பயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 1
வாருங்கள்!
வாருங்கள், செல்வா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
புருனோ மஸ்கரனாஸ் 12:25, 3 நவம்பர் 2006 (UTC)
புருனோ, உங்கள் வரவேற்புக்கு நன்றி. நான் புது பயனர் அல்லன். என் பழைய பயனர் பக்கத்தை மாற்றியுள்ளேன். சுந்தர். என் பயனர் பக்கத்தை மாற்றித் தந்தமைக்கு நன்றி.--செல்வா 14:33, 3 நவம்பர் 2006 (UTC)செல்வா
செல்வா, உங்கள் முன்னைய பயனர் பேச்சினையும் இப்புதிய பயனர் பெயருக்கு நகர்த்தினால் நன்றாயிருக்குமே! மேலும் நீங்கள் பயனர் பெயரைத் தமிழுக்கு மாற்றிக் கொண்டமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நேரங் கிடைக்கும் போதெல்லாம் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:23, 3 நவம்பர் 2006 (UTC)
- கோபி, நன்றி. பயனர் பேச்சுப் பக்கங்களையும் நகர்த்த விரும்புகிறேன். ஆனால் எப்படிச் செய்வது என விளங்க வில்லை. என் பக்கம் இப்பொழுது இருக்கின்றதா என தெரியவில்லை. சில நல்ல கட்டுரைகள் தொகுத்து வருகின்றேன். விரைவில் இங்கு இடுகின்றேன். --செல்வா 18:46, 3 நவம்பர் 2006 (UTC)
பொழுதுபோக்கு என்ற சொல்லுக்கு மாற்று சொற்கள்...
தொகுபகுப்பு:பொழுதுபோக்குகள் பொழுதை வீணாக்குதல் போன்ற தொனியில் கருத்து தருகின்றது. ஒருவித positive (நல்நோக்கு) தன்மையோடு எதாவது இணையான சொற்கள் இருக்கின்றதா. அல்லது பொழுதுபோக்குத்தான் சரியான சொல்லா? அந்த தாய்ப் பகுப்புக்குள் வரும் பல மக்களால் இன்பத்துக்காக நாடப்படுவை. எனவே அவற்றை ஒரு negative தொனியில் தருவது பொருந்துமா? --Natkeeran 18:14, 3 நவம்பர் 2006 (UTC)
உண்மைதான் நற்கீரன். பொழுது போக்கு என்பது ஆங்கில வழக்காகிய pass time என்பதற்கு இணையான கருத்தைத் தரும். வீணே பொழுது போக்குவது என்பது கருத்தில்லை என்றாலும், நல்வழிகளில் நலம் பெருக்கும் வழிகளில் நேரத்தைச் செல்வவிடுவதாகக் கொள்ள இயலாது. எனெவே நன்னோக்கம் அல்லது நல்விளைவு முன் நிற்கவேண்டுமெனில், புதிய சொற்கள் ஆக்கிக்கொள்ளலாம். பொதுவாக மிக எளிமையாக நல்ல பொழுது போக்குகள் என்று சொல்லலாம். பயன் ஈடுபாடுகள் எனலாம். நேரம் கிடைக்கும் பொழுது நற்பணிகளில் ஈடுபடுவது நல்லது என்னும் பொழுது நீங்கள் சொல்லும் பொருள் கிடைக்கின்றது என நினைக்கிறேன். நற்சாய்வுகள் அல்லது நல்லீர்ப்புகள் என்றால் நல்ல கருத்துக்களிலும், நற்செயல்களிலும் இயற்கையான ஈடுபாடு கொள்ளும் பண்பைக் குறிக்கும். இவை ஏதும் நீங்கள் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என அறியேன்.--செல்வா 18:43, 3 நவம்பர் 2006 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி. நல்ல என்ற பொருள் தரவேண்டிய அவசியம் இல்லை. neutral (நடுநிலைமை) ஆக இருந்தால் நன்று. தொலைக்காட்சி பார்த்தலில் பாதகாமான விளைவுகளே அதிகம் என்று நினைக்கின்றேன். ஈடுபாடுகள் நன்று போன்று தெரிகின்றது. Activities, Leisure, Recreations, Hobbies, Interests போன்று பொருள் தரக்க தமிழ்ச் சொற்கள் சில சுட்ட முடியுமா.
வரலாற்று ரீதியில் ஓய்வு, வேலை, வாழ்வு போன்ற கருதுகோள்கள் தமிழ்ச்சூழலில் எப்படி இருந்தன என்று எதாவது சுட்ட முடியுமா. ஏன் என்றால் இவை மேற்கத்தைய compartmentalization of life, or division of labour போன்றுதான் தெரிகின்றது.
- பொழுதுபோக்குகள் - past time
- ஓய்வு ஈடுபாடுகள் - en:Leisure
- ஈடுபாடுகள் - interests
- en:Recreation
- en:Hobbies
- en:Sports - விளையாட்டு
- en:Entertainment - களிப்பூட்டல்
- en:Paradox of hedonism
gambling, sex, alcohol, clubbing, dancing இவை யாது?
இந்த வகைப்படுத்தலில் ஐரோப்பிய பார்வை வலுவாக தெரிகின்றது. நான் இங்கு தத்துவ ஆய்வு செய்ய முயலவில்லை, ஆனால் ஏனோ அத் திசை நோக்கி உந்தப்படுகின்றேன். தமிழ்சூழலில் இவை நோக்கி இன்னுமொரு புரிதல் உண்டா? --Natkeeran 22:32, 3 நவம்பர் 2006 (UTC) ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பொழுது போக்கு என்பதை நாம் நன்னோக்கில் பார்த்தால் நல்ல பொருத்தமான சொல்லே. இருப்பினும் இப்பொழுது பொழுதாக்கம் எனக் கையாளப்படுகிறது. எனவே, இதனை மாற்றுச் சொல்லாக ஏற்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கனடா, கனேடிய, கனடாவின்
தொகுஅடிக்கடி தொந்தரவோ தெரியவில்லை. நீங்கள் இங்கு வசிப்பவர் என்ற படியால் உங்கள் கருத்து இங்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
- கனடாவின் வரலாறு எதிர் கனேடிய வரலாறு?
- கனடாவின் பொருளாதாரம் எதிர் கனேடியப் பொருளாதாரம்?
- கனடா அரசியல் எதிர் கனேடிய அரசியல் எதிர் கனடாவில் அரசியல்?
- கனடாவின் பண்பாடு எதிர் கனேடியப் பண்பாடு?
... பல இடங்களில் கனேடிய என்றே இங்கு பலரும் கதையாடுகின்றார்கள். பகுப்புக்களிலும் கட்டுரைகளில் ஒரு சீரான தலைப்பிடுதல் முறை இருந்தால் நன்று என்று படுகின்றது. --Natkeeran 02:01, 4 நவம்பர் 2006 (UTC)
- நற்கீரன், கனடா வரலாறு அல்லது கனடாவின் வரலாறு என்பவை சரியானவை. கனேடிய வரலாறு என்பது கனடாவினர் வரலாறு என்பதற்கான ஆங்கில மொழிக்கலப்பான சொல். எகிப்து என்பது நாடு. எகிப்தியர் என்பது அந்நாட்டு மக்களைக்குறிக்கும். கனடா எனப்து நாடு, கனடாவினர் என்பது அந்நாட்டு மக்களைக் குறிக்கப் பயன் படும் ஒரு சொல் (ஒப்பு நோக்குக: ஒரிசா மாநிலத்தவரை ஒரிசாவினர் என்போம். ஒட்ட நாடு எனில் ஒட்டர் என்கிறோம். அகர நெடிலில் ஒரு நாட்டின் பெயர் முடிவில் இருந்தால் -ஆவினர் என குறித்தல் எளிது. என்றாலும், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவரை அமெரிக்கர் என்று சுருக்குகிறோம். ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்தவரை ஆப்பிரிக்கர் என்கிறோம். அதேபோல, கனடா நாட்டினரை ((கனடர்??) கனடியர் என்று சுருக்குவது சற்று திரிபு என்றாலும் சரியானதாகவே தெரிகின்றது (கனேடியர் என்பது ஆங்கில வழக்கைப் பின்பற்றி மொழிவதாகும்). எனவே கனடியர் வரலாறு எனில் கனடா நாட்டு மக்களின் வரலாறு என்று பொருள் படும். கனடிய வரலாறு எனில் கனடா நாட்டின் வரலாறு எனப் பொருள் படும் இங்கும் அந்நாட்டின் மக்களின் வரலாறு என்பதைக் குறிப்பாக உணர்த்தும். எனவே கனடாவின் பொருளாதாரம், கனடியப் பொருளாதாரம் என்பன சரி. கனடாவின் அரசியல், கனடிய அரசியல் என்பன சரி. கனடாவின் பண்பாடு, கனடிய பண்பாடு என்பன சரி. சரி என்று கூறுவதெல்லாம் நான் சரி என்று எண்ணுகிறேன் என்று பொருள் கொள்ளுங்கள். கனடிய என்னும் சொல்லாட்சி சரியா என்பதை தமிழ் நன்றாக அறிந்த தமிழாசிரியரைக் கேட்டு உறுதி செய்ய வேண்டும். கனடர் என்பது சரியானது போலவே தெரிந்தாலும் (கேரளா -> கேரளர்), சரியா என உறுதியாகத் தெரியவில்லை. --செல்வா 13:40, 5 நவம்பர் 2006 (UTC)
சொற்கள்...இராமகி பரிந்துரைகள், உங்கள் கவனத்துக்கு மட்டுமே.
தொகு- இழுனிய செயலாக்கம் (linear process)
- இழுனாச் செயலாக்கம் (non-linear process)
- நேரிய செயலாக்கம் (direct process)
- நேரிலாச் செயலாக்கம் (indirect process)
Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை?
