பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு05

Active discussions

1962 birthsதொகு

Lifetime எனும் வார்ப்புருவைத் தமிழாக்கி 1962 births, 1963 births என்ற பகுப்புக்களை கட்டுரைகளில் தோன்றாமல் செய்துள்ளேன். ஆனால் இவை துறைவரிசையில் தோன்றுகின்றனவே, ஏன்? --சிவகோசரன் 08:16, 27 பெப்ரவரி 2011 (UTC)

இது போல சில நேரங்களில் பகுப்புகள் இற்றையாவதற்கு சில நாட்கள் ஆகின்றன (எனக்கும் முன் சில சமயம் இது நடந்துள்ளது) . மீடியாவிக்கி இற்றைபடுத்துதலில் உள்ள வழு இது. ஒரு இரு நாட்கள் பொறுத்துப்பாருங்கள். அதுவாகப் போய்விடும். இல்லையெனில் மேலும் ஆராய்வோம்--சோடாபாட்டில்உரையாடுக 08:19, 27 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி. பொறுத்துப்பார்ப்போம் --சிவகோசரன் 09:20, 27 பெப்ரவரி 2011 (UTC)

தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக்தொகு

Could you upload the movie poster? 99.56.72.50 21:57, 6 மார்ச் 2011 (UTC)

Ha my favourite anon. Done!. (if you create an account, you can do it yourself without any restrictions)--சோடாபாட்டில்உரையாடுக 02:45, 7 மார்ச் 2011 (UTC)

செய்திகளில் உள்ள சொற்கள்தொகு

விக்சனரியில், செய்திகளில் உள்ள சொற்கள் என்றால் என்ன? ---Eldiaar 06:05, 11 மார்ச் 2011 (UTC)

சரியாகத் தெரியவில்லை த.உழவன் அல்லது பழ.கந்தசாமிக்குத் தெரிந்திருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 06:09, 11 மார்ச் 2011 (UTC)


விடைதேடிதொகு

வணக்கம்

விக்கியில் ஈழத்து மெல்லிசைப் பாடகர்கள் என்ற பகுப்பில் பல மெல்லிசைப் பாடகர்கள் பற்றிய தொகுப்பு உள்ளதைப் பார்த்து ஈழத்து மெல்லிசைப் பாடகர் ரி. கிருஷ்ணன் பற்றிய தொகுப்பை தயார் செய்து இணைத்தேன்... அதில் நீங்கள் திருத்தமும் செய்திருந்தீர்கள்.. நன்றி.. ஆனால் அந்த தொகுப்பு எனது கணினியில் தேடும் பொழுது காட்சியளிக்கிறது.. ஆனால் வேறு இடங்களில் தேடும் போது ஆக்கம் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.. இதற்கு என்ன காரணம்...விளங்கப் படுத்த முடியுமா.... krishanth27

இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்:
பொதுவாக விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாகி சுமார் ஒரு வார காலத்துக்குப் பின்னரே தேடுபொறிகளில் சிக்கத் தொடங்கும். உங்கள் நண்பர்கள் புற தேடுபொறிகளைப் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன் (கூகுள், பிங்) போன்றவை. இன்னும் ஒரு வாரம் கழித்து தேடிப் பார்க்கச் சொல்லுங்கள்.
இரண்டாவதாக,. விக்கிப்பீடியாவின் தேடுதல் பொறியில் "ரி. கிருஷ்ணன்” என்ற் தேடினால் கட்டுரை வந்து விடுகிறது. ”ரி. கிருஷ்னன்” என்று தேடினால் வருவதில்லை, அதற்கு பதில் “ரி. கிருஷ்ணன்” என்ற கட்டுரைக்குப் போக வேண்டுமா என்ற auto suggestion வரும். --சோடாபாட்டில்உரையாடுக 04:06, 15 மார்ச் 2011 (UTC)
தேடு பொறிகளில் சிக்கும் வரை நேரடி இணைப்பின் வழி வந்து காணச் சொல்லலாம் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
--சோடாபாட்டில்உரையாடுக 04:22, 15 மார்ச் 2011 (UTC)


உங்கள் பதிலுக்கு நன்றி krishanth27

புதிய பகுப்பு தேவைதொகு

சோடாபாட்டில், கிறித்தவ சமய நூல்கள் என்னும் பகுப்பின் கீழ் விவிலியம் உள்ளது. அதன் உட்பகுப்பாக விவிலிய நபர் என்பதும் விவிலிய நிகழ்வு என்பதும் உள்ளன. அவற்றோடு விவிலிய இடங்கள் என்றொரு பகுப்பும் வேண்டும். விவிலிய இடங்கள் (எ.டு.: எருசலேம், நாசரேத்து) பற்றி சில கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளேன். தமிழ் விக்கியைத் தேடியதில் சீனாய் என்றொரு குறுங்கட்டுரை கண்டேன். அதை விவிலிய இடங்கள் என்னும் பகுப்பின் கீழ் கொணரலாம். புதிய பகுப்பை உருவாக்கியதும் தெரிவியுங்கள். நன்றி. --பவுல்-Paul 02:42, 19 மார்ச் 2011 (UTC)

