வலைவாசல் தொடர்பாக தொகு

இந்து சமய வலைவாசலின் தொடர்புடைய வலைவாசல்கள் என்பதில் தாங்கள் கிறிஸ்துவத்தினை இணைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திற்கும் இந்து சமயத்திற்குமான நேரடி தொடர்பு என்பது கேள்விக்குறியது. மேலும் அந்த வார்ப்புருவானது இந்து சமயத்திற்கு தொடர்புடைய வார்ப்புருக்களை தொகுக்கவே அமைக்கப்பெற்றுள்ளது. அதன் ஆங்கில விக்கியின் படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். எனவே மீண்டும் சமயம் வலைவாசலை மீட்டு கிறிஸ்துவ வலைவாசலை நீக்கியிருக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:53, 3 மே 2013 (UTC)Reply

ஐயா, விக்கியில் இல்லத ஒரு வலைவாசலை காட்சிப்படுத்துவதைக்காட்டிலும், இருப்பதைக்காட்சிப்படுத்தவே அவ்வாறு செய்தேன். கிறிஸ்துவமும் இந்து சமயமும், சமயம் என்ற அடிப்படையில் தொடர்புடையவையே. மேலும் ஆங்கிலவிக்கியிணைப்பினை பற்றி இருப்பதாக கூறியுள்ளீர்கள், இல்லாதவிக்கியினை சிகப்பு இணைப்பாக ஆங்கில விக்கியில் இருப்பதற்காக காட்டுவதை விட, இருப்பதைக்காட்டுவதே சிறப்பு என எண்ணுகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:19, 3 மே 2013 (UTC)Reply
சிவப்பிணைப்பு என்பது பயனர்களுக்கு உருவாக்க தூண்டுவதாக நான் எண்ணுகிறேன். வரும் காலத்தில் அவை இயற்றப்படுமென நம்புகிறேன். மேலும் சமயம் சார்ந்த வலைவாசல்களை வார்ப்புரு அமைப்பின் மூலம் அங்கு விரைவில் இணைக்கப்படும் என்பதால் கிறிஸ்துவம் தேவையில்லாத ஒன்றாகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:44, 3 மே 2013 (UTC)Reply

வலைவாசல்:விவிலியம் - மேம்படுத்த வேண்டுகோள் தொகு

ஜெயரத்தின மாதரசன், அண்மையில் வலைவாசல்:விவிலியம் உருவாக்கியதைப் பார்த்திருப்பீர்கள். அதை மேம்படுத்த உங்கள் உதவி தேவைப்படுகிறது:
1) பிற மொழி விக்கிகளின் விவிலியம் வலைவாசல்களுக்கு இணைப்புகள் கொடுத்தல்.
2) முதன்மைக் கட்டுரை என்று பிரிவு உண்டாக்கி அதில் விவிலியம் கட்டுரை இணைப்பு கொடுத்தல்.
3) முன்னிலையாக்கப்பட்ட கட்டுரை என்னும் பிரிவு உண்டாக்கி அதில் தமிழ் விவிலியம் கட்டுரையைப் பார்வையாக்கல்.
4) உங்களுக்குத் தெரியுமா? பிரிவு உண்டாக்குதல். அதில் விவிலியம் பற்றிய துணுக்குகள் கொடுக்கலாம். ஆங்கில விவிலிய வலைவாசலைப் பாருங்கள்.
5) வாரத்துக்கு ஒரு விவிலிய வசனம்: நேற்றும் இன்றும் என்றொரு பிரிவு உருவாக்கலாம். அதில் பழைய தமிழ் மொழிபெயர்ப்பையும் புதிய மொழிபெயர்ப்பையும் அருகருகே வைக்க விரும்புகிறேன். இவ்வாறு கிறித்தவத் தமிழ் மாறிவந்திருப்பது வெளிப்படும்.

