பயனர் பேச்சு:C.R.Selvakumar/தொகுப்பு 1

வாருங்கள்!

வாருங்கள், C.R.Selvakumar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 00:34, 24 மே 2006 (UTC) வாருங்கள் செல்வகுமார், உங்கள் பங்களிப்பால் விக்கிப்பீடியா மேலும் சிறப்புறும்.Reply

தகுந்த விளக்கங்கள், மாற்றுக்களை தந்து மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்று. நன்றி. --Natkeeran 11:56, 24 மே 2006 (UTC)Reply

கலைச்சொல் தரப்படுத்தல் தொகு

உங்களின் கலைச்சொல் பின்புலத்தை நோக்குகையில் மிக்க மகிழ்ச்சி தருகின்றது. உங்களுடைய உழைப்பு வீண் போகவில்லை. அவற்றை கொண்டுதான் தமிழில் துறைசார் பின்புலத்தை கட்டமைக்க முடியும். பல இடங்களில் புதிய கலைச்சொல் உருவாக்கும் தேவையும் இருக்கின்றது. உங்களுடைய பட்டறிவு எமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தற்சமயம் த.வி. கலைச்சொல் நோக்கிய உரையாடல்கள் பல இடங்களில் நடைபெறுகின்றது. கலைச்சொல் நோக்கி தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்த இன்னுமொரு திட்டம்தான் தமிழ் விக்சனரி. அத் திட்டமும் மிக ஆரம்ப நிலையில் இருக்கின்றது.

தரப்படுத்தப்பட்ட சொற்கள் பயன்படுத்துவது நன்று என்றாலும், நடைமுறையில் சிக்கல்கள் சில உண்டு. முதலாவது இலங்கை வழக்கம் தமிழ் நாட்டு வழக்கத்தில் இருந்து வேறு படுகின்றது. பொதுவாக தமிழ் இணைய பல்கலைக்கழக பரிந்துரைகள் நன்று என்றாலும் சில இடங்களில் வேறு சொற்கள் பொருத்தமாக அமைகின்றன. ஆகவே நாம் தமிழ் விக்கிப்பீடியா வளரும் வேகத்துக்கமைய அங்காங்கே பட்டியல்களை தாயரித்து புரிந்துணர்வு எட்ட முயல்கின்றோம். தற்சமயம் அது பல்வேறு பக்கங்களாக சிதறுண்டும், தமிழ் விக்சனரியுடன் இயைபுபடுத்தாமலும் இருக்கின்றது. பல இடங்களில் இடம்பெறும் கலைச்சொல் நோக்கிய செயல்பாடுகளை மையப்படுத்தி நெறிப்படுத்தவேண்டிய தேவையை பல பயனர்கள் உணர்த்தி உள்ளார்கள்.

மேலே சுட்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முதற்படியாக விரைவில் கலைச்சொல் தொடர்பான சுட்டிகளை பட்டியலிட்டு, செயல்பாடுகளை மையப்படுத்தி விடலாம். அதன் பின்னர் மேலும் உரையாடலாம்.

இந்த மடலை உங்கள் பேச்சு பக்கத்தில் இடுகின்றேன். அங்கே பிறரும் பார்த்து சில வேளைகளில் கருத்து சொல்ல விரும்பலாம். --Natkeeran 01:14, 25 மே 2006 (UTC)Reply

வருக தொகு

வருக செல்வகுமார். தங்களின் அறிவியல் துறை பங்களிப்புகள் நன்று. தங்களைப் போன்ற வல்லுனர்களின் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவை வளப்படுத்தும். நன்றி. -- சிவகுமார் 05:02, 25 மே 2006 (UTC)Reply

வணக்கம் செல்வா. தமிழ் உலகம், அகத்தியர் மடல் குழுக்களில் உங்கள் பங்களிப்புகள் மூலம் உங்களை அறிவேன். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் வருகை நிறைந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.--Kanags 06:24, 27 மே 2006 (UTC)Reply

நன்றி தொகு

வரவேற்பு நல்கிய நற்கீரன், சிவகுமார் உங்கள் இருவ்ருக்கும் என் நன்றிகள். செல்வா--C.R.Selvakumar 05:19, 25 மே 2006 (UTC)Reply

நீக்குக தொகு

புதுப்புது என்னும் பகுதியை நன்றி.--C.R.Selvakumar 02:44, 26 மே 2006 (UTC)Reply

நீக்கப்பட்டு விட்டது. --சிவகுமார் 05:03, 26 மே 2006 (UTC)Reply

kudos தொகு

selva, i cannot belive that a professor can spend so much time and effort in tamil wikipedia project. I am very glad to see ur arrival here and ur contributions in varied topics. Hope u will continue contributing for this ambitious community project--ரவி 15:24, 27 மே 2006 (UTC)Reply

Ravi, Thank oyou for your kind words. A job of a professor is to share his knowwledge :)I) I do plan to continue as time permits. --C.R.Selvakumar 16:05, 27 மே 2006 (UTC)செல்வா.Reply

குறியீடு ' தொகு

செல்வா, உங்கள் கட்டுரைகளில் ' என்ற குறியீட்டை சில சொற்களுக்குப் பாவித்திருக்கிறீர்கள். இதன் விளக்கத்தைத் தருவீர்களா?. இக்குறியீட்டை குறிப்பாக கட்டுரைத் தலைப்புகளில் பாவிக்கும் போது (எ.கா. இராமானு'சன்) தேடு பொறியில் தேடுவதற்கு சிரமமாக இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்..--Kanags 12:09, 28 மே 2006 (UTC)Reply

இதுபற்றி ஒரு கட்டுரை எழுத உள்ளேன். பல மடற்குழுக்களின் 10 ஆண்டுகளுக்கு மேலாக இது பற்றி எழுதி இருக்கிறேன். மொழி ஒலிபெயர்ப்பு (trasliteration) என்னும் தலைப்பில் இது பற்றி விரிவாக எழுத உள்ளேன். சுருக்கமாகக, ச,ட,த,ப என்னும் நான்கு வல்லொலிகளின் voiced stop ஆகிய ja,da,dha,ba என்னும் ஒலிகளைக்குறிக்க, முன் கொட்டு (apostrophe) இட்டு ஒலித்திரி்பைக் காட்டுகிறேன். எடுத்துக்காட்டாக: Gandhi என்பதை 'காந்தி என்று எழுதுகிறேன். Balu என்பதை 'பாலு என்று அதிக ஒலித்திருபு இல்லாமல் எழுதலாம். Japan Janganathan என்பதை 'சப்பான் 'சகன்னாதன் என்று எழுதுகிறேன். இது போலவே ஆங்கிலத்தில் வரும் F என்னும் ஒலியைக்குறிக்க 'வ என்று எழுதுகிறேன். F என்னும் ஒலி காற்றொலி சேர்ந்த வகரத்தின் திரிபுதான் (labial, though p is also labial, F is closer to v from a Tamil's pesrspective). iஇது பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.--C.R.Selvakumar 13:23, 28 மே 2006 (UTC)செல்வாReply

செல்வா, அந்த விளக்கத்துக்கு நன்றி. இந்தக் குறியீட்டை நீங்கள் பாவிப்பது சரி. ஆனால் இது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையா? அதிலும் விக்கி போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் பாவிப்பது தகுமா? இது குறித்து மற்றைய பயனர்களின் கருத்து என்ன அன்பத அறியா ஆவலாயுள்ளேன்--Kanags 11:53, 29 மே 2006 (UTC)Reply

இது பற்றி நான் விரிவாக ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எந்த ஒரு புது முறையையும் பயன் - இடர் இவைகளைச் சீர் தூக்கிப் பார்த்து ஏற்றலே நலம். என் கட்டுரியைக் கண்ட பிறகு இது பற்றியும் இங்கு கலைக்களஞ்சியத்திலே ஆளுவது பற்றியும் கருத்தாடலாம். சுருக்கமாக, ஒரே ஒரு குறியை ' கொண்டு தமிழில் வழங்கா B, G, D போன்ற முதலெழுத்து ஒலிகள் பெறலாம். கட்டுரையை பதிவு செய்யும் வரை சற்று பொறுத்திருக்க அருள்கூர்ந்து வேண்டுகிறேன்.--C.R.Selvakumar 13:53, 29 மே 2006 (UTC)செல்வாReply

பார்க்க: விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு), விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு) -- Sundar \பேச்சு 12:02, 29 மே 2006 (UTC) இத்னைReply

இதை முன்னமே பார்திருக்கிறேன். நன்றி. இது பற்றி பின்னர் எழுதுகிறேன். --C.R.Selvakumar 13:53, 29 மே 2006 (UTC)செல்வாReply

Selva, I was also curious to know about the '' symbol. I will wait for ur detailed explanation before I register my comments. Please leave ur explanation at விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு) which is a general forum to discuss this. Some users might skip this useful discussion as it is taking place in ur user page--ரவி 15:10, 29 மே 2006 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா தொகு

செல்வா, தங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா எவ்வாறு அறிமுகமானது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல். --சிவகுமார் 05:57, 29 மே 2006 (UTC)Reply

வலைகளிலே பல இடங்களிலும் பல சந்தர்பங்களிலும் பார்திருக்கிறேன். ஆனால் பங்கு கொள்வது அண்மையில்தான். அண்மையில் இராம.கி அவர்களின் வளவு வலைப்பதிவை படிக்க யுனிக்கோடு முறைக்கு மாற்றினேன் (நான் TSCII ல் பழக்கப்பட்டவன்). அதன் பின்னர் நேரடியாக படிக்க - எழுத இயன்றதால் பங்கு கொளவ்து எளிதாக இருந்தது.