தொகுகரு - idea கருத்து - comment கருத்தியம் - idealism கருத்தியல் - ideal கருத்துலகு - the world of idea கருதுகோள் - hypothesis VS CONCEPT கருதுதல் - having an opinion கருத்துருவாக்கம் - forming or shaping an opinion எண்ணக்கரு - thought ?? சிந்தனை - thought சிந்தை - மனம், மூளை சிந்தித்தல் - thinking
இங்கு கருதுகோள் என்று பொதுவாக எதைக் குறித்து நிற்கின்றது. Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை? நன்றி. --Natkeeran 20:27, 18 நவம்பர் 2006 (UTC)
- பொதுவாக ஒருமொழியின் ஒரு சொல்லுக்கு இணையாக பிறிதொரு மொழியின் ஒரு சொல்லைக் குறிப்பது பொருந்தாது (பல நேரான மொழி பெயர்ப்புகள் இருந்த பொழுதிலும்). மேலே கரு என்பது idea அல்ல. idea என்னும் சொல்லும் பல பொருட்களில் ஆங்கிலத்தில் வழங்கும். idea, comment, opinion ஆகிய அனைத்தும் இடத்திற்கு ஏற்றார் போல கருத்து என்றே கூறலாம். தேவைக்கு ஏற்றார் போல சில இடங்களில் என் கருத்து, என் தனிக் கருத்து (~ opinion) என்று கூறலாம். கருதுகோள் என்பது கொள்ளப்படும் கருத்து -இது தற்காலிகமாக உண்மை என்று கொண்டு பின்னர் நிறுவ முற்பட்டால், கருதுகோள் என்பது hypothesis என்பதைக் குறிக்கும். concept என்பது கருத்துரு. thought என்பது எண்ணம், நினைப்பு, சிந்தனை. abstract என்பது முன்சுருக்கம் (= முன் சுருக்க உரை அல்லது உரை முன்சுருக்கம்). summary என்பது சுருக்கம் அல்லது பின் சுருக்கம், பின் சுருக்கவுரை, அல்லது பின் உரைச்சுருக்கம். எண்ணம் என்னும் சொல் பொருள் செறிந்தது. In english the meaning of eNNam can be expressed as essential thinking, critical thinking. எள் > எண் > எண்ணம். எள் என்பது சிறுமையைக் குறிக்கும். நுட்பத்தைக் குறிப்பது மட்டுமல்லாமல், அடிப்படை எளிமையைக் (minimal, essential, critical aspects of thinking) குறிக்கும். வள்ளுவர் எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்று சொல்லுகையில், எண் என்னும் சொல்லை மிக அழகு நேர்த்தியுடன் ஆண்டுள்ளார். எண் <-> திண் எதிர்ப்பொருட்கள். எண்மை = எளிது, திண்மை = உறுதி. விளக்கினால் மிக விரியும். --செல்வா 17:24, 7 ஜனவரி 2007 (UTC)
உள்ளுதல் என்பதும் ஒரு மிகச்சிறந்த சொல். உள்ளல், உள்ளுதல் என்பன think, thinking, cerebration, consider முதலியவற்றுக்குப் பொருந்தும். அதே போல மன்னுதல் என்பது எண்ணுதல். மன்னன் என்பது எண்ணுவதில் சிறந்தவன் என்னும் பொருளது. மன்னுவது மனம். உள்ளுவது உள்ளம்.--செல்வா 17:33, 7 ஜனவரி 2007 (UTC)
மன்னுதல் என்னும் சொல்லின் முன்னுரு முன்னுதல். முன்னுதல் என்றாலும் எண்ணுதல். ஆங்கிலத்திலே contemplate எனலாம்--செல்வா 17:38, 7 ஜனவரி 2007 (UTC)
- நன்றி. --Natkeeran 22:51, 15 ஜனவரி 2007 (UTC)
வணக்கம்
தொகுசெல்வா, மிகுந்த வேலைப்பழு மத்தியிலும் நீங்கள் மீண்டும் பங்களிக்க ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. அவ்வப்போது புதிய கட்டுரைகளையும் உருவாக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 16:20, 7 ஜனவரி 2007 (UTC)
- கோபி, ஏராளமான கட்டுரைகள், குறிப்புகள் சேர்க்க எண்ணி வைத்துள்ளேன், எனினும் தற்பொழுது பணிப் பொறுப்புகள் சற்று மிகுந்து இருப்பதால் (ஆண்டிறுதி, ஆண்டின் தொடக்கப் பணி அழுத்தங்கள்) விக்கி ஆக்கங்கள் சற்று மெதுவாகவே வருகின்றன. தமிழ் விக்கியின் வளர்ச்சி மிக மிகப் பயனுடைய ஒன்று. என்னால் இயன்ற அளவு இந்த கூட்டுழைப்பில் பங்களிப்பேன். தங்கள் ஊக்கத்தித்கு நன்றி.--செல்வா 16:38, 7 ஜனவரி 2007 (UTC)
நீங்கள் திரும்ப வந்து முன்போல் முனைப்புடன் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதுடன் உரையாடல்களிலும் பங்கு கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பணி தொடர வேண்டுகிறேன்.--Ravidreams 06:26, 28 ஜனவரி 2007 (UTC)
- நன்றி ரவி. நீங்களும் சிறு விடுப்புக்குப் பின் மீண்டும் இப்பொழுது த.வியில் முனைப்பாக பங்கு கொள்வது கண்டு மகிழ்கிறேன். --செல்வா 17:21, 28 ஜனவரி 2007 (UTC)
Tamil Wiki Hits
தொகுமற்ற மொழிகளுக்கும் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது தெரியவில்லை. தமிழ் விக்கியின் கட்டுரைகளைத் தேடல்கள் எண்ணிக்கை நல்ல நிலையில் இருப்பதையும், வெவ்வேறு இடங்களில் இருந்தும் தேடல்கள் இருப்பதும் கண்டு மகிழக்கூடியது. இப்புள்ளி விவரங்கள் சற்று பழையதாகவும் (செப்டம்பர் 2006??) இருக்கலாம் என நினைக்கிறேன். கூகிள் கனடா (255), கூகிள் செருமனி (424), கூகிள் பிரான்சு (243), கூகிள் இந்தியா (691) , கூகிள்.காம் (1888) என்று இருப்பதெல்லாம் சிறப்பாக உள்ளது (இங்கு காட்டப்பட்டிருக்கும் மும்மொழிகளை ஒப்பிடும் பொழுது).--செல்வா 22:40, 8 ஜனவரி 2007 (UTC)
உங்களுக்கும் கனகு அவர்களுக்கும் ரஷ்ய மொழி தெரியும் என்று நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும்பொழுது இருவரும் சேர்ந்து அந்தக் கட்டுரையை மேம்படுத்தி தந்தால் நன்று. அத்தோடு தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை போன்று தமிழ் ரஷ்ய மொழி இலக்கண ஒப்பீட்டு அட்டவணை உருவாக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 22:51, 15 ஜனவரி 2007 (UTC)
உதவி தேவை
தொகுபயனர்:Ganeshbot/Translation needed/TN towns பக்கத்தில் மொழிமாற்றத்தை பூர்த்தி செய்வதில் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:18, 27 ஜனவரி 2007 (UTC)
- செய்துவிட்டேன்.--செல்வா 17:53, 27 ஜனவரி 2007 (UTC)
மிக்க நன்றி. --கோபி 18:18, 27 ஜனவரி 2007 (UTC)
பேரூக்கம்
தொகுபேராசிரியர் பசுபதி அவர்களும், பொறியியல் அறிஞர் ஜெயபாரதன் போன்றோர்களும் வருகை தந்திருப்பது பேரூக்கம் தருகின்றது. த.விக்குப் பெரு வளம் கூட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன். --செல்வா 22:29, 28 ஜனவரி 2007 (UTC)
நிர்வாக அணுக்கம்
தொகுநீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையாக இருந்தால், உங்களுக்கான நிர்வாக அணுக்க வசதிகளை ஏற்படுத்தித் தர வாக்கெடுப்பு நடத்த பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்களுக்கு இருக்கும் பணிச் சுமைகள் நாங்கள் அறிந்ததே. எனவே, விக்கி நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. எனினும், நீங்கள் உருவாக்கியவற்றில் தேவையில்லாதவற்றை நீங்களே அழித்துக் கொள்வது போன்ற சிறு பணிகளுக்கு இந்த அணுக்க வசதிகள் உதவியாக இருக்கும். நன்றி--Ravidreams 11:22, 1 பெப்ரவரி 2007 (UTC)
- நன்றி ரவி, ஆனால் என்னால் இப்பொறுப்புகளை இப்பொழுது ஏற்க இயலாது, மன்னிக்கவும்.--செல்வா 11:57, 1 பெப்ரவரி 2007 (UTC)
பரவாயில்லை, செல்வா. உங்கள் பங்களிப்புக்கு உதவியாக இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் கேட்டேன். பின்னர், இந்த அணுக்க வசதிகள் உங்களுக்குத் தேவை என்று தோன்றினால் தெரியப்படுத்துங்கள். நன்றி--Ravidreams 12:36, 1 பெப்ரவரி 2007 (UTC)
Charge
தொகுCharge என்பதற்கு மின்னூட்டு, மின்னூட்டம், மின்மம் என்று பல சொற்களைப் பயன்படுத்துகின்றோம். தொலைநோக்கில் இந்தப்போக்கு நல்லதல்ல. தமிழக பாடநூல்களில் எதைப் பயன்படுத்துகின்றார்கள் என்று அறிந்து அதைப் பயன்படுத்துவது தற்போதைக்கு பொருந்தும். அனைத்து தமிழ் கலைச்சொற்களையும் ஒருங்கிணைக்கப்படவேண்டியது இன்றைய தேவையாகும். குறைந்த பட்சம் தமிழகம்-இலங்கை-சிங்கப்பூர் அரசுகளில் ஒருங்கிணைப்பு இங்கே தேவை. த.வி, எமது மட்டில் நாம் ஒருமித்த கலைச்சொற்களை பயன்படுத்த முனைய வேண்டும்.
இலத்திரன், எலக்ட்ரோன், எதிர்மின்னி என்று பல கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தை விளைவிக்கும். என்ன தீர்வு என்று அங்கலாய்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
--Natkeeran 20:02, 10 பெப்ரவரி 2007 (UTC)
- நற்கீரன், நீங்கள் கூறுவதை மிகவும் நன்றாக அறிவேன். charge என்பதற்கு பல சொற்கள் இருப்பினும் , யாவற்றினும் எளிமையான சொல், விரிவு தரக்கூடிய சொல், பிறசொற்களோடு இணையவல்ல சொல் மின்மம் என்று நான் உணருவதால், இதனை ஆண்டுள்ளேன். தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்ப் பாடநூல் ஆக்கும் பொறுப்பு உள்ளவர்கள், துறையறிஞர்களைக் கொண்டு தீர ஆய்ந்து கலைச்சொல் ஆக்குவதிலும், சீர்தரப்படுத்துவதிலும் உழைக்க வேண்டும். அப்படித்தான் ஆங்கிலம் மற்று வளர்ந்த மேற்கு மொழிகள் வழங்கும் நாடுகளில் செய்கின்றனர். மின்மமென்பது, நேர்மின்மம், எதிர்மின்மம், மின்மமற்றது, மின்மமாக்கல் என பல வழிகளில் பெருகவல்லது. த.வியில் நாம் ஆளும் சொற்கள் நம்மிடையே ஓரளவிற்காவது கலந்துரையாடப்படுவதாலும், ஒரு குறிப்பிட்ட எழுத்துச்சூழலில் பயன்படுத்தப் படுவதாலும், இவை வலுவான ஆக்கங்கள். நல்ல சொல்லாக்கம் எனில் பிறரும் எடுத்தாளுவதே நல்லது. தொலைநோக்கில், நல்ல வளமான எளிமையான சொற்களே நிலைபெறும் என்பது என் கருத்து. ஆங்கிலத்திலும், இவ்வகையான சொல் மாற்றங்கள், தொடக்கநிலைகளிலும், காலப்போக்கிலும் நிகழ்கின்ற ஒன்றுதான். இன்று இணைய இறுக்கம் இருப்பதால், விரைவாக கருத்துக்கள் ஒன்றுபட வாய்ப்புள்ளது.
--செல்வா 20:23, 10 பெப்ரவரி 2007 (UTC)
- உங்களது கருத்துக்கள் ஏற்க கூடியதே. ஆனால் இலத்திரன், இலத்திரனியல் என்று இலங்கையில் வழமையில் உள்ளது. பல பாட நூற்களில் கையாளப்பட்டுள்ளது. மேலும், த.வி. ஒருங்கிணைப்பு இந்த விடயத்தில் போதவில்லை என்றே தோன்றுகின்றது. ஒரு அணுவின் கூறுகளை நேர்மின்மம், எதிர்மின்மம், மின்மமற்றது என்று விளக்குவது நன்று என்று தோன்றினாலும் வழக்கத்துக்கு (தமிழகம்) மாறாக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று தெரியவில்லை. உங்களது நீண்ட ஈடுபாடு, பங்களிப்பை அறிந்தே இந்தக் கூற்ற முன்வைக்கின்றேன். வெளியே பல விமர்சனங்களையும், ஒரு வித னையாண்டியையும் நாம் இந்த கலைச்சொல் விடயங்களில் எதிர்நோக்கியுள்ளோம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. --Natkeeran 20:37, 10 பெப்ரவரி 2007 (UTC)
- நற்கீரன், இலத்திரனியல், இலத்திரன் முதலியவற்றை வேண்டாம் என நான் சொல்லவில்லை. Electron என்பதை இலத்திரன் என்று எழுதுவதால் எந்த பெரிய மாற்றமும் இல்லை. அதற்கு எலெக்ட்ரான் என்றே எழுதலாம். ஆனால் இலங்கை எழுத்துச் சிக்கல் காரணமாக எலெக்றான் என எழுத வேண்டுமோ என அறியேன்.
