வாருங்கள்!

வாருங்கள், Yuvaraj Poondiyan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:39, 26 ஏப்ரல் 2014 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Yuvaraj Poondiyan!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:39, 26 ஏப்ரல் 2014 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரைதொகு

வணக்கம், Yuvaraj Poondiyan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


கட்டுரைகளுக்கு விளம்பர இணைப்பு கொடுக்கக் கூடாது. மேலும் கட்டுரைகளுக்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள், முறையாக இணைக்கப்பட வேண்டும். இவற்றைப் பார்க்க: விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். --AntonTalk 07:43, 30 ஏப்ரல் 2014 (UTC)

விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இங்கு தகுந்த ஆதாரங்கள் தரப்பட வேண்டும். நபர்களைப் பற்றிய கட்டுரை தகுந்த மூலங்களிலிருந்து ஆதாரங்களைக் கொண்டு, கட்டுரை உபயோகமானது என எழுதப்பட வேண்டும். அதைவிடுத்து, வார்ப்புருக்களை நீக்கிக் கொண்டிருந்தால், குறித்த ஐ.பி. மற்றும் பயனர் தடை செய்யப்படலாம். --AntonTalk 17:22, 1 மே 2014 (UTC)
கட்டுரையின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, தொடர்ந்தும் வார்ப்புருக்களை நீக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் தடை செய்யப்படுவீர்கள். இது இறுதி எச்சரிக்கை. --AntonTalk 17:44, 1 மே 2014 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்!

  • நீங்கள் செய்த மாற்றத்தால் அட்டவணை எப்படி மாறிவிட்டது என்பதனைக் கவனியுங்கள். விக்கியில் மீளமை என்பது சாத்தியம் என்பதால் என்னால் திருத்த முடிந்தது. இப்போது அட்டவணை முன்புபோல உள்ளது. எந்த மாற்றம் செய்தாலும், அதனை 'முன்தோற்றத்தில்' பார்த்துவிட்டு பிறகு சேமிக்கவும். இதன்மூலம் மற்றவரின் உழைப்பு வீணாகாமல் இருக்கும்!
  • மேலும், இந்த குறிப்பிட்ட அட்டவணைக்கு, sortable என்பது தேவையற்றது.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:14, 7 மே 2014 (UTC)

மன்னிக்கவும்.

நான் விக்கியிற்கு புதியவன் என்பதால் ஒரு ஆர்வத்தில் வரைமுறைகள் அறியாமல் மாற்றங்களை செய்துவிட்டேன். இனி அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். --யுவராஜ் பூண்டியான்Talk 10:44, 7 மே 2014 (UTC)

புரிதலுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்...ஏதேனும் ஐயமெனில் எனது பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 7 மே 2014 (UTC)

தொடர்ந்து பங்களிக்கதொகு

தாங்கள் விக்கிப்பீடியாவில் நன்றாகப் பங்களித்துவருகிறீர்கள், இது பார்ராட்டுக்கு உரியது இவ்வாறே தொடர்ந்தும் பங்களித்து விக்கியை மேம்படுத்தி உதவ என் வாழ்த்துக்கள்!!!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:47, 10 மே 2014 (UTC)

ஷ்ரேயா கோஷல்தொகு

ஷ்ரேயா_கோஷல் என்பதை சுரேயா கோசல் என்று மாற்றி உள்ளீர்கள். இவ்வாறு செய்ய வேண்டாம். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் குறித்த பல்வேறு கருத்துப்பரிமாற்றம் நடந்துவருகிறது. சுரேயா என்று மாற்றுவது தவறாகவே உள்ளது. குறைந்தபட்சம் பெயர்களாவது மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:59, 13 மே 2014 (UTC)

மன்னிக்கவும். வடமொழி எழுத்துக்களை பயன்படுத்தாமல் என்னால் முடிந்தவரையில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்த அவ்வாறு மாற்றினேன். --யுவராஜ் பூண்டியான் (பேச்சு) 10:26, 13 மே 2014 (UTC)
மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் தேவையில்லை. மாற்றியமைக்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:31, 14 மே 2014 (UTC)

ஒரு வேண்டுகோள்தொகு

வணக்கம் Yuvaraj Poondiyan! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:49, 17 மே 2014 (UTC)

கண்டிப்பாக என்னால் முடிந்தவரையில் இத்திட்டத்தில் எனது பங்களிப்பினை செய்கிறேன்.
--யுவராஜ் பூண்டியான் (பேச்சு) 03:14, 17 மே 2014 (UTC)

  விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:08, 17 மே 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yuvaraj_Poondiyan&oldid=1879632" இருந்து மீள்விக்கப்பட்டது