Please merge the two essays தொகு

For Guide! Wikipedia:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

--Natkeeran 00:42, 30 மே 2006 (UTC)Reply

Miscallaneous தொகு

selva, i feel bad that u took an hour to search for the article on raman. while improving the search capability of wikipedia search engine is not within our immediate capabilities, we do take a lot of pain to categorise articles under proper topics. so, if u succeed in finding a right category (by followiing through articles of similar theme) then u may look for articles of interest under them. This is one way to find, if u don have success in machinised searching. Then, feel free to do ur edits. we all are working in good spirit and no need to 'apologise'. Right now, we don have any policy in manual of style to underline text in the articles. May be we should discuss this and then go ahead. Until then, i kindly request u not to underline text in ur articles. also, u can choose to select the 'remember across sessions'option while u log in and never log off while u close the wikipedia window. This way when u visit this site , u will be always logged in. Ofcourse, this is advisable only if u use ur own computer (vow! what an intelligent tip from me :) )--ரவி 08:59, 30 மே 2006 (UTC)Reply

Ravi, No, I meant I spent one hour collecting info and writing the article on C.V. Raman. I will not underline hereafter. Thanks for your thoughts,.--C.R.Selvakumar 12:26, 30 மே 2006 (UTC)செல்வாReply

இப்பொழுது நாம் விக்கி வரிசையில் ஓரிடம் முன்னுக்கு நகர்ந்து இருக்க வேண்டும். 'பெலெரூசு நாட்டையும் தாண்டி தெலுங்கு மொழியைத் தாண்டி மராத்திய மொழியைத் தாண்டினால், இந்திய மொழிகளில் முதலாவதாக நிற்போம். எண்ணிக்கையில் மீறினால் போதாது. கட்டுரைகளின் தரமும், பயன் சிறப்புமே நம் முரற்சிகளின் கருவாக அமைய வேண்டும் என்பது என் வேண்டுகோள். --C.R.Selvakumar 18:20, 31 மே 2006 (UTC)செல்வாReply

சில பரிந்துரைகள் தொகு

  • படங்களை கோப்பேற்றும் பொழுது அதன் பெயருடன் சேரும் பட அளவை விட்டுவிட்டு ஏற்றினால் நன்று. பட அளவை நாம் வேண்டியவாறு மாற்றிக்கொள்ளலாம்.
  • தலைப்புக்களை Bold செய்வது வழமை (for the first time).
  • ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரைத்தலைப்பில் கட்டுரை இருக்கும் பட்சத்தில் ஆங்கில விக்கி இணைப்பையும் சேர்ப்பது நன்று.

நன்றி. --Natkeeran 07:01, 1 ஜூன் 2006 (UTC)

  • பரிந்துரைகளுக்கு நன்றி. என்னால் இயன்றளவு நீங்கள் கூறுவதைக் கடைபிடிக்கிறேன். சிறுகச் சிறுக விக்கியின்

இயல்புகளையும், முறைபாடுகளையும் கற்று வருகிறேன். பிற மொழி இணைப்பை ஏற்படுத்துவது, பகுப்புகள் முதலியவற்றை இணைப்பது என்பதெல்லாம் இப்பொழுதுதான் (அதுவும் ஒரு சிறிதே) செய்யத் தொடங்கி உள்ளேன். இன்னும் ஏராளமாக எழுத்துப் பிழைகளையும், சொற்றொடர் குற்றங்களையும், ஆற்றொழுக்கான கருத்துப்போக்குகள் இல்லாமலும் எழுதிவருகின்றேன். நிறைகுறைகளை நன்றாக அறிவேன். போதிய நேரம் இல்லாததாலேயே பல குற்றங்களுடன் குறுங்கட்டுரைகள் எழுதுகிறேன். போகப் போக குற்றங்கள் குறையும் என்று நன்புகிறேன்.--C.R.Selvakumar 15:10, 1 ஜூன் 2006 (UTC)செல்வா

Selva, just take note of the style and try following it as it saves other editors time to wikify it and reduces unwanted frequency of edits. But u need not worry being a beginner. we all did it the same way in beginning. and there a quite number of people coming forward to wikify articles. I am the prime culprit, actually wikifying and commenting on articles without actually writing much articles ;) But this is also contribution in a way :) I am really very happy to see articles coming from u on diverse areas--ரவி 15:15, 1 ஜூன் 2006 (UTC)

அமெரிக்க ஒன்றியம் என்ற சொற்தொடர் பொது பயன்பாட்டில் இருக்கின்றதா? தொகு

அமெரிக்க ஒன்றியம் என்ற சொற்தொடர் பொது பயன்பாட்டில் இருக்கின்றதா? United States of America எப்படி அழைப்பது?

  • அமெரிக்கா
  • ஐக்கிய அமெரிக்கா
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  • அமெரிக்க ஒன்றியம்?
பேச்சு:ஐக்கிய அமெரிக்க நாடுகள்

--Natkeeran 23:28, 4 ஜூன் 2006 (UTC)

அமெரிக்க நாடுகள் ஒன்றியம் என்பது பொது வழக்கில் உள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகள் அல்லது அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக இணையத்திலே மணி மணிவண்ணன் போன்ற பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பன்படுத்தி வந்துள்ளனர். United Nations என்பதை நாடுகளின் ஒன்றியம் மற்றும் அனைத்து நாடுகளின் ஒன்றியம் என்ற சொல்வழக்குகள் பரவலாகப் பயன்படுவது. United, Union என்னும் சொற்களுக்கு ஒன்றியம் என்ற சொல்லைத் தேர்ந்தொத்தச் சொல்லாக தமிழர்கள் வழங்கி வருகிறார்கள். --C.R.Selvakumar 23:44, 4 ஜூன் 2006 (UTC)செல்வா

அப்படியானால் பிற பயனர்களுடன் அலசி ஒரு புரிந்துணர்வு எட்ட வேண்டும். --Natkeeran 23:53, 4 ஜூன் 2006 (UTC)

அமெரிக்க கூட்டு நாடுகள் (அகூநா) என்றும் இணையத்தில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் "நாடுகள்" என அழைக்கலாமா? அமெரிக்கா என்பது ஒரு நாடு. ஒரு தலைவர். United Nations என்பது ஐக்கிய நாடுகள் (ஐநா).--Kanags 13:00, 5 ஜூன் 2006 (UTC)

ஜெர்மன், பிரென்ச்சு மொழி வழக்குகளையும் பாருங்கள். ஜெர்மனில் Vereinigten Staaten von Amerika என்கிறார்கள். Vereinigten என்றால் ஒன்றாக இணைக்கப்பட்ட என்று பொருள். அதில் ein என்பது ஒன்று என்பதே. தமிழில் ஒன்று என்றாலே (Unite! get united! ) என்னும் பொருள் கொண்டது. French États-Unis d'Amérique. நாடுகள் என்னும் பன்மை வருவதை தவிர்க்க வேண்டியதில்லை. கூட்டுற்ற, கூட்டுண்ட, கூட்டிணைந்த , ஒன்றிய, ஒன்றுபட்ட நாடுகள்தாம். ஒரு நாடே ஆயினும், இந்நாடு, நாடுகளின் கூட்டு என்றே வழங்கி வருகிறது (பல மொழிகளிலும்). ஐக்கிய நாடுகள் என்பதிலும் நாடுகள் என்பது பன்மையில் தான் உள்ளது. ஐக்கிய என்னும் சொல் ஃஇந்தி மொழி, சம்ஸ்கிருத மொழிச் சொல்லாகிய ஏக் > ஏகம் > ஐக்யம். சுகம் என்பது வடமொழியில் சௌக்யம் என மருவும். ஐக்கிய நாடுகள் என்னும் தொடர் பிடித்து இருந்தால் வைத்துக்கொள்ளலாம். ஒன்றிய நாடுகள் என்றாலும் அதே பொருள் உடையது தான். பிற தமிழ் சொற்களுக்கு வலு ஈந்து வாழ்வளிக்கும். நல்ல தமிழ்ச் சொற்களுடன், வளமும், பயனும் கூடுமாறு இருக்க வேண்டும் என்பதே என் பரிந்துரை. எனவே அமெரிக்கக் கூட்டு நாடுகள் என்றாலும் எனக்கு ஏற்புடையதே. அமெரிக்க நாடுகளின் ஒன்றியம், ஒன்றிய அமெரிக்க நாடுகள், என ஏதேனும் ஒன்றை எடுத்தாண்டாலும் ஏற்புடையதே. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்னும் வாக்கில் உள்ள ஒன்று என்பதையும் நோக்குக. ஒன்று என்பது ஒற்று, ஒற்றுமை என்னும் சொற்களுடன் எல்லாம் தொடர்பு கொள்ள வழி கூட்டும். --C.R.Selvakumar 15:22, 5 ஜூன் 2006 (UTC)செல்வா

skin effect மொழி பெயர்ப்பு செய்ய முடியுமா? தொகு

நன்றி--Natkeeran 02:48, 8 ஜூன் 2006 (UTC)

கட்டாயம் முடியும். நேரம் கிடைப்பதுதான் அரிதாக உள்ளது. மின்னோட்டத்தின் புறவோட்டம்.

ஒரு மின் கடத்தியில், நேர்மின்னோட்டம் நடக்கும் பொழுது, அக்கடத்தியின் உள்ளே, அதன் குறுக்கு வெட்டுப் பரப்பில், எல்லா இடங்களிலும், ஒரே சீராக ஒரே அளவு மின்னோட்டம் தான் இருக்கும். ஆனால், மின்னோட்டம் மாறு மின்னோட்டமாக இருந்தால், மிக அதிக அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் நிகழும் பொழுது, மின்னொட்டம் பெரும்பாலும் அந்த மின் கட்த்தியின் மேற்புரத்திலேயே நிகழும், கடத்தியின் அச்சு போன்ற உட்பகுதியில், அதிக மின்னோட்டம் இராது. இப்படி ஒரு கடத்தியின் (அச்சு போன்ற) உட்பகுதியிலே மின்னோட்டம் நிகழாது, புறப்பகுதியில் அதிகமாக மின்னொட்டம் நிகழ்வதை மின் புறவோட்டம் என அழைக்கிறார்கள். (படம் கட்டயம் சேர்க்க வேண்டும்)--C.R.Selvakumar 16:30, 8 ஜூன் 2006 (UTC)செல்வா

நல்ல சொல்லும் விளக்கமும், ஒரு சிறுகட்டுரை ஆக்கிவிடலாம். நன்றி. --Natkeeran 17:16, 8 ஜூன் 2006 (UTC)