1970களில் எலெக்ட்ரான் என்பதற்கு எதிர்மின்னி என்னும் சொல்லை ஆண்டோம். தற்காலத்தில் தமிழகத்தில் இன்று என்ன ஆளுகிறார்கள் என அறியேன். proton என்பதற்கு நேர்மின்னி என்னும் சொல்லை 1970களில் ஆண்டோம். We need words for postive charge, negative charge, neutral charge, charging, discharge, ion, ionization, and so on. Electron, proton, neutron, என்பன மிக அடிப்படையான சொற்கள். இவைகள் இன்னும் சீர்தரப்படுத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. பிறைக்குறிகளுக்கு இடையே எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என தெரிவிக்கலாம் (இங்கும் இலங்கை எழுத்துச் சிக்கல் இருப்பதை அறிவேன்). நான் மின்மம் என்னும் கட்டுரையில் எழுதியிருப்பது பொருள் விளங்குமாறு உள்ளதா என நேரடியாய்ப் படித்து அறிவதே நல்லது. கலைச் சொல்லாக்கத்தை பிறர் நையாண்டி செய்வது பற்றிக் கவலை இல்லை. எந்தக் கருத்தையும் தமிழில் மிகத் தெளிவாகவும், அறிவு கூர்மையாகும் படியும் எழுத இயலும். தமிழில் எழுதிப் படிப்பதால் விளையும் பயனே ஆழமாகப் புரிய இடம் தருவதுதான். --செல்வா 21:17, 10 பெப்ரவரி 2007 (UTC)
- கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 21:24, 10 பெப்ரவரி 2007
(UTC)
- Charge என்பதற்குத் இலங்கையில் மின்னேற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நேர்மின்னேற்றம், எதிர்மின்னேற்றம், மின்னேற்றல் (charging), மின்னிறக்கம் (discharge) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன. ion அயன் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. ionization என்பதற்கு அயனாக்கம் என்ற சொல் பயன்படுகிறது. Mayooranathan 02:58, 11 பெப்ரவரி 2007 (UTC)
- நன்றி மயூரநாதன். charge என்பதற்கு முன்னர் தமிழ்நாட்டிலும் (1968-1972 வாக்கில்) மின்னேற்பு என்னும் சொல்லைத்தான் ஆண்டுவந்தோம். இப்பொழுது என்ன ஆள்கிறார்கள் என அறியேன். மின்னேற்றம் என்னும் சொல் charging என்பதற்குப் பொருந்தும், மின்னேற்றம்.மின்னேற்றல் = charging, மின்னிறக்கம்=discharging என்பதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், charge என்பதற்கு மின்னேற்பு, மின்னூட்டம், மின்னுட்டு ஆகிய அனைத்தும் முழுத் திருப்தி தரவில்லை. ஏனெனில் மின் என்பதோடு பிறசொல்லைப் பயன்படுத்த வேண்டியிருப்பது - ஏற்பு, ஊட்டு, ஊட்டம்). ஆனால் பயன்படுத்த இயலாத அளவுக்கு மோசமும் இல்லை. மின்மம் என்னும் சொல் மிகச்சுருக்கமாகவும் மிகவும் பொருத்தமாகவும் தெரிகின்றது. ionization என்பதற்கு மின்மமாக்கல் எனலாம். ion என்பதற்கு மின்னணு (அல்லது மின்துகள் அல்லது மின்னி) எனலாம். நேர்மின்னேற்பு, எதிர்மின்னேற்பு என்பதைக் காட்டிலும், நேர்மின்மம் (positive charge), எதிர்மின்மம் (negative charge) என்பனவே கூட பொருந்துவதாகத் தெரிகின்றது. ஏற்பு, ஏற்றம் என்பன வினையடித் தோன்றும் பெயர்ச்சொல்லாய் இருப்பதால் act of charging என்னும் குழப்பம் தோன்றும். மின் >மின்மம் என்பதே எளிமையானது சிறப்பானது என்பது என் கருத்து. நீங்களும் பிற பயனர்களும் என்ன நினைக்கின்றீர்கள்?--செல்வா 20:11, 11 பெப்ரவரி 2007 (UTC)
- எனக்கும் நன்றாக தெரிகின்றது. மின்னூட்டு என்ற சொல் tamilvu கிடைத்தது. இருப்பினும் தமிழகத்தில் என்ன சொல் பயன்படுத்துகின்றார்கள் என்று அறிவது நன்று. --Natkeeran 20:20, 11 பெப்ரவரி 2007 (UTC)
மின்மம் என்ற சொல் நன்று. சுருக்கமாக இருக்கிறது. இந்த அம் விகுதி பல நல்ல சொற்களை உருவாக்க உதவுகிறது (எ.கா - எண்மம், நீர்மம்). தவிர, மின்னேற்றம்-மின்னிறக்கம் போன்ற குழப்பங்களையும் தவிர்க்கும். பிற சொற்களோடு எளிதில் புணர வல்ல சொல். நன்றி--Ravidreams 22:10, 11 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி
தொகுநன்றி செல்வா. உங்களைப் போன்றோரின் பங்களிப்பு எமக்குப் பெரும் உற்சாகமாய் இருக்கிறது. பல நண்பர்களோடு பேசிய வகையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் அதை சரியான வகையில் project செய்ய வேண்டிய PR வேலை முக்கியமாகப் படுகிறது. அதற்கான முயற்சி தான் இந்த வலைப்பதிவு.--Ravidreams 17:05, 12 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா அவர்களே கட்டுரைகளை மெய்புபார்பதற்கு நன்றிகள்,இலங்கை தமிழ்நாட்டு உச்சரிப்பு சில நேரங்களில் எனக்கு குழப்பம் தருகின்ரது.எடுத்துக்காட்டாக ராபின்சன் ரொபின்சன்,ஆடம்ஸ்மித் அடம்சிமித் போன்றவை ம்ம் என்ன செய்வது.மற்றப்படி பிழையில்லை மனித நடத்தை என்பதை மனித நடப்பு என நீங்கள் மாற்றியதை புரிந்து கொள்ளமுடியவில்லை.இந்த வரைவிலக்கணம் இலங்கை உயர்கல்வி பொருளியல் பாடதிட்டதில் உள்ளதை வைத்தே எழுதினேன்--கலாநிதி 18:07, 13 பெப்ரவரி 2007 (UTC)
- கலாநிதி, ராபின்சன், ஆடம் ஸ்மித் என்பன அவ்வளவு குழப்பம் தர வாய்ப்பில்லை. இலங்கையில், ஆங்கில எழுத்து O (ஒ) வரும் இடங்களிலெல்லாம் ஒரே சீராக ஒகர உயிர்மெய் (எ.கா. robinson = ரொபின்சன், Robert = றொபட் ??) இடுகின்றனர். நெடில் ஒலிகளை குறில் ஒலிக்களாகவும் குறிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஓரளவிற்கு ஆங்கில ஒலிப்புக்கு இணையாக எழுதுகின்றனர். Adam என்பதில் உள்ள முதல் ஒலி நெடில் (தனி ஆகாரம் இல்லை. ஆகாரத்திற்கும் ஏகாரத்திற்கும் இடைப்பட்ட ஒலி, ஆனால் தெளிவாக் இது நெடில். எனவே ஏடம் அல்லது ஆடம் என்பது பொருந்தும். இலங்கை-தமிழ்நாட்டு வழக்குகள் இங்கு குழப்பம் தந்தாலும், ரொறான்றோ,, கேற் போன்று பெரும் குழப்பம் தருவதல்ல. பெரும்பான்மை வழக்கு நோக்கி அடம் என்பதை ஆடம் என்றும், ரொபின் என்பதை ராபின் என்றும் மாற்றினேன். ஒரு பொதுத்தரம் பேணுவது நல்லது என்றும் இப்படி மாற்றினேன். பெரும் குழப்பம் ஏதும் தராது என நினைக்கிறேன். அடுத்ததாக, நடத்தை என்பது character என்றும் பொருள்படும். நட > நடை, நடக்கை, நடத்தை, நடப்பு, நடத்தல் முதலிய பல பெயர்ச்சொல் வடிவங்கள் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. நாட்டு நடப்பு என்று சொல்லும்பொழுது நாட்டின் செயல்பாடுகள், நிகழ்வுகள் முதலியனவற்றைக் குறிக்கும். அதேபோல மாந்த அல்லது மனித நடப்பு எனில் மனிதனால் செயற்படுத்தப்படும் செய்கைகளுக்கும், நிகவுகளுக்கும் பொருந்துமாறு அமையும். மனித நடத்தை என்பது தனிப்பட்ட ஒழுகலாறுகளைக் குறிக்கும். எண்ணிப்பாருங்கள். சரி என்று தோன்றவில்லை என்றால், நடத்தை என்றே மீண்டும் மாற்றிவிடுங்கள். ஆடம், ராபின்சன் என்பனவற்றையும், இயன்ற அளவு பொதுத்தரம் பேணுமாறு எழுதுவதே நல்லது என நினைக்கிறேன். மறுப்பு இருந்தால் அடம், ரொபின்சன் எனவே மீண்டும் மாற்றிவிடுங்கள். --செல்வா 18:56, 13 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா இவ்விடயம் சார்பாக எனக்கேதும் தனிப்பட்ட அபிப்பிராயம் இல்லை உங்கள் கருத்தை ஏற்கின்றேன்.விக்கியில் பொதுதரம் பேணுவது எனக்கும் உடன்பாடே--கலாநிதி 17:06, 14 பெப்ரவரி 2007 (UTC)
ஆங்கிலக் கலைச்சொற்கள்
தொகுசெல்வா, பல ஆங்கிலக் கலைச்சொற்களை தமிழ்ப் படுத்தி வருகிறீர்கள். முதற்கண் எனது பாராட்டுக்கள். அண்மைய காற்றுமெத்தை உந்து கட்டுரைத் தலைப்பை மிகவும் ரசித்தேன். ஒரே ஒரு வேண்டுகோள். இப்படியான ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப்படுத்தலின்போது கட்டுரையின் ஆரம்பத்தில் சமமான ஆங்கிலச் சொல்லையும் தருவது விரும்பத்தக்கது. நன்றி.--Kanags 03:35, 14 பெப்ரவரி 2007 (UTC)
- நன்றி கனகு. அக்கட்டுரை ஒரு சிறிதும் வளராத முதல் தொடக்கம்தான். கட்டாயம் ஆங்கிலப் பெயரைப் பிறைக் குறிகளுக்குள் இடுகிறேன். சுட்டியதற்கு நன்றி.--செல்வா 03:41, 14 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி
தொகுவாழ்த்துக்களுக்கு நன்றி செல்வா. நீவரில் இணைந்தபின் பணிப்பளு மிகுதி. நடுநடுவே வந்துசெல்ல முயல்கிறேன். என் நிறுவனத் தலைவர் ஊக்குவிப்பில் விக்கிகேம்பில் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். தமிழ் விக்கி தொடர்பில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வேன். - Sundar \பேச்சு 17:31, 15 பெப்ரவரி 2007 (UTC)
கருத்து வேண்டல்
தொகுசென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:05, 16 பெப்ரவரி 2007 (UTC)
பிரதிதிதிப்படுத்துதல்
தொகுபிரதிநிதிப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான, செயற்கையான சொல். ஆங்கிலவழி சிந்தப்பதாலேயே இவ்வகைச் சொற்கள் ஆள நேர்கின்றன. representative என்பதற்கு பிரதிநிதி என்றாலாவது போகட்டும் என விடலாம். மேலும் to represent என்பதற்கு இப்படிக் கடுமையான ஆக்கம் பயன்படுத்தப் படுகின்றது. ரவி, உங்கள் தொடரில் தமிழ்விக்கிப்பீடியாவை முன்நிறுத்திப் பேசுவார்கள் என்று சொன்னால் போதும் அல்லது பொருந்தும். representative என்பது ஒரு குழுவின் அல்லது மக்கள் கூட்டத்தின் கருத்துக்களை அவர்கள் சார்பாக ஒரு மன்றில் எடுத்துரைப்போர் ஆகும். எனவே அவர்களை (மக்கள்) சார்பகர்வர், சார்மொழிவர், சார்பறையர், சார்பாளர், சார்வர், சார்ந்துரைப்பர், சார்ந்துரைஞர் என்பன போன்று பல சொற்கள் ஆக்கலாம். சில இடங்களில் represent என்பதற்கு ஓப்பாய் நிற்கும், ஒப்புறும், சுட்டும் என பலவாறு குறிக்க இயலும். Represent என்பதை ஒப்பாய் நிறுத்தல் எனலாம். A represents an apple here. என்பதை A என்பது இங்கு ஆப்பிளைச் சுட்டும் அல்லது A என்பது ஆப்பிளுக்கு ஒப்பாய்நிற்கும் என்பதுபோல எழுதலாம்.
நன்றி செல்வா. மக்கள் பிரதிநிதி என்பதை எப்படி சொல்லலாம்?--Ravidreams 09:14, 18 பெப்ரவரி 2007 (UTC)
நன்றிகள்
தொகு- செல்வா, நீங்கள் எனது பயனர் பக்கத்தில் எழுதிய குறிப்புக்களுக்கு எனது நன்றிகள். ஒரு காலத்தில் மறைமலையடிகள் போன்றோர் நடத்தியது போன்ற இன்னொரு பண்பாட்டு இயக்கத்துக்கான தேவை ஏற்படுகிறதோ என்னவோ? Mayooranathan 16:33, 16 பெப்ரவரி 2007 (UTC)
பண்டங்கள்
தொகுபண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவதா அல்லது சேர்த்து எழுதுவதா பொருத்தமானது? இலவசப் பண்டம், பிரதியீட்டுப் பண்டம் என்றவாறாகப் பிரித்து எழுதுவது சரிபோற்படுகிறது. உங்கள் கருத்தறிந்து மாற்றஞ் செய்வதைக் கலாதி விரும்புகிறார். நன்றி. --கோபி 16:12, 17 பெப்ரவரி 2007 (UTC)
- நன்றி செல்வா. --கோபி 15:34, 18 பெப்ரவரி 2007 (UTC)
யானை கட்டுரை
தொகுயானை கட்டுரை குறித்த விளக்கங்களை இங்கே கொடுத்துள்ளேன். --Sivakumar \பேச்சு 16:20, 17 பெப்ரவரி 2007 (UTC)
தமிழர் அறிவியல் இயல்கள்
தொகுசெல்வா, உங்கள் நேர சிக்கல் புரிந்தது. இருப்பினும் உங்கள் அறிவியல் ஈடுபாட்டு அனுபவத்தில் இருந்து தமிழர் அறிவியல் தொடர்பான பல தகவல்கள் இருக்கும் என்பது என் ஊகம். அதை நீங்கள் பகிர்ந்தால் நன்று. தமிழர்கள் உலகின் இயல்பை நோக்கி எப்படிப்பட்ட ஒரு வகைப்படுத்தலையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் உலகப் பார்வை எவ்வாறு எவ்வளவு அமைகின்றது, வேறுபடுகின்றது போன்ற தகவல்கள் தந்தால் நன்று. இலக்கியம், சமயம் ஆகிய களங்களில் மட்டுப்படுத்தாமல், வேறு களங்களில் வெளிப்படும் தகவல்களை சுட்டினாலும் நன்று. குறிப்பாக வாய்வழி, வாழ்வியல், தொழிற்கலை, செயல்பாட்டு களங்களில் இருந்து. மேலும், இன்று இத்தகவல்கள் பயன்படக்கூடியவையா? பேணத்தக்க வேண்டியவையா? மீட்டெக்கப்படவேண்டியவையா? மீளுருவாக்கம் செய்யப்படவேண்டியவையா? எவ்வாறு பொது அறிவியலுடன் ஒத்துப் போகும்? எப்படி தமிழர் அறிவியல் அணுகுமுறை இன்று இருக்க வேண்டும்.
- தமிழர் உயிரியல்
- தமிழர் தாவரவியல்
- தமிழர் வானவியல்
- தமிழர் இயற்பியல்
- தமிழர் வேதியியல்
- தமிழர் நிலவியல்
- தமிழர் நீர்பாசன தொழில்நுட்பம்
- தமிழர் மருத்துவம், சித்த மருத்துவம்
ஆரம்பத்தில், இவற்றைப் பற்றி எழுதுவதே ஒருவிதத்தில் வேண்டா வேலை போன்றே தோன்றியது. ஏன் என்றால் அறிவியல் என்பது ஒன்றுதானே, அதிலென்ன தமிழர் அறிவியல் - ethnic science என்று தோன்றியது. அதிக பட்சம் local knowlege என்று சிறுமைப்படுத்தி விடுவர். ஏற்கனவே எல்ல அறிவியலும் வேததில் இருந்துதான் வந்தது போன்ற ஒரு போலி தோற்றத்தைபோல தமிழர் அறிவியல் என்ற கருத்துரு தோன்றிவிடுமா என்ற அச்சமும் இருந்தது.
தமிழர் அறிவியலில் இருந்து புது தொழில்நுட்பங்கள் சாத்தியம் என்பதற்கு சில நல்ல உதாரணங்கள் உண்டு. எ.கா biological pestacides, medicinal plants போன்றவை. இங்கு நான் இயற்கை அறிவியல் - natural sciences கவனம் தருகின்றேன்.
இவற்றை பற்றி ஏன் கவனம் தேவையென்று எண்ணினால், ஒரு பாடத்தை படிக்கும் பொழுத் எல்லாமே ஐரோப்பிய மையப் பார்வையில் இருந்தே வருகின்றது. அறிவியல் அணுகுமுறையும், அறிவிலை முறையாக தொழில்நுட்ப ஆக்கத்துக்கு பயன்படுத்தியதும் ஐரோப்பியரின் அரிய பங்களிப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழில் அறிவியல் எழுதும் பொழுது எமக்கான சூழமைவு, பின்புலம் ஒன்று அவசியமாகின்றது. நாம் வெறும் empty minds, always borrowing போன்ற தோற்றப்பாடு தவிர்த்தல் நலம்.
