Ulikininpin
வாருங்கள், Ulikininpin!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
படிமங்கள்
தொகுவணக்கம், நீங்கள் இங்கு பதிவேற்றிய "தமிழ்க் கொலை"யுடன் கூடிய படிமங்கள் அனைத்தும் விரைவில் நீக்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து இவை போன்றவற்றை இங்கு பதிவேற்றாதீர்கள். விக்கியில் உள்ள கட்டுரைகளில் இணைக்கத்தக்கதாக உள்ள படிமங்கள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படும். புரிதலுக்கு நன்றி.--Kanags \பேச்சு 00:14, 20 செப்டெம்பர் 2009 (UTC)
மணல்தொட்டி
தொகுவணக்கம், மணல்தொட்டி புதிய பயனர்கள் பயிற்சி பெறுவதற்காக உள்ளது. இதனை நீங்கள் மட்டும் பாவிப்பது அவ்வளவு நல்லதல்ல. இன்னமும் விக்கிப்பீடியாவில் நீங்கள் பயிற்சி பெற இருக்கிறீர்களானால், உங்களுக்காக உங்கள் பயனர் பக்கத்தில் உங்களுக்கென தனியாக ஒரு மணல்தொட்டியை உருவாக்கியுள்ளேன். அங்கு உங்கள் பயிற்சியைப் பெறலாம். பார்க்க: பயனர்:Ulikininpin/மணல்தொட்டி. ஆனாலும் என்ன காரணத்துக்காக இங்கு எழுதுகிறீர்கள் என விளக்குவீர்களா? உங்கள் எழுத்துக்கள் எதுவும் விக்கிப்பீடியாவில் வெளியிடத் தகுந்தவையாக இல்லை. இப்படியான உங்கள் எழுத்துக்களை நீங்கள் தனிக்கட்டுரைகளாக விக்கியில் வெளியிடுவீர்கள் என்றால் அவை அழிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி.--Kanags \பேச்சு 00:44, 3 அக்டோபர் 2009 (UTC)
உரலுக்கு தலை வைத்தல்
தொகுஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். எந்த ஒரு கருத்திற்கும் எதிர் கருத்தும் இருக்கலாம். மாற்றுக் கருத்தும் இருக்கலாம்.
அது அவரவர் சிந்தனையையும் எண்ணக்கருவையும் பொருத்தது.
ஆனால் ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் மொழியை ஒரு தனிமனிதன் தன் மனகழிசல்களால் மாற்ற முனையும் மகா மடத்தனத்திற்கு இடமளிப்பு இங்கே நடந்துக் கொண்டிருக்கிறது. இதற்கான கழிவறையாக விக்கி தளம் இயங்கிக்கொண்டிருக்கின்றதா?
ஒரு மொழி குறித்த ஒரு சிலரின் எண்ணக்கரு பல புதிய சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன. புரட்சியையும் உண்டுபன்னுகின்றன. ஆனால் இங்கே இந்தக் கட்டுரை எந்தவித நன்னோக்கும் அற்று ஏதோ ஒரு உள்நோக்குடன் தன் மனகழிவுகளை கொட்டுவது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறான மனநலக் குறைவானோரின் எண்ணக்கழிவுகளை விக்கி நிர்வாகம் அநுமதிப்பது வியப்படைய வைக்கிறது. விக்கி நிர்வாகத்தில் ஒருவர் மட்டும் தான் இருக்கின்றாரா? மற்றோரின் பதில்கள் எங்கே? உரலுக்கு ஒருவர் மட்டும் தான் தலை கொடுக்க வேண்டுமா?
குறிப்பு: இங்கே நிச்சயமாக கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. இது இக்கட்டுரை எழுதியவருக்கு பொருத்தமான வரிகள். எழுதியவர் பதிலளிப்பாரானால் மீள்பதில் நிச்சயம் கொடுக்கப்படும்.--−முன்நிற்கும் கருத்து 58.153.51.23 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஒருவர் தனது பயனர் பக்கத்தில் எழுதுவதற்கு ஏதும் கட்டுப்பாடுகள் உள்ளதாக எனக்குத் தெரிந்தவரையில் எதுவும் இல்லை என நினைக்கிறேன். ஆனாலும் விக்கியில் இது குறித்து ஏதும் எழுதப்பட்டுள்ளதா என ஆங்கில விக்கியில் தேட வேண்டும். அறிந்தவர்கள் குறிப்பிட்டால் நல்லது.--Kanags \பேச்சு 01:42, 9 அக்டோபர் 2009 (UTC)
தகவல் பிழையான, காப்புரிமை தரப்படாத படங்கள் நீக்கப்படும்
தொகுஊடுருவல்
தொகுபயனர் பக்கம் என்பதே, ஒரு பயனர் தன்னைப்பற்றிய குறிப்புக்களை இட்டு வைத்துக்கொள்வதற்கான எந்த கட்டுப்பாடுகளும் அற்ற இடமளிப்பு. அதனை தவறான வழியில் பயன்படுத்துவது விக்கி நிர்வாகக் கொள்கைக்கு சரியானதா என்பதை விக்கி நிர்வாகத்தினரிடமே முறையிட வேண்டும்.
