பார்வதி மலை

புனேவிலுள்ள இந்து கோயில்

பார்வதி மலை (Parvati Hill) இந்தியாவின் புனேவில் அமைந்துள்ள ஒரு சிறுகுன்று ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் 2,100 அடிகள் (640 m) உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் ஒரு பார்வதி கோயில் உள்ளது. இக்கோயில் புனேவில் உள்ள மிக அழகிய இடங்களில் ஒன்றாகும். பேசுவா வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்த கோவில் புனேவில் உள்ள பழமையான பாரம்பரிய கட்டிடமாக திகழ்கிறது.[1] பார்வதி மலை என்பது பார்வையாளர்களுக்கு புனேவின் பரந்த காட்சியை வழங்கும் ஒரு கண்காணிப்பு இடமாகும். வெட்டல் மலையை அடுத்து புனேவின் இரண்டாவது உயரமான இடமாகக் கருதப்படுகிறது. மலையில் 108 படிகள் (இந்து மதத்தில் புனித எண் என்று கருதப்படுகிறது) கோயில் அமைந்துள்ள மலையின் உச்சிக்கு செல்கிறது. தவாரே என்ற கிராமத் தலைவருக்கு இம்மலை சொந்தமானதாகும். சிவன் கோயிலைக் கட்டுவதற்காக பேசுவா மலையை வாங்கினார். அதன்பிறகு, அங்கு இந்த கோவில் வளாகத்தைக் கட்டினார்.

பார்வதி மலை
Parvati Hill
பார்வதி மலை
உயர்ந்த புள்ளி
உயரம்2,100 அடி (640 m)
ஆள்கூறு18°29′50″N 73°50′48″E / 18.49722°N 73.84667°E / 18.49722; 73.84667
புவியியல்
பார்வதி மலை Parvati Hill is located in மகாராட்டிரம்
பார்வதி மலை Parvati Hill
பார்வதி மலை
Parvati Hill
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய வழிமலைக்கு 108 படிகள் உள்ளன, இது மலையின் உச்சிக்கு செல்லும் வழி.

முக்கிய கோவில் தேவதேசுவரா கருங்கல்லால் ஆனது. இது 1749 ஆம் ஆண்டு பாலாசி பாசி ராவால் கட்டி முடிக்கப்பட்டது. 1760 ஆம் ஆண்டு கோயிலில் ஒரு தங்க சிகரம் சேர்க்கப்பட்டது. மற்ற கோவில்கள் விட்டல் மற்றும் ருக்மணி, விஷ்ணு மற்றும் கார்த்திகேயா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

கோவில்கள்

தொகு

பார்வதி மலையில் 5 கோவில்கள் உள்ளன: [2]

சூரியன் (சூரியன்) மற்றும் பவானி மந்திர் கோவில்களுடன், கோவில்கள் காலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு மூடப்படுகின்றன.

பிற கட்டமைப்புகள்

தொகு

கோயிலைத் தவிர இங்கு பேசுவா அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள், நாணயங்கள், பாத்திரங்கள், மரத்தாலான தளவாடங்கள், போக்குவரத்து முறைகள் (பல்லக்கு) மற்றும் பேசுவாக்களின் காலத்திலிருந்து பெறப்பட்ட பரிசுகள் போன்றவை உள்ளன. [3]

பாலாசி பாசி ராவ் தனது வாழ்க்கையின் கடைசி தருணத்தை கழித்த பகுதியும் இங்கு அமைந்துள்ளது.

பார்வதி தண்ணீர் தொட்டி புனே நகரின் பாதி பகுதிக்கு தண்ணீர் வழங்குகிறது.

 
பார்வதி மலையிலிருந்து புனே நகரத்தின் பனோரமா பார்வை

மலையின் பாதி வழியில் தென்கிழக்கு பகுதியில் ஒரு பழைய புத்த குகை உள்ளது. முடிக்கப்படாவிட்டாலும், இது பாடலேசுவர் குகைகளுக்கு சமகாலம் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "History of Parvati". Parvati Darshan. Archived from the original on 21 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
  2. "Ganesh Chaturthi 2017: Famous Ganesh Temples in Pune". India.Com. https://www.india.com/travel/articles/ganesh-chaturthi-2017-famous-ganesh-temples-in-pune-3228481/. பார்த்த நாள்: 1 October 2022. Menon, Anoop (22 August 2017). "Ganesh Chaturthi 2017: Famous Ganesh Temples in Pune". India.Com. Archived from the original on 22 September 2022. Retrieved 1 October 2022.
  3. "Peshwa's pride". New Indian Express. https://www.newindianexpress.com/lifestyle/travel/2018/aug/05/peshwas-pride-1852325.html. பார்த்த நாள்: 1 October 2022. 

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பார்வதி மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_மலை&oldid=3614268" இலிருந்து மீள்விக்கப்பட்டது