விவிலிய இடங்கள் என்னும் புதிய பகுப்பை உருவாக்கியுள்ளேன். விவிலிய நபர் என்ற பகுப்பின் பெயர் விவிலிய நபர்கள் என மாற்றப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 04:29, 19 மார்ச் 2011 (UTC)
நன்றி கன்க்ஸ். விவிலிய நபர் என்பதை விவிலிய நபர்கள் என்று மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:42, 19 மார்ச் 2011 (UTC)

பேராக்தொகு

பேராக் கட்டுரையை விக்கியாக்கம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். நீங்களே செய்து விட்டீர்கள்:).--Kanags \உரையாடுக 09:06, 20 மார்ச் 2011 (UTC)

அதைப் படிக்கும் போது வெகு சுவாரஸ்யமாக இருப்பதால், விக்கிநடையற்ற பகுதிகள் தோன்றுவதே இல்லை :-). மெதுவாக ஒவ்வொரு வரியாகப் படித்து (கதை மனதுக்குப் போகாமல்) மாற்ற வேண்டியுள்ளது :-)--சோடாபாட்டில்உரையாடுக 09:08, 20 மார்ச் 2011 (UTC)

பாரதி மணிதொகு

அன்புள்ள சோடாபாட்டில்:

உங்கள் பெயரே எனக்குப்பிடித்திருக்கிறது. பத்துவருடங்களுக்குமுன், நான் குடித்துக்கொண்டிருந்தவரை, மாலை வெளைகளில் நீங்கள் (சோடாபாட்டில்) என்னுடனேயே இருந்தீர்கள்!

நான் ஒரு கணினி கைநாட்டு! எப்படி இதைத் திருத்தவேண்டுமென்று தெரியவில்லை. உங்கள் உதவி தேவை.

1. எனது பக்கத்தில் என்றா என்றிருக்கிறது. அது ‘என்ற இயற்பெயர்’ என்றிருக்கவேண்டும்.

2. எனது புகைப்படத்தை எப்படி வலையேற்றுவதென்று தெரியவில்லை. கீழேயிருக்கும் குறிப்பிலுள்ள, உங்களுக்கு முக்கியமாகத்தோன்றும் பகுதிகளை என் அறிமுகத்தில் இணைத்தால், நன்றாக இருக்கும்.பாரதி மணி

எழுபத்துநான்கு வயது ‘இளைஞரான’, (எஸ்.கே.எஸ். மணியென்று அறியப்பட்ட) பாரதி மணி யின் நாடக அனுபவம் 1944-ல் தொடங்கியது. தனது தந்தையாரால் ஏழாவது வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ மதுரை தேவி பால வினோத நாடக சபாவில் சேர்க்கப்பட்டார். 1955-ல் தில்லி சென்ற இவர் பூர்ணம் விசுவநாதன் இயக்கி நடித்த ஓரங்க நாடகங்களிலும், ஆல் இந்தியா ரேடியோவின் நாடகங்களிலும் பங்குபெற்றார். 1956-ல் தில்லியில் தட்சிண பாரத நாடக சபா வை தமிழ் நாடகத்துக்கான முதல் அமைப்பாக ராமநாதன், ராமதாஸ் ஆகியோருடன் தொடங்கினார். முதல் நாடகம் பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’யில் வேலைக்கார சபாபதியாக நடித்தவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தில்லியில் பம்மல், கோமதி ஸ்வாமிநாதன், கே.கே. ராமன், கே. பாலசந்தர், ’சோ’ ராமசுவாமி, கே.எஸ். ஸ்ரீநிவாசன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சி.சு. செல்லப்பா, எஸ்.எம்.ஏ. ராம் போன்றோரின் பல நாடகங்களில் 2,000 தடவைகளுக்கு மேல் நடித்திருக்கிறார். தில்லி ‘யதார்த்தா’ பென்னேஸ்வரன் இயக்கிய நாடகங்களிலும் இவர் நடித்ததுண்டு. இவரை இயக்கியவர்களில் தி. ஜானகிராமனும் கே.எஸ். ராஜேந்திரனும் அடக்கம். அறுபதுகளில் திரு. இப்ராகிம் அல்காஸி இயக்குநராக இருந்த தில்லி தேசிய நாடகப்பள்ளியில் அவரது மாணவராகச் சேர்ந்தார். பம்பாய், கல்கத்தா, சென்னை, சண்டிகர் போன்ற நகரங்களிலும் இவரது நாடகங்கள் மேடையேறின. ’தன்னை நாடகம் எழுதத்தூண்டியவர் பாரதி மணி தான்’ என இ.பா.வே பாராட்டியிருக்கிறார். லண்டன் ஸ்கூல் ஆப் டிராமாவில் குரல் வளத்துக்கான ‘Voice Culture’ சான்றிதழ் பெற்றவர். 2004-ல் தில்லி தேசிய நாடகப்பள்ளியும் ‘நாடக வெளி’யும் பாரதி மணியின் அறுபதாண்டு கால மேடை அனுபவத்தைப் பாராட்டி, ஒருமாத நாடகப்பட்டறை நடத்தி. விழாவின் முடிவில் மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆளேகர் எழுதிய ‘மஹா நிர்வாணம்’ நாடகத்தின் தமிழாக்கம் இவரது நடிப்பில் நடந்தேறியது. 2011 மார்ச் மாதம் வைக்கம் பஷீரின் ‘சப்தங்கள்’ நாடகத்தில் பஷீராக நடித்தது, பரவலான வரவேற்பைப்பெற்றது.