உங்கள் பங்களிப்புகள் தொகு

உங்களைப் போன்ற துறை வல்லுநர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்து பங்களிக்கத் துவங்குவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இங்கே நீங்கள் குறிப்புட்டுள்ளதுபோல் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். உங்கள் குறியீடுகளை நாம் அனைவரும் ஏற்குமிடத்தில்கூட அவற்றிலிருந்து வெகுவாகப் பயன்படுத்தப்படும் கட்டுரைத் தலைப்புகளுக்கு வழிமாற்றுப் பக்கங்கள் மட்டுமே தரவேண்டும் என்பது என் கருத்து. இதனால் தேடுபொறிகளுக்கும் பொதுப்பயனர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். அதே நேரத்தில், இந்த நடை அறிந்தவர்களும் பயன்படுத்த முடியும். இதையும் கருத்தில் கொள்ளுங்கள். -- Sundar \பேச்சு 07:01, 9 ஜூன் 2006 (UTC)

சுந்தர், கட்டுரை பெரும் பங்கு எழுதிவிட்டேன். இன்னும் சற்று எழுதவேண்டும். கட்டாயம் இடுகின்றேன். இது தொடர்பான சில செய்திக்ளையும் தொகுப்பதாலும், சற்று காலத் தாழ்வு ஏற்படுகின்றது. விரைவில் முன் வைக்கிறேன்.--C.R.Selvakumar 13:27, 9 ஜூன் 2006 (UTC)செல்வா

தமிழ் விக்கி பீடியா தொகு

முனைவர் பட்டம் (Ph.D) பெற்று, தமிழில் மிக அழகாக எழுதவல்ல, நல்ல அறிவியல், பொறியியல் அறிஞர்கள் பலர் நம் விக்கிக்கு வர இருக்கிறார்கள். கட்டுரைகளின் தரத்திலும், எண்ணிகையிலும், வகைப் பரட்சியிலும் (வெவேறு வகைகள், diversity) பெரும் நன்மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. நான் மே 24ம் நாளில் இருந்துதான் பங்கு கொள்கிறேன் இதுவரை சுமார் 40 குறுங்கட்டுரைகள் எழுதியுள்ளேன். எந்தத் த்டுறையிலும் கட்டுரைகள் எழுதுவது ஏதும் கடினம் இல்லை, நிறைய செய்திகளும் உள்ளன, எழுத நேரம் கிடைப்பதே இடர்ப்பாடு. எனவே பலரும் பங்கு கொண்டால், விரைந்து பெரு முன்னேற்றம் அடையலாம், அடைய வேண்டும்.--C.R.Selvakumar 12:21, 9 ஜூன் 2006 (UTC)செல்வா

முனைவர் பட்டம் (Ph.D) பெற்று, தமிழில் மிக அழகாக எழுதவல்ல, நல்ல அறிவியல், பொறியியல் அறிஞர்கள் பலர் நம் விக்கிக்கு வர இருக்கிறார்கள். கட்டுரைகளின் தரத்திலும், எண்ணிகையிலும், வகைப் பரட்சியிலும் (வெவேறு வகைகள், diversity) பெரும் நன்மாற்றங்கள் நிகழ இருக்கின்றன - தனிப்பட்ட முறையில் யாரும் உங்களுக்கு இது குறித்து தெரிவித்தார்களா? விவரங்களை அறியவும் அவர்களை வரவேற்கவும் ஆவலாக உள்ளேன்--ரவி 13:00, 9 ஜூன் 2006 (UTC)

நான் அழைப்பு விடுத்துள்ளேன், சிலர் ஒப்புக்கொண்டுமுள்ளார்கள், விக்கிப் பீடியா பற்றி அவர்கள் நன்கு அறிவார்கள் எனினும், இதுவரை பங்கு கொள்ளவில்லை. நாக கணேசன், சுந்தரமூர்த்தி, கதிரவன், இளங்கோ, சந்திரா, பாலா சுவாமினாதன், சுடலை மாடன், செல்வராஜ் இப்படியாக பலர். எல்லோரும் தமிழில் மிக மிகஅழகாக ஆற்றொழுக்காக எழுதவல்லவர்கள். பல் திற அறிவும் ஆற்றலும் உடையவர்கள். இராம.கி அவைகளும் இன்னும் பல அறிஞர்களும் கட்டாயம் வருவார்கள். --C.R.Selvakumar 13:17, 9 ஜூன் 2006 (UTC)செல்வா

மிக்க மகிழ்ச்சி :)--ரவி 13:56, 9 ஜூன் 2006 (UTC)

மகிழ்ச்சியான செய்தி. பலவகையான பூக்களும் விக்கிப்பீடியாவில் பூக்கும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். Mayooranathan 14:07, 9 ஜூன் 2006 (UTC)

மகிழ்ச்சியான செய்யே கட்டுரைகளின் தரமும் இதனால் கூட்டப்படும் என நம்புகின்றேன். அவர்களை மரியாதையுடன் வரவேற்கின்றேன்.--கலாநிதி

செல்வா, உங்களது அண்மைய அழைப்பும் நான் இங்கு வர ஒரு உடனடிக் காரணம். SCT நாட்களில் இருந்து உங்களை அறிந்திருப்பதால் உங்கள் தமிழார்வமும் திறனும் நன்கு அறிவேன். உங்களுடைய எழுத்துக்களும், தமிழில் அறிவியல் வளர்ச்சிக்கான முனைப்புகளும், என்னைப் பெரிதும் கவர்ந்தவை. மீண்டும் உங்களோடு தொடர்பு கொள்ள முடிவதில் மகிழ்ச்சி. உங்கள் வரவேற்பிற்கும் நன்றி. --செல்வராஜ் 20:11, 9 ஜூன் 2006 (UTC)

வெல்வராஜ், தங்கள் வருகையக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். உங்கள் வருகையால் தமிழ் விக்கிக்கு ஒரு புது மெருகேறும் என நம்புகிறேன். தங்களுக்கு அறிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களையும் அழைத்து ஈடுபடுத்துங்கள். ஆளுக்கு 5-10 ஆக்கினாலே, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்க்கணக்கிலும் கட்டுரைகள் ஆக்க முடியும். சிறு துளி பெருவெள்ளம். எவ்வகை உதவி வேண்டுமென்றாலும் உதவ இங்கு பலர் இருக்கின்றனர். மீண்டும் வருக என வரவேற்கிறேன். தங்களுடய பாராட்டு மொழிகளுக்கு மிக்க நன்றி --C.R.Selvakumar 15:15, 10 ஜூன் 2006 (UTC)செல்வா

கணிதவழி தொடர் விளக்கம் தொகு

பொதுவாக இலத்திரனியல் கட்டுரைகளில் கணிதவழி தொடர் விளக்கம் ஒரு அம்சமாக இருக்கவேண்டும், அது தவிர்க்க முடியாதது என்றும் கருதுகின்றேன். கணித விபரிப்பு சுருக்கமாக எனக்கு தெரிந்தது, நீங்கள் கணிதவழி தொடர் விளக்கம் என்ற சொற்தொடர் மூலம் குறிக்க முயல்வது எதுவாக இருக்கும்? --Natkeeran 03:34, 12 ஜூன் 2006 (UTC)

மின்காந்த சக்தி தொகு

எங்கு மின்சக்தி உண்டோ, அங்கு காந்த சக்தி உண்டு, அதாவது மின்குமிழை பத்த வைக்கும் சக்திக்கு மின் - காந்த கூறுகள் உண்டு, எனவே மின்காந்த சக்தி என்று குறிப்பிடுவது தவறா? --Natkeeran 05:44, 12 ஜூன் 2006 (UTC)

இரு தட்டுகள் உள்ள ஒரு மின் தேக்கியில், மின்னூட்டத்தை, மின்னேற்பை தேக்கி, சேமித்து வைத்திருக்கும்பொழுது, அந்த இருதட்டுகளுக்கும் இடையே உள்ளது மின்புலம் (மின் காந்தப்புலம் அல்ல). இந்த மின் புலத்தில் உள்ளது மின் ஆற்றல் (மின் காந்த ஆற்றல் அல்ல). இதே போல ஒரு தூண்டியில், நேர்மின்னோட்டம் பாயும் பொழுது, காந்தப்புலம் ஏற்படுகின்றது, இது மின்னோட்டத்தால் ஏற்படும் காந்தப் புலம் ஆனால் மின்காந்தப்புலம் அல்ல. அந்த காந்தப்புலத்தில் உறைந்திருப்பது காந்த ஆற்றல், மின்காந்த ஆற்றல் அல்ல. மின்புலமும், காந்தப்புலமும் இணைந்து இருப்பது ஓளி, ரேடியோ அலை, நுண்ணலை போன்ற மின்காந்த அலைகளில் தான். மின் ஆற்றல் ஒரு கம்பியின் வழியே பாயும் பொழுது, மின்சாரம் ஓடும் கம்பியைச் சூழ்ந்து காந்தப் புலம் இருக்கும், எனினும் இது மின்னோட்டம் தான். மிக அதிர்வெண் உள்ள மின்னோட்டம் நிகழும் பொழுது அலையோட்டம் (travelling wave) என்று கூறுகிறோம், அதனினும் அதிக அலைவெண் ஓட்டம் நிகழும் பொழுது மின்காந்த அலையாக வெளியேறும். இந்நிலையில்தான் மின்காந்த அலை. மின்புலமும், காந்தப்புலமும் ஒருசேர இரு செங்குத்தான திசையில் இயங்கி மூன்றாவது செங்குத்தான திசையில் மின்காந்த அலைவடிவில் முன்னேறும், பரவும்.--C.R.Selvakumar 12:15, 12 ஜூன் 2006 (UTC)செல்வா
மன்னிக்கவேண்டும், நீங்கள் சுட்டுவது அந்த இரு கட்டுரைகளை நோக்கினால் சரிதான். அதாவது அங்கு மின்புலத்தில் சேமிக்கப்படும் சத்தி, காந்தபுலத்தில் சேமிக்கப்படும் சக்தி பற்றி வரும் இடங்களில் மின்காந்த சத்தி என்றால் அது தவறுதான். எனினும், பொதுவாக, நான் மேலே சுட்டிய எடுத்துக்காட்டு போல ஒரு மின்விளக்கு எரிவதற்கு பயன்படும் சக்தியை மின்காந்த சக்தி என்று குறிப்பிடுவது தவறாக ஆகுமா? அதாவது மின்னோட்டம் இருக்கும் என்பது சரிதான், ஆனால் மின்னோட்டம் சத்தி ஆகாது. அங்கு விரயம் ஆவது மின்னோட்டம் அல்ல, மின்காந்த சக்திதானே.
என்ன சொல்ல முற்படுகின்றேன் என்றால், பொதுவாக ஆங்கில புத்தகங்களிலும் மின்சத்திதான் மின்விளக்குகளில் விரயம் ஆகின்றது என்று படிப்பித்து தருகின்றார்கள். ஆனால், உண்மையில் நீங்கள் சுட்டிய படி காந்த புலமும் இருக்கின்றது. ஆகையால் அதை மின்காந்த சக்தி என்று குறிப்பிடுவது தவறல்ல என்று நினைக்கின்றேன். இதை நீங்கள் ஏற்பீர்களோ தெரியாது, ஆனால் அக்கருத்து அடிப்படையில் பிழையா என்று அறிய ஆவல்?--Natkeeran 16:21, 12 ஜூன் 2006 (UTC)
ஆமாம் தவறுதான். ஏனெனில், மின்காந்த சக்தி என்பது அலையாக பரவிசெல்லும் பொழுதுதான் உண்டு. இதை சேமித்து வைக்கவும் இயலுவதில்லை. மின்விளக்கில் பயன்படுவது மின்சக்தி (மின்னாற்றல்). காந்தப்புலம் இருப்பதால், மின்காந்தசக்தி என்று சொல்லுவது குழப்பம் ஏற்படுத்தும். கந்தப்புலம் கூடவே வருமே அன்றி அது எவ்வெலையும் செய்யவில்லை. மின்விசிறியில் மின்னோட்டத்தால் ஏற்படும் காந்தப்புலம் தொழிற்பட்டாலும், மின்னாற்றல், காத்த ஆற்றல் என இரண்டும் பிரித்தே அறியவும் ஆளவும் படும். மின்காந்தச் சக்தி என்பது சிறப்பு பொருள் பொதிந்தது, அதன் இயக்கம் வேறு. --C.R.Selvakumar 16:54, 12 ஜூன் 2006 (UTC)செல்வா