இவை பற்றி உங்களின் பிறரின் கருத்துக்கள் பரிந்துரைகள் அறிய ஆவல். நன்றி.
--Natkeeran 17:57, 18 பெப்ரவரி 2007 (UTC)
- நற்கீரன், உங்கள் கேள்விகளும் தேடல்களும் எனக்கு நன்றாகப் புரிகின்றது. உங்கள் கேள்விகளுக்கும், வேண்டுகோள்களுக்கும் நல்ல மறுமொழி தர விரும்புகிறேன். நான் கூறப்புகும் ஒவ்வொன்றுக்கும் நல்ல மேற்கோள்களுடன் கொடுத்தால்தான் நல்லது. இவை பற்றி பல கருத்துக்கள் எனக்குண்டு எனினும், விரிவாக எழுதும் நிலையில் இல்லை. ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் முதல் படி. சுமார் 1600-1700 வரையிலும் ஆங்கிலேயர்களும் செருமானியர்களும் கல்வி கேள்விகளில், குறிப்பாக கணிதவியல் அறிவியல் துறைகளில் தேர்ந்தவர்களாக இல்லை. கிரேக்கர்களும், இலத்தீன் மொழிக்காரர்களும் (இன்றைய இத்தாலியர்) கல்வி கேள்விகளில் உயர்ந்த நிலையில் இருந்தனர். ஆனால் அவர்களும் எகிப்தியர்களின் வழியும் பிற இனத்தவர்களின் வழியும் அறிந்தது மிகப்பல. இதே போல இந்தியர்களும் அரேபியர்களும், சீனர்களும் பல வகையிலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். சுமார் கி.மு. 200 முதல் கி.பி. 1600 வரை இருந்த கால கட்டங்களில் இந்தியர்களும் தமிழர்களும் உலகில் இருந்த எவருக்கும் இளைத்தவர்கள் இல்லை. ஆனால் இன்று கணிதவியல், அறிவியல், பொறியியல், உடலியங்கியல், மருத்துவம் என்பன கடந்த 200-300 ஆண்டுகளில்தான் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தது. அதுவும் கடந்த 100 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியானது பெரு வியப்பானது. இதில் அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் மறுக்கொணா வகையில் முன்னணியில் ஆக்கங்கள் செய்துள்ளனர். அவ் ஆக்கங்களை போற்றி ஏற்பதில் ஒரு தவறும் இல்லை. இது குறித்து நாம் ஏதும் தாழ்வு மனப்பானமை கொள்ளலாகாது. ஆங்கிலேயர்களும் செருமானியர்களும் ஒரு காலத்தில் கல்வி கேள்விகளில் அறிவு நேர்த்தி ஏதும் இல்லாதவர்களாகவும் "கீழ் மக்களாகவும்" கருதப்பட்டனர். பிரெஞ்ச் மொழியினர், இத்தாலிய மொழியினர், துருக்கி, கிரேக்க மொழியினர், அரேபியர் உயர்வானவர்களாக இருந்தனர். மிக அண்மைக் காலம் வரையிலும் பிரெஞ்ச் மொழி கற்றிருந்தால் ஆங்கிலேயன் ஒருவன் உயர்ந்தவன், இல்லாவிட்டால் அவன் அடிமட்ட மகன்களில் ஒருவன் என இருந்தது. ஆனால் சிறுகச் சிறுக ஆங்கிலேயரும் செருமானியரும் முன்னணிக்கு வந்தனர் (அறிவியலிலும் பிறவற்றிலும்). பிற நாட்டவர்களின் படைப்புகளை தம் மொழிகளில் பேருழைப்புடன் பெயர்த்துக் கொண்டனர். ஏன் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பல ஐரோப்பிய மொழிகளில் முன்னணி அறிவியல் இதழ்கள் இருந்தன - இன்று அவை அருகிவிட்டன (அற்றுவிடவில்லை), ஆனால் ஆங்கிலவழிக் கல்வியும், ஆங்கில இதழ்களுமே அனைத்து மொழிகளுக்கும் முன்னே உள்ளது. இந்த 200-300 அண்டுகளிலும் பிற நாட்டவர்கள் பல காரணங்களினால் அமெரிக்க ஐரோபியர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பின்னடைந்திருந்தனர். வரும் 100 ஆண்டுகளில் சீனரும் பிறரும் முன்னணிக்கு வரலாம். தமிழர் கண்டுபிடிப்புகள், அறிவுத்திறம் என்பன இன்னும் போதிய அளவு அறியப்படவில்லை. சுமார் 150-200 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்களின் அறிவுப் படைப்புகளும், எகிப்தியர்களின் அறிவுப் படைப்புகளும் சீனர்களின் அறிவுப் படைப்புகளும் உலகில் அறியப்படாமல்தான் இருந்தன. இன்று நாம் அறிவதெல்லாம் மிக அண்மைக் காலங்களில் மிகச் சிலருடைய பேருழைப்பால் பெற்றதே. இன்று இந்திய சமஸ்கிருத மொழிப் படைப்புகளும் மேற்கு ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களின் பேருழைப்பால் நாம் அறிவதே. உழைப்பவர்களுக்கே உலகம்! தமிழர் ஆக்கங்கள் பற்றி நிறைய ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பலவற்றுக்குக் காலம் கடந்துவிட்டது, எனினும் இன்னும் இயலும். நோபல் பரிசு பெற்ற சதிர சேகர் ஓர் நேர்காணலில் ( American Insitute of Physic Interview) தமிழர்களில் தனி வானவியல் பற்றி சுருக்கமாக கூறியுள்ளதாக அறிகிறேன் (ஒரு நண்பர் சொல்லக் கேட்டது - மூலத்தைப் பார்க்கவில்லை). தமிழர்கள் வானியல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளன. அதுபோலவே மூலிகைகள், செடிகொடிகள் பற்றி, மீன்கள் பற்றி, உடலியங்கியல் பற்றி, பொறியியல் பற்றி, கணிதவியல் பற்றி பல செய வேண்டியுள்ளன. ஆணித்தரமாக இவை ஆய்ந்து அலசப்பட வேண்டும். கிரேக்க, ரோமானிய, சீன ஆய்வுகள் போலவே செய்ய வேண்டியுள்ளன. --செல்வா 18:55, 18 பெப்ரவரி 2007 (UTC)
சனவரி 2007 க்கான த.வி யின் தர அளவீடுகள்
தொகுடிசம்பர், சனவரிக்கான புள்ளியியல் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர். கட்டுரை எண்ணிக்கையில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. என் கணிப்பில் தர அலவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக்க் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிமான கட்டுரகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது நம் கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
Lang | official | >200ch | new/day | edits | bytes | >0.5K | >2.0K | edits | size | words | internal | interwiki | image | external | redirects |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Te | 26 k | 5.5 k | 11 | 2.3 | 826 | 9% | 2% | 3.9 k | 21 MB | 976 k | 114 k | 58 k | 2.0 k | 3.4 k | 1.2 k |
Bn | 13 k | 5.2 k | 3 | 5.5 | 1755 | 24% | 4% | 6.6 k | 22 MB | 982 k | 61 k | 230 k | 3.0 k | 3.7 k | 9.1 k |
Ta | 6.2 k | 5.8 k | 8 | 9.4 | 4238 | 66% | 16% | 5.4 k | 25 MB | 1.0 M | 76 k | 101 k | 3.1 k | 7.7 k | 1.3 k |
Hi | 6.0 k | 2.6 k | 48 | 5.5 | 1927 | 18% | 6% | 5.1 k | 12 MB | 637 k | 28 k | 76 k | 599 | 2.0 k | 1.1 k |
Mr | 7.4 k | 2.5 k | 10 | 4.9 | 1527 | 20% | 5% | 3.5 k | 11 MB | 577 k | 21 k | 28 k | 481 | 1.9 k | 1.5 k |
Ka | 4.4 k | 3.5 k | 2 | 5.4 | 2757 | 42% | 8% | 1.7 k | 12 MB | 528 k | 41 k | 34 k | 1.2 k | 1.9 k | 1.2 k |
குறிப்புக்காக
தொகு"ஓரெழுத்து முறையில் இல்லாத வேற்று மொழி ஒலிப்புக்களைக் கொண்டு வர பொதுவாக இடைக்குறியீடுகளைத் (diacritical marks) தான் எழுத்துப் பெயர்ப்பில் போடுவார்கள். மாறாக, வேறு எழுத்தையே யாரும் கடன் வாங்க மாட்டார்கள்; இது உலகெங்கணும் இருக்கும் நடைமுறை. காட்டாக சங்கத ஒலிகளை எழுத உரோமன் எழுத்தில் புதிய வடிவங்களையா கொண்டு வருகிறார்கள்? இருப்பதை வைத்துப் இடைக்குறியீடு போட்டு புது ஒலிகளைக் காட்டுகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன கிரந்த லொள்ளு தமிழுக்கு வேண்டியிருக்கிறது? இது போன்ற முட்டாள் தனங்களை எழுத்துப் பெயர்ப்பில் தவிர்க்க வேண்டியே, கனடாவைச் சேர்ந்த திரு.C.R.செல்வக்குமார் பிற மொழி ஒலிகளைத் தமிழெழுத்தையே வைத்து எழுதுவதற்கான இடைக்குறியீடுகளை ஒருசில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்திருந்தார்." http://valavu.blogspot.com/2007/02/2_21.html
--Natkeeran 16:26, 21 பெப்ரவரி 2007 (UTC)
110 கட்டுரைகள் 6 நாட்களில்
தொகுசுமார் 110 கட்டுரைகளை பெப்ரவரி 18 ஆம் நாள் முதல் இன்று இப்பொழுதுவரை, சுமார் 6 நாட்களில் நம் பயனர்கள் ஆக்கியுள்ளனர். இது ஒரு நல்ல முன்னேற்றம். நாம் எல்லோரும் மயூரநாதனின் வழிகாட்டுதலின் படி முழு முனைப்பாய் இயன்ற வரை புதுக் கட்டுரைகள் ஆக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு சராசரியாய் 3 கட்டுரைகள் எழுதி வந்தால் 10 பயனர்களே கூட் 100 நாட்களில் 3000 கட்டுரைகள் எழுதி நாம் 10,000 கட்டுரைகளின் இலக்கை அடைவோம். கோபியைப் போல களப்பணி ஆற்றிக் கொண்டே ஏராளமான கட்டுரைகளை எழுதுவது எல்லாராலும் இயலாவிடினும், மயூரநாதனைப் போல கட்டுக் கோப்பாய், அமைதியாய் கருத்து செறிந்த அருமையான கட்டுரைகளை விறுவிறு என்று எல்லோராலும் ஆக்க இயலாவிடினும், நாம் எல்லோரும் ஆளுக்கு சுமார் 3 குறுங்கட்டுரைகள் (4-5 வரி இருந்தாலே போதும் - தொடக்கத்திற்கு), எழுத இயலும் என நினைக்கிறேன். நாம் சற்று விரைவாய் முந்துவோம். பல தர அளவீடுகளில் தமிழ் விக்கி இந்திய மொழிகளுள் முன் நின்றாலும், நாம் கடந்த ஓராண்டு காலமாக பன்மொழி விக்கியில் 70-72 ஆகிய இடங்களிலேயே உள்ளோம். சற்று முனைப்பாக எல்லோரும் பணி புரிந்தால் விரைவில் 10,000 கட்டுரைகள் எட்டுவதன்றி, பன்மொழி விக்கி வரிசையில் ஒரு 4-5 இடங்களாவது முன்னேறுவோம் என நினைக்கிறேன். முன்னேற வேண்டும். இதனை பொது வேண்டுகோளாய் எல்லோருக்கும் விடுக்கின்றேன். நன்றி. --செல்வா 15:43, 23 பெப்ரவரி 2007 (UTC)
- செல்வா, உங்கள் பாராட்டுக்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் பாராட்டுமளவுக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்ததாக நான் உணரவில்லை. நான் இதுவரை உருவாக்கிய அனைத்துமே குறுங்கட்டுரைகள். வேறு பணிகளில் தீவிரமாக இருப்பதாம் த.வி.யில் முழுமூச்சாகப் பங்களிக்க முடியாத நிலையிலுமுள்ளேன். ஆயினும் 01.06.2007 ஐ இலக்கு வைத்து என் பங்குக்கு 300 குறுங்கட்டுரைகளை உருவாக்க முயல்கிறேன். நன்றி. கோபி 16:00, 23 பெப்ரவரி 2007 (UTC)
- செல்வா, உங்களுடைய குறிப்புக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்பொழுது புதிய பயனர்கள் பலர் சேருகிறார்கள். உங்களைப் போல பல நோக்கு அறிவும், தமிழில் ஆழ்ந்த அறிவும், இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய இயல்பும் கொண்ட பலர் தவிக்குத் தேவை. விரைவில் தவி நல்ல கட்டுரைகளுடன் வேகமாக வளரும் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 16:26, 23 பெப்ரவரி 2007 (UTC)
- செல்வா, உங்களிடமிருந்து பதக்கம் பெற்றதில் மகிழ்ச்சி. நன்றிகள். Mayooranathan 16:28, 23 பெப்ரவரி 2007 (UTC)
சக்தி பேணப்படுகின்றதா
தொகுமின்தூண்டியின் மறிமம்
தொகுமாறுமின்னோட்டம் ஒரு தூண்டியின் ஊடாக செல்லும் பொழுது காந்த பாயம் அல்லது புலம் தூண்டப்படுகின்றது. அந்த தூண்யின் தூண்டத்தையும் மாறுமின்னோட்டத்தையும் பொறுத்து இருமுனைகளிலும் மின்னழுத்தம் ஏற்படும். அந்த மின்னழுத்ததுக்கும் தரப்படும் மாறுமின்னோட்டத்த்கும் இருக்கும் விழுக்காடே மின்தூண்டியின் மறிமம் ஆகும்.
செல்வா, இங்கு purely indutive circuit சக்தி வீணடிக்கப்படுகின்றதா? இல்லத்தானே, அப்படி என்றால் ஓம் விதியுடன் ஒத்து காட்டுவது அவ்வளவு நல்லதல்ல அல்லவா.
--Natkeeran 20:44, 23 பெப்ரவரி 2007 (UTC)
representation
தொகுto represent = முன்னிறுத்தி; representative = சார்பாளர்; representation = ??--Ravidreams 21:59, 24 பெப்ரவரி 2007 (UTC)
தமிழில் விளக்க வரைபடங்கள்
தொகுதமிழில் விளக்க வரைபடங்கள் பலவற்றை சிறப்பாக ஆக்கி தருவதற்கு நன்றி. அவற்றை பின்வரும் பக்ப்புக்களிலும் சேர்த்தால் நன்று.
- பகுப்பு:தமிழில் விளக்க வரைபடங்கள் - diagrams
- பகுப்பு:தமிழில் வரைபடங்கள் - graphs or graphics
--Natkeeran 05:58, 27 பெப்ரவரி 2007 (UTC)
- நன்றி. செய்கிறேன், நற்கீரன்.--செல்வா 12:43, 27 பெப்ரவரி 2007 (UTC)
இரண்டு நாள் பங்குகொள்ள இயலாது
தொகுஇரண்டு நாட்களுக்கு என்னால் சரிவர பங்குகொள்ள இயலாது. ஆனால் வெள்ளி-சனி-ஞாயிறு ஆகிய 3 நாட்களிலும், விடுபட்ட கட்டுரைகளை எழுதி ஈடு செய்துவிடுவேன் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு சராசரியாக 3 கட்டுரைகள் வீதம் எழுத வேண்டும் என்பதற்கிணங்க நான் ஒரு கிழமையில் (7 நாட்களில்), 21 கட்டுரைகள் எழுதுவது என் குறிக்கோள். மறுமொழி தரவில்லை என்றால் தவறாக யாரும் நினைக்க வேண்டாம். நன்றி.--செல்வா 17:21, 27 பெப்ரவரி 2007 (UTC)
238 கட்டுரைகள் பெரவரி 19 ஆம் நாளில் இருந்து இப்பொழுது வரை
தொகுஎட்டாயிரத்தை எட்டிப் பிடிக்க இன்னும் சுமார் 750 கட்டுரைகள்தான் உள்ளன. ஒன்பது நாட்களில் 238 கட்டுரைகள் நம் பயனர்கள் எழுதியுள்ளனர். ஒரு நாளைக்கு 26+ என்ற வீதத்தில் நடந்தேறிய நிகழ்ச்சி. இன்னும் பலர் எழுதலாம். இன்னும் சற்று வேகமாக முன்னேற வேண்டும். இயலும். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுதலாம், எனவே, தங்களுடைய இன்றியமையாத பணிகளுக்குக் குறைவேதும் இல்லாமல் இருந்துகொண்டே த.வி க்குப் பணியாற்ற வாருங்கள் என அழைக்கிறேன். பயனர்கள் நிரோஜன் சக்திவேல், கோபி, அகத்தியன் போல நிறைய கட்டுரைகள் எழுதுவது அரிதென்று எண்ணினாலும், இரண்டொரு கட்டுரைகளாவது எல்லோரும் எழுதுங்கள். இரண்டு நாளைக்கு ஒரு கட்டுரையாவது எழுதுங்கள். நல்ல தமிழில், எளிய தமிழில் எழுதுங்கள். உமாபதி, சிவகுமார், ரவி, நற்கீரன், கனகு ஆகிய எல்லோரும் காட்டும் ஆர்வம் நல்தொற்றாக எல்லோரையும் பற்றும் என எண்ணுவோம். இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பின் என்னால் உரையாட இயலாது. வெள்ளிக் கிழமை மீண்டும் முன்னேற்றத்தைப் பார்க்க இயலும், என் பங்குக்கு நான் விட்டதை எழுதி ஈடு செய்ய முடியும். இப்பொழுது நடக்கும் விரைவில் நிகழ்ந்தால் ஒரு 80-100 கட்டுரைகளாவது கூடியிருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 20:55, 27 பெப்ரவரி 2007 (UTC)
- உங்கள் முனைப்பு பாராட்டத்தக்கது. மற்ற நண்பர்களுடன் இணைந்து விரைவில் நானும் பங்களிக்கத் துவங்குகிறேன். -- Sundar \பேச்சு 15:03, 28 பெப்ரவரி 2007 (UTC)
அண்மைக்கால வேகம் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 10,000 கட்டுரைகள் இலக்கு கைக்கெட்டிய தொலைவில் தான் உள்ளது. இவ்வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தால் ஆண்டு முடிவுக்குள் 15,000 கட்டுரைகளை எட்டிவிடலாம். Mayooranathan 15:35, 28 பெப்ரவரி 2007 (UTC)
346 கட்டுரைகள் பெப்ரவரி 19 முதல் மார்ச் 3 முடிய
தொகு13 நாட்களில் 346 கட்டுரைகள். ஒரு நாளைக்கு 26+ கட்டுரைகள். எல்லாப் பயனர்களுக்கும் என் வாழ்த்துகள்! இதே விரைவில் தொடர்ந்தால் 8,000 கட்டுரைகள் என்னும் இலக்கை இன்னும் 25 நாட்களில் அடைந்துவிடலாம்.
பயனர்களின் கட்டுரை எண்ணிக்கைகள் - கடந்த 13 நாட்களில்
தொகுகடந்த 13 நாட்களில் 346 கட்டுரைகளை எழுதிய பயனர்களின் பட்டியல்
கோபி = 79 Mayooranathan = 54 நிரோஜன் சக்திவேல் = 45 செல்வா = 32 Natkeeran= 28 உமாபதி = 23 பாலச்சந்திரன் = 17 அகத்தியன் = 17 Kanags = 16 Ravidreams = 10 Sivakumar = 8 Gaayathiri =6 Nmadhubala = 2 மு.மயூரன் =2 Senthilkuwait = 1 விஜய்கிருஷ்ணா = 1 இதர கட்டுரைகள்=5
செல்வா நீங்கள் சுட்டிய Two capacitor probelm
தொகுpuhep1.princeton.edu/~mcdonald/examples/twocaps.ps
செல்வா நீங்கள் சுட்டியத் Two capacitor probelm என்று அறியமுடிகின்றது. சில தெளிவுகள்: முதலில் இருந்த சக்தி, பின்னர் இரண்டக்கும் பகிரப்படுகின்றது. பகிரப்பட்ட நிலையில் நாம் Capacitors in parallel விதியை பயன்படுத்தி கூட்டி கணிக்கும் பொழுது கிடைக்கும் சக்தி ஆரம்பத்தில் இருந்ததை விட அரைவாசி. (இங்கு மின்னழுத்தம் தொடர்ந்து கொடுக்கப்படாது என்பது குறிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.) சக்தி விரயத்தை Electro Magnetic Radiation என்று காட்ட முயலுகின்றார்கள். அப்படியானல் சரி. நான் EMR கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு transformer setup, மின்காந்த புலம் conserve பண்ணப்படுகின்றது எனலாமா.
- lumped circuit elements
- circuit theory
- Complex power
- Appearant power
- Real power
- Reactive power
மேலே சுட்டிவற்றுக்கு தமிழ் சொற்கள் தர முடியுமா. அத்தோடு, ஆற்றல்=சக்தி=energy?, power=திறன், efficiency?
- பார்க்க மின் திறன்
அத்தோடு, நீங்கள் சுற்றுக்களைப் பற்றி தமிழில் எழுதியது மிகவும் நன்று. நன்றி.
--Natkeeran 02:02, 4 மார்ச் 2007 (UTC)
- இரு மின்தேக்கிகள் என்பதில்லை, பல மின்தேக்கிகள் வைத்தும் இதுபோல் பல வேறுபாடான விளைவுகளைக் காட்டலாம். மேலே கூறப்பட்ட இரு தேக்கிகளில் (கொண்மிகளில்) மின்ம இழப்பு ஏதும் இல்லை, ஆனால் ஆற்றல் இழப்பு நேர்வது குறிக்கப்பட்டது. மின்ம இழப்பும் ஆற்றல் இழப்பும் உள்ள சிக்கல் கணக்குகளும் உண்டு !! எல்லாமே கருத்தியலான (ideal) மின் தேக்கிகள கொண்ட சுற்றுகளில்தான். இதே போல மின்தூண்டிகளிலும் காட்டமுடியும். மின்மாற்றிகளில் (transformers) ஆற்றலிழப்பு ஏதும் இல்லை (ஓமிய இழப்பைத் தவிர). Conserve பண்ணுதல் என்பது மாறாநிலை பேணுதல், ஆற்றல் மாறாநிலை பேணுதல் (follows energy conservation).
மொழிபெயர்ப்புகள்:
- lumped circuit elements = தனி மின்னுறுப்புகள்
- circuit theory = மின்சுற்று இயல், மின்சுற்றுக் கோட்பாடுகள்
- Complex power = செறிவெண் கூட்டுத் திறன்
- Appearant power = பரும செறிவெண் கூட்டுத் திறன் (அல்லது தோற்ற இணை
- Real power = இயல் திறன் (இணை இயல் திறன்)
- Reactive power = (காந்த-மின் புலத்) தோய்திறன், தேங்கு திறன், தங்கு திறன்.
energy = ஆற்றல் ( அல்லது சக்தி). power = திறன் (இது சரியான சொல் இல்லை என நினைக்கிறேன்). efficiency = திறன்கெழு, திறன்மை. power என்பதற்கு ஆற்றல் வல்லம், ஆற்றல் வன்மை என்று கூறலாம். ஆற்றல் வல்லம் என்னும் சொல்லாட்சி தேவரத்திலும் ஆளப்பட்டுள்ளது. ஆற்றல் செல்லும் அல்லது செலுத்தும் விரைவே power என்பது. ஒரு நொடிக்கு எவ்வளவு ஆற்றல் செலவாகின்றது என்பது power. --செல்வா 21:47, 4 மார்ச் 2007 (UTC)
பதிலுக்கு நன்றி. ஆற்றல் என்பதை பொதுவாக பயன்படுத்துவது நன்று என்று தோன்றுகின்றது. அது energy என்பதன் dynamic (இயங்கியல்) தன்மையை சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கின்றது. நான் பயன்படுத்தும் சொற்கள் அனேகமானவை tamilvu.org இருந்துதான் பெறுகின்றேன், வேறு சில இலங்கை பாடப்புத்தகங்களில் இருந்தும் பெறுகின்றேன். திறன் tamilvu.org. ஆற்றல் வன்மை என்று கூறலாம், ஆனா இங்கு த.நா மற்றும் இலங்கை வழக்கம் எதுவென்று அறிய வேண்டும். வரையறை நன்று.
செறிவு என்றால் concentration என்றும் பொருள் தரும், அதனால் செறிவெண் என்பதில் இன்னும் குழப்பம் தான். சிக்கல் எண் என்று தமிழ்நாட்டிலும் இலங்கையில் வழக்கத்தில் இருப்பதாக அறிய முடிகின்றது.
பல இடங்களில் en:Abstraction என்ற கருத்துருவை அல்லது அத்தோடு தொடர்புடைய சொற்களை தமிழில் வெளிப்படுத்த சிக்கலாக உள்ளது. ஒப்புநிலை, கருத்துபடிமம் போன்று சொன்னாலும், ஒரு சுற்றுவழைப்புத்தான். தமிழில் இதன் கருத்து பின்புலத்தை விரிவாக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 22:14, 4 மார்ச் 2007 (UTC)
- நற்கீரன், abstract, abstraction என்றால், ஒன்றின் கருவான, முக்கியமான கருத்துக்களை பிரித்தெடுத்துத் தொகுத்தல் ஆகும். இதனை பிழிவு என்று தமிழில் வழங்குவர். ஒருவருடைய கட்டுரையின் கருத்துப்பிழிவு என்று சொல்லலாம். "கதையின் கருத்துப்பிழிவு என்னவென்றால்..." என்றெல்லாம் எழுதலாம். சுருக்கம் என்பது வேறு பிழிவு என்பது வேறு. complex number என்பதற்கு செறிவெண் என்பதே சிறந்ததாக எனக்குப் படுகின்றது. செறிவு என்பது வெறும் அடர்த்திமட்டும் இல்லை, நுட்ப்பப்பிணைவும் (complexity) குறிக்கும். கலப்பெண், சிக்கலெண் என்றும் சொல்லலாம். எது சிறந்தது எனில் செறிவென் என்பதே சிறந்தது என்பது என் கருத்து. செறிவென் என்பதில் முழுமை, செழுமை (எல்லாம் அடக்கியது என்னும் பொருள்பட), நுட்பப்பிணைவு ஆகிய அனைத்தும் குறிக்கும்.
தமிழ் லெக்சிகனில் கூறியுள்ளதையும் நோகுக குறிப்பாக (பொருள்கள் 1, 2, 3, 5):
செறிவு (p. 1621) [ ceṟivu ] n ceṟivu . < செறி¹-. 1. Thickness, denseness, closeness; நெருக்கம். செறிவுடை மும் மதில் (திருவாச. 9, 5). 2. Abundance, fulness; மிகுதி. அரும் புலத்தின் செறிவு மீதே (கம்பரா. உருக் காட்டு. 111). 3. Union, combination; கூட்டம். இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (குறள், 684). 4. Relationship; friendship; உறவு. செறி வெனப்படுவது கூறியது மறாமை (கலித். 133). 5. Diffusion, permeation, expansion; கலப்பு. (W.) 6. Kernel, as attached to the shell of a nut; உள்ளீடு நுங்கினது இனியசெறிவை அயில (புறநா. 225, உரை). 7. Self-restraint, modesty; தன்னடக் கம். முதுவருள் முந்துகிளவாச் செறிவு (குறள், 715). 8. Conformity to rules, as of propriety; எல்லை கடவாநிலைமை. (திருக்கோ. 179, உரை.) 9. (Rhet.) Compactness, terseness, as a merit of poetic composition; நெகிழிசையின்மையாகிய செய்யுட் குணம். (தண்டி. 15.)
