018 இல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

லிங்குவா லிப்ரே ப.2.2 (2020)

தொகு

2020 இல், முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன; குறிப்பாக தளத்திற்கு ஒரு புதிய இடைமுகத் தோற்றம் உருவாக்கப்பட்டது, .fr என்று பயன்படுத்தப்பட்ட களப்பெயர் .org என்று மாற்றியது, [28] நிகழ் படங்களை பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு சைகை மொழிகளுக்கான ஆதரவையும் சேர்த்தது.

Recording Studio in September 2017 (v.1)

Recording Studio in December 2018 (v.2)

Recording Studio in October 2020 (v.2.2)

திட்டம் தொடங்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில், தோராயமாக 10,000 பதிவுகள் செய்யப்பட்டன. v.2 க்கு மாறுவது பங்களிப்புகளில் கூர்மையான அதிகரிப்புடன் இருந்தது. ஒரு வருடத்திற்குள் பதிவுகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்து, மே 2019 இல் 100,000 என்ற வாசலைத் தாண்டியது. இந்தப் பதிவுகள் கிட்டத்தட்ட 50 மொழிகளில் 127 பேச்சாளர்களால் செய்யப்பட்டன. ஜூன் 2021 இல் 500,000 பதிவுகளின் மைல்கல்லைத் தாண்டியது. ஏப்ரல் 2023 இல், Lingua Libre 800,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொண்டிருந்தது, 170 மொழிகளில் 1,400 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள். அக்டோபர் 5, 2023 அன்று, தெலுங்கில் முட்கள் என்று பொருள்படும் “கண்டதமு” என்ற வார்த்தையின் பதிவு மூலம் லிங்குவா லிப்ரே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்புகளை எட்டியது.

  1. Armstrong 2012: "Among observers outside of North Korea, opinions about the 'ruling ideology' of juche range from the view that juche is a complete sham, merely disguising the Kim family despotism, to those who see it as a quasi-religion more or less believed by a majority of the population."
  2. Kelly 2015: "Brian Myers has led this school, which argues that North Korea is a misunderstood racist state based on Japanese and German fascist forms from the early twentieth century. It rallies its citizens through aggressive race-based nationalism (the defence of minjok), defends the racial 'cleanliness' of Korea in a big intrusive world, insists that ethnic Koreans of other nationalities are still Koreans, and routinely uses racist language in its diplomacy. On top of this, it is one of the most highly militarised states in the world. Racism plus hypermilitarism looks a lot more like fascism than communism."
  3. Fisher 2016: "[The Soviets] had a problem: There wasn't really a leftist intelligentsia or officialdom to draw upon. So the Soviets ended up recycling in many of the Koreans who'd been a part of the Japanese fascist project in Korea. ... 'Almost all intellectuals who moved to Pyongyang after liberation had collaborated with the Japanese so some degree,' the historian B.R. Myers writes in his book The Cleanest Race: How North Koreans See Themselves and Why It Matters."
  4. Suh 1988, ப. 309.
  5. Myers 2015, ப. 11.
  6. Myers 2015, ப. 12.
  7. Myers 2015, ப. 13.
  8. Cumings 1997, ப. 207, 403–04.
  9. Abt 2014, ப. 73–74.
  10. Robinson 2007, ப. 159.
  11. Myers 2015, ப. 13–14.
  12. Foreign Languages Publishing House 2014, ப. 1.
  13. Kim, Kim & Kim 2005, ப. 10.
  14. Asiatic Research Institute, Korea University 1970, ப. 63.
  15. Myers 2015, ப. 68.
  16. Suh 1981, ப. 109.
  17. Becker 2005, ப. 65.
  18. Lankov 2007.
  19. 19.0 19.1 Sabine Buchwald (2019-08-04). "Wie Wikipedia Bairisch lernt". Süddeutsche Zeitung (in ஜெர்மன்). Archived from the original on 2019-08-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
  20. "Lingua Libre 2.3 - Phoenix Edition ǃ". Meta Wikimedia. March 19, 2021. Archived from the original on May 7, 2021. பார்க்கப்பட்ட நாள் May 7, 2021.
  21. "LinguaLibre:Apps - Lingua Libre". lingualibre.org. Archived from the original on 2023-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
  22. "Modèle français 0.4 pour DeepSpeech v0.6". Mozilla Discourse. March 10, 2020. Archived from the original on August 10, 2020. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  23. Rémy Gerbet (2018-05-14), "Lingua Libre : un nouvel outil collaboratif pour le public et les chercheurs", Culture et Recherche, p. 52, பன்னாட்டுத் தர தொடர் எண் 1950-6295, archived from the original on 2022-08-20, பார்க்கப்பட்ட நாள் 2021-02-11
  24. "Oc-a-thon 2016 : deux journées contributives sur l'occitan les 9 et 10 décembre". French Ministry of Culture (in பிரெஞ்சு). 2016-11-16. Archived from the original on 2020-08-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
  25. Mathieu Denel (21 December 2016). "L'oc-a-thon, un edit-a-thon pour enrichir les projets Wikimedia et Lingua Libre en langue occitane". Wikimédia France Web Blog (in பிரெஞ்சு) (published 2016-12-21). Archived from the original on 2023-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  26. French-speaking Wiktionarists (2017-08-01). "Lingua Libre". Actualités du Wiktionnaire. https://fr.wiktionary.org/wiki/Wiktionnaire:Actualit%C3%A9s/028-juillet-2017#Lingua_Libre. பார்த்த நாள்: 2020-12-02. 
  27. French-speaking Wiktionarists (2018-07-01). "Lingua Libre". Actualités du Wiktionnaire. https://fr.wiktionary.org/wiki/Wiktionnaire:Actualit%C3%A9s/039-juin-2018#Lingua_Libre. பார்த்த நாள்: 2020-12-02. 
  28. Sara Krichen (2 June 2020). "Lingua Libre fait peau neuve !". Wikimédia France Web Blog (in பிரெஞ்சு) (published 2020-06-02). Archived from the original on 2022-11-29. பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sriveenkat/மணல்தொட்டி&oldid=4152904" இலிருந்து மீள்விக்கப்பட்டது