மேற்கூறிய பணிகளை இயன்றால் செய்து தாருங்கள். மிக்க நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 23:17, 5 மே 2013 (UTC)Reply

1)  Y ஆயிற்று
2)  Y ஆயிற்று வரவேற்பு பகுதியில் இட்டிருக்கின்றேன்.
3)  Y ஆயிற்று தமிழ் விவிலியம் கட்டுரையினை சிறப்புக்கட்டுரை பகுதியில் காட்சிப்படுத்தியிருக்கின்றேன்
4)  Y ஆயிற்று ஆங்கில விவிலிய வலைவாசலை மொழிபெயர்த்துள்ளேன்.
5)  N விவிலிய வசனங்கள் பட்டுமே இப்போது செயல்படுத்த வில்லை. அதனைச்செய்ய சிறிது நேரமாகும். கூடிய விரைவில் செய்கின்றேன். தற்போது வலைவாசல்:கிறித்தவம்இல் இருக்கும் வசனங்களுக்கு இணைப்பிட்டுள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:53, 7 மே 2013 (UTC)Reply

மற்றுமொரு வேண்டுகோள் தொகு

அண்மையில் விக்கிமூலத்தில் தமிழ் விவிலியம் முழுவதையும் இடுகை செய்து முடித்துவிட்டேன். திருவிவிலியத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஒருசில நிலப்படங்களை மட்டும் பதிவேற்ற வேண்டும். அதை விரைவில் செய்யவிருக்கின்றேன். வலைவாசல்:விவிலியம் பகுதியில் விக்கிமூலத்துக்கு இணைப்பு இவ்வாறு கொடுக்கலாம்: விக்கிமூலத்தில் திருவிவிலியம் முழுவதும்.

நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 23:23, 5 மே 2013 (UTC)Reply

 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:43, 7 மே 2013 (UTC)Reply
  • ஜெயரத்தின மாதரசன், விவிலியம் வலைவாசலுக்குப் புதிய தோற்றம் அளித்து மெருகூட்டியதற்கு நன்றி! தொடர்ந்து செம்மைப்படுத்துங்கள். அந்த வலைவாசலில் "உங்களுக்குத் தெரியுமா?" பகுதியில் "மெத்துசலா ஊழிவெள்ளம் வருவதற்கு" என்று மாற்றுங்கள். மேலும், "உங்களுக்குத் தெரியுமா" தலைப்புக்கு நேர் மேலே "சேமிப்பீயின்..." என்றொரு தொடர் உள்ளதே, அதை எடுத்துவிடலாமா? நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 12:58, 7 மே 2013 (UTC)Reply
 Y ஆயிற்று தங்களின் வழிகாட்டுதலின் படியே செய்துள்ளேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:12, 7 மே 2013 (UTC)Reply
வலைவாசல்:விவிலியம் மிக அழகாக வந்துள்ளது. பவுல் அவர்களின் வழிகாட்டலில் இதனைச் செவ்வனே வடிவமைத்த மாதரசனுக்கு வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:06, 8 மே 2013 (UTC)Reply
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திரு. கனகரத்தினம் சிறீதரன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:22, 8 மே 2013 (UTC)Reply

விவிலியம் வலைவாசலை மேம்படுத்த தொகு

மாதரசன், விவிலியம் வலைவாசலில் "முன்மொழிய" என்பதற்கு இணைப்புக் கொடுத்து, ஒரு சில கட்டுரைகளை முன்னிலைப்படுத்த உதவுவீர்களா? நான் பரிந்துரைக்கும் தலைப்புகள்:

  • செப்துவசிந்தா
  • கலிலேயக் கடல்
  • எருசலேம்
  • எம்மாவு
  • கொல்கொதா
  • பெத்தானியா
  • விவிலிய சிலுவைப்பாதை

தங்கள் உதவிக்கு நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 03:45, 9 மே 2013 (UTC)Reply

 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:54, 9 மே 2013 (UTC)Reply
  • நன்றி, மாதரசன். கிறித்தவம் வலைவாசலை மேம்படுத்த அடுத்து முயற்சிசெய்யலாம் என நினைக்கிறேன். வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 12:34, 9 மே 2013 (UTC)Reply


