வாருங்கள்!

வாருங்கள், Zero by zero, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!

நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

மேலும் காண்க:

-- Surya Prakash.S.A. (பேச்சு) 09:02, 3 திசம்பர் 2021 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை

தொகு
 
வணக்கம், Zero by zero!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 17:28, 21 சனவரி 2022 (UTC)Reply

ஐயா தங்கள் கூறியது போல விக்கிபீடியாவில் இடம் பெற தகுதியில்லாதவற்றை பார்த்தேன். திரு ஞான தேசிகன் சிவயோகி சிவகுமார் என்ற கட்டுரை 'சரிதை' வகையை சார்ந்தது. அவர் கடவுள் உணர்ந்த ஞானி மற்றும் குரு. அவரு‌க்கு உலகம் முழுக்க சீடர்கள் உள்ளனர்.

அவர் வாழ்க்கையில் செய்த செயல்கள் மற்றும் சாதனைகளை எழுதினேன். எல்லாவற்றுக்கும் மேற்கோள்கள் காட்டியுள்ளேன். உங்களுக்கான கேள்விகள்: 1. கட்டுரையில் எங்கே பிழை கண்டீர்? 2. கட்டுரையை முழுமையாக ஏன் நீக்கினீர்? பிழை உள்ள பகுதியை சுட்டி காட்டியிருக்கலாமே? Zero by zero (பேச்சு) 04:14, 22 சனவரி 2022 (UTC)Reply

மேற்கோள் இருந்தால் கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரையாகும் என்பதை எப்படி தீர்மானிப்பீர்? மேலேயுள்ள கலைக்களஞ்சியக் கட்டுரை என்பதில் மேலதிக விளக்கம் உள்ளது. --AntanO (பேச்சு) 05:30, 22 சனவரி 2022 (UTC)Reply
எங்கு பிழைத்தேன் என தங்கள் விவரிக்கவில்லை...

ஒரு வாழும் முக்கியமான மனிதரை பற்றி கட்டுரை எழுதாமா? கூடாதா? கூடாது என்றால் blp (biography of a living person) என்ற template ஏன் உள்ளது? நிங்கள் சரிதை எழுதிய அனுபவம் உள்ளதா? எனக்கு சொல்லி தாருங்கள் நான் கற்று கொள்ள தயார். Zero by zero (பேச்சு) 06:44, 22 சனவரி 2022 (UTC)Reply

January 2022

தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 17:28, 21 சனவரி 2022 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை

தொகு

தயவு செய்து குறைவான உள்ளடக்கத்துடன் புதியதாக கட்டுரையை பதிவேற்றம் செய்யாதீர்கள், அப்படி குறைவான உள்ளடக்கம் இருந்தால் கட்டுரை நீக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை தவிர்க்க உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

வணக்கம், Zero by zero!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 16:21, 24 சனவரி 2022 (UTC)Reply

நன்றி ஐயா Zero by zero (பேச்சு) 16:30, 24 சனவரி 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Zero_by_zero&oldid=3379181" இலிருந்து மீள்விக்கப்பட்டது