--செல்வா 22:39, 4 மார்ச் 2007 (UTC)
Abstract பற்றி
தொகு- கட்டுரைகளுக்கு எழுதப்படும் abstract பற்றி மேலே சுட்டவில்லை. abstract mathematics, abstract concepts, abstraction layers, abstract thinking (vs concrete thinking) என்ற கருத்து புலத்தில். இராம.கி அப்பூதியாக என்று பரிந்துரை தந்துள்ளார். அதாவது பூதவியல் புலத்தில் அல்லாமல் என்று பொருள் தரும்படி. இங்கும் இச் சொல் அலசப்பட்டது: http://groups.google.ca/group/tamil_wiktionary/browse_thread/thread/2a55b923f01fc155?hl=en
- உங்கள் விளக்கம் மூலம் செறிவெண்ணும் நன்று போன்றே தெரிகின்றது, ஆனால் த.நா இலங்கையிலும் இருக்கும் வழக்கத்தையும் கவனத்தில் கொள்தல் வேண்டும் அல்லவா.
நன்றி. --Natkeeran 22:59, 4 மார்ச் 2007 (UTC)
- ஏனோ இப்பதிவைப் பார்கத் தவறிவிட்டேன்! மேற்கண்ட இடங்களில் வரும் abstract என்பதை பொதுநுண் அல்லது நுண்பொது அல்லது நுண்பிழிவு என்னும் சொற்களால் குறிக்கலாம். abstract mathematics என்பதை நுண்பொதுக் கணிதம், நுண்பிழிவுக் கணிதம் எனலாம். abstract concept என்பதை பொதுநுண் கருத்துரு அல்லது நுண்பொதுக் கருத்துரு எனலாம். தமிழில் நுண்மாண் நுழைபுலம் என்பர். அதில் இருப்பதுபோல், நுண்மாண் கருத்துரு, நுண்புலக் கருத்துரு, நுண்புலக் கணிதம், நுண்புலச் சிந்தனை, நுண்புல எண்ணல் எனலாம். நுண்-நுட்பம் என்பதும், பொதுமை என்பதும் அடிப்படைக் கருத்துக்கள். நுண்பிழிவு என்பது ஒரு எண்ணப்பரப்பில் பிழிந்தெடுத்த நுட்பமான பொதுமை என்பது கருத்து. இராம.கியின் பதிவை நான் இன்னும் பார்க்கவில்லை. விக்சனரியிலும் பார்க்கவில்லை.--செல்வா 04:52, 8 மார்ச் 2007 (UTC)
- நன்றி. எனக்கு ஆங்கில புலத்தில் புரிந்து வைத்திருக்கும் abstract என்பதின் philosophical (மெய்யியல்) கருத்துருவுக்கு இணையான கருத்துருவை தமிழில் அல்லது தமிழ் மெய்யியலில் இன்னும் நான் எதிர்கொள்ளவில்லை என்றுதான் நினைக்கின்றேன். நுண் என்பது நுட்பத்துடன் அல்லது நுட்பமாக என்றே பொதுவாக பொருள் பட்டு நிற்கின்றது. இருப்பினும் நுண்புல - abstract, அப்பூதியாக - non materialistic போன்றவை நல்ல பரிந்துரைகளே.
- Abstraction refers to different conceptual plane. அந்த விதத்தில் புலம் என்று நீங்கள் எடுத்தாள்வது பொருந்திவருகின்றது. எப்படிப்பட்ட புலம்? Non-materialistc, Non-wordly, More complex!, More removed. வட்டம் என்று சொல்லும் பொழுது நாம் அந்த நுண்புலத்தில் சிந்திப்பதாக சொல்வார்கள். Plato's forms அங்கு ideal ஆக இருக்கும். ஒரு கருத்து புலத்தைத்தான் இங்கு எடுத்துரைக்க முயல்கின்றேம். http://www.wsu.edu/~dee/GLOSSARY/ABSTRACT.HTM
- நீங்கள் தந்த பரிந்துரைகள் வழக்கத்தில் உண்டா?
--Natkeeran 05:16, 8 மார்ச் 2007 (UTC)
- வழக்கத்தில் இருக்கின்றதா என அறியேன். சில நிமிடங்களுக்கு முன்னர் ஆக்கியதே. தமிழ்வழி சிந்தித்தால், அதுவும் ஒரு இடம்-காலத் தேவையுடன் சிந்தித்தால் இன்னும் சிறப்பாகவும் கருத்து விரியுமாறும் ஆக்கங்க்ள் எழலாம்.--செல்வா 05:33, 8 மார்ச் 2007 (UTC)
- abstract என்ற சொல் ஆங்கிலத்தில் பல்வேறு பொருள்களைத் தருகிறது. எனினும் அவை எல்லாவற்றுக்குள்ளும் ஒரு உள்ளார்ந்த தொடர்பும் இருக்கின்றது. இந்த உள்ளார்ந்த பொருளிலிருந்துதான் தமிழில் சொல்லாக்க வெண்டுமென்று நான் கருதுகிறேன். அப்பூதி என்பது non-physical என்றுதான் பொருள் தரும் என எண்ணுகிறேன். abstract என்பது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் non-physical என்றோ, Non-materialistc என்றோ பொருள்படாது. எடுத்துக்காட்டாகக் கட்டிடக்கலை, ஓவியம், சிற்பம் போன்ற துறைகளில் non-physical, Non-materialistc என்ற பொருள் கொள்வதற்கு இடம் கிடையாது. இதுறைகளிலே, ஒரு குறிப்பிட்ட பொருளின் இயல்புத் தோற்றத்தின் சிக்கல்களைக் குறைத்து, எடுத்துக்காட்டவிரும்பும் பண்புகளை மேம்படுத்திக் காட்டுவது என்ற பொருளைத்தான் காணமுடியும். Mayooranathan 18:54, 12 மார்ச் 2007 (UTC)
- நான் மயூரநாதனின் கருத்துடன் உடன்படுகின்றேன். Abstract என்பது அடிப்படையாக உள்ளப் பொதுமைப் பண்புகள், அடிநுண்பண்பு எனலாம். அதாவது சிறப்பான கோணங்களிலோ, காட்சிகளிலோ அடிப்பாவு பெற்ற பொது நுட்பப் பண்புகள் எனலாம்.--செல்வா 19:06, 12 மார்ச் 2007 (UTC)
Speech Synthesis System
தொகுSpeech Synthesis System என்பதை எப்படி தமிழாக்குவது? நல்ல பரிந்துரை ஒன்றினை எதிர்பார்க்கிறேன். --மு.மயூரன் 22:00, 4 மார்ச் 2007 (UTC)
- நன்றி செல்வா. --மு.மயூரன் 23:06, 4 மார்ச் 2007 (UTC)
- பேச்சுத் தொகுப்பு முறைமை ?Mayooranathan 02:49, 5 மார்ச் 2007 (UTC)
1000 கட்டுரைகளில் பயனர்களின் பங்கு
தொகுஒரு சிறு சோதனைக்காக கடந்த 1000 கட்டுரைகளைப் பார்த்த பொழுது (மார்ச் 4 முதல் பின்னோக்கி ஜனவரி 10 முடிய எழுதப்பட்டவை), பயனர்களின் பங்களிப்புகள் தெரிய வந்தது (இதில் கட்டுரையின் நீளம், தரம் முதலிய கணிக்கப்படவில்லை). கீழே தந்துள்ளேன் பார்க்கவும் (டெரென்ஸ் போன்று நிறைய பங்களித்தப் பயனர்களின் பெயர் இதில் இடம் பெறாததற்குக் கரணியம் இக்காலப்பகுதியில் அவர்களின் பங்களிப்பு குறைவு அல்லது அறவே இல்லை என்பதே).:
- கனேஷ்பாட் 311
- கோபி 157
- மயூரநாதன் 126
- நிரோஜன் சக்திவேல் 99
- செல்வா 59
- நற்கீரன் 53
- அகத்தியன் 37
- உமாபதி 33
- கனகு 27
- பாலச்சந்திரன் 24
- Mathygrps 13
- சிவகுமார் 12
- ரவி 10
- காயத்திரி 6
- கலாநிதி 3
fashion?
தொகுfashion, fashion technology போன்றவற்றை தமிழில் எப்படி சொல்வது?--Ravidreams 13:38, 5 மார்ச் 2007 (UTC)
- fashion = ஒய்யாரம், ஒய்யெழில், ஒப்பனை ; fashion technology = ஒய்யாரநுட்பம் ஒய்யாரக்கலை, ஒய்யெழில் நுட்பம், ஒய்யெழிற்கலை, ஒப்பனை நுட்பம், ஒப்பனைக் கலை.--செல்வா 14:40, 5 மார்ச் 2007 (UTC)
நன்றி, செல்வா. இது தவிர, இப்ப இது தான் fashion என்று சொல்வதை எப்படி தமிழில் சொல்வது?--Ravidreams 14:57, 5 மார்ச் 2007 (UTC)
புத்தெழில் என்று சொல்லலாமில்லையா? புத்தெழில் கண்காட்சி, புத்தெழில் நுட்பம், இப்போது இதுதான் புத்தெழில். அப்படி. புதுமை+ எழில் --மு.மயூரன் 15:30, 5 மார்ச் 2007 (UTC)
புத்தெழில் என்று சொல்லலாம், பொருந்தும்தான், ஆனால் அது மிகப்பொதுவாக உள்ளது. பேச்சு வழக்கில் "இப்ப இதுதான் பாஷன்" என்பதை "இப்ப இதுதான் புது ஒய்யாரம்", "இப்ப இதுதான் புத்தொய்யாரம்", "இப்ப இதுதான் ஒய்யாரப் புத்தெழில்", "இப்ப இதுதான் தூக்கலான ஒப்பனை", "இப்ப இதுதான் முன்னிலை ஒப்பனை", "இன்னிக்கி இதாண்டா புத்தொப்பனை" என்று பலவாறு சொல்லலாம். --செல்வா 15:47, 5 மார்ச் 2007 (UTC)
ஆடை, அழகு சார்ந்த துறைகளுக்கு ஒய்யாரச் சொற்கள் பொருந்துகிறது செல்வா. ஆனால், "தமிங்கிலம் பேசுறது இப்ப fashio, குத்துப் பாட்டு வைச்சு படம் எடுக்கிறது இப்ப fashion" என்று சொல்கிறோமே? அதை எப்படி சொல்வது?--Ravidreams 16:15, 5 மார்ச் 2007 (UTC)
- தமிழில் வழங்கும் பல ஆங்கிலச் சொற்கள் தமிழ்வழியே பொருள் கொள்ளும் தமிழ்ச்சொற்கள் தான். கடன் பெற்று இருந்தாலும், பொருள், பொருள் மரபு, சொல்லாட்சிகள் எல்லாம் தமிழ்தான் - ஆங்கிலத்தில் அதற்கிணையான சொல்லாட்சி்கள், பொருள்கள் இல்லை. எடுத்துக்காட்டாக, லேட் (late) என்னும் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழில், "இவன் லேட்டாக்கி லேட்டாக்கியே கழுத்தறுப்பான்", "அவள் வந்தது லேட்டுன்னு சொல்ல முடியாது, இருந்தாலும் கொஞ்சம் லேட்டுதான்", "லேட்டு கீட்டு ஆக்கினியோ, கொன்னுடுவான், பார்த்துக்கோ", "இன்னிக்கி லேட்டு, நேத்து லேட்டு, என்னிக்கித்தான் நீ லேட்டு இல்லே?"
"லேட்டானாலும், பரவாயில்லே, நீங்க கட்டாயம் வாங்கோ" என்னும் சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் சொல்லியோ எழுதியோ பாருங்கள். இதே போலத்தான் டென்ஷன், அட்ஜஸ்ட் முதலான சொற்களும். இப்போ, பாஷனுக்கு வருவோம். நீங்கள் கூறிய இடங்களில் "புதுப்போக்கு", "புதுத்தூக்கு" "புத்தோச்சு", புத்தோச்சம், புத்தோச்சல் என்று சொல்லலாம். (ஓச்சு, ஓச்சல் = உயர்ச்சி, உயர்வான் எழுச்சி தருதல்)--செல்வா 18:15, 5 மார்ச் 2007 (UTC)
நன்றி
தொகுஉங்கள் பாராட்டுக்கு நன்றி, செல்வா. நீங்கள் கட்டுரை எண்ணிக்கையை சுட்டிக் காட்ட ஆரம்பித்த பின்னே தான் கொஞ்சம் பயப்பட்டு :) கட்டுரை ஆக்கத்திலும் ஈடுபட்டேன்--Ravidreams 16:13, 5 மார்ச் 2007 (UTC)
நன்றி.