உறுப்பு தொகு

உறுப்பு என்பதன் மூலம் என்பதாக கொள்கின்றேன். அச்சொல் பொது பயன்பாட்டில் உள்ளதா. ஒரு அகராதி ஆக்கக்கூறு என்று பரிந்துரைக்கின்றது.

மின் உறுப்பு என்பது பொது சொல்லாக படுகின்றது. இலத்திரனியல் (அல்லது இலத்திரனியல் மின்சுற்று) உறுப்புக்களை மின்னியல் உறுப்புக்களில் இருந்து வேறுபடுத்தி பார்ப்பது வழமை. எப்படி இச்சொற்பதங்களை பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்கள்? --Natkeeran 07:28, 12 ஜூன் 2006 (UTC)

மின் உறுப்பு என்பது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் அமைப்புகளில் பயன் படும் ஒர் உறுப்பு. கருவி என்ற சொல் சற்று விரிவான பொருள் தருவது. மின் தடையத்தை மின் கருவி என்று சொன்னால் தவறாகாது, ஆனால் மின் உறுப்பு என்று சொன்னால் போதும் என்று நினைத்தேன். நுண்ணோக்கி, தொலைநோக்கி, மின் மிகைப்பி போன்றவற்றை கருவி எனில் பொருந்தும். எளிய தடையத்தை மின் கருவி எனில், சற்று மிகையாகத் தோன்றியது. --C.R.Selvakumar 12:35, 12 ஜூன் 2006 (UTC)செல்வா
அமாம், நீங்கள் சுட்டிய கருதுக்கள் எனக்குள்ளும் எழுந்தன. கருவி என்பதை விட உறுப்பு நன்றாகதான் இருக்கின்றது. நான் உங்களிடம் வினவியதன் நோக்கம் அந்த சொல்லை ஒரு தரப்படுட்த்தப்பட்ட சொல்லாக இலத்திரனியல் உறுப்பு என்று பயன்படுத்தலாமா அல்லது Electronic Components வேறு சொற்கள் பயன்படுத்துகின்றார்களா என்று அறியவே.
மேலும், Electronic Components Electrical Components வேறு படுத்தி பார்க்கும் வழமையும் உண்டு என்று சுட்டவுமே. உங்களுக்கு இவையெல்லாம் பரிச்சியம் என்றும் அனுமானிக்கின்றேன். --Natkeeran 16:30, 12 ஜூன் 2006 (UTC)

A component is all that is meant. Whether it is used as an electronic componennt or magnetic component, electrical component doesn't matter. இலத்திரனியல் உறுப்பு (மின்ம உறுப்பு, எதிர்மின்னியியல் உறுப்பு), மின் உறுப்பு, காந்த உறுப்பு . மின் சுற்று என்னும் பொழுது, இலத்திரனியல் மின் சுற்றா, ஆல்து அதிக வோல்ட்டளவு கொண்ட மின்னியலில் பயன்படும் சுற்றா என்று வேறுபாடு தேவையில்லை. பொருள் விளங்க வேண்டும். இலத்திரனியலிலும், அதிக அதிர்வென் கொண்ட மின் சுற்றுக்களுக்குப் பயன்படும் உறுப்புகள் வேறு வகையின. எனவே இதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன். --C.R.Selvakumar 17:02, 12 ஜூன் 2006 (UTC)செல்வா

நன்றி தொகு

சில காலமாக சிறு திருத்தங்களே செய்து வந்த எனக்கு உங்களுடைய கொறிணி, நரி, நாய், கரடி போன்ற கட்டுரைகளே புதிதாக கட்டுரையை எழுதத் தூண்டின :-) --சிவகுமார் 17:18, 12 ஜூன் 2006 (UTC)

' குறியீடு தொகு

' குறியீடு பற்றி விக்கிபீடியர்கள் கலந்து முடிவு செய்யும் வரை அதை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். -- Sundar \பேச்சு 06:16, 14 ஜூன் 2006 (UTC)

மற்றபடி உங்கள் பரிந்துரைக்கேற்ப சுற்றிழுப்பசைவு கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். மேலும், அதன் பேச்சுப் பக்கத்தில் சில கருத்துக்களை இட்டுள்ளேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். அதேபோல், பேச்சு:இருவாழ்விகள் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தே சரியெனத் தோன்றுகிறது. அங்கே உங்களின் மற்றும் பிற பயனர்களின் கருத்தை அறிந்தபின் கட்டுரைத் தலைப்பை மாற்றலாம் என நினைக்கிறேன். நன்றி. -- Sundar \பேச்சு

' குறி பயன்படுத்துவது குறித்த உங்கள் கருத்தை/கட்டுரையை இங்கு இட்டீர்களானால் விவாதித்து கொள்கை முடிவை இறுதி செய்யலாம்.--ரவி 08:13, 16 ஜூன் 2006 (UTC)

கட்டுரை ஆக்கம் தொகு

செல்வா மொழிபெயற்பு எனக்கு அவ்வளவு தெளிவு இல்லை. வார்த்தை பயன்பாட்டுக்கு பல அகராதிகளையும் புத்தகங்களையும் பார்த்தே செய்கிறேன். அதனால் தவறு இருந்தால் மன்னிக்கவும். முடிந்தால் சரி செய்யவும். நன்றி - வைகுண்ட ராஜா 19:30, 19 ஜூன் 2006 (UTC)

சின்னச் சின்ன விதயங்கள் :) தொகு

செல்வா, நீங்கள் தொகுக்கும் போது மறக்காமல் புகுபதிகை செய்து விடுங்கள். இல்லாவிட்டால், சிறுசிறு குழப்பங்கள் வரும். பார்க்கவும்:Wikipedia:ஒத்தாசை பக்கம்#வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம். அப்புறம், பயனர்களுக்கான தகவல்களை அவர்கள் பேச்சுப்பக்கத்தில் விட்டீர்களானால் அவர்கள் உடனடியாக கவனிப்பர். டெரன்சுக்கான தகவலை அவ்ர் பேச்சுப்பக்கத்தில் இடாமல் பயனர் பக்கத்தில் இட்டு விட்டீர்கள் :)--ரவி 07:45, 23 ஜூன் 2006 (UTC)

ஆமாம் ரவி, நான் அடிக்கடி மறந்து விடுகிறேன்! இன்னும் கவனமாக புகுபதிகை செய்து விடுகிறேன். பயனர் பேச்சில்தான் விட்டிருக்க வேண்டும், ஏனோ மாற்றிடத்தில் விட்டு விட்டேன்.
அதேபோல், நம்மில் பலர் ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைப்புத் தரவும், பகுப்புகளில் கட்டுரையை சேர்க்கவும் மறந்து விடுகிறோம். கட்டுரை உருவாக்கும்போதே, இணையான ஆங்கில விக்கி கட்டுரை இருக்குமிடத்தில் அதற்கு என்பது போன்ற நிரல் துண்டைக் கொண்டு இணைப்பு ஏற்படுத்திவிடலாம் (எ.கா. [[en:Autism]]). இவ்வாறான இணைப்பு தானாக இடதுபுறத்தில் உள்ள சட்டத்தில் அமர்ந்து கொள்ளும். இந்த இணைப்பினூடே சென்று அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் தகுந்த இடங்களில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை தானியங்கிப் பயனர்கள் மேற்கொள்கின்றன. (பார்க்க: பயனர்:SundarBot). -- Sundar \பேச்சு 08:51, 23 ஜூன் 2006 (UTC)
உண்மைதான். என் எண்ணப்போக்கு, தவறானதாக இருக்கலாம். பல நேரங்களில், பக்க பகுப்புகள், ஆங்கில விக்கி தொடர்பு, பிற குறுங்கட்டுரைகளுக்கான தொடர்பு ஆகியவற்றை கட்டுரை எழுதிய பின் சேர்ப்பேன். ஏனெனில், கட்டுரை, குறுங்கட்டுரையாய் இருப்பினும், பல திருத்தங்கள் தேவைப்படுகின்றன. முதல் பதிவிலேயே சிலர் மிக அழகாக சிறப்பாக அமைக்கிறார்கள், நான் அவ்வாறு முயல்வதில்லை. --C.R.Selvakumar 12:06, 23 ஜூன் 2006 (UTC)செல்வா
பி.கு. இத்தகவலை எவரேனும் விக்கிப்பீடியா:பிறமொழி விக்கிப்பீடியா இணைப்புகள் என்ற தலைப்பில் தொகுத்துத் தாருங்கள்.

வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் தொகு

திரு செல்வவகுமார் அவர்களுகு தாங்கள் புகுதிகை செய்யாமல் மேற்கொண்ட மாற்றங்களை அனாமதேய நபரொருவரின் பொருப்பற்ற செயல் எனநினைத்து மாற்றம் செய்துவிட்டேன் மன்னிக்கவும்:Wikipedia:ஒத்தாசை பக்கம்#வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் உங்கள் பயனர் பெயரை கண்டிருந்தால் உங்களுடன் கலந்தாலிசுத்திருப்பேன். உங்கள் மாற்றங்களில்

  • சுதேசப்பெயர்-------நாட்டுபெயர்
  • உத்தியோகபூர்வ வலைத்தளம்----அரசின் வலைத்தளம்

என்பவற்றை எற்றுக்கொள்கிறேன் இவ்வற்றை இவ்வார இறுதிக்குள் மாற்றம் செய்து விடுகிறேன்.

  • நாட்டு வணக்கம்--தேசியகீதம்
  • மகுட வாக்கியம்--குறிக்கோள்
  • சுதந்திரம்--விடுதலை
  • தினம்--நாள்
  • சனத்தொகை--மக்கள் தொகை
  • தேசிய--நாட்டின்

என்பன ஒத்தகருத்துள்ள சொற்களாகும் May be I have used the Sri Lankan words and you have changed them into Tamil Nadu expressions. In my view both are correct. Since my both grand parents are from India (Neelagiri, koyamputhuur) I also carry the Indian Tamil accent with me but i should say that i am greatly influenced by the Elam Tamil usage through may stay in Sri Lanka. By reverting your changes in வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் I do not intend to underestimate your Tamil ability. Please forgive me. As for the second list I have given we will enter a debate and decider on an appropriate word. Once again sorry --டெரன்ஸ் 13:44, 23 ஜூன் 2006 (UTC)

டெரென்ஸ், அருள்கூர்ந்து நான் கூறுவதை தவறாக எடுத்துக்கொளாதீர்கள். No need to feel sorry at all. I'm actually one of those who is impressed by your energy and interest you show in your contributions and I truly respect it. I did not misunderstand your reversions, but actually I felt sorry that I didn't first raise it in the discussion section as you point out. I should have. The point is such general frameworks have to be carefully formulated so that it is useful to all the people. Some level of standardization is also very desirable in my view. Where there is some debate, it should be about what is a better usage in an objective way rather than regional attachements. Also, in Tamil, in formal works, generally a more deepening aspect, as reflected in the words with deeper connections, is used. If you read Bharathi's causal prose or conversational styles and his formal written poems, you'll see a great difference. Also the same for vaLLaalaar (Ramalinga adikaL). கல்கி போன்ற வார இதழ்களில் சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்கள் மிகுந்த சமசுகிருத மொழி கலந்த மொழியில் எழுதி வந்தார்கள், ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் நோகினீர்களாயின் எத்தனையும் பொது மக்கள் மொழியிலே எழுதி வருகிறார்கள் என்பதைப் பார்ப்பீர்கள். இதே கருத்து கிருத்தவர், இசுலாமியர் எழுத்துக்களிலும் கணலாம். மொழித்தூய்மைக்காக அவைகளை பரிந்துரைக்கவில்லை, பரவலாக எல்லோராலும் அறியப்படும் என்றும், பல்வாறு கிளைத்தும் இணைந்தும் பயன் பெருக்கக்கூடியதும் என்றும் அறிந்து பரிந்துரைத்தேன். --C.R.Selvakumar 14:39, 23 ஜூன் 2006 (UTC)செல்வா

Please see வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் I have brought it back to where your version I agree with you I have a problem with Tamil font now will continue after fixing it --டெரன்ஸ் 09:44, 25 ஜூன் 2006 (UTC)

விவிலியம் தொகு

protestants என்பதை சீர்த்திருத்த திருச்சபைகள் என மொழிபெயர்கலாமோ? பார்க்க பேச்சு:விவிலியம் --டெரன்ஸ் 11:20, 25 ஜூன் 2006 (UTC)

கிறித்துவத்துள் பல உட்கிளைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுக்கு ஒன்று முரணாக அமையாமல் மொழி பெயர்த்தல் நல்லது. லூதரன் முதலியன் எளிதாக ஆக்கலாம், Protestants என்பதை சீர்திருத்த திருச்சபைகள் என்பது சரியாகவே படுகின்றது, எனினும் ஏற்கனவே எதும் பொருத்தமான பெயர் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். கிறித்துவத்திலே, தமிழில் ஏராளமான இலக்கியங்களும் (புத்தகங்கள், கட்டுரைகள்), வானொலி, தொலைகாட்சி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பதிவானவையும் உண்டு. அவை எல்லாம் மிக நல்ல தமிழில் இப்பொழுதுள்ளன. எனவே புது மொழி பெயர்ப்பு செய்யுமுன், என்ன உள்ளது என்று அறிந்து பின் செய்வது நல்லது. உங்கள் மொழிபெயர்ப்பு எனக்கு சரியாகவே படுகின்றது (protest என்பது மறுப்பது, எதிர்ப்பது என்று இருப்பினும், இங்கு சீர்திருத்தம் என்னும் நோக்கிலே செய்யப்பட்டது என்று கொள்வதே பொருந்தும்).--C.R.Selvakumar 23:51, 25 ஜூன் 2006 (UTC)செல்வா

குறிக்கோள்: Unity and Faith, Peace and Progress மொழிப்பெயர்த்து விவீர்களா? --டெரன்ஸ் 08:55, 26 ஜூன் 2006 (UTC)

ஒற்றுமையும் நம்பிக்கையும். அமைதியும் முன்னேற்றமும் (அல்லது அமைதியும் வளர்ச்சியும்). சமஷ்டி என்பதற்கு பதிலாக கூட்டு என்னும் சொல்லின் அடிப்படையில் மொழி பெயக்கலாம். இது பற்றி பயனர்களின் கருத்துக்களை அர்ஜென்டினா பேச்சு பக்கத்தில் காணலாம்.--C.R.Selvakumar 12:30, 26 ஜூன் 2006 (UTC)செல்வா

நன்றி. தொகு

உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. சற்று அலசி பதில் தருகின்றேன். நன்றி. --Natkeeran 23:47, 26 ஜூன் 2006 (UTC)

Algebra - எளிய தமிழ்ச் சொல் என்ன? தொகு

--Natkeeran 14:29, 27 ஜூன் 2006 (UTC)

இயற்கணிதம் என்று பயன் படுத்துகிறார்கள். algebra என்றால் எவ்வளவு விளங்காமல் இருக்கின்றதோ அதே அள்வில் தான் இப்பெயரும் சற்றேக்குறைய உள்ளது. தொடக்க நிலைகளில் குறி எழுத்துக்களைக்கொண்டு கணக்கிடும் ஒரு துறையாகத்தான் இது உணரப்படுகின்றது. மேனிலைகளில், இது நுட்பம் பொதிந்த கருத்துருக்களைக் கொண்டது. பொதுவாக இத்துறை பல்வகையான எண்களால் ஆன கட்டமைப்புகளும் இயக்கத்தொடர்புகளும் ஆகும். மிக மிகச் சிறுவயதில், மிகவும் வருந்ததக்க வகையில், காலமான இளைஞர் 'கால்வா (Galois) அவர்கள் தொடக்கிய கால்வா புலங்கள், மற்றும் குழு (groups), வளையம் (rings), போன்ற கட்டமைப்புகள் கொண்ட்தெல்லாம் இந்த இயற்கணிதத்தில் அடங்கும். --C.R.Selvakumar 14:54, 27 ஜூன் 2006 (UTC)செல்வா

நன்றி.--Natkeeran 15:37, 27 ஜூன் 2006 (UTC)

இலங்கை பாடதிட்டத்தில் கேத்திர கணிதம் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.--kalanithe

கேத்திர கணிதம் - Geometry

அட்சர கணிதம் - Algebra --Kanags 21:33, 27 ஜூன் 2006 (UTC)

அட்சர கணிதம் என்பது முதல்நிலை algebra வுக்குப் பொருத்தமாக உள்ளது. அதனை தமிழ்ப்படுத்தினால் எழுத்துக் கணிதம் என ஆகும். எழுத்துருக் கணிதம் அல்லது குறியெழுத்துக் கணிதம் எனில் பொருள் இன்னும் சற்று பொருந்தும், ஆனால் சற்று நீளமாகின்றது - பொருள் குழப்பமும் ஏற்படலாம். எனினும் algebra என்பது வெறும் குறியெழுத்துக் கணிதம் மட்டும் இல்லை. மாறிகளைப்பயன்படுத்துவதால், மாறி கனிதம் என்றும் சொல்லலாம். இயற்கணிதம் என பல நூல்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணுகிறேன். எனவே இயற்கணிதம் எனப்தையே ஆளலாம். நல்ல சொல் கிடைத்தால் மாற்றுவதில் எனக்கு உடன்பாடே (பிறைக்குறிகளுக்குள் குறிக்கலாம்). --C.R.Selvakumar 02:44, 28 ஜூன் 2006 (UTC)செல்வா

அல்ஜிபிரா ஒரு இந்திய மொழி அல்லது அரேபு மொழி சொல்லாகத்தான் இருக்க வேண்டும். அல்ஜிபிரா ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தும் பொழுது அங்கே எதிர்ப்பு இருந்ததாகவும், இரு குழுக்களாக பிரிந்து பெரும் வாதங்கள் நடந்ததாகவும், இறுதியில் அல்ஜிபிராவின் பயன்பாட்டின் மேன்மையால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் எங்கேயோ ஒரு கணித வரலாற்று புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.

மேலும், பரிந்துரைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இயற்கணிதம் பொது பயன்பாட்டில் இருப்பதால் அதை தற்போது பயன்படுத்தலாம். இலங்கை வழக்கை பற்றி குறிப்பு மற்றும் பக்க வழி மாற்று தரலாம். --Natkeeran 04:22, 28 ஜூன் 2006 (UTC)

உசாத்துணைகளுக்கு பதில் ஆதாரங்கள் பயன்படுத்துகின்றோம், ஆட்சோபனை இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.

