பாலூர்காட் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

பாலூர்காட் மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள பாலூர்காட்டை மையமாகக் கொண்டுள்ளது. பலூர்காட் மக்களவைத் தொகுதியின் கீழ் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ளன. மேலும் ஒரு சட்டமன்றத் தொகுதி வடக்கு தினஜ்பூர் மாவட்டத்திலும் உள்ளது. இந்த மக்களவைத் தொகுதி முதலில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009 முதல் இது ஒரு பொதுத் தொகுதியாக உள்ளது.

பாலூர்காட்
WB-6
மக்களவைத் தொகுதி
Map
பாலூர்காட் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்15,61,966(2024)[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சுகந்தா மசூம்தர்
கட்சி பாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 6, பாலூர்காட் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
36 இட்டஹார் வடக்கு தினஜ்பூர் மொசரப் உசைன் அஇதிகா
37 குஷ்மாண்டி (ப.இ.) தெற்கு தினஜ்பூர் ரேகா ராய் அஇதிகா
38 குமார்கஞ்ச் தோரப் உசைன் மண்டல் அஇதிகா
39 பாலூர்காட் அசோக் லாகிரி பாஜக
40 தபன் (ப.கு.) புத்ராய் டுடு பாஜக
41 கங்காராம்பூர் (ப.இ.) சத்யேந்திர நாத் ரே பாஜக
42 அரிராம்பூர் பிப்லாப் மித்ரா அஇதிகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற பெயர் [3] கட்சி
1952 சுசில் ரஞ்சன் சட்டோபாத்யாய்[a] இந்திய தேசிய காங்கிரசு
1957 செல்கு மார்டி
சபலா காந்தா பட்டாச்சார்ஜி
1962 சர்கார் முர்மு இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1967 ஜெ. எண். பிரமாணிக் இந்திய தேசிய காங்கிரசு
1971 ரசேந்திரநாத் பர்மன்
1977 பலாஷ் பர்மன் புரட்சிகர சோசலிசக் கட்சி
1980
1984
1989
1991
1996 ரெய்ன் பர்மன்
1998
1999
2004
2009 பிரசாந்த குமார் மஜூம்தார்
2014 அர்பிதா கோஷ் திரிணாமுல் காங்கிரசு
2019 சுகந்த மஜூம்தார் பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பாலூர்காட்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுகந்தா மசூமதர் 5,74,996 46.47  1.45
திரிணாமுல் காங்கிரசு பிப்லாப் மித்ரா 5,64,610 45.63  3.39
புசோக ஜோய்தேப் சித்காந்தா 54,217 4.38 1.71
நோட்டா நோட்டா 7,437 0.6 0.52
வாக்கு வித்தியாசம் 10,386 0.84 1.94
பதிவான வாக்குகள் 12,35,347[b] 79.09 4.6
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

குறிப்புகள்

தொகு
  1. West Dinajpur (1952-62)
  2. does not include postal ballots

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "Balurghat Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS256.htm

மேலும் காண்க

தொகு