தொகுபாராட்டுக்களுக்கு நன்றி. த.வி ஒரு வீச்சுமிக்க கூட்டு வல்லமை உடைய புலமாக இருப்பதால், இங்கு பங்களிப்பதில் மகிழ்ச்சிதான். --Natkeeran 22:36, 7 மார்ச் 2007 (UTC)
488 கட்டுரைகள் - பெப்ரவரி 18 முதல் மார்ச் 7 முடிய
தொகுபயனர்களுக்கு மீண்டும் பாராட்டுகள்! கடந்த 17 நாட்களில் 488 கட்டுரைகள்! நாளொன்றுக்குச் சராசரியாக 28.7. நமது தற்போதைய குறிக்கோள் நாளொன்றுக்கு சுமார் 30 கட்டுரைகள் வரைதல். என்றும் போல் மயூரநாதனே மிகுந்த வீச்சோடு அமைதியாய் புது விரிவு தரும் கோணங்களில் ஆக்கங்கள் செய்து வருகின்றார். நம் இன்னொரு தற்போதைய குறிக்கோள் சுமார் 10 பயனர்களாவது நாளொன்றுக்கு 2-3 கட்டுரைகள் வரைதல் வேண்டும். எப்பொழுது 20-30 பயனர்கள் கூட்டுழைப்பு தருவார்கள்? --செல்வா 04:26, 8 மார்ச் 2007 (UTC)
செல்வா, 20-30 பயனர்கள் எப்பொழுது வருவார்கள் என்று அவர்களுக்குத் தான் தெரியும் !! வேடிக்கைக்குச் சொல்லவில்லை. நாளும் 4 புதுப் பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டாலும் முனைப்புடன் பங்களிப்பவர்கள் எப்பொழுதாவது தான் வருகிறார்கள். தற்போது, முனைப்புடன் பங்களிப்பவர்கள் அனைவரும் தாமாக விக்கிப்பீடியாவை கண்டடைந்து ஆர்வத்தின் பேரில் பங்களிப்பவர்கள். என்ன தான் தமிழ் விக்கிப்பீடியாவை விளம்பரப்படுத்தினாலும் இது போன்று சிறந்த பங்களிப்பாளர்கள் வருவது நம் கையில் இல்லை. ஆயிரக்கணக்கானோர் தமிழில் வலைப்பதிந்தாலும் விக்கிப்பீடியாவை அறிந்திருந்தாலும் இங்கு வந்து பங்களிப்பதில்லை. தற்போது தமிழ் விக்கிப்பீடியா தொடக்க காலத்தில் இருந்து ஒரு 15 பேரே முனைப்புடன் பங்களித்திருப்பார்கள். தமிழ் விக்கிப்பீடியா முழுதாக மூன்று ஆண்டுகள் என்று வைத்தாலும் ஆண்டுக்கு ஐவரே இப்படி கிடைத்திருக்கிறார்கள். விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்கள் போல் முனைப்புள்ள பங்களிப்பார்கள் 100 பேர் இருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கட்டற்று இருக்கும். 100 பேர் எப்பொழுது வருவார்கள் என்று கணிக்க இயலவில்லை (2010 கூட ஆகலாம்). 30 முனைப்புள்ள பங்களிப்பாளர்கள் (நாளும் 10 தொகுப்புகளாகவது செய்பவர்கள்) என்ற நிகழ்வு 2008ஆம் ஆண்டு முடிவுக்குள் நிகழலாம் என்று கணிக்கிறேன். பார்ப்போம். மற்றபடி, தற்போதைய தமிழ் விக்கி கட்டுரை உருவாக்க வேகம் மகிழ்ச்சி தரும் ஒன்றே.--Ravidreams 09:07, 8 மார்ச் 2007 (UTC)
ரவி, நீங்கள் த.வி பங்களிக்க இருக்கும் தடைகளை தகுந்தமாதிரி கணக்கில் எடுக்கவில்லை. வலைப்பதிவர்களுக்கே த.வி பங்களிப்பது நுட்ப ரீதியில் இன்னும் சிக்கலாகவே உள்ளது. 300 Tech people கலந்து கொண்ட சென்னை விக்கி முகாமில் 3 த.வி சார்ந்தவர்கள் 1% ?. அதாவது சென்னையில் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்கள், ஓரளாவது பொது மனப்பாங்கு கொண்டவர்கள்தான் விக்கிமுகாம் என்று சொல்லலாம். அவர்களே இப்பொழுதுதான் விக்கி பற்றி அறிந்து வருகின்றார்கள். த.வி நன்றாக உள்வாங்கினாலும், அதன் பலனை நாங்கள் இன்னும் பெறவில்லை என்றே தோன்றுகின்றது. ஆனால் இதைப்பற்றி இப்பொழுத் அதிகம் அலட்ட தேவையில்லை, 5-10 வருடங்கள் என்ற நோக்கில் எண்ணிப் பாருங்கள். மெதுவாகவே வளர்ச்சி வரும். ஐரோப்பாவில் இருந்தோ, சிங்கப்பூரில் இருந்தோ, மலேசியாவில் இருந்தோ யாரும் இங்கு ஈடுபாட்டுடன் இல்லை. அந்த மூன்று பிரதேசங்களையும் target செய்து பரப்புரை! மேற்கொள்ளலாம். உத்தமம் 2004 பின்னர் இன்றைப்படுத்தப்படவில்லை, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள். அது இயங்கினால் அந்த களத்தையும் பயன்படுத்தியிருக்கலாம். தமிழ்நாட்டில் யாரும் நேரடியாக இயங்காதுதான் த.வி. ஒரு பெரிய தடைக்கல்லாக இருக்கின்றது. த.வி பெண்களின் பண்களிப்பும் மத்திமம். ஏன்?
இருக்கும் கட்டுரைகளையும் தகுந்த மாதிரி காட்சி படுத்துவதிலும் நாங்கள் கவனம் தருவதில்லை. இன்றைப்படுத்தலை எப்படி பகிர்ந்து செய்யமுடியும் என்று சற்று brainstrom செய்யவேண்டும். வாசகர்களை கவருவதானால், அதைப்பற்றியும் brainstrom செய்யலாம். (அதற்காக சினிமா, சாத்திரம், சிறுகதை, கவர்ச்சி படங்கள் என்று மசாலா ஆக சொல்லவில்லை.) பொது அறிவு கேள்வி விடை, கட்டுரைகளில் நல்ல எடுத்துக்காட்டுக்கள், சுட்டிகள், கட்டற்ற படிமங்கள்... உண்மையில் எங்களது பரப்புரை! மட்டுப்படுத்தப்பட்டதே. இன்னும் எத்தினையோ மட்டங்களில் எடுத்து செல்லலாம். ஆனா அதற்கு நாங்கள் ஆய்த்தமா என்பதுதான் கேள்விக்குறி. (மேலே நன்றாக அலட்டி இருக்கின்றேன்...). --Natkeeran 21:26, 8 மார்ச் 2007 (UTC)
உங்கள் விளக்கங்களையும் சேர்த்தால் நன்று.
தொகு- புலநிலை ஆற்றல் வேறுபாடு - (potential energy difference)
- மின்னிலை - electrical potential
- நிலையாற்றல் - potential energy
Electric potential difference is defined as the difference in potential eneryg in a charge-field system per unit charge. It is a scalar quantity or measure. V=U/q. இந்த "per unit charge" என்பதை சற்று விரிவாக விளக்கினால் நன்று. பல கணக்குகள் செய்தாலும், சமன்பாடுகளை நினைவில் வைத்திருந்தாலும், இந்த வரையறைகள் சரியாக மனதில் பதிய மறுக்கின்றன. --Natkeeran 05:35, 8 மார்ச் 2007 (UTC)
- மின்னியல் கருத்துக்களை எளிதாக எழுத இயலும், எனவே தான் தாமதித்து வருகின்றேன். ஆங்கில விக்கியில் உள்ளதும் நன்றாக் இல்லை என்பது என் எண்ணம். தமிழில் இன்னும் சிறப்பாக எழுதலாம். மின்னழுத்த வேறுபாடு (electric potential difference) என்று குறிப்பதே எளிதானதும் கருத்தில் பதிய வைப்பதும் ஆகும். per unit charge என்பது தேவை இல்லாத குழப்பம். அதாவது ஓர் இடத்தில் சீரான மின் புலம் இருப்பதாகக் கொள்ளுங்கள். அதாவது 0 வோல்ட் அழுத்தம் ஓரிடத்தில், 10 வோல்ட் அழுத்தம் ஒரு செ.மீ தொலைவில். இடையே உள்ள (சீரான) மின் புலம் = (10-0) வோல்ட் / 1 செ.மீ = 10 வோல்ட்/செ.மீ. ஆகும். இப்பொழுது அந்த மின் புலத்தில் ஒரு கூலாம் நேர்மின்மமானது 10 ஆவது வோல்ட் இருக்கும் இடத்தில் இருந்து 8 ஆவது வோல்ட் அழுத்தம் இருக்கும் இடம் வரை நகர்ந்தால், அந்த மின்மம், மின்புலத்தால் பெறும் ஆற்றல் 2x1 வோல்ட்xகூலாம் (இந்த கூலாம்-வோல்ட் என்பது ஓர் ஆற்றல் அலகு). எனவே இரண்டு வோல்ட் அழுத்தம் என்பதை ஆற்றல்/கூலாம் என்று கூறலாம். மின்னழுத்தம் என்பதை வரையறுக்க ஒரு கூலாம் எத்தனை ஆற்றல் அலகு சரிகின்றது (அல்லது கூடுகின்றது) என்பதைக் கொண்டு கணிக்கலாம். விசை என்பது மின்புலம் x மின்ம அளவு (E x q). மின் புலம் = மினழுத்த வேறுபாடு /இடைவெளி. மின் புலத்தில் இருந்து பெற்ற ஆற்றல் அல்லது செய்யும் வேலை = விசை x செல்லும் தொலவு (Work = F x d) எனவே ஆற்றல் = E x q x d = [(v1-v2)/d] x q x d = (v1-v2) x q = வோல்ட் x கூலாம். ஆகவே v1-v2 என்பதைக் கணிக்க ஆற்றல்/கூலாம் என்கின்றனர். --செல்வா 06:25, 8 மார்ச் 2007 (UTC)
மிக்க நன்றி. மின்னியல் துறையின் புலத்தை த.வி எளிமையாக, விரிவாக நீங்கள் தரவிருப்பதை நோக்கி மகிழ்ச்சி. --Natkeeran 07:01, 8 மார்ச் 2007 (UTC)
நன்றி செல்வா
தொகுசெல்வா, உங்கள் ஒரு பதில் முதல் வாசிப்பில் மனவருத்தந் தந்ததெனினும் அதற்கான காரணம் நான் அதனைத் தனிப்பட எடுத்துக் கொண்டமையே ஆகும். தமிழ் தொடர்பில் உங்கள் மனநிலையை ஒத்ததே என்னுடையதும் என்பதால் உங்கள் கருத்துக்களை விளங்கிக் கொண்டேன். நன்றி. கோபி 11:45, 8 மார்ச் 2007 (UTC)
வலைப்பதிய வேண்டல்
தொகுசெல்வா, ஒரு பக்கத்தில் ஒப்புகிறேன் என்று எழுதி இருந்தீர்கள். பொதுவாக, நாம் ஒப்புக் கொள்கிறேன் என்று முதன்மை வினையுடன் இன்னொரு வினையை தேவையின்றி சேர்த்து எழுதுகிறோம். நீங்கள் இவ்வாறு சொற்களை அறிமுகப்படுத்துவது நன்று. அதே நேரம், எல்லா வினைகளையும் இப்படி எழுத முடியுமா என்றும் ஐயம் இருக்கிறது. இது போன்ற எங்கள் சிறு சிறு மொழி விளக்கங்களுக்கு எல்லாம் நீங்கள் விக்கிப்பீடியாவில் மறுமொழி உரைப்பதை விட வலைப்பதிவுகளில் எழுதினால் இன்னும் பலரை சென்றடையும். கலைச்சொல்லாக்கம் குறித்த உங்கள் கருத்துக்களும் பொதுவில் வைக்கப்பட வேண்டியவை. இன்னொன்று, oxygenஐ நீங்கள் ஏன் ஆக்ஸிஜன் என்று எழுதினீர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் என்றே எழுதி விடுகிறார்கள். ச-வின் ஒலி எல்லா இடத்திலும் cha என்றே வர வேண்டுமா? பூமி என்ற சொல்லினால் பகரத்தின் ஒலிப்பாங்கு குறைவது குறித்தும் குறிப்பிட்டீர்கள். இது போன்ற விசயங்களை வளரும் தலைமுறைக்கு சுட்டிக் காட்டுவது மிகவும் அவசியம். விரைவில் உங்கள் வலைப்பதிவைத் தொடங்க வேண்டுகிறேன். நன்றி--Ravidreams 19:17, 8 மார்ச் 2007 (UTC)
- ஒப்பினேன், ஒப்பவில்லை என்பதெல்லாம் இயல்பான வழக்குதான் ரவி. நான் அறிமுகப்படுத்தவில்லை. சுருங்கச் சொல்லும் வழக்கை நீங்கள் போற்றுவது கண்டு மகிழ்கிறேன். எல்லா வினைகளுக்கும் பொருந்துமா என அறியேன், பொருந்தாது என்றே நினைக்கிறேன். சில இடங்களில் கொள்கிறென் என்பதனை விட்டால் பொருள் மாறும். எ.கா எடுக்கிறேன், எடுத்துக்கொள்கிறேன். (ஆனால் ஏற்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன், இரண்டும் சற்றேறக் குறைய ஒன்றுதான் எனினும் நுட்பப் பொருள் வேறுபாடு உண்டு). ஆக்சிசன் என்று எழுதுவதே என் விருப்பம். சிறு ஒலிப்பிறழ்ச்சிகள் இருந்தாலும், தமிழில் வழங்கும்பொழுது ஒரு சிறிதும் தவறில்லை. ஆனால் என் கணிப்பில் தமிழர்கள் இன்னும் அந்த உறுதிப்பக்குவம் அடையவில்லை. ஆக்சிசன் என்பதை தமிழில் பலுக்கும் பொழுது (awk-chi-jan என்றோ awk-chi-san என்றோ தான் பலுக்க வேண்டும், தமிழில் இயல்பு படி. awk-si-jan என்று பலுக்கக் கூடாது). ஆக்ஸிஜன் என்று எழுதினால் awk-si-jan என்று பலுக்கலாம். -ஸிஜ- வருவது நான் ஒரு சிறிதும் விரும்பாதது (புதுத் தனி எழுத்துக்கள் வருவதால்). தமிழில் ச்கர ஒலி மிகவும் மருவிய ஒன்று. (ச்)ச, ஜ, ஸ ஆகிய மூன்று ஒலிப்புகள் இன்று பெறுகின்றது. தமிழ் முறைப்படி இரண்டுதான் வரவேண்டும். குழந்தைகள் சில நேரங்களில் 'அம்மா பசிக்கின்றது' என்பதற்கு, 'அம்மா பஜி்க்குது' என்பர், அதில் வரும் 'ஜ' சரியான ஒலியாக இருக்கும் என்பது என் கணிப்பு. ஆனால் இப்பொழுது பின்னோக்கிப் போக இயலாது. ஆனால் முதல் சகரத்தை எல்லா இடத்திலும் வல்லினமாக ஒலிக்க இன்றும் இயலும். தென் தமிழகத்திலும் பிற சில இடங்களிலும் 'சொன்னேன்' என்பதை sonnEn என்பதற்கு மாறாக chonnEn என்பர். முதல் ஒலி வல்லிமாய் ஒலிப்பதுதான் சரி. இன்னும் சிலர் மேலும் திரித்து shonnEn என்கின்றனர். இது தவறு என சுட்டிக்காட்ட வேண்டும்.வலைப் பதிவு செய்ய நேரம் இல்லையே ரவி? தொடங்கிய பின் ஓரளவிற்காவது தொடர்ந்து எழுத வேண்டுமே. எழுத நிறைய இருந்தாலும், அனைத்திற்கும் நேரம் இல்லையே. குழந்தை ஆனாலும், கிழவன் ஆனாலும், ஏழை ஆனாலும் பணக்காரன் ஆனாலும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தானே உள்ளது. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. தொடங்க முயல்வேன். --செல்வா 13:28, 9 மார்ச் 2007 (UTC)
மாதம் ஒரு வலைப்பதிவு இடுகை தந்தால் கூட நன்று தான். கொஞ்சம் மெனக்கெடுங்களேன் ! சிக்கலான இந்த ஒலி வேறுபாடுகளை அங்கு அழகாக ஒலிப்பதிவாகக் கூடப் போடலாம். புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். நன்றி--Ravidreams 13:44, 9 மார்ச் 2007 (UTC)
உங்களின் எழுத்துக்கள் நல்ல முன்னோடியாக இருக்கின்றது.
