பிரமோத் தாண்டன்
பிரமோத் தாண்டன் என்பார் இந்தியக் கல்வியாளர் மற்றும் வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தின் (NEHU) முன்னாள் துணைவேந்தர் ஆவார்.
பிரமோத் தாண்டன் Pramod Tandon | |
---|---|
பிறப்பு | 6 அக்டோபர் 1950 லக்னோ |
பணி | கல்வியாளர் |
வாழ்க்கைத் துணை | வீணா தாண்டன் |
பிள்ளைகள் | 1 |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுதாண்டன் அக்டோபர் 6, 1950 அன்று இலக்னோவில் பிறந்தார். லக்னோ பல்கலைக்கழகத்தில் 1969இல் பி.எஸ்.சி பட்டமும், 1971இல் எம்.எஸ்.சி (தாவரவியல்) பட்டமும் பெற்றார்.[1] 1976ஆம் ஆண்டில் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1977ஆம் ஆண்டில், வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் துணைவேந்தர் பதவிக்கு உயர்ந்தார்.
தாண்டனுக்கு இந்திய அரசு வெளிநாட்டில் படிப்பதற்கான தேசிய உதவித்தொகையினை வழங்கியது. இதன் மூலம் 1978–79 காலப்பகுதியில் அமெரிக்காவின் இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆய்வினை மேற்கொண்டார். பசுங்கனிக டி. என். ஏ. வின் அமைப்பு மற்றும் வெளிப்பாட்டை ஆய்வு செய்தார். 1989 முதல் 1995 வரை, தேசிய வேளாண்-உயிரியல் வளங்கள் நிறுவனம் மற்றும் ஜப்பானில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் அவரை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அழைத்தன. இதன் மூலம் தாவர பாதுகாப்பில் உயிரி தொழில்நுட்பம் நீண்டகால ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதாண்டன் சில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தின் ஒட்டுண்ணி நிபுணரும் பேராசிரியருமானவீணாவினை மணந்தார், [2] ஷில்லாங். இவர்களுக்கு பிரதீக் என்ற மகன் உள்ளார். [3]
தொழில்
தொகுதாண்டன் 2005 முதல் 2010 வரை வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[4] இவரது தலைமையின் கீழ், அந்த நேரத்தில் நாட்டில் இதுபோன்ற ஒன்பது பல்கலைக்கழகங்களில் ஒன்றான 'சிறந்த திறனுக்கான பல்கலைக்கழகம்' என்ற பெருமையை வடகிழக்கு மலை பல்கலைக்கழகம் பெற்றது.[1] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்தால் செய்யப்பட்ட பல்கலைக்கழக மறு மதிப்பீட்டில் 'A' தரத்தைப் பெற்றது . [5]
துணைவேந்தர் பதவிக்கு மேலதிகமாக, சில்லாங்கின் ராஜீவ்காந்தி இந்தியன் வணிக நிர்வாகவியல் நிறுவனத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றினார். [1]
தாண்டன் ஜனவரி 2009 இல் வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தில் 96வது இந்திய அறிவியல் காங்கிரஸை நடத்தினார். [1] [6]
தாண்டன் 2010-14ஆம் ஆண்டில் தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியில் அதிகமாக பணியாற்றினார்.[7] [8] [9] [10] [11] [12] [13] [14] சிக்கலான வரலாறு மற்றும் புவிசார் அரசியல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு, தனிமை மற்றும் கிளர்ச்சிகள், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பலவீனமான ஆளுகை மற்றும் வரையறுக்கப்பட்ட இணைப்பு உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்ளும் பகுதியாக வடகிழக்கு இந்தியப் பகுதிகள் உள்ளன.[15] [16]
தாண்டனின் ஆராய்ச்சி தாவர நுண்மப்பெருக்கம், இயற்கையில் மீண்டும் நிறுவுதல் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழியும் நிலையில் ஆபத்திற்குள்ளான தாவரங்களை மீட்டெடுத்தலாகும். [17] [18] [19] [20] இவரது சமீபத்திய ஆய்வுகள் (2010–2015) ரெட் (RET) தாவரங்களின் மரபணு அமைவு குறித்ததாகும். இதில் ஆபத்தான தாவரங்களின் மூலக்கூறு மற்றும் உயிரணு உயிரியல் அடிப்படையும் அடங்குகின்றது. இவை பாதுகாப்பு உத்திகளைத் திட்டமிடுவதில் பயனுள்ளதாக இருக்கும். [21] [22] [23] [24] [25] [26] [27] [28] கேப்டன் சினென்ஸின் உயிரணு வளர்ப்பில் (நாகா கிங் மிளகாய் - உலகின் காரமான மிளகாய்களில் ஒன்று) [29] [30] [31] [32] [33] [34] கேப்சைசின் உயிரியக்கவியல் உயிரியலில் தாண்டன் பணியாற்றியுள்ளார்.