இவரது சினிமா வாழ்க்கை 1991-ல் லண்டன் பி.பி.ஸி சானல்-4 தயாரித்து, அருந்ததி ராய் கதை வசனமெழுதிய ‘The Electric Moon’ என்ற ஆங்கிலப்படத்தில் தொடக்கம். இந்தப்படத்துக்கு 1991-ல் சிறந்த ஆங்கிலப்படத்துக்கான தேசிய விருது கிடைத்த்து. தமிழில் பாரதி, ஊருக்கு நூறுபேர், நண்பா...நண்பா!, ஒருத்தி, றெக்கை, மொட்டுக்கா, ஆட்டோகிராப், அன்னியன் போன்ற விருதுப்படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயக/நாயகிகளின் தாத்தாவாக முப்பதுக்கும் மேலான படங்களில் ‘தலையைக்காட்டியது’ தான் இவரது சோகம்! 2010-ல் நூற்றாண்டுவிழா கொண்டாடிய மறைந்த திரு. பி. கக்கனாக ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நடித்திருக்கிறார்.

எழுபத்திரண்டு வயதில் விளையாட்டாக எழுதத்தொடங்கி, உயிர்மை, அமுதசுரபி, தீராநதியில் இவர் எழுதிய கட்டுரைகள் ’பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ’மேலும் புத்தகங்கள் எழுதி தமிழ் வாசகர்களை துன்புறுத்த மாட்டேன்’ என்று இவர் கூறும் உறுதிமொழியை நாம் நம்பலாம்!


oooo0000oooo----

இதை நீங்கள் பார்ப்பீர்களென்ற நம்பிக்கையில்,

பாரதி மணி


நீங்கள் கொடுத்தவற்றை உங்கள் கட்டுரையில் இணைத்துள்ளேன் (விக்கி நடைக்கெற்ற சிறு சிறு மாற்றங்களுடன்). :உங்கள் புகைப்படத்தை எனக்கு ஈ மெயிலில் (sodabottle@gmail.com) அனுப்புங்கள், நான் கட்டுரையில் இணைத்து விடுகிறேன். (இதை உங்களுக்கு மின்னஞ்சலாகவும் அனுப்பியுள்ளேன்)--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 21 மார்ச் 2011 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் குறித்த கட்டுரைகளில் மற்றவர்களுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து பங்களிப்பதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன்! சூர்ய பிரகாசு.ச.அ. 18:00, 26 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

எழுத்திலக்கணம்தொகு

தமிழில் கர மெய்யின் பின்னர் கரம் வராது என்பது இலக்கணம் அல்லவா? கட்டுரைகளில் - முக்கியமாக அவற்றின் தலைப்புக்களில் - இதனைக் கவனிக்க வேண்டுமென நினைக்கிறேன்.--பாஹிம் 15:39, 31 மார்ச் 2011 (UTC)

ஆம், டகரம் தொடரும் இடங்களில் ’ண’கரம் வரவேண்டும். ஆனால் பிறமொழிப் பெயர்களின் எழுத்துக்கூட்டல்களில் பெரும்பாலும் இதுபோன்ற இலக்கண விதிகளை அவ்வளவு கண்டிப்பாக கடைப்பிடிப்பதில்லை. (இது போன்ற எழுத்துக்கூட்டல்களில் ஒலிப்பு ஒத்துவந்தால், இருக்கட்டும் என விட்டுவிடலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து) --சோடாபாட்டில்உரையாடுக 15:54, 31 மார்ச் 2011 (UTC)


இட்லிக்கடைதொகு

ஐயா சோடாபொத்தல் ஏன் எனது கடை விளம்பரத்தை மட்டும் நீக்கிவிட்டீர்கள்? இட்லி கடை விளம்பரம் போடலாம், எனது கொத்துரொட்டி கடை விளம்பரம் போடா முடியாதா? இது என்ன ஞாயம்?

