புக்கிட் கேத்ரி தொடருந்து நிலையம்

புக்கிட் கேத்ரி தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bukit Ketri Railway Station மலாய்: Stesen Keretapi Bukit Ketri); சீனம்: 武吉凯特里火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் பாடாங் பெசார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.

புக்கிட் கேத்ரி
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்

Bukit Ketri Railway Station
புக்கிட் கேத்ரி தொடருந்து நிலையம் (2023)
பொது தகவல்கள்
அமைவிடம்புக்கிட் கேத்ரி பெர்லிஸ்  மலேசியா
உரிமம்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் 2  பட்டர்வொர்த்பாடாங் பெசார்
நடைமேடை2 பக்க மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரை நிலை
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டதுஅக்டோபர் 15, 1917
மறுநிர்மாணம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
பாடாங் பெசார்
(முனையம்)
 
  Komuter  
 Padang Besar 
 
ஆராவ்
பட்டர்வொர்த்

பாடாங் பெசார் தொடருந்து நிலையம் மற்றும் பட்டர்வொர்த் தொடருந்து நிலையம் ஆகிய நிலையங்களை இணைக்கும் கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதியில் (KTM Komuter Northern Sector) உள்ள நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 2015-இல் திறக்கப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.

வரலாறு

தொகு

முதன்முதலில் 15 அக்டோபர் 1917 அன்று புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம் முதல் அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் வரையில் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் புக்கிட் கேத்ரி தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் பின்னர் ஈப்போ-பாடாங் பெசார் மின்சார இரட்டைப் பாதை கட்டுமானத் திட்டத்தில் (Ipoh-Padang Besar Electric Double Track) சீரமைக்கப்பட்டு 1 சனவரி 2016 அன்று மீண்டும் திறக்கப்பட்டது [1]

இடம்

தொகு

புக்கிட் கேத்ரி தொடருந்து நிலையம் பெர்லிஸ், புக்கிட் கேத்ரியில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பெசேரி (Beseri); சுப்பிங் (Chuping) போன்ற நகரங்களுக்கு அருகிலும் உள்ளது. இந்த நிலையம் பெர்லிஸ் மாநிலத் தலைநகரான கங்கார் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

காட்சியகம்

தொகு
  • புக்கிட் கேத்ரி தொடருந்து நிலையத்தின் காட்சிப் படங்கள் (24 திசம்பர் 2023)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு