வாருங்கள்!

வாருங்கள், M.K.Chandra Mouleeswaran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Theni.M.Subramani 14:30, 31 மே 2010 (UTC)Reply

உங்களது தமிழார்வமும் அனுபவமும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவட்டுமாக. -- மாஹிர் 07:19, 11 ஜூன் 2010 (UTC)

தமிழ் விக்கிப் பீடிட்யாவில் பதிவேற்றம் பெரும் கட்டுரைகளில் சந்திப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்.

தொகு

தமிழ் விக்கிப் பீடிட்யாவில் பதிவேற்றம் பெரும் கட்டுரைகளில் சந்திப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்.

நான், சந்திர மௌலீஸ்வரன்.ம.கி., கடந்த இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் விக்கிப் பீடியாவில் பதிவு செய்து கொண்டேன். பணிச் சுமைகள், எனது பங்களிப்பைத் தொடர இடந்தரவில்லை. இப்பொழுது குறைந்த பணிச் சுமை மட்டுமே இருப்பதால், விக்கிப் பீடியாவில் நீண்ட நேரத்திற்குப் பணியாற்ற முடிகிறது. 

எனது பயனர் பதிவிற்கு பின் கடந்துள்ள பத்தாண்டுகளில் விக்கிப் பீடியாவிற்குத் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும், கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் வல்லுநர்களும் ஆயிரக் கணக்கில் தகவல் கட்டுரைகளைச் சேர்த்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. நான் விக்கிப் பீடியாவுடன் இணைந்த தேதியில் (31 மே 2010) நகலெடுத்து வைத்த எனது முதல் பக்கத் தகவலின்படி, விக்கிப் பீடியாவில், தமிழில், இருபத்திரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்து ஐந்து கட்டுரைகள் இருந்தன எனத் தெரிகிறது. இன்றைய தேதியின் (26 பெப்ருவரி 2020) தகவலின்படி, ஒரு இலட்சத்து இருபத்தேழாயிரத்து இருநூற்று முப்பத்து மூன்று கட்டுரைகள் இருப்பதாகத் தெரிகிறது!

(இந்த இடத்தில் ஒரு சிறு குறிப்பு-இளைஞர்களுள் அதிக எண்ணிக்கையிலும் மூத்தோருள் ஓரளவிற்கும் தமிழில் பேசுப் பொழுது, எண்களைச் சொல்லுகையில், ஒரு பெரிய தவறான வழக்கத்தைக் கைக்கொண்டுள்ளனர். அச் சமயங்களில், 'இருபத்து', 'நூற்று', 'ஆயிரத்து', 'இலட்சத்து' எனச் உச்சரிக்க வேண்டிய இடங்களில் எல்லாம், 'இருபத்தி', 'இரவத்தி', 'நூத்தி', 'ஆயிரத்தி', 'ஆயரத்தி', 'லச்சத்தி' எனப் பேச்சுத் தமிழ்க் கொச்சைச் சொற்களை மட்டுமே உச்சரிக்கிறார்கள். அதனால் நாங்கள், (கணினிப் பயிற்சியாளர்கள்-மூத்த பயிற்சியாளர்கள்), இதை இளைஞருக்குச் சுட்டித் திருத்த எண்ணி, அனைத்து இடங்களிலும், நீண்ட சொற்றொடர்களை எழுத நேரினும், எழுத்தால் மட்டுமே எழுதி வருகிறோம். அதனால்தால் மேலுள்ள எண்ணிக்கைகள் எழுத்தில் உள்ளன).

இக்கட்டுரைகளில், எனது விருப்பத் துறைகளில் உள்ளவற்றை, இயன்ற பொழுதெல்லாம் படித்து வருகிறேன். நான் படித்த வரையில் அதிக எண்ணிக்கையிலான புதிய கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியனவும் இவற்றை விட அதிகமாகச் சந்திப் பிழைகளும் தென்படுகின்றன. பத்தாண்டுகட்கு முன் இவ்வளவாக் இல்லை என்பது தெரிகிறது. எனவே எனது புதிய கட்டுரைகளைப் பதிவேற்றுவதைக் குறைவாகச் செய்யவும் பதியப் பட்டுள்ள கட்டுரைகளில் பிழைத் திருத்தங்களைப் பெரும்பான்மையாகச் செய்யவும் விரும்புகின்றேன்.அத்துடன் பதியப்பட்ட கட்டுரைகளில் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றிய கருத்துக்களை விக்கிப்பீடியாவின் மேலாளர்களிடமும் ஒருங்கிணைப்பாளர்களிடமும் நீண்ட காலமாகப் பணியாற்றும் பயனர்களிடமும் பெற விரும்புகிறேன். சந்திர மௌலீஸ்வரன்-ம.கி. 26 பெப்ருவரி 2020-புதன்.