விக்கிப்பீடியாவில் இப்படியான ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது என நன்கு அறிந்த ஒருவரே, பயனர் பக்கத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றார். இது ஒரு வகை ஊடுருவல் நடவடிக்கை.
இது பயனர் பக்கம் என்றாலும் கூகிள் வழி தேடுவோர்க்கு "தமிழ் மொழி" தொடர்பில் பிழையான தகவல்கள் சென்றடையும் வாய்ப்பாகவும் அமையலாம். இக்கட்டுரையாளரை ஒத்த நோக்கம் கொண்ட தமிழ் மொழி சீர்குழைப்பாளர்களுக்கு இது அவலாகவும் மாறிவிடலாம். ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தமிழை எழுதலாம் என்பதற்கு தமிழ் விக்கிப்பீடியா அனுமதிப்பதின் அபாயத்தை “விக்கி – தமிழ் தலிபானியம்” பேசுவோரிடம் இது குறித்து பேசலாமே! --218.250.160.75 17:58, 10 அக்டோபர் 2009 (UTC)
விக்கிப்பீடியா பயனர்பக்கம் - வழிகாட்டல்கள்
தொகு- பயனர் பக்கம் குறித்த விக்கிப்பீடியா வழிகாட்டல்கள் en:Wikipedia:User page பக்கத்தில் தரப்பட்டுள்ளன. இதன்படி,
- " விக்கிப்பீடியா, அதன் திட்டமான கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக அதன் பங்களிப்பாளர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் வசதிக்காகவே பயனர் பக்கங்களை வழங்குகிறது. பொதுவாக, விக்கிப்பீடியாவுக்குத் தொடர்பற்ற பெருமளவு உள்ளடக்கங்களைப் பயனர் பக்கத்தில் எழுதுவதைத் தவிர்த்தல் வேண்டும். விக்கிப்பீடியா ஒரு இணையத்தளங்களுக்கு இடம்தரும் சேவை அல்ல. எனவே உங்கள் பயனர் பக்கம் ஒரு தனிப்பட்ட இணையதளம் அல்ல. உங்கள் பயனர் பக்கம் ஒரு விக்கிப்பீடியராக உங்களைப் பற்றியதே. அதனால் உங்கள் பயனர் பகுதியில் உள்ள பக்கங்கள் இத்திட்டத்துக்கு உதவும் உங்கள் பங்களிப்பின் ஒரு பகுதியாகவே இருத்தல் வேண்டும். அத்துடன், இட்திட்டத்துக்கு மதிப்புக்குறைவை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைப் பயனர் பக்கத்தில் இடக்கூடாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்."