காண்க பேச்சு:முருகன் இட்லி கடை--சோடாபாட்டில்உரையாடுக 08:16, 1 ஏப்ரல் 2011 (UTC)
  இட்லி கடை விளம்பர பதக்கம்
இட்லி கடை விளப்பரம் பேச்சில் வாதிட்ட சோடாபொத்தல் இப்பதக்கத்தை வழங்குகிறேன்! -பயனர்:மொஹமட்
இந்த நக்கல் விடும் வேகத்தை கொஞ்சம் கட்டுரையாக்கத்தில் காட்டினால் நன்றாக இருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 09:05, 1 ஏப்ரல் 2011 (UTC)
இந்த பதக்கம் நக்கலாக வழங்கப்பட்டது என்றபோதிலும், எதிர் விமர்சனங்களின் போது அதனை நிதானமாக எதிர்கொள்ளும் உங்கள் ஆற்றலுக்கான பதக்கமாக ஏற்றுக்கொள்ளவும். நன்றி! - மொஹமட்

விக்கிப்பீடியர் அறிமுகம் தொடர் வேண்டுகோள்தொகு

சோடாபாட்டில், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட மீண்டும்.... மீண்டும்...வேண்டுகிறேன். தங்கள் அறிமுகத்திற்குப் பின்புதான் ஆஸ்திரேலியாவின் கனக. சிறிதரன் தன்னை அறிமுகப்படுத்துவேன் என்பதால் தங்களைப் பற்றி உடனே எழுதுங்கள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:13, 2 ஏப்ரல் 2011 (UTC)

ஆகா தப்ப முடியவில்லையே - விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சோடாபாட்டில்--சோடாபாட்டில்உரையாடுக 07:20, 6 ஏப்ரல் 2011 (UTC)
விக்கிப்பீடியர் அறிமுகத்தில் தங்கள் குறிப்பைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. தங்கள் அழகான புகைப்படம் ஒன்றையும் இணைப்பீர்கள் என்பது என் நம்பிக்கை. முதல் பக்கத்தில் எதிர்பார்த்திருப்பேன். தங்களைப் போலவே ஏனைய பயனர்களும் அறிமுகமாக வேண்டுமென்பது என் அவா. --P.M.Puniyameen 07:29, 6 ஏப்ரல் 2011 (UTC)

பலிஜாதொகு

உண்மையில் கன்னட நாயுடு என்று சாதியும் இல்லை. பலிஜா சமூக மக்களை நாயுடு என்றும் நாயக்கர் என்றும் அழைப்பர். இவர்களில் பெரும்பான்மையானோர் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகவும் கொங்கு நாட்டில் இருக்கும் உட்பிரிவினர் கன்னடத்தையும் தாய் மொழியாக கொண்டுள்ளனர். கன்னட நாயுடு கட்டுரையில் வரும் குறிப்புகள் பலிஜா கட்டுரையில் அடங்கியுள்ளது

மிக்க நன்றி!

தெரிந்து கொள்ளாத பயனர்தொகு

பலரும் கூறியும் விதிமுறைகளைத் தொடர்ந்து மீறிக் கொண்டிருக்கும் பயனர் விஜயகுமாரைச் சிறிது நேரம் தடைப்பதிகை செய்தால் என்ன ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:37, 6 ஏப்ரல் 2011 (UTC)

யோசித்துக் கொண்டிருக்கிறேன். தடை என்பது இறுதிகட்ட செயலாக இருக்க வேண்டும். ஒரு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். மீறினால் சில மணிநேரம் தடை செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:39, 6 ஏப்ரல் 2011 (UTC)
இறுதி எச்சரிக்கைக்குப் பின் பங்களிப்புகளை நிறுத்தியுள்ளார்--சோடாபாட்டில்உரையாடுக 07:18, 6 ஏப்ரல் 2011 (UTC)

Scottish surnamesதொகு

ஆங்கில விக்கியில் பல இனத்தவர்களின் பெயர்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. தமிழ்ப் பெயர்கள் பற்றிய கட்டுரைகளை நிக்கியது பற்றி விளக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 17:44, 8 ஏப்ரல் 2011 (UTC)

