பிஜோய் கிருஷ்ணா பெண்கள் கல்லூரி
பிஜோய் கிருஷ்ணா பெண்கள் கல்லூரி இந்தியாவின் ஹவுராவில் உள்ள ஒரு பெண்களுக்கான கல்லூரி ஆகும். இக்கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயிற்றுவிக்கிறது. கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரே பெண்கள் கல்லூரி ஆகும். முன்பு ஹவுரா பெண்கள் கல்லூரி என அழைக்கப்பட்ட இக்கல்லூரி, அதன் நிறுவன முதல்வர் ஸ்ரீ பிஜோய் கிருஷ்ண பட்டாச்சார்யாவின் மறைவிற்கு பிறகு அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் 27 இளங்கலை மற்றும் 5 முதுகலை துறைகள் உள்ளன.
Bijoy_Krishna_Girls'_College.jpg | |
நிறுவப்பட்டது | 1 August 1947 |
---|---|
வகை | பொதுக்கல்வி நிலையம் |
தலைவர் | அருப் ராய் |
கல்லூரி முதல்வர் | முனைவர். ரூமா பட்டாச்சார்யா |
அமைவு | ஹவுரா, மேற்கு வங்காளம் 711101, இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | https://bkgc.in/ |
வரலாறு
தொகுஇக்கல்லூரியானது 1 ஆகஸ்ட் 1947 இல் பேராசிரியரும், இந்திய சுதந்திர ஆர்வலரும் சமூக சேவகருமான பிஜோய் கிருஷ்ண பட்டாச்சார்யாவால் பெண்களுக்கான உயர்கல்வியை மேம்படுத்துவதற்கும் வழங்குவதற்கும் நிறுவப்பட்டது.[1] பெங்காலி கவிஞர் ஜிபானந்த தாஸ் மற்றும் பெங்காலி நாவலாசிரியர் பானி பாசு இருவரும் இந்தக் கல்லூரியின் பேராசிரியராக இருந்தனர்.[2] கவிஞர் ஜிபானந்த தாசை பெருமைப்படுத்தும் விதமாக இக்கல்லூரியின் கலையரங்கத்திற்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது.
அமைவிடம்
தொகுஇந்த கல்லூரி ஹவுரா நகரின் மையத்தில் ஹவுரா சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கங்கை நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஹவுரா, கொல்கத்தாவின் இரட்டை நகரம் என்று அழைக்கப்படுகிறது. 'கங்கா' அல்லது கங்கை என்று பாரம்பரியமாக, கருதப்படும் பாகீரதி-ஹூக்ளி நதி,இக்கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது. மேற்கு வங்கத்தின் புதிய மாநில செயலகம் ஹவுராவின் நபன்னா (கட்டிடம்), இக்கல்லூரிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
தொடர்பு மற்றும் போக்குவரத்து
தொகுஇந்த கல்லூரி கொல்கத்தா நகரம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் ரயில்வே மற்றும் சாலைகள் மூலம் நன்கு தொடர்பு கொண்டுள்ளது. இது ஹவுராவின் புகழ்பெற்ற படகு பாதையில் இருந்து படகுச்சேவை மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் ஹவுரா சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். சீல்டா ரயில் நிலையம், சந்த்ராகாச்சி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் கொல்கத்தா ரயில் நிலையம் ஆகியவற்றிலிருந்தும் எளிதாக அணுகலாம். கொல்கத்தா மெட்ரோ லைன் 2 அல்லது கிழக்கு மேற்கு மெட்ரோ காரிடார் போன்றவையும் இக்கல்லூரியில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் ஆகும். ஹவுரா மைதான் பேருந்து நிலையம் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. மேலும் பங்கிம் சேது என்ற ஒரு மேம்பாலம் கல்லூரியை மற்ற கொல்கத்தா மற்றும் ஹவுரா மாவட்டங்களுடன் இணைக்கிறது, இவ்வாறு பேருந்து, தொடருந்து, விமானவழி மற்றும் தரைவழியாகவும் இந்தியா முழுவதிலிருந்தும் இக்கல்லூரிக்கு வரலாம்.
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியானது ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) போன்றவைகளின் அங்கீகாரம் பெற்றதுமல்லாமல் இது போன்ற கல்லூரிகளில் சிறந்து விளங்கக்கூடிய (UGC-CPE) அந்தஸ்து கொண்ட கல்லூரியாகும். இது ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனமாகும்.