உசாவுதல் என்பது மிக நல்ல சொல். உசாவுதல் என்றால் கருத்துடன் அறிந்தோரைக் கேட்டல், கலந்து பேசுதல். அதையே வைத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து. மேலும் பரவலாக நாம் இங்கே ஆண்டுள்ளோம். இது வேண்டாம் எனில், துணை நூல்கள், பார்வையிட்டவை என பல சொற்கள் உள்ளன. மாற்றவேண்டாம் என்பது என் பரிந்துரை. உசாவுதல் என்னும் சொல் அறியாதிருந்தாலும், துணை என்னும் சொல் இருப்பதனாலும், சூழலினாலும் யாரும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். நாம் நல்ல சொற்தொகுதிகளை வலர்த்துக்கொள்ளவும் வேண்டும். உசாத் துணை என்றால் என்ன, உசாவுதல் என்றால் என்ன என்பது போன்ற விளக்கங்கள் தக்க இடத்தில் சேர்க்கவும் சுட்டிக்காட்ட வசதியும் உள்ளது விக்கியில். எனவே மாற்றாதீர்கள்.--C.R.Selvakumar 16:49, 28 ஜூன் 2006 (UTC)செல்வா

உங்கள் கருத்தும் சரியே. --Natkeeran 16:59, 28 ஜூன் 2006 (UTC)

வகைப்படுத்தல் தொகு

தமிழக எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் என்ற வகைக்குள் வருவதால், தமிழக எழுத்தாளர்கள் என்று நுண்ணியமாக வகைப்படுத்தும்பொழுது எழுத்தாளர்கள் என்ற வகையை நீக்கிவிடலாம். நன்றி. --Natkeeran 17:02, 28 ஜூன் 2006 (UTC)

கிறிஸ்து கற்பித்த செபம் தொகு

நான் இங்கு சேர்த்தவை பழைய தமிழ் விவிலியத்திலுள்ள வசனங்களகும். அதை விட உங்களது மொழிபெயர்ப்பு உக்ந்ததாகவும் நன்றாகவும் இருக்கிறது. இதனை இங்கு பயன்படுத்தலாம். கடைசி வசனத்தை விட்டுவிட்டீர்களே (ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்)

  • மேலும் புதிய தமிழ் விவிலியத்திலுள்ள வரிகளையும் இங்கே சேர்க்கலாம். புதிய விவிலியத்தின் வரிகளுக்காக காத்திருக்கிறேன்.
  • "ஐயனே" எனபது அப்பா என பொருள்படுமா? எனேனில் இச் செபத்தின் மையகருத்தே கடவுளை அப்பா என அழைப்பதுதான். "தந்தாய்" "பிதாவே" போன்ற எதயாகிலிலும் பயன்படுத்தினால் மிகவுகந்ததாக இருக்கும்

--டெரன்ஸ் 02:24, 30 ஜூன் 2006 (UTC)

ஐயா எனில் தந்தைதான். அப்பா, அத்தா, தந்தை, அச்சன், தகப்பன், ஆஞா, நாயனார் ஆயான், என பல சொற்கள் உண்டு. திருச்சி, சேலம் மாவட்டங்களில் கவுண்டர் என்னும் குடியினர் ஆஞா என சொல்லக் கேட்டிருக்கேன், வட ஆற்காடில் பலரும் நாயனார் என சொல்லிக் கேட்டிருக்கேன், திருச்சி சேலம் மாவட்டங்களில்பலர் ஐயா என சொல்லிக் கேட்டிருக்கேன். செட்டியார்கள் மற்றும் பலர் அப்பச்சி என்பர். நீங்கள் முதல் வரியில் எந் தந்தையே என்றும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது என் அப்பனே, என் அத்தனே என்று எது பிடித்திருந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.--C.R.Selvakumar 02:49, 30 ஜூன் 2006 (UTC)செல்வா

நன்றி :-)))--டெரன்ஸ் 03:19, 30 ஜூன் 2006 (UTC)

திரிதடையம் தொகு

Please see: பேச்சு:திரிதடையம்--Natkeeran 14:24, 7 ஜூலை 2006 (UTC)

நபர்கள், மனிதர்கள், ஆளுமைகள் தொகு

செல்வா, ஆட்கள் தொடர்பான கட்டுரைகள் நபர்கள் என்ற பகுப்புக்குள் வருகின்றன. இது தொடர்பில் விவாதித்தே முடிவுக்கு வந்தார்கள் என நினைக்கிறேன். நபர்கள் என்பது பொருத்தமானதா? ஆளுமைகள் என்று பாவித்தால் தவறா? ஆளுமை என்பது personality தான். ஆனால் ஆளுமையுடையவர்களைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதைவிட வேறு நல்ல சொற்கள் இருந்தால் சொல்லுங்கள். கோபி 15:46, 9 ஜூலை 2006 (UTC)

கோபி, எது சிறந்ததாக இருக்கும் என்று விளங்கவில்லை. நபர்கள் என்பது பொதுவாக உள்ளது, ஆளுமை என்பது ஒருவரின் பண்புகளின் தொகையாகப் படுகின்றது. தனி மனிதர்களைப் பற்றிய கட்டுரைகளின் பிரிவுக்கு என்ன பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என விளங்கவில்லை. ஏதேனும் நல்ல சொற்கள் கிடைத்தால் தெரிவிக்கிறேன். தனியாள், தனியாட்கள், மக்கள், மனிதர்கள் என்ற சொற்கள்தாம் இப்பொழுது தோன்றுகின்றன.--C.R.Selvakumar 20:21, 9 ஜூலை 2006 (UTC)செல்வா

நிச்சயதார்த்தம் தொகு

நிச்சயதார்த்தம் என்ற நிகழ்ச்சியின் வடமொழியற்ற தமிழ் மொழிபெயர்ப்பு என்ன? மண ஒப்பந்தம் என்பது சற்று சட்டத்துறைச் சொல் போன்று அமைகிறது. வேறு நல்ல இணைச்சொற்கள் என்னென்ன? -- Sundar \பேச்சு 10:58, 11 ஜூலை 2006 (UTC)

திருநெல்வேலி பக்கம் ஓலை எழுதுதல் என்பர். மண ஒப்பந்தம் என்பது பொருந்தும், மணவுறுதி நிகழ்வு

எனலாம். மணவோலை எழுதுதல் (இதுவும் சட்டம் போல் தெரியலாம்). ஆனால் இந்நிகழ்வில், மணவுறுதியை எல்லோர் முன்னரும் படித்துக் காட்டுவது வழக்கம். அந்த வாசகத்தின் படியை (பிரதியை) இருவீட்டரும் பெற்றுக்கொள்வர். இதில் மணம் செய்துகொள்வதைப் பற்றிய உறுதிமொழிதானே ஒழிய, வேறு எந்த ஏற்பாடுகளும் பொதுவாக இருக்காது (பணம், நகை, சொத்து, பிரிந்தால் என்ன செய்வது போன்றவை). --C.R.Selvakumar 20:55, 11 ஜூலை 2006 (UTC)செல்வா

நன்றி செல்வா. எங்கள் ஊரில் பரிசம் என்கின்றனர் என்று தாத்தாவிடம் கேட்டறிந்தேன். மணமகன் வீட்டார் பரிசுப் பொருட்கள் மற்றும் சில உட்பொருள் உணர்த்தும் பொருட்களை ஒரு துணியில் ஊரார் முன்னிலையில் முடிந்து கொண்டு மணமகள் வீட்டில் ஒரு "கணையாழி" போன்று அத்தாட்சியாகத் தருவர். முந்தைய நிகழ்ச்சியை முடிப்பு கட்டுதல் என்று அழைக்கின்றனர். -- Sundar \பேச்சு 06:55, 12 ஜூலை 2006 (UTC)

முதல் இந்திய விடுதலைப்போர் தொகு

1857ல் நிகழ்ந்த சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர்கள் கூறும் நிகழ்வுதான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று மிகப்பல இந்தியர்கள் நினைக்கிறார்கள். இல்லை 1806ல் தமிழ்நாட்டில் வேலூரில் நிகழ்ந்த நிகழ்வுதான் விடுதலைப்போரின் தொடக்கம் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முழங்கி இருக்கிறார். இதன் பயனாக இந்தியா அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை முதல் பக்கத்தில் இடலாம் என்பது என் கருத்து.

செல்வா மின்மம், மின்னூட்டு, மின் ஏற்பு, மின் துகிள், மின்னூட்டி (இன்னும் சில உண்டு) என்று பல கலைச்சொற்கள் கொண்டு அழைக்கின்றோம். இது அவ்வளவு அரோக்கியமாக எனக்கு படவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு சொல்லை பிரதானமாக உபயோகித்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? --Natkeeran 23:59, 11 ஜூலை 2006 (UTC)

மின்மம் என்னும் சொல் electrical charge என்பதனை தெளிவாகக் குறிப்பிடுகிறது என நான் நினைக்கிறேன். நேர்மின்மம் = positive electrical charge. எதிர்மின்மம் = negative elecgtrical charge. மின்னேற்பு, மின்னூட்டு, மின்னூட்டம் என்பன எல்லாம் வழக்கில் பல்வேறு பகுதிகளிலே பயன்படுத்துவதால் குறிப்பிட்டுள்ளேன். ஒரேயொரு (அல்லது ஒரேயொரு மாறுச்சொல்) கொண்டிருந்தால் நல்லது. பல சொற்கள் இருப்பதும், பயன் படுத்துவதும் குழப்பம் விளைவிக்கும். தொடக்க நிலைகளில் இப்படி இருப்பது புதிதல்ல. ஆங்கிலத்திலும் இதே நிலை இருந்தது (aeroplane, airplane போன்ற பல சொற்கள்). இன்னும் இருக்கின்றது, சில துறைகளில். மின்மம் என்பதற்கு ஒரு தெளிவான கட்டுரை எழுதிவிட்டு, அதனையே பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. மற்ற பயனர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிந்த பின் செயல்படுத்தலாம். நல்வாய்ப்பாக எல்லாமே நல்ல சொற்கள்தாம் இங்கே ஆனால் மின்மம் மிக சுருக்கமாகவும் இயல்பாகவும் இருப்பதாக எண்ணுகிறேன்.--C.R.Selvakumar 00:11, 12 ஜூலை 2006 (UTC)செல்வா