சென்னை விக்கியர் சந்திப்பு தொகு

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:31, 21 மே 2013 (UTC)Reply

ஐயா, நான் விடுமுறைக்காக சொந்த ஊரில் இருக்கின்றேன். ஆதலால் சென்னைக்கு வந்து இச்சந்திப்பில் கலந்துகொள்ள இயலாது. மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:29, 23 மே 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:05, 24 சூன் 2013 (UTC)Reply

நாள் வார்ப்புரு தொகு

இது எதற்காக? ஏற்கனவே உள்ளதை எதற்காக வார்ப்புருவாக்க முயலுகிறீர்கள்? 365 நாட்களுக்கும் கட்டுரைகள் எழுத எனக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன.--Kanags \உரையாடுக 11:48, 19 சூலை 2013 (UTC)Reply

மன்னிக்கவும். நான் மாற்றுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே வார்ப்புரு சேர்த்தப்பின்பும் இருக்கின்றது. (காண்க காண்க). இன்னமும் மாற்றாத நாட்கள் எதிலுமே நீங்கள் கூறியவாறு (சனவரி 1 (January 1, ஜனவரி 1)) என இல்லை. எனினும் வாற்புருக்கொண்டு நீங்கள் கூறிய படி செய்யலாம். ஆயினும் இது தேவை இல்லை என எண்ணினால், நான் செய்த மாற்றங்களை மீளமைத்துவிடுகின்றேன். இப்போது, கருவியை தங்களின் பதில் கிடைக்கும் வரை நிறுத்தி வைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:59, 19 சூலை 2013 (UTC)Reply
பரவாயில்லை. எல்லாவற்றிலும் ஆங்கிலச் சொற்கள் இல்லை. அவை அவசியம் தேவை. உங்களால் முடிந்தால் வார்ப்புருவைக் கொண்டு மாற்றுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 13:16, 21 சூலை 2013 (UTC)Reply
உங்கள் வழிகாட்டுதளின்படியே செய்கின்றேன். நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:35, 21 சூலை 2013 (UTC)Reply

AWB BOT தொகு

இக் கருவி துணை கொண்டு கட்டுரைகளில் உள்ள மாசுகளைத் துடைத்து மெருகூட்டி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் தொண்டு. --Sengai Podhuvan (பேச்சு) 20:36, 20 சூலை 2013 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:12, 21 சூலை 2013 (UTC)Reply

கட்டுரைக் வேண்டுதல் தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply

கிறித்தவக் கட்டுரைகள் தொகு

வணக்கங்க. கட்டுரைப் போட்டியை முன்னிட்டு கிறித்தவம் தொடர்பான கட்டுரைகளை நீங்கள் விரிவாக்கி வருவதைக் கண்டு மகிழ்ச்சி. அண்மையில் சில நாட்களாக முதற்பக்கத்தில் கிறித்தவம் வலைவாசல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து முனைப்புடன் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 19:10, 2 செப்டம்பர் 2013 (UTC)

இரவி, தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:45, 3 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் தொடங்கும் கட்டுரைகளுக்கு தகுந்த வார்ப்புரு அமைத்துதர வேண்டுகோள் தொகு