ஆம் இதே கேள்வி என்னிடமும் உள்ளது. இடப்பட்ட தமிழ்ப் பெயர்கள் பட்டியல் வடிவிலேயே இடப்பட்டுள்ளன. இவ்வாறான பெயர் பட்டியல்கள் ஏனைய விக்கிகளிலும் நிறையவே உள்ளன. அவ்வாறான பட்டியல்கள் கலைக்கழஞ்சியங்களில் இடம்பெறுதல் எந்த வகையில் பொறுத்தமற்றதாகும்? அறியத்தரவும். (என்னிடம் உள்ள கலைக்கழஞ்சிய நூல்களிலும் பெயர் பட்டியல்கள் உள்ளன.) நன்றி! --HK Arun 18:05, 8 ஏப்ரல் 2011 (UTC)

ஆங்கில விக்கியில் உள்ள பெயர்க்கட்டுரைகள் இரு வகைப்படும் - 1) பெயர் வரலாற்று கட்டுரைகள் - எப்படி உருவானவை, காரணம், சொற்பிறப்பியல் போன்றவை. நீங்கள் குறிப்பிட்டுள்ள scottish surnames கட்டுரை இத்தகையதே 2) list of common names கட்டுரைகள் - இவை கடும் சர்ச்சைக்குள்ளானவை, பல தொகுப்பு போர்களும், நீக்கல் விவாதங்களும் இவற்றால் நடந்துள்ளன. பொதுவாக எது common என்பது பல நாடுகளில் பிறப்புப் பதிவு ஆவணங்களில் இருந்து எடுக்கப்படும் frequency list களில் இருந்து உருவானவை. இவையல்லாத நாடுகளின் பட்டியல்கள் நீக்கப்பட்டுவிடும்.
இங்கு தமிழ் விக்கியில் இருந்த பட்டியல்கள் இரண்டும் இவ்விரு வகைகளிலும் சேரா - tamil baby names இணையதளங்களிலிருந்து படியெடுத்து இடப்பட்ட பட்டியல்கள். தமிழ்ப்பெயர்களுக்கு மேற்சொன்னவாறு இருந்தால் (ஊர்களுக்கு செய்யப்பட்டுள்ளது, ஆனால் நான் அறிந்தவரை ஆள் பெயர்களுக்கு யாரும் ஆய்வு செய்தது போலத் தெரியவில்லை), கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றார் போல இருக்கும். ஆனால் இதுபோன்ற தொடர்பில்லாத ஒரு பெயர் பட்டியல் ஒரு கலைக்களஞ்சியத்தில் இருக்கத் தகுதியானதன்று என்பது என் கருத்து. இது போன்ற பட்டியல்கள் ஆங்கில விக்கியின் en:NOTDIR பரிந்துரையின் கீழ் வரும் என்பதும் என் கருத்து. --சோடாபாட்டில்உரையாடுக 18:16, 8 ஏப்ரல் 2011 (UTC)
(இரு பயனர்களிடையே மாற்று கருத்து உள்ளதால் அவற்றை மீள்வித்து விடுகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 18:16, 8 ஏப்ரல் 2011 (UTC)

சோடாபாட்டில், என்னால் இரண்டு பெயர் பட்டியல்கள் இடப்பட்டுள்ளன. நான் அதுவோ இது என்று நினைத்தேன். ஆனால் அவைகள் உள்ளன. அதுவும் ஆண், பெண் பெயர் பட்டியல்கள் தான். பார்க்க: ஆண் தமிழ்ப் பெயர்கள், பெண் தமிழ்ப் பெயர்கள், இவற்றை நான் எங்கும் படியெடுத்துப் போடவில்லை. அதேவேளை இணையத்தளங்களுக்கு வெளியிணைப்புகளும் வழங்கியுள்ளேன். பேச்சு பக்கத்தில் உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. (இங்கே வேறு பட்டியல்களும் இருப்பதை தற்போது தான் பார்க்கிறேன்.) நான் 2008 இட்ட பட்டியல்கள் இவை. (சுந்தரின் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் பரிந்துரை நடந்துக்கொண்ட வேளை அது) --HK Arun 18:51, 8 ஏப்ரல் 2011 (UTC)

ஒன்றிணைப்பு வார்ப்புருவை இட்டுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 19:08, 8 ஏப்ரல் 2011 (UTC)


தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்தொகு

மோகன்,

நீங்கள் இந்திய மக்கள்தொகைப் பரம்பல் கட்டுரையில் சேர்த்திருக்கும் தமிழக மக்கள்தொகைத் தரவுகளை தனியே ஒரு கட்டுரையில் சேர்க்கலாம் என எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல் என்ற கட்டுரையை உருவாக்கி அவற்றை இணைக்க வேண்டுகிறேன் (நானே உருவாக்கினால், உருவாக்கியவர் என பெயர் என வந்து விடும், எனவெ உருவாக்கிய நீங்களே நகர்த்திவிட வேண்டுகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 10:13, 8 ஏப்ரல் 2011 (UTC) தங்கள் கூரியபடி(தமிழ்நாட்டின் மக்கள்தொகை) தனியாக ஓரு கட்டுரையை உருவாக்கி விட்டேன் மிக்க நன்றி சோடாபாட்டில்.

