பாந்த்ரா குர்லா வளாகம்
பாந்த்ரா குர்லா வளாகம் இந்தியாவின் மும்பை பெருநகரப் பகுதியின் மும்பை புறநகர் மாவட்டத்தில் மும்பை கிழக்கு புறநகரத்தில் அமைந்த வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட மைய வணிகப் பகுதி ஆகும். இது ஒரு முக்கிய உயர்தர வணிக மையமாகும்.[2]
பாந்த்ரா குர்லா வளாகம் (BKC) | |
---|---|
வணிக வளாகப் பகுதி | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகரம் |
பெருநகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400051[1] |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 (தெற்கு மும்பையின் முடிவில்) MH 02 (பாந்த்ரா முடிவில்) MH 03 (குர்லா முடிவில்) |
உள்ளாட்சி அமைப்பு | மும்பை பெருநகரப் பகுதி |
மும்பை பெருநகரப் பகுதி ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த வளாகம் மும்பையின் கிழக்குப் பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் குவியலைக் கொண்டுள்ளது. இவ்வளாகம் தெற்கு மும்பையின் வணிக நெரிசலைக் குறைக்க இது உதவுகிறது.[3] பாந்த்ரா]]-
பாந்த்ரா-குர்லா வணிக வளாகத்தில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய தேசிய பங்கு சந்தை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, பாரத் டைமண்ட் போர்ஸ், யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, அமேசான், டிவிட்டர், பாங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, பாரத் டைமண்ட் போர்ஸ், யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல், அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் பாம்பே மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் தலைமையகம் அலுவலகங்கள் உள்ளது.
மேலும் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் திடல், ஐக்கிய அமெரிக்காவின் வின் துணைத் தூதரகம், பிரித்தானிய துணை உயர் தூதரகம், ருஸ்டோம்ஜி சீசன்ஸ், கல்பதரு மேக்னஸ், கல்பதரு ஸ்பார்க்கிள், ருஸ்டோம்ஜி ஒரியானாவின் கட்டிடங்கள் உள்ளது..[4] இவ்வளாகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் ஏறத்தாழ 6,00,000 பேர் பணிபுரிகின்றனர்..[5] 370 எக்டேர் பரப்பளவு கொண்ட பாந்த்ரா-குர்லா வணிக வளாகப் பகுதியில் மித்தி ஆறு, மாகிம் கடற்கழி கொண்டுள்ளது. பாந்த்ரா-குர்லா வணிக வளாகம் சுமார் 2,000,000 வேலைகளை வழங்குகிறது. மும்பை பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம், 'இ' பிளாக்கில் 19 எக்டேர் சதுப்பு நிலத்தை வணிக அலுவலக கட்டிடங்கள் கட்ட ஒதுக்கியுள்ளது. இந்த வணிக கட்டிடங்கள் 17,400 வேலைகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட அலுவலக இடத்தை வழங்குகின்றன. இத்தொகுதியில் சுமார் 22,500 சதுர மீட்டர் பரப்பளவில் 'சிட்டி பார்க்' என்ற பெயரில் ஒரு நகர்ப்புற பிளாசா மற்றும் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், மும்பையின் நாரிமன் முனை மற்றும் கஃபே பரேடுக்குப் பிறகு பாந்த்ரா-குர்லா வளாகம், மும்பை சென்ட்ரலை முந்திக்கொண்டு மகாராட்டிராவில் மூன்றாவது மிக முக்கியமான மைய வணிகப் பகுதியாக மாறியுள்ளது. இப்பகுதியின் சதுப்புநிலம், இருப்புப்பாதை போக்குவரத்து குறைபாட்டால் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் உயரமான கட்டுமானம் போன்றவைகள் இப்பகுதியின் கூடுதல் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது.
தாராவி சேரி
தொகுபாந்த்ரா-குர்லா வளாகம் பகுதியில் ஆசியாவின் பெரிய சேரியான தாராவி உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pin code : Bandra Kurla Complex, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
- ↑ "Japanese firm set to buy 3-acre BKC plot in Mumbai for Rs 2,238 crore, rocks real estate history".
- ↑ "Tips on Buying Private Health Insurance in Arizona". Mr Damumbai Insurance. Archived from the original on 2021-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
- ↑ "Uddhav and Rashmi put down Rs 11.6 cr for Matoshree-2.0".
- ↑ Shukla, Alka (20 September 2010). "BKC to become food lovers' delight". Mumbai Mirror. Bennett Coleman & Co. Ltd.