தங்களது நல்ல நோக்கத்திற்கு நன்றிகள் பல. இது குறித்து தாங்கள் யாரிடமும் எந்தக் கருத்தும் கேட்கத் தேவையே இல்லை. உங்களைப் போன்றோர் தான் தற்போதைய தேவை. கட்டுரையின் எண்ணிக்கையினை உயர்த்துவதை விட பிழைதிருத்தம் செய்தல் சிறப்பான பணி. தங்களது நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள். நன்றிஸ்ரீ (✉) 06:36, 26 பெப்ரவரி 2020 (UTC)
நன்றி, உங்கள் பணி தொடரட்டும்.--Kanags \உரையாடுக 07:34, 26 பெப்ரவரி 2020 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:38, 26 பெப்ரவரி 2020 (UTC)

தமிழ் விக்கிப் பீடியாவில் ------------- சந்திப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்.

தொகு

எனது 'பேச்சு' பதிவிற்கு விடையளித்துள்ள ஸ்ரீ, Kanags ஆகியோருக்கும் விருப்பம் தெரிவித்துள்ள நந்தகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. ஒரு நாளில் குறைந்தது பத்துப் பெரிய கட்டுரைகளையோ அல்லது இருபது சிறிய கட்டுரைகளையோ 'பிழைத் திருத்தம்' செய்ய எண்ணியுள்ளேன். என்னால், இயன்றவரை இதனைத் தொடர்ந்து செய்ய 'மின்வாரியச் சிவபெருமான்' மற்றும் 'தொலைத்தொடர்புப் பிரமன்' ஆகிய வல்லமைமிக்க தேவ தேவர்கள் அருள் பொழிவார்களாக!!மிக்க நன்றி! சந்திரமௌலீஸ்வரன்-ம.கி.26 பெப்ருவரி 2020-புதன் கிழமை.

பிழைத் திருத்தம் செய்யும் போது கண்ட,நகலெடுத்து ஒட்ட்ப்பட்டுள்ள பத்திகள்.

தொகு

பிழைத் திருத்தம் செய்யும் போது கண்டன, நகலெடுத்து ஒட்ட்ப்பட்டுள்ள பத்திகள். சில கட்டுரைகளில் பிற கட்டுரைகளில் இருந்து சொற்றொடர்களும் பத்திகளும் முழுவதுமாக 'நகல்-ஒட்டு'ச் செய்யப் பட்டுள்ளன.இவற்றை என்ன செய்வது? இவ்வகைக் கட்டுரைகளில் எது முந்தையது என்பதும் மூலக்கட்டுரை எது என்பதும் தெரியாததால், இவற்றில் பிழைத்திருத்தத்தை மட்டும் செய்துள்ளேன். தலைப்பிற்கு முற்றிலும் பொருந்தாதவையும் ஓரளவிற்குத் தவறானவையும் ஆன பத்திகள், சில கட்டுரைகளில் தென்படுகின்றன. இவற்றைப் பத்தி அளவில் நீக்கலாமா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இதுவரை திருத்தியுள்ள கட்டுரைகளிம் மனிதர் பெயர்களின் முன், மரியாதை அடைமொழி (திரு, செல்வி, திருமதி முதலியவை) மற்றும் மரியாதைப் பன்மை ஈற்றொட்டு ('அவர்கள்'எனும் சொல்) ஆகியவற்றைத் தந்து எழுதியுள்ளேன். இது, விக்கிப் பீடியாவின் கட்டுரை அமைப்பு முறைமைகளுக்கு மாறானது என்பதை என் நண்பர் தெரிவித்தார். மீண்டும் ஒருமுறை அவற்றை நீக்கித் திருத்த முயல்கிறேன். மற்ற பயனர் தம் கருத்துக்களை அளிப்பதை மனமார வரவேற்கிறேன்---- சந்திர மௌலீஸ்வரன் - ம.கி.--27பெப்ருவரி2020-வியாழக் கிழமை.--M.K.Chandra Mouleeswaran (பேச்சு) 07:40, 27 பெப்ரவரி 2020 (UTC)

