பிருந்தாவனம் காதல் கோயில்
காதல் கோயில் அல்லது பிரேம் மந்திர் (Prem Mandir) (The Temple of Love), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் ஊரில் ராதை, கிருஷ்ணர், சீதை மற்றும் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இதனை ஜெகத் குரு கிருபாளு மகராஜ்[1] Different Leelas of Shri Krishna and Rasik saints are depicted all over the wall of the main temple.[2] நடத்தும் தொண்டு நிறுவனத்தால் 17 பிப்ரவரி 2012 அன்று நிறுவப்பட்டது. இக்கோயில் மூலவர்கள் இராதா கிருஷ்ணன் மற்றும் சீதா-இராமர் ஆவார்.
பிரேம் மந்திர் | |
---|---|
பிரேம் மந்திர் | |
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | மதுரா |
அமைவு: | பிருந்தாவனம் |
ஏற்றம்: | 169.78 m (557 அடி) |
ஆள்கூறுகள்: | 27°34′21″N 77°40′21″E / 27.5724569°N 77.6724919°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இராஜஸ்தான் & குஜராத் கட்டிடக் கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | கிருபாளு மகராஜ் |
இணையதளம்: | http://jkp.org.in |
இக்கோயில் வளாகம் பிருந்தாவனத்தின் புறநகரில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு தளங்கள் கொண்ட இக்கோயிலின் முதல் தளத்தில் இராதா கிருஷ்ணன் கோயிலும், இரண்டாம் தளத்தில் சீதை மற்றும் இராமருக்கான கோயிலும் உள்ளது.
இக்கோயில் மண்டபம் 73,000 சதுர அடி பரப்பளவில் தூண்கள் இன்றி, குவிமாடம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 25,000 பக்தர்கள் அமர்ந்து வழிபட முடியும்.[3]இக்கோயிலை சுற்றிலும் அழகிய தோட்டங்கள், நீர் ஊற்றுகள், ராதை மற்றும் கோபியர்களுடன் கிருஷ்ணரின் ராசலீலைகள், கோவர்தன மலையைத் தூக்கும் காட்சி, காளிங்க நர்த்தனம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் துணைக் கோயிலான கீர்த்தி கோயில் பர்சானா எனும் ஊரில் 2019-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[4]மற்றொரு துணைக் கோயிலான பக்தி கோயில் 2015-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
திருவிழாக்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Famous Krishna Temples in India : Prem Mandir
- ↑ Kripaluji Maharaj's Prem Mandir will be inaugurated on 17 February-Aaj Ki Khabar 404 பரணிடப்பட்டது 30 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ब्रज का आकर्षण प्रेम मंदिर. [Dainik Jagran]. Retrieved 6 April 2014
- ↑ "Grand Opening of Unique Temple in India". Business Standard India. Press Trust of India. 2019-01-30. https://www.business-standard.com/article/pti-stories/grand-opening-of-unique-temple-in-india-119013000513_1.html.