வணக்கம் நண்பரே,

தங்களுடைய விக்கி கட்டுரையாக்கப் பணிகளுக்கு இடையூறு செய்வதற்கு மன்னிக்கவும். தமிழ் விக்கியின் 10 ஆண்டு கொண்டாட்டத்தின் காரணமாக புதுப்பயனர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் விக்கிப்பீடியாவைப் பற்றிய புரிதல் இன்றி காப்புரிமையுள்ள உள்ளடக்கங்கள், கலைக்களஞ்சியத்திற்கு ஒவ்வாத கட்டுரைகளை மிக விரைவாக தோற்றுவித்துக்கொண்டே உள்ளார்கள். பல நிர்வாகிகள் அக்கட்டுரைகளை விக்கியின் தரத்தினைப் பேனுவதற்காக நீக்கம் செய்ய விளைகின்றார்கள். இவ்வாறு நீக்கம் செய்யும் போது அந்தபயனர்களுக்கு விக்கியின் மீது வெறுப்பும், சரியான புரிதல் இன்மையும் ஏற்படலாம் என்பதால் சில காலம் நிர்வாகிகளை அக்கட்டுரைகளை நீக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கவும், புதுப்பயனர்களுக்கு இக்கட்டுரை சரியான முறையில் இல்லை என்பதால் குறித்த காலத்திற்குள் மாற்றியமைக்க கோரிக்கை வைக்கவும் ஏற்றதொரு வார்ப்புருவை அமைத்து தர வேண்டுகோள் வைக்கிறேன். அந்த வார்ப்புருவில் நிர்வாகிகளுக்கு - கட்டுரையை சில காலம் நீக்க வேண்டாம் என்ற செய்தியும், அக்கட்டுரையை எழுதிய புதுப்பயனர்க்கு - கட்டுரையை திருத்தி அமைக்க உதவ வழிகாட்டவும், கட்டுரை வாசிப்பவர்களுக்கு - உள்ளடக்கத்தினைப் பற்றி எச்சரிக்கையையும் இணைந்தாக அமைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:07, 30 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோளை ஏற்றமைக்கு மிக்க நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:26, 30 செப்டம்பர் 2013 (UTC)
 Y ஆயிற்று {{புதுப்பயனர் கட்டுரை}} என்னும் வார்ப்புரு அமைத்துள்ளேன். அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}}. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:02, 30 செப்டம்பர் 2013 (UTC)
மிக்க நன்றி நண்பரே,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:03, 30 செப்டம்பர் 2013 (UTC)

இம்மாத வட்டிக் கடன்காரராக வாழ்த்துக்கள் தொகு

கட்டுரைப் போட்டியில் விதி வசத்தால் முதல் 2 மாதத்தில் கட்டுரைப்போட்டியில் மாதக்கடைசியில் வந்து கட்டுரைகளை ஏற்றி கட்டுரைப் போட்டியாளர்களை கடுப்பேற்றி மாதவட்டிக் கடன்காரனாய் இருந்தேன். பிற்பாடு நந்தினி போட்டி போட்டிக் கொண்டு கடைசி நாளில் மிகக் கொடூரமாக 15 கட்டுரைகளை விரிவாக்கி சென்ற மாதத்தில் மாத வட்டிக்கடன்காரர்களின் தாதாவானார். இனி எங்களுடைய டான் நீங்கள் தான் என்பது போல் தெரிகிறது. முன்னெச்சரிக்கையாக வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். டான்... டான்... டான்...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:13, 30 செப்டம்பர் 2013 (UTC)

தல, தல,இந்த தடவை நீதான் தல ஜெயிக்கிறே!   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:31, 30 செப்டம்பர் 2013 (UTC)
உங்க ஆட்டத்துக்கு நான் வர்ல. என்ன ஆல விடுங்க. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிடுவீங்க. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:36, 30 செப்டம்பர் 2013 (UTC)

நாளைய டான் பயப்படலாமா? இனிமேல் உங்கள் பக்கத்துக்கு வந்தால் நீங்கள் டானான பிறகு தான் வருவேன் என உறுதிமொழி கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:44, 30 செப்டம்பர் 2013 (UTC)

தென்காசியாரே அவசரப்பட்டுடீங்களே, முத்துராமன் முன்னிலையில் உள்ளார். எப்படியோ நான் தப்பிச்சேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:56, 30 செப்டம்பர் 2013 (UTC)
நான் அவசரப்படவில்லை. இரண்டாவது பரிசு உங்களுக்குத் தானே. குட்டி டான்.. குட்டி டான்.. குட்டி டான்..--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:04, 1 அக்டோபர் 2013 (UTC)Reply
  --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:19, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா? தொகு

வணக்கம், செயரத்தினா. பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:25, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