தாண்டன் 170க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். பல்லுயிர் மற்றும் உயிரி தொழில்நுட்பம் குறித்த 3 புத்தகங்களைத் தொகுத்துள்ளார். [35] [36] [37]
தாண்டன் தேசிய அறிவியல் கழகம், இந்தியா மற்றும் இந்தியத் தாவரவியல் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். மேலும் அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு, இந்திய அரசு, உள்ளிட்ட பல கல்வி அமைப்புகள் மற்றும் தேசிய பணிக்குழுக்களின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். [38]
விருதுகள்
தொகுதாண்டன் பல விருதுகளும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
- பத்மஸ்ரீ (2009) [39] இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்
- இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் மில்லினியம் பிளேக்ஸ் ஆப் ஹானர் விருது (2008-2009) [40], இந்தியப் பிரதமரிடமிருந்து பெறப்பட்டது
- பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.ஆர்.சவான் நினைவு விரிவுரை விருது (2013) [41]
- தேசிய அறிவியல் கழக (இந்தியா) பல்லுயிர் விரிவுரை விருது (2013) [42]
- தேசிய அறிவியல் கழக (இந்தியா) பேராசிரியர் சாலிகிராம் சின்ஹா நினைவு விரிவுரை விருது (2011)
- இந்தியாவின் தேசிய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் ஆர்.என். தாண்டன் நினைவு விரிவுரை விருது (2008)
- இந்திய தாவர திசு வளர்ப்பு சங்கத்தின் (2006) காட்கில் நினைவு விரிவுரை விருது (2006) [1]
- இந்திய ஆர்க்கிட் சமூகத்தின் முனைவர் டி.என். கோஷூ நினைவு விரிவுரை விருது (2006)
- இந்தியத் தாவரவியல் சங்கத்தின் பேராசிரியர் பஞ்சனன் மகேஸ்வரி பதக்கம் விருது (2004) [43]
- பல்லுயிர் பற்றிய பிபி பால் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிதி விருது (2002-2004), சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அரசு
- இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பிளாட்டினம் ஜூபிலி விரிவுரை விருது (2000)
- யப்பான் அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகத்தால் வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை ஆராய்ச்சி விருது (1994 & 1995)
- வெளிநாட்டில் படிப்பதற்கான தேசிய உதவித்தொகை (1978 1980), கல்வி அமைச்சகம், இந்திய அரசு
- உ.பி. அரசிடமிருந்து தகுதி கல்வி உதவித்தொகை (1965-1967)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Prof. P.Tandon, Botany Dept.,NEHU,Shillong-793022". Nehu.ac.in. 1950-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Profile - VEENA TANDON (VeenaTandon)". PeerJ. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Minimizing Remote Accesses in MapReduce Clusters". Computer.org. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "The Telegraph - Calcutta : Northeast". Telegraphindia.com. 2005-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Official Website of North-Eastern Hill University, Shillong-793022". Nehu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "96th Indian Science Congress Brochure" (PDF). Iscexpo.in. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Net access, direct flights, health top NAC plan to develop N-E | Business Line". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "The Assam Tribune Online". Assamtribune.com. 2012-04-24. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "NAC proposes Medical colleges for Northeast region | Kalvimalar - News". Kalvimalar.dinamalar.com. 2012-11-26. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "NAC pitches for growth of Northeast region". Deccanherald.com. 2012-11-25. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "NAC pitches for development of Northeast region | Zee News". Zeenews.india.com. 2012-11-25. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "NE development not on track: Panel". The Shillong Times. 2012-11-30. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "NAC pitches for development of Northeast region | Business Standard News". Business-standard.com. http://www.business-standard.com/article/pti-stories/nac-pitches-for-development-of-northeast-region-112112500243_1.html.