Tranquebar தொகு

செல்வா,Tranquebar இதன் தமிழ் பெயர் வடிவன் என்ன? வடிவம் என்ன? --டெரன்ஸ் 09:27, 16 ஜூலை 2006 (UTC) தரங்கம்பாடி.. பாடி என்பது ஊர்ப்பெயர்களில் ஒன்று. காட்பாடி என்னும் உர்ப்பெயர் போல.--C.R.Selvakumar 13:19, 16 ஜூலை 2006 (UTC)செல்வா

வாஸ்து தொகு

வாஸ்து சாஸ்திரம் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்கள் தொடர்பான எனது கருத்தை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பார்க்கவும். Mayooranathan 15:05, 17 ஜூலை 2006 (UTC)

நன்றி. தொகு

நன்றி. சூழல், சுற்றுசூழல், வித்தியாசம் உண்டா?--Natkeeran 18:54, 17 ஜூலை 2006 (UTC)

சூழல் என்பது பல இடங்களிலும் வரக்கூடிய ஒரு பொதுச்சொல். எனவே சுற்றுபுறச் சூழல் என்பது environment என்பதைக்குறிக்கும். சுற்றுப்புறம் என்பது surrounding area, region. சூழல் ஏனும் சொல் சுற்றுப்புறத்தில் நிலவும் பல்வேறு நிகழ்வுகள்,இயக்கங்கள், நிலைகளைக் குறிக்கும். இன்னும் சுருக்கமான சொல்ல வேண்டுமெனில் சூழ்மை என்றும் சொல்லலாம். போதிய கலைச்சொல் ஏற்கும் பக்குவம் இல்லா நிலையில், அகராதி பார்க்கும் பழக்கம் இல்லாத நிலையில் (அகராதியில் இவகைச் சொற்களூம் இல்லாமல் இருப்பதால்) சற்று விளக்கமாக படித்தவுடன் அதிக குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளுமாறு சொல் படைத்தல் நலம் என்று நினைக்கிறேன்.--C.R.Selvakumar 19:09, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

தமிழ்ப்பெயர் தொகு

அனிதா என்பது தூய தமிழ்ப்பெயரா? அப்படியெனில் அதன் பொருள் என்ன? (ஒன்றியம் குறித்த எனது கருத்தை அப்பக்கத்தில் விடுத்துள்ளேன். :) -- Sundar \பேச்சு 15:35, 19 ஜூலை 2006 (UTC)

இல்லை. இனிதா என்பது தமிழ்ப்பெயர் :) --C.R.Selvakumar 15:41, 19 ஜூலை 2006 (UTC)செல்வா
நன்றி. -- Sundar \பேச்சு 15:51, 19 ஜூலை 2006 (UTC)

கிரிக்கெட்=மட்டைப்பந்து? தொகு

ஓர் அநாமதேயப் பயனர் கிரிக்கெட் என்பதை மட்டைப் பந்து என மொழிபெயர்த்து எழுதிவருகிறார். இது பொருத்தமானதா? நான் கிரிக்கெட் என்பதை துடுப்பாட்டம் என மொழிபெயர்த்து வாரைதழொன்றில் எழுதியிருக்கிறேன். அச்சொல் ஓரளவு பயன்பட்டதை அவதானித்தே அவ்வாறு செய்தேன். இந்தியாவில் கிரிக்கெட்டை மட்டைப்பந்து என அழைக்கும் வழக்கமிருக்கிறதா? --கோபி 16:30, 20 ஜூலை 2006 (UTC)

கோபி, இந்தியாவில் (தமிழகத்தில்), இதனை மட்டைப்பந்தாட்டம், மட்டைப்பந்து விளயாட்டு என 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன் படுத்தி வரக்கண்டிருக்கிறேன். துடுப்பாட்டம் என்பதும் நன்றாக உள்ளது.

துடுப்பாட்டம் என்பது புது மொழிபெயர்ப்பா அல்லது இலங்கையில் பரவலாக ஆளப்படுகின்றதொன்றா?--C.R.Selvakumar 22:43, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

துடுப்பாட்டம் என்பது இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்தான். Mayooranathan 20:02, 23 ஜூலை 2006 (UTC)

விக்கிபீடியர் பற்றிய கருத்துக்கள் தொகு

செல்வா, என் பயனர் பக்கத்தில் உள்ள பிற பயனர்கள் பற்றிய கருத்துக்கள் முழுமையானவை அல்ல. என் நினைவில் பிற பயனர்கள் எப்படி பதிந்திருக்கிறார்களோ அப்படியே எழுத முற்பட்டிருக்கிறேன். முழுக்கவும் சரியாக இல்லாமல் இருக்கலாம். மயூரன் தொடங்கி கோபி, கனகு, உமாபதி என பலர் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொருவர் பற்றியும் விரிவாக எழுதுவேன். பொதுப்பணி என்று வந்துவிட்ட பிறகு அவசியமில்லை என்றாலும், பல சமயம் நாம் ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி சிறு சிறு நன்றியுரைகள் மற்றும் பாராட்டு மொழிகள் சொல்ல வேண்டியிருக்கிறது. பிரதிபலன் எதிர்பார்க்காமல் பங்களிக்கும் பலருக்கும் இது ஊக்க மருந்தாக இருக்கும். அதையும் நான் ஒழுங்காகச் செய்வதில்லை. அந்த நேரத்தையும் கட்டுரைகளை செப்பனிடுவதில் செலவிட விருப்பம். பிறரிடமும் இதையே எதிர்ப்பார்க்கிறேன். தவிர, பேச்சுப்பக்கங்களில் இடப்படும் கருத்துக்கள் archive பக்கங்களில் மறைந்து விடும். இப்படி பயனர் பக்கத்தில் இடுவது பிறர் குறித்த என் எண்ணங்கள், நன்றி, பாராட்டு மொழிகளை நிலைத்து இருக்கச்செய்யும். விக்கிப்பீடியாவை விக்கிபீடியர்களை அறிய உதவும் ஊடகக் காரர்களுக்கும் இத்தகவல்கள் உதவும். போன ஆண்டு, தினமலர் இத்தகவல்களை பயன்படுத்தி செய்தி வெளியிட்டது. --ரவி 18:55, 23 ஜூலை 2006 (UTC)

நன்றி ரவி.--C.R.Selvakumar 15:55, 24 ஜூலை 2006 (UTC)செல்வா

Signal Processing தொகு

குறிப்பலை அல்லது சமிக்கை செயலாக்கம்? உங்கள் பரிந்துரைகளை வரவேற்கின்றேன். நன்றி. --Natkeeran 00:28, 24 ஜூலை 2006 (UTC)

குறிப்பலைகளைத் தேவைக்கேற்ப பகுத்தும் தொகுத்தும், மிகைப்பித்தும், பிற அலைகளோடு கலந்தும், தேவையில்லா இடையூரலைகளையும், இரைச்சல் அலைகளையும் களைந்தும், பல்வேறு வகையாக பணிக்கு ஏற்ற வாறு பதப்படுத்துதல், குறிப்பலைப் பதப்படுத்தல் (singal processing) எனப்படும்.

நன்றி. --Natkeeran 01:44, 24 ஜூலை 2006 (UTC)

குறிகை என்கிற சொல்லும் signal ஐ குறிக்கின்றனர்.

நூணநுட்பியல் தொகு

நுல்லிய,நுண்,நூண என்ற அடிப்படையில் நூணநுட்பியல் என்று நனோ தொழில்நுட்பதத்தை இராம.கி, செல்வராஜ், மற்றும் சிலர் பயன்படுத்துகின்றார்கள் அல்லது பரிந்துரைக்கின்றார்கள். அது நல்ல சொல் மாதிரியே தெரிகின்றது. அச்சொல் நோக்கிய உங்கள் பார்வை என்ன?--Natkeeran 12:38, 24 ஜூலை 2006 (UTC)

நுணியம் = நானோ என்றும் கொண்டு நுணிய நுட்பியல் என்றும் கொள்ளலாம். சிலவிடங்களில் தொழில் நுட்பம் என்பதற்குப் பதிலாக நுட்பியல் என்று கூறவதை நானும் பல காலம் சொல்லி வந்திருக்கிறேன். அதே போல இயல் என்பதையும் சில இடங்களிலே இயம் என்று கூறவேண்டும். நானோ என்பதை நூண என்று கூறுவதில் எனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை, ஆனால் அதுதான் சிறந்த சொல் என்பதில் எனக்கு உறுதி இல்லை. நுணுகி ஆய்தல், நுணுக்கம், நுண்ணிய, நுட்பம் என்னும் பல சொற்களும் உகரக் குறிலில் இருப்பதால் நூண என்று நெடில் வருவது சற்று தயக்கமாக உள்ளது. ஆனால் நூ என்றாலே தமிழில் எள் தான். நூழை எனில் நுண்ணிய துளை (சிறு குகை) (இங்கே கரிம நூழை = carbon nanotube என்பது மிகப்பொருந்தும்), நூநுட்பம் என்னும் சொல் தமிழில் நூலின் நுண்மை என்றும் பொருள், ஆக நெடிலும் உள்ளதெனினும், நூண என்பதுதான் சிறந்த சொல் என்பதில் எனக்கு உறுதி இல்லை. எல்லோரும் ஏற்றுக்கொண்டால் நானும் ஏற்றுக் கொள்வேன். நானோ நுட்பியல் என்றோ நுணிய நுட்பியல் என்றோ கூறலாம் என்பது என் பரிந்துரை. நூண நுட்பியல் என்பதும் எனக்கு ஏற்பே. --C.R.Selvakumar 14:28, 24 ஜூலை 2006 (UTC)செல்வா

குறிகை என்கிற சொல்லும் signal ஐ குறிக்கின்றனர்.

