பிரியோனோசிலசு
பிரியோனோசிலசு | |
---|---|
மஞ்சள் மார்பு பூங்கொத்தி (பிரியோனோசிலசு மாகுலேடசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | பிரியோனோசிலசு இசுடிரிக்லாந்து, 1841
|
மாதிரி இனம் | |
பிரியோனோசிலசு பெர்குசசு[1] தெம்மினிக், 1826 |
பிரியோனோசிலசு (Prionochilus) என்பது டைகேயிடே குடும்பத்தை உருவாக்கும் இரண்டு பேரின பூங்கொத்திகளுல் ஒன்றாகும். இந்த பேரினமானது மற்ற பூங்கொத்தி பேரினமான டைகேயியத்திலிருந்து இறக்கையில் பத்து நீண்ட முதன்மை இறகுகள் மற்றும் ஒலி அழைப்புகளின் தன்மையில் வேறுபடுகிறது. இரண்டு பேரின வகைகளின் ஓசைகளை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பிரியோனோசிலசு டைகேயத்தின அடிப்படையிலானது என்று பரிந்துரைக்கப்படுகிறது.[2] டைகேயம் பேரினத்தில் உள்ள 44 சிற்றினங்களுக்கு மாறாக, இந்த பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை பிலிப்பீன்சு, போர்னியோ, சுமாத்திரா, சாவகம் மற்றும் மலாய் தீபகற்பத்தில் டைகேயத்தை விடக் கட்டுப்படுத்தப்பட்ட பரவலைக் கொண்டுள்ளன. பிரியோனோசிலசு என்ற பெயர் கிரேக்கச் சொல்லான ப்ரியான் (இரம்பம்) மற்றும் கீலோஸ், (அலகு) சொற்களிலிருந்து வந்தது. இது இதனுடைய அலகின் விளிம்பில் உள்ள அலை அலை போன்ற நுண் அமைப்பினைக் குறிக்கிறது.[3]
மற்ற பூங்கொத்திகளுடன் பொதுவாக, பிரியோனோசிலசு பூங்கொத்திகள் 9-10 செ.மீ. இடைப்பட்ட சிறிய பறவைகளாகும். இதன் உடல் எடை 7 முதல் 23 கிராம் வரை உடையது. ஆறு சிற்றினங்களின் அலகு ஆழமானது, அகலமானது மற்றும் குறுகியது. இறகுகளின் அடிப்படையில், சிற்றினமானது மிகவும் மாறுபடும். ஆறு சிற்றினங்களில் நான்கு சிற்றினங்கள் இறகுகளைப் பொறுத்தமட்டில் பாலியல் இருவகைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த சிற்றினங்களில் ஆண் இனங்கள் மிகவும் பிரகாசமான நிறத்தில் உள்ளன. ஆறு இனங்களில் நான்கில் குறைந்தபட்சம் ஒரு பாலினத்திலாவது தொண்டையில் வெள்ளை நிற மலர் பட்டை உள்ளது. மேலும் மற்ற இனங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் தலைப்பகுதியில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத் திட்டு உள்ளது.[2]
குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களைப் போலவே புல்லுருவியின் பழங்கள், தேன் மற்றும் மகரந்தம் (லோராந்தேசி) பிரியோனோசிலசு பூங்கொத்திகளின் முக்கிய உணவாக உள்ளது. கூடுதலாக, மற்ற பழங்களும் எடுக்கப்படுகின்றன. சிறிய பழங்கள் முழுவதுமாக உட்கொள்ளப்படுகின்றன, அல்லது தோலை அகற்றி அப்புறப்படுத்தப்படும் வரை பிழியப்பட்டு, பின்னர் விழுங்கப்படும். அதேசமயம் பெரிய பழங்கள் என்றால் அலகால் துளையிட்டு துண்டுகள் அகற்றப்பட்டு விழுங்கப்படுகின்றன. தாவரப் பொருட்களைத் தவிரப் பூச்சிகள் மற்றும் சிலந்திகளும் உண்ணப்படுகின்றன. உணவு முறை பற்றிய தகவல்கள் முழுமையற்றவை; மேலும் ஆராய்ச்சி தேவை.[2]
சிற்றினங்கள்
தொகு- மஞ்சள் மார்பு பூங்கொத்தி (பிரியோனோசிலசு மாகுலடசு)
- ஆலிவ் முதுகு பூங்கொத்தி (பிரியோனோசிலசு ஒலிவேசியசு)
- கருஞ்சிவப்பு மார்பு பூங்கொத்தி (பிரியோனோசிலசு பெர்குசசு)
- பலவான் பூங்கொத்தி (பிரியோனோசிலசு பிளாட்னி)
- கருஞ்சிவப்பு-மார்பக பூங்கொத்தி (பிரியோனோகிலசு தோராசிகசு)
- மஞ்சள் முதுகு பூங்கொத்தி (பிரியோனோசிலசு சாந்தோபிஜியசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dicaeidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
- ↑ 2.0 2.1 2.2 Cheke, Robert; Mann, Clive (2008). "Family Dicaeidae (Flowerpeckers)". In Josep, del Hoyo; Andrew, Elliott; David, Christie (eds.). Handbook of the Birds of the World. Volume 13, Penduline-tits to Shrikes. Barcelona: Lynx Edicions. pp. 350–367. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-45-3.
- ↑ Jobling, James A. (1991). A Dictionary of Scientific Bird Names. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854634-3.