- ↑ "National Advisory Council suggest for comprehensive telecom plan exclusive to North Eastern region - timesofindia-economictimes". Articles.economictimes.indiatimes.com. 2012-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "North Eastern Region Vision 2020 Brochure" (PDF). Mdoner.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "North Eastern Region Vision 2020 Annexures Brochure" (PDF). Mdoner.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Nymphaea tetragona: a rare and endangered plant of Meghalaya, India (Plant Talk feature)". Plant-talk.org. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Long-term conservation through cryopreservation of immature seed of Mantisia spathulata and Mantisia wengeri; two endangered plants of north-east India". Cryo Letters 32 (6): 498–505. 2011. பப்மெட்:22227710. http://openurl.ingenta.com/content/nlm?genre=article&issn=0143-2044&volume=32&issue=6&spage=498&aulast=Das%20Bhowmik.
- ↑ Sudipta S. Das Bhowmik; Suman Kumaria; Pramod Tandon (2010). "Conservation of Mantisia spathulata Schult. and Mantisia wengeri Fischer, Two Critically Endangered and Endemic Zingibers of Northeast India". Seed Technology 32 (1): 57–62.
- ↑ Rathore, T.S.; Tandon, P.; Shekhawat, N.S. (1991). "In Vitro Regeneration of Pitcher Plant (Nepenthes khasiana Hook. f.) — A rare Insectivorous Plant of India". Journal of Plant Physiology 139 (2): 246–8. doi:10.1016/S0176-1617(11)80617-6. http://dspace.nehu.ac.in/handle/1/1826. பார்த்த நாள்: 2021-02-12.
- ↑ Devi, Soibam Purnima; Kumaria, Suman; Rao, Satyawada Rama; Tandon, Pramod (2015). "Genetic fidelity assessment in micropropagated plants using cytogenetical analysis and heterochromatin distribution: a case study with Nepenthes khasiana Hook f". Protoplasma 252 (5): 1305–12. doi:10.1007/s00709-015-0763-z. பப்மெட்:25616932.
- ↑ Devi, Soibam Purnima; Kumaria, Suman; Rao, Satyawada Rama; Tandon, Pramod (2013). "In vitro propagation and assessment of clonal fidelity of Nepenthes khasiana Hook. f.: a medicinal insectivorous plant of India". Acta Physiologiae Plantarum 35 (9): 2813–20. doi:10.1007/s11738-013-1314-x.
- ↑ Dkhar, Jeremy; Kumaria, Suman; Rao, Satyawada Rama; Tandon, Pramod (2013). "New insights into character evolution, hybridization and diversity of IndianNymphaea(Nymphaeaceae): evidence from molecular and morphological data". Systematics and Biodiversity 11 (1): 77–86. doi:10.1080/14772000.2013.773949.
- ↑ Biswal, Devendra Kumar; Debnath, Manish; Kumar, Shakti; Tandon, Pramod (2012). "Phylogenetic reconstruction in the order Nymphaeales: ITS2 secondary structure analysis and in silico testing of maturase k (matK) as a potential marker for DNA bar coding". BMC Bioinformatics 13 Suppl 17: S26. doi:10.1186/1471-2105-13-S17-S26. பப்மெட்:23282079.
- ↑ Sharma, S. K.; Bhowmik, S. S. D.; Kumaria, S.; Tandon, P.; Rama Rao, S. (2012). "Low genetic diversity as revealed by SPAR methods possibly leads to extinction of two critically-endangered and endemic species of Mantisia". Biologia Plantarum 56 (2): 292–300. doi:10.1007/s10535-012-0089-z. http://dspace.nehu.ac.in/handle/1/8890. பார்த்த நாள்: 2021-02-12.
