பீனா பால்
பீனா பால் (Beena Paul) (பிறப்பு சனவரி 28, 1961), இவரது திருமண பெயர் பீனா பால் வேணுகோபால் என்பதாகும். இவர் ஓர் இந்திய திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், 1983இல் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்படத் தொகுப்பை முடித்தார். இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் மூன்று கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் கலை இயக்குநர், கேரள மாநில சாலசித்ரா அகாதமியின் துணைத் தலைவர் உட்பட பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.
பீனா பால் | |
---|---|
திருவனந்தபுரம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பீனா பால் | |
பிறப்பு | 28 சனவரி 1961 தில்லி, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | வேணு (ஒளிப்பதிவாளர்) (தி. 1983) |
பிள்ளைகள் | Malavika |
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் ஒளிப்பதிவாளர் வேணுவை 26 ஆகத்து 1983 அன்று திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியினருக்கு மாளவிகா என்ற ஒரு மகள் இருக்கிறார், இவரது மகள் ஒரு ஆங்கிலேயரை மணந்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் ஒரு வெளிக்களப் பணித்திட்ட மேலாளராக உள்ளார்.
சுயசரிதை
தொகுஆரம்ப கால வாழ்க்கை
தொகுமலையாளத் தந்தைக்கும் கன்னடத் தாய்க்கும் பிறந்த பீனா பால் தில்லியில் வளர்க்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, 1983 இல் புனேவிலுள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்படத் தொகுப்பில் சான்றிதழ் பட்டம் பெற்றார்.[1]
தொழில்
தொகுஜி.அரவிந்தனின் தி சீர் ஹூ வாக் ஒன் ஒன் (1985), என்ற ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றிய ஆவணப்படத்தின் படத் தொகுப்பாளாராக இவர் ஒரு பெரிய வெற்றி பெற்றார். ராஜீவ் விஜய் ராகவனின் சிஸ்டர் அல்போன்சாவின் பரங்கானம் (1986) உட்பட சில ஆவணப்படங்களிலும் பணியாற்றினார். இது 34வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சுயசரிதைக்கான திரைப்பட விருதை வென்றது.[2] ஜான் ஆபிரகாமின் அம்மை அறியான் (1986) படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார்.[3] இவரது மற்ற படங்களில் படிப்புரா (1989), ஜன்மதினம் (1997), அக்னிசாட்சி (1999) ஆகியவையும் அடங்கும். மித்ரு மை பிரண்ட் (2002) என்ற படத்தில் ரேவதியுடன் அனைத்து பெண் குழுவினருடனான இவரது பணிக்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தது.[4] அடுத்த ஆண்டு, உன்னி என்ற குறும் படத்திற்காக இவருக்கு மற்றொரு தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. இவர் தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ளார். சிறந்த தொலைக்காட்சி படத் தொகுப்பாளாருக்கான மூன்று கேரள மாநில விருது பெற்றுள்ளார்.[1] இவரது, சம் டைம்ஸ் (தமிழ்த் திரைப்படம்) திரையரங்குகளில் 2018இல் தமிழ் மொழியில் வெளியானது.
50க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களைத் தொகுத்ததைத் தவிர, இவர் நான்கு ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். [5] ரேவதி, சுமா ஜோசன், பமீலா ரூக்ஸ், சப்னம் விர்மானி போன்ற பெண் திரைப்பட இயக்குநர்களுடன் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1]
சொந்த வாழ்க்கை
தொகு1983ஆம் ஆண்டில் புனே திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற சக மாணவரான ஒளிப்பதிவாளர் வேணுவை இவர் மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[6] வேணு இயக்கிய தயா (1998), முன்னாரிப்பு (2014) , கார்பன் (2018) உட்பட பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "51st National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 127. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
- ↑ "34th National Film Awards". Directorate of Film Festivals. p. 134. Archived from the original on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
- ↑ "Vaisakhan to head Sahitya Akademi". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Vaisakhan-to-head-Sahitya-Akademi/article14518016.ece. பார்த்த நாள்: 25 July 2017.
- ↑ "Changing gears successfully" இம் மூலத்தில் இருந்து 25 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170725092246/http://www.thehindu.com/thehindu/mp/2002/09/03/stories/2002090300270400.htm. பார்த்த நாள்: 25 July 2017.
- ↑ "49th National Film Awards". Directorate of Film Festivals. pp. 50–51. Archived from the original on 24 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
- ↑ "Celebs @ Malavika's wedding". சிஃபி. Archived from the original on 21 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
- ↑ James, Anu. "International Women's Day 2017 special: These 14 women technicians have made a mark in Mollywood movies". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பீனா பால்
- "Have concerns on many issues as I step down: Bina Paul" (video) Manorama Online, October 16, 2014