பருந்துப்பாறை

கேரளத்தின், இடுக்கி மாவட்ட சிற்றூர்

கிரம்பி அல்லது பருந்துப் பாறை (Parunthumpara) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது பீர்மேடு செல்லும் வழியில் வாகமண் அருகில் உள்ள ஒரு கண்ணுக்கினிய இடம் ஆகும். பருந்துப் பாறை பருந்தின் பாற என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து, சபரிமலை மகரஜோதி தெரியும். பருந்துப்பாறையில் உள்ள முக்கிய இடங்கள் தற்கொலை முனை மற்றும் தாகூர் தலை (கவிஞர் தாகூரின் வடிவத்தைக் கொண்ட ஒரு பாறை). அருகிலுள்ள சுற்றுலா தலம் தேக்கடி .

பருந்துப்பாறை
പരുന്തുംപാറ
சுற்றுலா தலம்
Tagore head at Parunthumpara
Tagore head at Parunthumpara
பருந்துப்பாறை is located in கேரளம்
பருந்துப்பாறை
பருந்துப்பாறை
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°33′13″N 77°02′09″E / 9.553482°N 77.035827°E / 9.553482; 77.035827
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் இடுக்கி மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுKL-37
அருகிலுள்ள நகரம்பீர்மேடு

பருந்துப்பாறை பீர்மேடு மற்றும் தேக்கடி ஆகியவற்றுக்கிடையே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது பருந்து மற்றும் பாறை என்னும் இரு சொற்களின் சேர்கையாகும். பருந்து போன்ற ஒரு பெரிய பகுதி இங்கு இருப்பதால் இது பருந்தும்பாறை என்று அழைக்கப்படுகிறது. இது பீர்மேட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும்,   தெக்கடியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும்,   தேசிய நெடுஞ்சாலை 220 இலிருந்து 3 கி.மீ. ( கோட்டயம் குமுளி சாலை) தொலைவிலும் உள்ளது. இந்த பகுதியானது பசுமையான வன நிலப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளை பறவை பார்வை பார்க்க ஏதுவான பகுதியாக உள்ளது. பருந்துப்பாறைக்கு, தேக்கடி மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகின்றனர். வானம் தெளிவாக இருந்தால், இங்குவருபவர்கள் சபரிமலை காடுகளின் காட்சியைக் காணலாம்.

கல்லாறு சந்திப்பில் இருந்து குறுகிய மலைச் சாலையின் வழியாக எளிதில் அணுகக்கூடியதாக இது உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் அதன் பரந்த புல்வெளிகளுக்காக தனித்துவமாக உள்ளது. நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விலகி இருக்க விரும்புபவர்கள் விடுமுறையைக கழிக்க குடுப்பத்துடன் இங்கு வருகின்றனர். பருந்தும்பாறை வார இறுதி நாட்களில் ஏராளமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

மாவட்டத்தின் சுற்றுலா வரைபடத்தில் இந்த இடம் இன்னும் சேர்க்கப்படவில்லை என்றாலும், இந்த இடம் வேறு எந்த மலைவாசஸ்தலங்களுக்கும் இளைத்ததில்லை.

இருப்பினும், செங்குத்தான மலைகள் பொறுப்பற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தலானவை. சில ஆழமான சரிவுகள் உள்ளன, என்பதால் பருந்தும்பாறையைச் சுற்றிப் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுவானது பருந்தும்பாறையை ஒரு மலைவாசஸ்தலமாகவும், குமரகமில் இருந்து தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லும் இடமாகவும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தை அடைவதற்கு இரண்டு முக்கிய சாலைகள் உள்ளன அவை நெடும்பாசேரி முதல் மூணார் மற்றும் குமரகம் முதல் தேக்கடி வரை செல்லும் பாதையாகும். இந்த முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இடையில், பார்க்க வேண்டிய சில இடங்களில் பருந்தும்பாறையும் ஒன்று என அடையாளம் காணப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் உறைவிடம் மற்றும் உண்டுறை விடுதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

புல்வெளிகளில் வாகனங்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தரிப்பிடப் பகுதியை ஒதுக்குவதற்கும், ஒரு தடுப்புச்சுவரைக் கட்டுவதற்கும் ஒரு திட்டம் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

[1] பருந்தும்பாறையிலிருந்து ஒரு பார்வை
பருந்துப்பாறையிலிருந்து ஒரு அகலப்பரப்புக் பனோரமா காட்சி [2]
பருந்தும்பராவிலிருந்து ஒரு அகலப்பரப்புக் காட்சி [3]

சபரிமலை யாத்ரீகர்கள் மகர ஒளியைக் காண இந்த பகுதிக்கு வருகை தருகிறார்கள், இது புனித யாத்திரை காலத்தில் ஒரு பரபரப்பான இடமாக மாறும்.

குறிப்புகள்

தொகு
  1. "Census of India: Villages". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருந்துப்பாறை&oldid=3219897" இலிருந்து மீள்விக்கப்பட்டது