நன்றி மோகன்--சோடாபாட்டில்உரையாடுக 19:11, 8 ஏப்ரல் 2011 (UTC)

முதற்பக்க அறிமுகம்- வாழ்த்துக்கள்தொகு

  • அப்பாடா! சோடாபாட்டில் ஒரு வழியாக முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகத்துக்குத் தகவல் தந்துட்டார். வாழ்த்துக்கள். ஆமாம். அங்கே உங்க படத்தைக் காணோமே...? முகம் காட்ட மறுப்பது ஏன்? (எனக்கு தங்களைத் தெரியும். மற்ற விக்கிப்பீடியர்களுக்கு உங்க முகத்தைக் காட்டி விடுங்களேன்...இல்லை இதற்கு ஏதாவது காரணமிருக்கா?)--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:39, 14 ஏப்ரல் 2011 (UTC)
கூச்சம் தான் (கண்டிப்பா தன்னடக்கம் இல்லை :-))--சோடாபாட்டில்உரையாடுக 17:43, 14 ஏப்ரல் 2011 (UTC)

சோடாபாட்டில் வாழ்த்துக்கள். ஆயினும் என்ன. உங்கள் அறிமுகத்தில் தங்கள் ஊர் மட்டுந்தான் புதிதாய் அறிந்தது. தங்கள் துறை, பணிநிலை என்பவற்றை வெளியிடக்கூடாதா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:27, 14 ஏப்ரல் 2011 (UTC)

  • சோடாபாட்டில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் சிறப்பிடம் பெறும் உங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன். அவ்வப்போது எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் விடாமுயற்சியோடு தொடர்ந்து செயலாற்றும் நீங்கள் முதல்பக்க அறிமுகத்தில் தோன்றியது கண்டு மிக்க மகிழ்ச்சி! தங்கள் பணி மேலும் உயர்க!--பவுல்-Paul 00:49, 15 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி சஞ்சீவி, பவுல்.
சஞ்சீவி, - பெரிய ரகசியமெல்லாம் இல்லை :-). தேனியாரைப் போன்ற பல விக்கியர்கள் என்னை நேரில் கண்டுள்ளார்கள். ஆனால் ஆங்கில விக்கியின் அடையாளமின்மைப் பண்பாட்டில் ஊறியுள்ள எனக்கு இன்னும் பொதுவில் பெயர், தகவல்களை வெளிப்படுத்துவதில் ஒரு இனம்புரியாத தயக்கம் உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 03:13, 15 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துக்கள் சோடாபாட்டில். உங்கள் புகைப்படத்தை "கடற்கொள்ளையற் வரலாறு" புத்தகத்தில் பார்த்துள்ளேன். இரவி மூலம் உங்கள் தொழில் பற்றியும் கொஞ்சம் தெரியும். தொலைப்பேசி மூலம் குரலும் கேட்டாயிற்று. நேரில் பார்ப்பது மட்டுமே பாக்கி :)--அராபத்* عرفات 05:34, 15 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி அராபத். அந்தப் படத்தைக் கொடுப்பதற்கே எனக்கு பெருந்தயக்கம். ரொம்பக் கட்டாயப்படுத்தி வாங்கி விட்டார்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:40, 15 ஏப்ரல் 2011 (UTC)

சோடாபாட்டில், ஆங்கில விக்கியில் பெரும் பங்கு அளித்ததும் அல்லாமல், தமிழ் விக்கியில் அளப்பதற்கு அரிய ஆக்கங்கள் தந்துகொண்டிருக்கும் உங்கள் அறிமுகத்தைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி!! நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!! உங்கள் தொடர்ந்த பங்களிப்புகள் தமிழ் விக்கிக்கு மிகவும் தேவை!! --செல்வா 18:57, 15 ஏப்ரல் 2011 (UTC)

விக்கி முகப்பில் தங்கள் அறிமுகம் பார்த்தேன். உண்மையிலேயே மகிழ்ச்சி. சிலதினங்கள் நான் ஊரில் இருக்கவில்லை. வந்ததும் முதல் வேலையாக தங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் தங்களது புகைப்படம் இடம்பெறாமை பெரிய குறையாகவே எனக்குப்பட்டது. நீங்களும் சில சிரேஸ்ட விக்கிப்பீடியர்களும் தமிழ் விக்கியை கட்டியெழுப்ப பெரிதும் பாடுபட்டு வருகின்றீர்கள். இந்த வகையில் நீங்கள் எமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள். புகைப்படம் இடம்பெறாமைக்கு தங்களால் தெரிவிக்கப்பட்ட காரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வேறு யாதாவது காரணம் இருப்பின் புகைப்படத்தை வெளியிடாமை நியாயமானதே.
தம்பி சோடா, தங்கள் புகைப்படத்தை வெளியிடாமையினால் எதிர்காலத்தில் சிரேஸ்ட விக்கிப்பீடியர்கள் தங்கள் பற்றிய குறிப்பை முன்வைத்தாலும் அவர்களும் இதனையே காரணம் காட்டி தங்கள் புகைப்படங்களையும் வெளியிடமாட்டார்கள். விக்கிப்பீடியர் அறிமுகத்தில் இவ்வாறு இடம்பெறுவது நல்லதல்ல என்றே நான் கருதுகின்றேன். தங்களைப் பற்றி தேனீ உட்பட இந்தியாவிலுள்ள விக்கிப்பீடியர்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், தங்கள் முகத்தை என்னால் கற்பனையால்கூட நினைத்துக் பார்க்க முடியவில்லை. விக்கியில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகிவிட்ட பின்பு எமக்குள் கூச்சப்பட என்ன இருக்கின்றது. எனவே இந்த அண்ணனின் அன்புக் கட்ளையை ஏற்றுக்கொண்டு தங்கள் புகைப்படத்தை இணைப்பீர்கள் என உரிமையுடன் எதிர்பார்க்கின்றேன். --P.M.Puniyameen 06:01, 17 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி செல்வா, புன்னியாமீன். (புன்னியாமீன், புகைப்படம் குறித்த ஒரு விளக்கத்தை உங்களுக்கு அஞ்சலில் தெரிவித்துள்ளேன் :-))--சோடாபாட்டில்உரையாடுக 14:45, 17 ஏப்ரல் 2011 (UTC)

தங்கள் படத்தை விக்கியில் வெளியிடுவது குறித்து தங்கள் கருத்தை மடல்மூலம் அறிந்து கொண்டேன். தங்கள் நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்டு என் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன் சோடாபாட்டில். நன்றி. வாழ்த்துகள் --P.M.Puniyameen 15:41, 17 ஏப்ரல் 2011 (UTC)

பாப்பரசர் வார்ப்புரு விரிவுபடுத்தல்தொகு

  • சோடாபாட்டில், அருள்கூர்ந்து பேதுரு (திருத்தந்தை, லைனஸ் (திருத்தந்தை) என்னும் பதிவுகளைப் பாருங்கள். அங்கே "பாப்பரசர்" என்னும் வார்ப்புருவில் "இறப்பு", "குறிப்புகள்" என்று இரு வரிகள் சேர்க்க வேண்டும். சேர்த்துத் தருவீர்களா? 265 திருத்தந்தையர் பற்றிய கட்டுரைகளையும் பதிவு செய்ய ஆவல்.:)--பவுல்-Paul 18:36, 20 ஏப்ரல் 2011 (UTC)
பவுல், அந்த தகவற்சட்டத்தில் “இறப்பு”, “அடிக்குறிப்பு” என இரு தலைப்புகள் முன்னரே வார்ப்புரு:தகவற்சட்டம் பாப்பரசர் இல் உள்ளன. பயன்படுத்தப்படாததால் வெளியில் தெரியவில்லை. பெதுரு கட்டுரையில் இரண்டையும் சோதனை முறையில் சேர்த்துள்ளேன். தற்போது அடிக்குறிப்பு என்பது பிற தலைப்புகளைப் போலனறி; இறுதியில் வருவது போல அமைந்துள்ளது. இது தவிர “குறிப்புகள்” என்ற தலைப்பும் வேண்டுமெனில் சொல்லுங்கள், அதனையும் சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:10, 21 ஏப்ரல் 2011 (UTC)