கலைச்சொல் தொகு

பொதுவாக கலைச்சொற்களை பயன்படுத்துபவன் நான். அவற்றை ஆக்குவதில் உள்ள அணுகுமுறைகள் பற்றி நான் தற்போதுதான் அறிந்துவருகின்றேன். அனேகமாக உங்கள் அணுகுமுறை மற்றும் சொற்கள் நன்று என்றே கருதுகின்றேன். அது ஒரு குறுப்பு மட்டுமே. நன்றி.--Natkeeran 15:09, 29 ஜூலை 2006 (UTC)

புள்ளி விவரம் தொகு

அண்மையில் தந்துள்ள 'சூன் புள்ளி விவரத்தின் படி, தமிழானது இந்திய மொழிகளில் முதலாவதாக உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் மராத்தியும், மிக அண்மையில் வங்காளி மொழியும் நம்மைத்தாண்டி சென்றுள்ள போதும், விக்கியின் தர மதிப்பீடுகள் யாவற்றிலும் தமிழே முதலாவதாக உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் முன்னே நிற்கும் மராத்தி விக்கியின் அளவு 5.5M , தமிழ் விக்கியின் அளவு 13M. வங்காளி மொழி மிக விரைந்து கட்டுரை எண்ணிக்கையில் வளர்ந்து இருந்த போதும் அதன் அளவு 4.1M தான். பிற எல்லா வகையான தரம் மதிப்பிடும் அளவீடுகளிலும் தமிழே முன் நிற்கின்றது. நாம் இன்னும் பன்முக வளர்ச்சி பெறவேண்டியுள்ளது. இடைவிடாது கூடி உழைத்தால் தமிழ் விக்கி முதல் 20-30 மொழிகளில் ஒன்றாகவும், மிகச்சிறந்த விக்கிகளில் ஒன்றாகவும் வர வாய்ப்புண்டு. மிகு பயனளிக்க வல்ல ஒரு ஆக்கம். அறிவுக்கோயில்களாக எழுப்பலாம். பன்முறை சொல்லிய செய்திகள் சரிதானா, இன்னும் சிறப்பாகச் சொல்லுவது எப்படி, இன்னும் பயனுடைய கருத்துக்கள் சேர்ப்பது எவ்வாறு, இன்னும் என்னென்ன படங்கள், சமன்பாடுகள், வெளியிணைப்புகள், உள் சுட்டிகள் தரலாம் என விடாது எண்ணி மெருகேற்றினால், மிகச்சிறந்த படைப்பாக இது அமையும். ஒரு கோயிலைப்போலவே பல்லோருடைய கூட்டுழைப்பால் எழுந்த ஒரு பயன்மிகு ஆக்கமாய் இது விளங்க வல்லது.--C.R.Selvakumar 00:41, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

கீழ்க்காணும் 'சூன் மாதத்திற்கான புள்ளி விவரத்தைப் பார்க்கவும்.

Lang official >200ch new/day edits bytes >0.5K >2.0K edits size words internal interwiki image external redirects
Mr 4.2K 1.5K 10 4.2 1316 18% 4% 2.6K 5.5MB 271K 14K 9.1K 213 552 519
Ta 3.1K 2.7K 10 8.4 4219 59% 18% 3.5K 13MB 583K 40K 35K 2.0K 3.7K 745
Ka 2.4K 1.6K 26 4.3 2152 35% 7% 2.0K 5.0MB 219K 14K 8.3K 709 525 467
Te 3.3K 2.9K 1 4.2 2946 54% 10% 904 9.6 MB 582 k 48 k 17 k 1.7 k 2.7 k 301
Bn 2.7 k 982 33 4.9 1485 16% 4% 4.8 k 4.1MB 169 k 9.8 k 24 k 582 305 383

கீழே உள்ளது முதலில் இட்டது. இங்கே சீராக பட்டியலிட வில்லை, எனினும் விளங்கிக்கொள்வது கடினம் இல்லை.

official >200ch new/day edits bytes >0.5K >2.0K edits size words internal interwiki image external redirects

Mr4.2 k 1.5 k 10 4.2 1316 18% 4% 2.6 k 5.5 MB 271 k 14 k 9.1 k 213 552 519

Ta3.1 k 2.7 k 10 8.4 4219 59% 18% 3.5 k 13 MB 583 k 40 k 35 k 2.0 k 3.7 k 745

Ka2.4 k 1.6 k 26 4.3 2152 35% 7% 2.0 k 5.0 MB 219 k 14 k 8.3 k 709 525 467

Te3.3 k 2.9 k 1 4.2 2946 54% 10% 904 9.6 MB 582 k 48 k 17 k 1.7 k 2.7 k 301

Bn2.7 k 982 33 4.9 1485 16% 4% 4.8 k 4.1 MB 169 k 9.8 k 24 k 582 305 383

நல்ல ஒப்பீடு. உங்கள் குறிக்கோளே எமதும். --Natkeeran 01:53, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
pantheism - அனைத்திறையியம்?: நாம் காணும் அனைத்திம் இறைவனின் உரு என்பது.
panentheism - அனைத்துள் இறையியம்?: நாம் காணும் அனைத்திலும் இறைவனின் வாசம் இருப்பதாகக் கூறுவது.
shamanism - இறைத்தொடர்பியம் ?: இறைவனுடம் தொடர்பு கொள்வதாக நம்புவது.
inclusivism - இணைப்பியம் ?: அனைத்து கருத்துக்களுள்ளும் உண்மை இருக்கிறது என்பது.
exclusivism - தவிர்ப்பியம் ?: மற்ற அனைத்தும் பொய் என்பது.
phenomenology - முரண்பாடியல்?: குழப்பங்களை கூறுவது.

மேலே தரப்பட்ட சொற்கள் நோக்கி வைகுண்ட ராஜா என்னிடம் கருத்து கேட்டிருந்தார். உங்களுடைய கருத்து அறிய ஆவல். வேறு பரிந்துரைகள் இருந்தாலும் தரவும். நன்றி. --Natkeeran 23:40, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

நற்கீரன், இச்சொற்கள் உண்மையில் என்ன தெரிவிக்கின்றன என்று அறிந்து, பின்னர் என் பரிந்துரைகளைத் தருகிறேன். சில நாட்களாக போதிய அளவு பங்கு கொள்ள முடியவில்லை.--C.R.Selvakumar 19:28, 7 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

கலைச்சொல் உதவி தொகு

செல்வா மீண்டும் சில கலை சொற்கள் தேவைப்படுகிறது உதவியை எதிர்பார்க்கின்றேன்,--டெரன்ஸ் 04:23, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி செல்வா எல்லா சொற்களும் நன்று. அவற்றையேப்பாவிக்கிறேன். --டெரன்ஸ் 02:23, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

e-kalappai தொகு

செல்வா, நீங்கள் இது வரை சுரதா எழுதியை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், இனி e-kalappai பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். தொடக்கத்தில் எழுதிப் பழக நேரமானாலும், கற்ற பின் மிக விரைவாகவும் எளிதாகவும் தமிழில் தட்டச்சு செய்யலாம். உங்களைப் போன்று அதிகம் தமிழில் தட்டச்சு செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். --ரவி 13:51, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

ஏ கலப்பை பல்வேறு விசைப்பலகை வடிவங்களிலும் கிடைக்கிறது. செல்வா நீங்கள் எந்த வடிவத்தை பயன்படுத்துகிறீர்கள்? சில வேளைகளில் நீங்கள் புதிதாக பழகவேண்டிய தேவை இராது என்றே நம்புகிறேன்.

ஏ கலப்பை கிடைக்கும் வடிவங்கள் -

  • பாமினி
  • தமிழ் 99
  • ஆங்கில ஒலியியல் முறை

-மு.மயூரன்

நான் முதலில் இருந்தே e-Kalappai-2.0 மட்டுமே பயன்படுத்துகிறேன். பிறமொழிகளுக்கு Baraha பயன்படுத்துகிறேன். பிறமொழிகளைப் பயன்படுத்துவது மிகக்குறைவு, ஆனால் சிறிதளவு தேடுவதற்குப் பயன் படுத்துவேன். சுரதாவைப் பயன்படுத்தியதே இல்லை. --C.R.Selvakumar 14:08, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

செல்வா, என் அதிகப்படியான ஆலோசனைக்குப் பொறுக்கவும் :) சில சமயம் உங்கள் கட்டுரைகளில் வரும் எழுத்துப் பிழைகளைக் கொண்டு நீங்கள் சுரதா எழுதி பயன்படுத்துகிறீர்களோ என்று எண்ண நேர்ந்தது. எடுத்துக்காட்டாக, Wikipedia பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு) பக்கத்தில் நீங்கள் கடைசியாக செய்த பதிவில் ஒலிக்குm என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் e-kalappai ஏற்கனவே பயன்படுத்தி வருவது குறித்து மகிழ்ச்சி--ரவி 14:14, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

எழுத்துப்பிழைகள் வருவதை உணர்வேன், அவை அனைத்தும், என் குற்றமே. நான் ஏற்கனவே அளவுக்கு மீறி காலத்தை இதற்காக செலவிடுகிறேன். நான் மிகவும் வேகமாக (என் கணிப்பின் படி :) ) தட்டச்சு செய்வதாலும், போதிய அளவு, சரிபார்க்காமல் சேமிப்பதாலும் நிறைய பிழைகள் வந்து விழுகின்றன. இப்படி செய்யலாகாது என அறிந்தும், கருத்துப் பரிமற்றத்தின் விரைவு கருதி, திருத்தாமல் விட்டு விடுகின்றேன். கட்டுரைகளில் இப்படி பிழைகள் வருவது கட்டாயம் தவறு, உரையாடல் பகுதிகளில் வருவதும் தவறென்றாலும், சில சமயங்களில் திருத்தாஅமல் விட்டுவிடுகின்றேன். --C.R.Selvakumar 14:23, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

ஒருவேளை சுரதா எழுதியால் தான் பிழை வருகிறதோ என்றெண்ணி சொன்னேன். ஏனெனில் ஒலிக்கும் ஒலிக்குm என்று தட்டச்சு செய்யப்படுவதற்கு வேறு காரணம் இருந்ததாகத் தோன்றவில்லை. வேறொன்றுமில்லை. உரையாடல் பக்கங்களில் எழுத்துப்பிழைகள் ஒரு பொருட்டல்ல. கட்டுரைப் பக்கங்களில் இருந்தாலும் பிறர் திருத்தி உதவுவர்.--ரவி 14:34, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

ரகர, றகர, டகர பயன்பாடு தொகு

செல்வா, நீங்கள் உங்கள் வேலைகளை நிறைவு செய்துகொண்டு வாருங்கள், பின்னர் இது பற்றிக் கலந்துரையாடலாம். இத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் நாங்களும் தெளிவு பெறுவதோடு பிறரும் பயன் பெறக்கூடியதாக இருக்கும் என்பது எனது கருத்து. இவை பரஸ்பர புரிந்துணர்வுக்கான களம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றிகள். Mayooranathan 17:39, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

en:Article Title

Return to the user page of "C.R.Selvakumar/தொகுப்பு 1".