புகாரா பிராந்தியம்

உஸ்பெக்கிஸ்தான் பிராந்தியம்

புகாரா பிராந்தியம் ( பக்ஸோரோ பிராந்தியம் ) (Bukhara Region, உசுபேகிய மொழி , بۇحارا) என்பது உஸ்பெகிஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. கிசில்கும் பாலைவனம் இந்த பிரதேசத்தின் பெரும்பகுதியை கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக துருக்மெனிஸ்தான், நவோய் பிராந்தியம், காஷ்கடார்யோ பிராந்தியம், சோராஸ்ம் பிராந்தியத்தின் ஒரு சிறிய பகுதி, கரகல்பக்ஸ்தான் குடியரசு ஆகியவை உள்ளன. இது 39,400 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது, மக்கள் தொகை 1,543,900 (2009 இன் இறுதி தரவுகளின்படி) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்திய மக்களில் 71% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [1]

புகாரா பிராந்தியம்
Buxoro viloyati
Бухоро вилояти
பிராந்தியம்
உஸ்பெகிஸ்தானில் புகாரா
உஸ்பெகிஸ்தானில் புகாரா
ஆள்கூறுகள்: 40°10′N 63°40′E / 40.167°N 63.667°E / 40.167; 63.667
நாடுஉஸ்பெகிஸ்தான்
உருவாக்கம்1938
தலைநகரம்புகாரா
அரசு
 • ஹோகிம்உக்தம் பர்னோவ்
பரப்பளவு
 • மொத்தம்41,934 km2 (16,191 sq mi)
ஏற்றம்206 m (676 ft)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்18,43,500
 • அடர்த்தி44/km2 (110/sq mi)
நேர வலயம்East (ஒசநே+5)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே+5)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUZ-BU
மாவட்டங்கள்11
மாநகரங்கள்11
நகரியங்கள்3
ஊர்கள்121
இணையதளம்buxoro.uz

பக்ஸோரோ பகுதி 11 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரம் புகாரா (2005 ஆம் ஆண்டின் இறுதியில் நகரின் மக்கள் தொகை 241,300 என இருந்தது). [1] மற்ற முக்கிய நகரங்களாக ஓலோட், கரகுல், கலோசியோ, காஸ்லி, ஜி’ஜிடுவோன் (மக்கள் தொகையானது 2005 இன் இறுதியில் 40,600 ), கோகோன் (மக்கள் தொகை 53,500, 2005 இன் இறுதியில்), ரோமிதன், ஷோபிர்கான், வப்கென்ட் ஆகியவை உள்ளன.

காலநிலை என்பது பொதுவாக வறண்ட கண்ட காலநிலை ஆகும்.

பழைமையான நகரமான புகாராவானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இது "வாழ்க்கை அருங்காட்சியகம்" மற்றும் சர்வதேச சுற்றுலாவின் பிரபல மையமாக உள்ளது. நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கலை நினைவுச்சின்னங்கள் உள்ளன.

பக்ஸோரோ பிராந்தியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள் உள்ளன. குறிப்பாக இயற்கை எரிவளி, பெட்ரோலியம், கிராபைட்டு, பெண்ட்டோனைட், பளிங்கு, கந்தகம், சுண்ணாம்பு, கட்டுமானத்திற்கான மூலப்பொருட்கள் போன்றவை ஆகும். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பருத்தி அரவை ஆலை, துணி மற்றும் பிற சிறு தொழில்கள் மிகவும் வளர்ந்துள்ளன. [2] பாரம்பரிய கைவினைகளான தங்க சித்திரத்தையல், மட்பாண்டங்கள், செதுக்கு வேலைப்பாடுகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. உஸ்கெகிஸ்தானில் கரகுல் செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலும் உள்ளது. 


நிர்வாக பிரிவுகள் தொகு

 
புகாரா மாவட்டங்கள்
எண் மாவட்ட பெயர் மாவட்ட தலைநகரம்
1 ஓலோட் மாவட்டம் ஓலோட்
2 புகாரா மாவட்டம் கலாசியோ
3 கிஜ்துவோன் மாவட்டம் கிஜ்துவோன்
4 ஜொண்டோர் மாவட்டம் ஜொண்டர்
5 கோகோன் மாவட்டம் ககன்
6 கோராக்கோல் மாவட்டம் கோராக்கோல்
7 கொரோவல்போசர் மாவட்டம் கொரோவல்போசர்
8 பெஷ்கு மாவட்டம் யாங்கிபோசர்
9 ரோமிதன் மாவட்டம் ரோமிதன்
10 ஷோபிர்கான் மாவட்டம் ஷோஃபிர்கான்
11 வோப்கென்ட் மாவட்டம் வோப்கென்ட்

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Statistical Yearbook of the Regions of Uzbekistan 2009, State Statistical Committee, Tashkent, 2009 (in உருசிய மொழி).
  2. "Investment Potentials of the Bukhara Region". Diplomat. Diplomat. Archived from the original on 25 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரா_பிராந்தியம்&oldid=3590228" இலிருந்து மீள்விக்கப்பட்டது