கிறித்தவம் சார்ந்த புது பகுப்புகள் தேவைதொகு

  • சோடாபாட்டில், கடந்த சில நாள்களாக நீங்கள் ஒரு சில கட்டுரைகளை "கிறித்தவம்" என்னும் பகுப்பிலிருந்து நீக்குவதைக் காண்கின்றேன். அக்கட்டுரைகள் கிறித்தவம் சார்ந்தவையே. என்றாலும், ஒருவேளை "கிறித்தவம்" என்னும் பகுப்பு மிக விரிந்து போவதாக நீங்கள் எண்ணினால் சில துணைப் பகுப்புகள் தேவைப்படும். தற்போது இரண்டு மட்டும் முன்மொழிகின்றேன். "கிறித்தவ பக்தி முயற்சிகள்" என்பதன் கீழ் சிலுவைப் பாதை வரலாம்; "கிறித்தவ வழிபாடு" என்பதும் பயனுள்ளதாக இருக்கும். இவை ஆங்கிலத்தில் முறையே "Christian Devotions" "Christian Worship" என்று வரும். அப்போது சில குழப்பங்களைத் தவிர்க்கலாம். நன்றி!--பவுல்-Paul 05:49, 22 ஏப்ரல் 2011 (UTC)
பவுல், கிறித்துவம் என்பது மேல் நிலைபகுப்பு; விவிலியம், இயேசு, கிறித்துவ திருநாட்கள் ஆகிய பகுப்புகள் அதன் உள்பகுப்புகள். எனவே ஒரு கட்டுரை இயேசு அல்லது விவியல பகுப்பில் இணைக்கப்பட்டாலே அது கிறித்துவம் பகுப்பிலும் இணைந்து விடும். உள்பகுப்பில் உள்ளதை மீண்டும் மேல்நிலை பகுப்பில் இணைப்பது ஒரு வித classification redundancy. இயேசு பகுப்பில் உள்ள கட்டுரை, தானாகவே “கிறித்துவம்” பகுப்பில் இருக்கும் என்பதால், மேல் நிலைப் பகுப்புகளை நீக்கி வருகிறேன். (சில இடங்களில் ”சமயங்கள்” பகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது, இது கிறித்துவம் பகுப்பிற்கும் மேல்நிலைப் பகுப்பாகும்).
புதிய பகுப்புகளை உருவாக்காமல் நீங்கள் கட்டுரையில் இணையுங்கள் (சிவப்பு இணைப்பாகத் தென்படும்), நான் அவற்றை உருவாக்கி பகுப்பு மரத்தில் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:55, 22 ஏப்ரல் 2011 (UTC)
  • தெளிவான விளக்கத்திற்கு நன்றி. புதிய பகுப்புகள் தேவை என்று தோன்றினால் இனிமேல் நானாகவே அவற்றை உருவாக்குகிறேன். வணக்கம்.--பவுல்-Paul 06:14, 22 ஏப்ரல் 2011 (UTC)

வார்ப்புரு- உதவிதொகு

தேனி மாவட்டத்திலிருக்கும் பேரூராட்சிகள் குறித்த கட்டுரைகளின் மேல்பகுதியில் நான் பேரூராட்சிகள் குறித்த தகவல்களடங்கிய வார்ப்புரு சேர்த்திருந்தேன். முன்பு சரியாக இருந்த வார்ப்புருவில் தற்போது ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது. வார்ப்புருத் தகவல்கள் தெரியாமல் அதன் அளவும் மாற்றமாகியுள்ளது. இதைச் சரிசெய்து உதவிட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:37, 2 மே 2011 (UTC)

இது குறித்து மாகிரைத் தான் கேட்க வேண்டும்.--Kanags \உரையாடுக 03:44, 2 மே 2011 (UTC)
கட்டுரைகளில் பரப்பளவு தனியே எண்களைக் கொடுத்தால் போதுமானது. அலகும் சேர்த்துக் கொடுக்கும் போது இப்பிரச்சினை எழுகிறது. உ+ம்: பரப்பளவு = 7 என வரவேண்டும். பரப்பளவு = 7 சது. கி மீ எனக் குறிக்கக்கூடாது. அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 03:58, 2 மே 2011 (UTC)
பரப்பளவு எனும் பகுதியில் சதுர கி.மீ மட்டுமில்லை... அந்த இடத்தில் எண்கள் இருந்தாலும் சரியாக இல்லை. அலகு மற்றும் எண்களை நீக்கிவிட்டால் சரியாக இருக்கிறது. எண்கள் இல்லையென்றால் வார்ப்புருவில் பரப்பளவு தேவையில்லையே...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:25, 2 மே 2011 (UTC)
இது கொஞ்சம் சிக்கலான பெரிய வார்ப்புரு. ஒரு மூன்று மாதங்களாக இந்த வழுவினைக் களைய முயன்று வருகிறேன். இன்னும் முடியவில்லை. மாகிரிடம் உதவி கேட்டு சரி செய்ய முயலுகிறேன். அதுவரை பரப்பளவினை காலியாக விட்டு வைத்திருக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:31, 2 மே 2011 (UTC)
அனுமந்தன்பட்டி கட்டுரையில் நான் செய்த மாற்றத்தைப் பாருங்கள். பரப்பளவுக்கு வெறுமனே எண்ணைத் தந்தால் போதும்.--Kanags \உரையாடுக 09:39, 2 மே 2011 (UTC)

சிக்கலான இந்த வார்ப்புருவைக் கட்டுரைகளில் சேர்க்கும்போது கவனிக்க வேண்டியவை: மக்கள் தொகை = 9436 என இருக்க வேண்டும். மக்கள் தொகை = 9,436 என எழுதக்கூடாது.--Kanags \உரையாடுக 09:48, 2 மே 2011 (UTC)

Return to the user page of "Sodabottle/தொகுப்பு05".