- இதிலிருந்து இப் பயனர் பக்கத்தில் இடப்படுபவை விக்கிப்பீடியாவின் வழிகாட்டல்களுக்கு எதிரானவை என்பது வெளிப்படை. இவ்வழிகாட்டல்கள் பற்றித் தெரியாமல் தான் இப்பயன்ர் இவ்வாறு எழுதுகிறார் என எண்ணுகிறேன் எனவே இனிமேலாவது இவ் வழிகாட்டல்களுக்கு முரணான உள்ளடக்கங்கள் முழுவதையும் இப்பயனர் நீக்கிவிடுவார் என எதிர்பார்க்கிறேன். மயூரநாதன் 19:59, 10 அக்டோபர் 2009 (UTC)
- மயூரநாதன், அந்த விளக்கங்களுக்கு நன்றி. இப்பயனர் தனது பக்கத்தில் உள்ளவற்றை விரைவில் நீக்குவார் என எதிர்பார்க்கிறேன். அவர் ஒரு தனிப்பட்ட வலைத்தளம் ஒன்றைத் திறந்து தனது கருத்துக்களை முன் வைக்குமாறு அவரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அடையாளம் காட்டாத பயனர்களுக்கு நன்றிகள்.--Kanags \பேச்சு 21:40, 10 அக்டோபர் 2009 (UTC)
- காப்புரிமை தரப்படாமல், கலைக்களஞ்சியத்துக்கு பொருத்தமற்ற படங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவர் திட்டமிட்டு அவதூறு தருமாறு தொகுக்கும் பக்கங்களை விக்கியில் நீக்குவது நன்று. எப்படி ஒருவர் வந்து ஆபாசமாக எழுதினால் பார்த்து விட்டு இருக்க முடியாதோ, அப்படியே.--Natkeeran 14:16, 11 அக்டோபர் 2009 (UTC)
- பயனர் பக்கத்தில் இப்போதுள்ள உள்ள உள்ளடக்கம் அனைத்தையும் நீக்குவதற்கு அவருக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.--Kanags \பேச்சு 11:46, 13 அக்டோபர் 2009 (UTC)
'Ulikininpin' பயனர் பக்கத்தில் இப்போதுல்ல அனய்த்துப் பக்கத்தய்யும் னீக்குவதர்க்கு, முலு உரிமய் அனய்வருக்கும் எப்போதும் உன்டு.
சிரிய அலவில் எலுத்துச் சீர்மய் செய்திட்ட பெரியாருக்கு, தொடக்கத்தில் பெரிய எதிர்ப்பு இருந்தது. பேரலவில் எலுத்துச் சீர்மய்யும், இலக்கனச் சீர்மய்யும் கொன்ட 'தமிலு மொலிக்கு', எல்லய்யட்ர எதிர்ப்பு எலுவது இயல்பானதுதான். எந்த ஒரு மொலியிலாவது சிரப்பு எலுத்தய் னீக்கிவிட்டு எலுத இயலுமா? என்ரு சிந்திப்பது னன்ரு. 'தமில்' மொலியில் ஓரலவுக்கு மொலிச்சீர்மய் சுலபமாக உல்லது என்ரு சொல்லலாம். சிக்கல் வரும் இடத்தில் புதியதாக சொல்லய் உருவாக்க வேன்டி வரும். புதிய சொல்லானது பலக்கத்துக்கு வந்த பின்னரே இயல்பானதாக ஆகும். எனது எலுத்தும், படவரய்வும் பொது உடமய் ஆகும். ""Ulikininpin""
உலகோர் அனய்வரும் அவரவர் பேச்சு மொலியிலுல்ல பொது எலுத்தய் மட்டுமே கொன்டு, பொருல் குலப்பம் இல்லாது, மிகமிகச் சுலபமான முரய்யில் 'தமிலு'வில் பேசவும் எலுதவும் வேன்டும், சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் 'உலகப் பொது எலுத்து பொது மொலி' என்னும் கட்டுரய்யின் னேரிய னோக்கமாகும். ""Ulikininpin""
பயனர் கணக்கு தடை எச்சரிக்கை
தொகுஉங்கள் எழுத்துச் சீர்மை நோக்கத்தை உங்கள் தனி வலைத்தளத்தில் மேற்கொள்ளலாம். ஒரு கலைக்களஞ்சியமான தமிழ் விக்கியில் தொடர்ந்து இம்முறையில் எழுதுவது விக்கி கொள்கைகளுக்கு ஏற்புடையது அல்ல. தயவு செய்து இந்த எழுத்து நடையைக் களைந்து விக்கிக்கு நல்ல முறையில் பங்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். இதே எழுத்து நடையில் நீங்கள் தொடர நேர்ந்தால் உங்கள் பயனர் கணக்கை முடக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம். நன்றி--ரவி 14:04, 14 அக்டோபர் 2009 (UTC)
- பயனர் உலிக்கினின்கின் அவர்களே, உங்கள் மொழி குறித்து மேலும் மேலும் விளக்கம் தந்து இந்தக் கலைக்களஞ்சியத்தை அசிங்கப்படுத்தி விடாதீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள அனைத்தும் நீக்கப்படுகிறது. தமிழில் முடிந்தால் ஏதாவது ஆக்கபூர்வமாகத் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 20:53, 14 அக்டோபர் 2009 (UTC)
May 2017
தொகுYou may be blocked from editing without further warning the next time you create an inappropriate page, as you did at கசடதப கட்ருக்கலாம் பாப்பா!. ☤சி.செந்தி☤ (உரையாடுக) 04:02, 15 மே 2017 (UTC)