தொகுதமிழில் அறிவியல் எழுத்து என்பது அரிது. அதிலும் சிக்கலான தலைப்புக்களில் எழுதுவது அரிது. அதிலும் புரியக்கூடியமாதிரி எழுதுவது கடினம். அறிமுகங்களோடும் பொதுவாக நின்றுவிடும் தமிழ் அறிவியல் எழுத்தில் இருந்து வேறுபட்டு ஆழம்ங்கள் எளிமையாக அதேவேளை தகுந்த ஆழத்துடன் எழுதும் உங்கள் எழுத்துக்கள் நல்ல முன்மாதிரி. நன்றி.
இந்தப் புலத்தில் ஒரு சில தலைப்புகளில் எழுதலாம் என்று தொடங்கினாலும், ஒரு பின்புலம் இல்லாமல் எழுதுவது கடினம். அடிப்படை இயற்பியல், வேதியியல், உயிரியலை இங்கு எழுதினால் அதை அடிப்படையாக வைத்து விரிந்து செல்லலாம். உண்மையில் இந்த சாத்தியகூறு தமிழுக்கு இதுவரை எங்கும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மிக்க நன்றி. --Natkeeran 02:12, 9 மார்ச் 2007 (UTC)
- நன்றி நற்கீரன். உண்மையிலேயே தமிழில் எத்தனை சிக்கலான கருத்தாக இருந்தாலும், அறிவியலாகட்டும், பிற துறைகளாகட்டும், தெளிவாக எழுத இயலும். தமிழ் அறிந்த ஒருவர் (10 ஆவது வகுப்பு வரை தமிழில் படித்திருந்தால் போதும்), தான் நன்கு அறிந்த ஒன்றை (அதனை எம்மொழியில் இருந்து கற்றிருந்தாலும், உண்மையிலேயே முற்றுமாய் உள்வாங்கி இருந்தால்) தமிழில் அழகாகவும் எளிமையாகவும் எழுத இயலும். கருத்துக்களை எம்மொழியில் வெளியிடுவதாய் இருந்தாலும், சிறிதளவு பயிற்சியும், பட்டறிவும் தேவைதானே. இங்கே ஆழமாக எதையும் நான் எழுதியதாகக் கருதவில்லை, எல்லாமே ஒரு சிறு அறிமுகம் போன்றதுதான். ஆனால் விரிவாகவும் ஆழமாகவும் எழுத முடியும், எழுதலாம். முதலில் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு சிறிதாவது தமிழில் இருக்க வேண்டும். இதனைத.வி மிகச் சிறப்பாக செய்யலாம் என்பது என் எண்ணம். ஏராளமான அருமையான படங்களும், குறிப்புகளும், துல்லியமான தரவுகளும் ஆங்கில விக்கியில் இருந்தும் பிற விக்கியில் இருந்தும் கிடைப்பதால் குறுங்கட்டுரை ஆக்கம் என்பது எளிதானதே. பிற மொழி விக்கிகளில் இல்லாத சிலவும் தமிழில் இருக்க வேண்டும் (5-10% ஆவது) என்றும், பிற விக்கிகளில் இருப்பதைக் காட்டிலும் ஒரு சில வழிகளிலாவது தமிழில் கூடிய சிறப்பான செய்திகள், விளக்கங்கள் இருக்கவேண்டும் (5-10% ஆவது) என்றும், சுமார் 70% கட்டுரைகளாவது எம்மொழிக்கும் இளைக்காத ஈடான சிறப்புடன் விளங்க வேண்டும் என்பதும் என் அவா. எல்லாம் ஒரு நாளில் நடப்பதல்ல. எல்லாம் ஓரிருவரால் செய்வனவும் அல்ல. இங்கு ஆர்வத்துடன் பங்களிக்கும் 10-15 பயனர்களைப் போல கூடிய விரைவில் 30-50 பயனர்களாவது தக்க ஈடுபாடோடு பங்களித்தால் நாம் பீடு நடை போட முடியும். ஏன் 100-200 பயனர்கள் கூட பங்களிக்க வரக்கூடும். நன்றி. --செல்வா 13:00, 9 மார்ச் 2007 (UTC)
எலியேசர்
தொகுசெல்வா, நீங்கள் பேராசிரியர் சி. ஜே. எலியேசர் அவர்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. இவர் 2001 இல் இங்கு மெல்பேர்ண்இல் மறைந்தபோது அன்னாரின் மறைவு பற்றிய செய்தியை தமிழ்.நெட் குழுமத்திற்கு அனுப்பியிருந்தேன். அப்போது உலகெங்கிலும் இருந்து பலர் அவரை நினைவு கூர்ந்திருந்தார்கள். மற்றும், மேலதிக தகவல்களுக்கும் கட்டுரைத் திருத்தங்களுக்கும் நன்றி.--
நன்றி
தொகுவரவேற்ப்புக்கு நன்றி செல்வா. ஆம் விடுமுறை நன்றாக இருந்தது. நாடு தான்??????....இதை பற்றி தனி மடல் வார இறுதியில் உங்களுக்கு அனுப்புகிறேன். விரைவில் 10,000 கட்டுரைகளை தாண்டுவோம் என்பது நிச்சயமாகி விட்டது. இதற்கான எனது பங்களிப்புக்கான செயற்திட்டமொன்றை தீட்டி நடைமுறை படுத்தலாமமென்ற்றுள்ளேன்.--டெரன்ஸ் \பேச்சு 03:12, 13 மார்ச் 2007 (UTC)
தமிழர், தொன்மம், சமயம்
தொகுதமிழர்களின் தொன்மத்தை ஆய்வதில் பல சிக்கல்கள் உண்டு. நீங்கள் குறிப்பிட்டது போன்று தமிழ் இலக்கியங்களில் உலகம் எப்படி உருவானது என்பதற்கு ஒரு தோற்றக் கதை இல்லை. (அப்படி இருந்தால் தெரியப்படுத்தவும்...) தமிழர்களின் தொன்ம சமயம் எது என்பதிலும் தெளிவில்லை. வேதங்களை தமிழரின் வேராக சொல்ல முடியாது என்று நினைக்கின்றேன். தமிழர்களின் சமயமும் பிற தொன்மக் குடிமக்கள் போன்று இயற்கை வழிபாடு என்றால், எமக்கு தொன்மவியல் கதைகள் கிடைக்கப்பெறவில்லை.
இங்கு ஆய்வுக்கு பயன்படும் முக்கிய கருவி தமிழ் ஆகும். வேதாங்கள் வாய்வழியாக வந்து கி.மு. 3500 எழுதப்பட்டது என்பர். சமஸ்கிருதத்தில் எழுத்ப்பட்டது என்று நினைக்கின்றேன். உலகின் தோற்றத்தைப் பற்றியும் தன்மையைப் பற்றியும் வேதங்கள் ஆழமாக அலசுகின்றன.
இங்கு தமிழருக்கும் வேதங்களை ஆக்கியவர்களுக்குமான தொடர்பு என்ன? இருவரும் வெவ்வேறா? கலப்பா?...
கி.பி. பல தமிழர்கள் சமஸ்கிருதத்தில் எழுதினார்கள் என்பது தெளிவு. ஆனால், தொடக்கத்தில் தகவல்கள் மங்கலாகவே இருக்கின்றது.
தொல்பொருளியாளர்கள், anthropologists ஆய்வுகளை நோக்கினால் தகவல்கள் கிடைக்கலாம். ...
- தமிழர்களின் உலகதோற்ற தொன்மக்கதை
- Tamils pre-history
...
உங்களிடம் இருக்கும் தகவல்களைச் சேர்த்தால் நன்று. யார் இந்த புலத்தில் இயங்குகின்றார்கள், மற்றும் நூல்கள் பற்றிய குறிப்புகளையும் சேர்த்தால் நன்று.
--Natkeeran 22:22, 16 மார்ச் 2007 (UTC)
- நற்கீரன், இது பற்றியெல்லாம் சொல்ல நிறைய உள்ளது. நேரம்தான் இல்லை! தமிழர்களுக்கு என்று தனி மெய்யியல் உண்டு, சமயம் உண்டு ஆனால் அவை பெயர் சூட்டப்பட்டதல்ல, எனினும் ஐயம் திரிபற நிறுவ முடியும். வேதாந்தம், புத்தம், சமணம், முதலியனவும் தமிழில் (தமிழ் மெய்யியலில்) இருந்து பெற்றது மிகப் பலவும் வியப்பூட்டுவதும் ஆகும். தமிழரின் இசை, நடனம், இலக்கியம், மெய்யியல் கோட்பாடுகளும் உள்ளறிவுகள், மெய்யுணர்வுகள், கலைநுட்பங்கள் எல்லாமே பெரும் பகுதி உணராமலே இன்றளவும் உள்ளன. பலரும் பலவாறு குழம்பி, எது முதல்நூல், எது வழிநூல், எது உண்மை, எது உண்மையை பிறழ்வாக ஒற்றி எடுத்த படிவு என்பனவற்றை அறியாமல் தவிக்கின்றோம். எல்லாமே தமிழர்கள் கண்டுபிடித்ததல்ல, ஆனால் தமிழர்வழி உரசிச் சென்ற எல்லாமே ஏறத்தாழ மெருகேறிச் சென்றன. மிகப்பல தமிழர்களால் சிறப்பாக அறிந்துணர்ந்த அரிய உண்மைகள். அவை உணரப்படாமல் உள்ளன. இவைகளை எல்லாம் இங்கு சேர்ப்பது இப்பொழுது இயலக்கூடியதல்ல. முதலில் இவை தக்க வழிகளில் நிறுவப்பட வேண்டும். உண்மை என்று உலகம் (அறிவுலகம்) ஏற்றுக் கொண்டபின்பு இங்கு இடுவது முறையாகும். --செல்வா 23:15, 16 மார்ச் 2007 (UTC)
இரண்டே நாட்களில் 245 கட்டுரைகள்!!
தொகுமார்ச் 16-17 ஆகிய இரண்டே நாட்களில் 245 கட்டுரைகள்! நிரோஜன் சக்திவேல் ஓராள் ஒரு படையாக (one man army), ஏராளமான கட்டுரைகளை எழுதி நம்மையெல்லாம் திணற அடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும். காயத்திரியும், மதுபாலாவும் மற்றும் பலரும் ஆக்கிய பங்களிப்புகள் த-வியின் வளர்ச்சிக்கு மிக நல்ல ஆக்கங்கள் என்பது என் கருத்து. எப்பொழுதும்போல மிக அமைதியாய் தரமான கட்டுரைகளை எழுதிக் குவிக்கும் மயூரநாதனும், அடித்தளமாய் அயராது உழைக்கும் பலரும் ஆக்கிய படைப்புகளால் இன்று 8,000 ஐ எட்ட இன்னும் 100 கட்டுரைகளே உள்ளன! எல்லோருக்கும் என் பாராட்டுகள்!--செல்வா 00:44, 18 மார்ச் 2007 (UTC)
நன்றி
தொகுமிக்க நன்றி, செல்வா.. இயன்ற வரை பங்களிக்க வேண்டுமென தான் நானும் நினைக்கிறேன்... (செல்வா, ஒரு வேண்டுகோள் - உங்கள் பயனர் பக்கத்தை 'archive' செய்யுங்களேன், இப்போது இப்பக்கம் மிகவும் நீளமாக உள்ளது.) --மது 07:15, 18 மார்ச் 2007 (UTC)