  • //சில கட்டுரைகளில் பிற கட்டுரைகளில் இருந்து சொற்றொடர்களும் பத்திகளும் முழுவதுமாக 'நகல்-ஒட்டு'ச் செய்யப் பட்டுள்ளன// இவற்றைக் காணும் போது அது குறித்து உரையாடல் பகுதியில் தெரிவியுங்கள்.
  • //மனிதர் பெயர்களின் முன், மரியாதை அடைமொழி (திரு, செல்வி, திருமதி முதலியவை) மற்றும் மரியாதைப் பன்மை ஈற்றொட்டு ('அவர்கள்'எனும் சொல்) ஆகியவற்றைத் தந்து எழுதியுள்ளேன்// இவ்வாறு விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
  • உங்கள் திருத்தங்களில் நான் செய்துள்ள சில முக்கிய திருத்தங்களைக் கவனியுங்கள்:

--Kanags \உரையாடுக 09:44, 27 பெப்ரவரி 2020 (UTC)

எழுதப் பட்டுள்ள கட்டுரையின் அடக்கம் தொடர்பான ஐயம்.

தொகு

எழுதப் பட்டுள்ள கட்டுரையின் அடக்கம் தொடர்பான ஐயம். 'பண்பாடு' எனும் தொகுப்பின் கீழ்,'பணபாடு தொகுப்பில் உள்ள கட்டுரைகள்' எனும் பிரிவில் உள்ள 'பண்பாட்டு மேலாதிக்கம்' எனும் கட்டுரை, நடுநிலையில் எழுதப் படவில்லை என எனக்குத் தோன்றுகிறது. இதில் திருத்தங்கள் தேவையா எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். ----- சந்திர மௌலீஸவரன்-ம.கி. --- --M.K.Chandra Mouleeswaran (பேச்சு) 12:24, 27 பெப்ரவரி 2020 (UTC)

பிற கட்டுரைகளின் வரிகள் 'நகல்-ஒட்டு'ச் செய்யப் படுதல் தொடர்பான ஐயம்.

தொகு

பிற கட்டுரைகளின் வரிகள் 'நகல்-ஒட்டு'ச் செய்யப் படுதல் தொடர்பான ஐயம். பார்க்க - 01. எனது முந்தைய பேச்சு 'பிழைத் திருத்தம் செய்யும்போது ............... நகலெடுத்து ஒட்டப்பட்ட பகுதிகள்'

        02. இதற்காக 'Kanags' அளித்த விடை -- பேச்சு.

இங்கு குறிக்கப் பட்டுள்ள இரண்டு கட்டுரைகளில் ஒரு பத்தி 'நகல்-ஒட்டு-ச் செய்யப் பட்டுள்ளது.

முதல் கட்டுரை -- 'பண்பாடு' தொகுப்பின் கீழுள்ள "பண்பாடு தொகுப்பில் உள்ள கட்டுரைகள்' எனும் பிரிவில் உள்ள 'பல்லினப் பண்பாடு'. இதன் இரண்டாம் பத்தி, (பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் .......... தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்).

இரண்டாம் கட்டுரை-- 'பண்பாடு' தொகுப்பின் கீழுள்ள "பண்பாடு தொகுப்பில் உள்ள கட்டுரைகள்' எனும் பிரிவில் உள்ள 'பண்பாடு'. இதன் இரண்டாம் பத்தி, (பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் .......... தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்). இதற்கான வழிமுறை விதிகளில் எனக்கு அறிமுகம் இல்லாததாலும் மூலக்கட்டுரை எதுவெனத் தெரியாததாலும் இந்த ஐயம் எழுந்துள்ளது. இரண்டு கட்டுரைகளிலும் ஒன்றிற்கொன்று மேற்கோளாக்கிக் கொள்ளும் வகையில் இணைப்புக்களும் இல்லை. விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.----- சந்திர மௌலீஸ்வரன் - ம.கி. --M.K.Chandra Mouleeswaran (பேச்சு) 12:44, 27 பெப்ரவரி 2020 (UTC)

'பண்பாடு எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகள்'-- தலைப்புச் சொற்பொருள் மாறுபாடு.