திரு இரவி, தாங்கள் எனக்கு நிருவாக பொறுப்பு அளிக்க விரும்புவதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் பல. ஆயினும் இது பெரும் பொறுப்பு ஆதலாலும், என் ஓய்வில் மட்டுமே என்னால் பங்களிக்க இயலும் என்பதாலும் இப்பொறுப்பு கோரும் அளவுக்கு தகுதியுடையவனா என்றும், பங்களிக்க இயலுமா என்றும் தெரியவில்லை. ஒரு நிருவாகியின் கடமைகளும் பொறுப்புகளும் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நிருவாகியாக்கப்பட்டால், என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படும் என்பதனை தெரிவித்தால் நான் முடிவெடுக்க ஏதுவாய் இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:12, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பக்கத்தினை காணுங்கள் நண்பரே. இங்கு நிர்வாகிகளின் பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:58, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
மிக்க நன்றி ஜெகதீஸ்வரன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:19, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
நிருவாகப் பொறுப்பு ஏற்பதன் மூலம் உங்களுக்குச் சில கூடுதல் அணுக்கங்கள் கிடைக்கும். பக்கங்களை நீக்கலாம். நீக்கிய பக்கங்களை பார்க்கலாம் / மீட்கலாம். இரண்டு பக்கங்களை வரலாற்றோடு இணைக்கலாம். தவறான தொகுப்புகளை இலகுவாக முன்னிலைப்படுத்தலாம். விசமப் பயனர்களைத் தடுக்கலாம். பக்கங்களைக் காக்கலாம். இவையனைத்தையும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும் விக்கிச் சமூகத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும். வழமையான பங்களிப்புகள் போலவே இவற்றையும் உங்களால் இயன்ற போது செய்யலாம். கட்டாயம் இல்லை. ஒரு நிருவாகி என்ற முறையில் உங்கள் உரையாடல்களும் செயல்பாடுகளும் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று அனைவரையும் நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். தங்களுக்கு நிருவாகப் பொறுப்பு ஏற்பதற்கான தகுதி இருப்பதால் தான் கேட்கிறேன். எனவே, அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் :) சம்மதமா என்று மட்டும் சொல்லுங்கள் ! --இரவி (பேச்சு) 04:49, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்சிக்கு என்னால் இயன்ற உதவியினை செய்ய நிருவாகப் பொறுப்பு ஏற்க விரும்புகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:19, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம் ஏ, சிங்கம் களம் இறங்கிடுச்சி!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:12, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆஹா.. ஒரு திட்டத்தோடதான் இருக்கீங்க போல...   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:21, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)Reply
 Y ஆயிற்று மிக்க நன்றி இரவி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:30, 7 அக்டோபர் 2013 (UTC)Reply
உங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 30 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டு அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 18:09, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
செப்டம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இம் மாதப் போட்டியிலும் தொடர்ந்து பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்!--Anton (பேச்சு) 01:30, 6 அக்டோபர் 2013 (UTC)Reply
மிக்க நன்றி அன்டன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:12, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரை போட்டியில் வென்றதற்காக வாழ்த்துக்கள்.முத்துராமன் (பேச்சு) 14:19, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி முத்துராமன். முதல் பரிசினை வென்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:09, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரை போட்டியில் வென்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:32, 10 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி நந்தினிகந்தசாமி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:05, 10 அக்டோபர் 2013 (UTC)Reply

திருத்தந்தை தொகு

ஜெயரத்தினா, இப்பயனரின் கட்டுரைகளைக் கவனித்துத் திருத்த முடியுமா எனப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:34, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:28, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல் தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

வாழ்த்துரைத்தல் தொகு

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு எந்தன் வாழ்த்துகள் நண்பரே, {{User wikipedia/Administrator}} வார்ப்புருவை தாங்கள் விரும்பினால் பயனர் பக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக செயல்படுகின்றவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கிட்டும் என்பதை பிற பயனர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:13, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா... --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:20, 16 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to the user page of "Jayarathina/தொகுப்பு03".