2021 ஆம் ஆண்டில், இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) கிரேடு "B++" உடன் மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது. [3]
வசதிகள்
தொகுகல்லூரியில் நூலகம் மற்றும் கணினி ஆய்வகங்கள், தேசிய சேவைத் திட்டப் பிரிவு, போட்டித் தேர்வுக்கான பிரிவு, தொழில் சார்ந்த கூடுதல் படிப்புகள், வேலை வாய்ப்பு பிரிவு, கன்யாஸ்ரீ பிரகல்பா, சொந்தமான உடற்பயிற்சி கூடம், சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவைகளும் உள்ளன. இக்கல்லூரி, மாணவிகளுக்கான உளவியல் ஆலோசனைக் கூடத்தையும் கொண்டுள்ளது.
"ஆலோ" (ஆங்கிலம்: ஒளி) மற்றும் "பனலதா" (பெங்காலி கவிதையான பனலதா சென் இலிருந்து ஈர்க்கப்பட்டது) என்ற பெயர்களில் இந்தக் கல்லூரிக்கு சொந்தமாக பெண்கள் விடுதியும் 150 பேர் வரை அமரும் கொள்ளவு கொன்ட "ஜிபானந்தா சபாகர்" என்ற கலையரங்கமும் உள்ளது. கல்லூரியில் இக்னோவுக்கான ஆய்வு மையம் உள்ளது. [4] கல்லூரியில் இரண்டு சுகாதாரமான உணவு மையங்கள், தேநீர் பிரியர்களுக்கான தேநீர் கிளப் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவைகளும் உள்ளது.
இக்கல்லூரியில் UGC-ன் ஆதரவு அளிக்கப்பட்ட தொழில் சார்ந்த மாணவர்களுக்கான கூடுதல் பட்டயப் படிப்புகள் இ-காமர்ஸ்; கணினி தரவு பராமரிப்பு மேலாண்மை; தொழில்துறை நுண்ணுயிரியல்; உணவு மற்றும் ஊட்டச்சத்து; தொழில் ஆலோசனை; செயல்பாட்டு ஆங்கிலம்; காப்பீட்டு மேலாண்மை போன்ற தலைப்புகளில் உள்ளன, அதை அவர்கள் தங்கள் வழக்கமான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுடன் சேர்த்து தேர்வு செய்து படிக்க முடியும்.
கல்லூரியில் ஒரு வலுவான முன்னாள் மாணவர் சங்கம் உள்ளது - "புனோர்னபா", இதில் நல்ல எண்ணிக்கையிலான முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் தீவிரமாக பங்கேற்று இந்த அமைப்பு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
இளங்கலை துறைகள்
தொகுஆசிரியர்கள் பயிற்சி
தொகுBEd (இளங்கலை கல்வி)
அறிவியல் துறை
தொகு- தாவரவியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- பொருளாதாரம்
- மின்னணுவியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
- நிலவியல்
- கணிதம்
- நுண்ணுயிரியல்
- இயற்பியல்
- உளவியல்
- புள்ளிவிவரங்கள்
- விலங்கியல்
வர்த்தகத் துறை
தொகு- கணக்கியல்
கலைப்பிரிவு
தொகு- பெங்காலி
- ஆங்கிலம்
- ஹிந்தி
- உருது
- கல்வி
- வரலாறு
- பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு
- இசை
- தத்துவம்
- அரசியல் அறிவியல்
- சமஸ்கிருதம்
- சமூகவியல்
முதுகலை துறைகள்
தொகு- புவியியல் (MSc/MA)
- தத்துவம் (MA)
- சமஸ்கிருதம் (MA)
- பெங்காலி (எம்ஏ)
- வணிகம் (M.Com)
குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்
தொகு- ஜிபானந்த தாஸ், பெங்காலி கவிஞர் மற்றும் எழுத்தாளர்
- பானி பாசு, பெங்காலி நாவலாசிரியர்
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- ஜிபானந்த தாஸ், கவிஞர், உதவிப் பேராசிரியர்
- அஞ்சனா பாசு, நடிகை
- பானி பாசு, கவிஞர், நாவலாசிரியர், பேராசிரியர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிஜோய் கிருஷ்ணா பெண்கள் கல்லூரி".
- ↑ "தேசிய தரமதிப்பீடுக்கான அறிக்கை" (PDF).
- ↑ West Bengal State List of NAAC Accredited Colleges பரணிடப்பட்டது 15 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ IGNOU Study Centres under Kolkata, பார்க்கப்பட்ட நாள் 4 March 2012