தொகு

'பண்பாடு எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகள்'-- தலைப்புச் சொற்பொருள் மாறுபாடு. 'பண்பாடு' எனும் பகுப்பின் கீழ், 'பண்பாடு பகுப்பில் உள்ள கட்டுரைக'ளை ஒவ்வொன்றாகப் படித்துத் திருத்தி வருகிறேன். முதல் கட்ட வேலையாகப் பிழைத் திருத்தங்களை மட்டும் செய்கிறேன. சேர்த்த்ல், விரித்தல் மற்றும் தொகுத்தல் வேலைகளை அடுத்துக் செய்ய எண்ணீயுள்ளேன். இந்தப் பகுப்பில், 'பண்பாடு' எனும் சொல், பல கட்டுரைகளில், அதன் இயல்பான பொருளிற்கு மாறாக வேறு பொருளில் பயன்படுவது தெரிகிறது.அது, 'நடைமுறை', 'அமைப்பு', 'பண்பு', 'பழக்க வழக்கம்', 'இயல்பு' முதலிய பொருட்களில் பயன்படுத்தப் படுகிறது. எ-கா:"நிறுவனப் பண்பாடு'- இங்கு இது நிறுவன நடைமுறையைக் குறிக்கிறது. தலைமுறை தலைமுறைகளாகப் பயன்பாட்டில் இருந்ததால் காலப் போக்கில், ஒரு சமூகத்தில் அமையும் நடைமுறைகள், அச் சமூகத்தால் விதிகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, அச் சமூகத்தின் 'பண்பாடுகள்' ஆகின்றன. இவை ஒரு தனிமனிதனாலோ, குழுவாலோ நிறுவப் படாமல், தாமாக அவற்றின் பயன் அமைவால், ஒரு சமூகத்தில் அமைவன ஆகும். ஆனால் ஒரு நிறுவன நடைமுறைகள், அதன் உரிமையாளர் மற்றும் மேலாண்மைக் குழுவால் வரையறுக்கப் படுவன ஆகும். இத்தகைய கட்டுரைகளைத் தொகுக்கும் போது, இவற்றைத் தலைப்பிற்கேற்ப மாற்றுவதை விட, அந்தக் கட்டுரைக்கேற்ப அதன் தலைப்பை மாற்றுவது சரியானதாகத் தோன்றுகிறது. உங்கள் தீர்வு என்ன?---- சந்திர மௌலீஸ்வரன்-ம.கி., --M.K.Chandra Mouleeswaran (பேச்சு) 18:01, 28 பெப்ரவரி 2020 (UTC)

மீண்டும்

தொகு

நீங்கள் செய்துள்ள திருத்தத்தில் நான் செய்துள்ள திருத்தத்தைக் கவனியுங்கள். நவகண்டம் கட்டுரையின் அறிமுகப் பகுதியில்: '''<nowiki/>'நவகண்டம்'''' என்று திருத்தியுள்ளீர்கள். சரியான முறை '''நவகண்டம்'''. இவ்வாறான பிழைகள் உங்கள் அனைத்துக் கட்டுரைத் திருத்தங்களிலும் உள்ளன. இவற்றைக் கவனித்து இனிவரும் தொகுப்புகளில் இவற்றைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 03:19, 29 பெப்ரவரி 2020 (UTC)

எனது பயனர் பக்கம், 15:16, 29 பெப்ரவரி 2020 அன்று நீக்கப் பட்ட அறிவிப்பு.

தொகு

M.K.Chandra Mouleeswaran.எனது பயனர் பக்கம், கடந்த 29 பெப்ருவரி 2020 அன்று நீக்கப் பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது. 2010, மே மாதத்தில் துவக்கப் பட்ட அப்பக்கம், சென்ற வாரத்தில் என்னால் திருத்தப்பட்டது. அதில் எனது முகவரி, மாற்றம் செய்யப் பட்டது. அதன் பின்னர் அது நீக்கப் பட்டுள்ளது. அதில் தவறான தகவல்கள் அல்லது தடுக்கப் பட்ட தகவல்கள் ஏதேனும் உள்ளனவா? என்னைப் பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே அதில் தரப் பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க எனக்கு என்ன தகுதி உள்ளது என்பதைக் காட்ட, எனது துறை அநுபவங்களைப் பற்றி அதில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். அதை எந்த அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி. சந்திர மௌலீஸ்வரன்-ம.கி.-2 மார்ச்சு, 2020-திங்கட் கிழமை.

உங்கள் பயனர் பக்கம் விளம்பரம் போல் இருந்ததால் நீக்கப்பட்டது. உங்கள் பயனர் பக்கத்தில், உங்களுடைய விவரத்தை மட்டுமே தாருங்கள், மாறாக தொடர்பில்லாதவற்றை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும்.இதை காண்க, நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:48, 2 மார்ச் 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:M.K.Chandra_Mouleeswaran&oldid=3184405" இலிருந்து மீள்விக்கப்பட்டது