- ↑ Dkhar, Jeremy; Kumaria, Suman; Rao, Satyawada Rama; Tandon, Pramod (2011). "Sequence characteristics and phylogenetic implications of the nrDNA internal transcribed spacers (ITS) in the genus Nymphaea with focus on some Indian representatives". Plant Systematics and Evolution 298 (1): 93–108. doi:10.1007/s00606-011-0526-z. http://dspace.nehu.ac.in/handle/1/9333. பார்த்த நாள்: 2021-02-12.
- ↑ Dkhar, Jeremy; Kumaria, Suman; Tandon, Pramod (2011). "Nymphaea alba var. rubra is a hybrid of N. alba and N. odorata as evidenced by molecular analysis". Annales Botanici Fennici 48 (4): 317–24. doi:10.5735/085.048.0403.
- ↑ Dkhar, Jeremy; Kumaria, Suman; Tandon, Pramod (2011). "Molecular adaptation of the chloroplast matK gene in Nymphaea tetragona, a critically rare and endangered plant of India". Plant Genetic Resources 9 (2): 193–6. doi:10.1017/S1479262111000396. http://dspace.nehu.ac.in/handle/1/9221. பார்த்த நாள்: 2021-02-12.
- ↑ Kehie, Mechuselie; Kumaria, Suman; Tandon, Pramod; Ramchiary, Nirala (2014). "Biotechnological advances on in vitro capsaicinoids biosynthesis in capsicum: a review". Phytochemistry Reviews 14 (2): 189–201. doi:10.1007/s11101-014-9344-6.
- ↑ Ramchiary, Nirala; Kehie, Mechuselie; Brahma, Vijaya; Kumaria, Suman; Tandon, Pramod (2013). "Application of genetics and genomics towards Capsicum translational research". Plant Biotechnology Reports 8 (2): 101–23. doi:10.1007/s11816-013-0306-z.
- ↑ Kehie, Mechuselie; Kumaria, Suman; Tandon, Pramod (2014). "Manipulation of culture strategies to enhance capsaicin biosynthesis in suspension and immobilized cell cultures of Capsicum chinense Jacq. cv. Naga King Chili". Bioprocess and Biosystems Engineering 37 (6): 1055–63. doi:10.1007/s00449-013-1076-2. பப்மெட்:24141419.
- ↑ Kehie, Mechuselie; Kumaria, Suman; Tandon, Pramod (2013). "In vitro plantlet regeneration from cotyledon segments of Capsicum chinense Jacq. cv. Naga King Chili, and determination of capsaicin content in fruits of in vitro propagated plants by High Performance Liquid Chromatography". Scientia Horticulturae 164: 1–8. doi:10.1016/j.scienta.2013.08.018.
- ↑ Kehie, Mechuselie; Kumaria, Suman; Tandon, Pramod (2012). "Osmotic stress induced-capsaicin production in suspension cultures of Capsicum chinense Jacq.cv. Naga King Chili". Acta Physiologiae Plantarum 34 (5): 2039–44. doi:10.1007/s11738-012-0991-1. http://dspace.nehu.ac.in/handle/1/9351. பார்த்த நாள்: 2021-02-12.
- ↑ Kehie, Mechuselie; Kumaria, Suman; Tandon, Pramod (2012). "In vitro plantlet regeneration from nodal segments and shoot tips of Capsicum chinense Jacq. cv. Naga King Chili". 3 Biotech 2 (1): 31–35. doi:10.1007/s13205-011-0025-5. பப்மெட்:22582155.
- ↑ "I.K International Publishing House Pvt. Ltd". Ikbooks.com. Archived from the original on 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ [1] பரணிடப்பட்டது 17 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Advances in Plant Tissue Culture in India] Tandon Pramod, Pragati Prakashan (Meerut) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183988766
- ↑ "Summary Record of Discussion of the Fourteenth Meeting of Scientific Advisory Committee to the Cabinet" (PDF). Psa.gov.in. Archived from the original (PDF) on 2015-04-20. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [2] பரணிடப்பட்டது 24 மே 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "'Green Revolution alone can't eliminate hunger' - The Times of India". Timesofindia.indiatimes.com. 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "The National Academy of Sciences, India - Awardee". Nasi.org.in. Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
- ↑ "Welcome to Official Website of The Indian Botanical Society". Indianbotsoc.org. Archived from the original on 14 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.