புட்பகிரி (மலை)

மலைச்சிகரம்

புட்பகிரி (குமார பர்வதா) (Pushpagiri) என்பது கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயத்தில்உள்ள மிக உயர்ந்த சிகரமாகும் (1712 மீட்டர்=5617 அடி). இது குடகு மாவட்டத்தில் சோம்வார்பேட்டை வட்டத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனுடைய எல்லைகளாக தட்சிணக் கன்னடம் மற்றும் குடகு மற்றும் ஹாசன் மாவட்டங்கள் உள்ளன. இது கர்நாடகாவின் 4வது மிக உயர்ந்த சிகரமாகும். இந்த மலையின் சமசுகிருத பெயர் புஷ்பகிரி என்பதாகும். இது குறித்து நாகார்ஜுனகோண்ட் கோவிலின் இரண்டாவது அப்சிடல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] மேலும் இது ஆந்திராவில் உள்ள கடப்பாவின் வடக்கே உள்ள வேறு ஓர் மலையைக் குறிப்பதாகவும் உள்ளது.

புட்பகிரி
புட்பகிரி மலையில் மகிழ்ச்சியான தருணம்
உயர்ந்த புள்ளி
உயரம்1,712 m (5,617 அடி)
ஆள்கூறு12°40′00″N 75°41′00″E / 12.66667°N 75.68333°E / 12.66667; 75.68333
புவியியல்
புட்பகிரி is located in கருநாடகம்
புட்பகிரி
புட்பகிரி
புட்பகிரி அமைவிடம், கர்நாடக
புட்பகிரி is located in இந்தியா
புட்பகிரி
புட்பகிரி
புட்பகிரி (இந்தியா)
அமைவிடம்Border of Sullia Taluk, Dakshina Kannada district, Sakaleshpur Taluk Hassan District Somvarpet Taluk , Kodagu district Karnataka, இந்தியா
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய வழிHike[சான்று தேவை]

புட்பகிரி மலைகள்

தொகு

புட்பகிரி அல்லது சுப்ரமண்யா மலைகள் (மேலும் குமார பர்வதம் என்றும் குறிப்பிடப்படுகிறது) குடகு மலையின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமாகவும் கர்நாடகாவின் நான்காவது உயர்ந்த சிகரமாகவும் உள்ளது.

இது சோம்வார்பேட்டையிலிருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவிலும் குமாரவள்ளியிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவிலும் காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது.

புட்பகிரியின் கிழக்கு நுழைவாயிலை பீதஹள்ளியில் இருந்து ஹெகடமடேன் கோயில் வழியாகவும், மேற்கு நுழைவாயிலை குக்கே சுப்பிரமணியாவிலிருந்து கிரி கடே வழியாகவும் அடையலாம். இருப்பினும், பீதஹள்ளி வழியாகச் செல்வது எளிமையானது.

குக்கே சுப்பிரமணியா பகுதியிலுள்ள நுழைவாயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 165 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் விமான நிலையமாகும். இது 106 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பாத்ரா மானே அருகே அமைந்துள்ள வனத்துறையிலிருந்து மலையேறுபவர்கள் அனுமதி பெற்றே இம்மலையில் ஏற இயலும். இரவில் முகாமிட்டுத் தங்குவதற்கான ஏற்ற இடமாக இது உள்ளது.

மக்கள்தொகை

தொகு
  • சோம்வார்பேட்டை
2001ன் இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,[2] சோம்வார்பேட்டையின் மக்கள் தொகை 7218 ஆகும். இதில் 50% ஆண்களும், 50% பெண்களுமாக உள்ளனர். சோம்வார்பேட்டையின் சராசரி கல்வியறிவு விகிதம் 75% ஆகும். இது தேசியச் சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 70%ஆக உள்ளது. சோம்வார்பேட்டையில், 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.
சோம்வார்பேட்டை 10°25′N 74°44′E / 10.42°N 74.73°E / 10.42; 74.73ல் சுமார் 1525 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • மடிகேரி

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ன்படி,[3] மடிகேரி மக்கள் தொகை 33,381 ஆகும். மக்கள் தொகையில் 57.2% ஆண்கள், 42.8% பெண்கள். மடிகேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 85% ஆகும். இது தேசியச் சராசரியான 57.2% ஐ விட அதிகமாகும்: ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 80%. மக்கள் தொகையில் 6 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 11% ஆவார்கள். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மடிக்கேரி 12°25′N 75°44′E / 12.42°N 75.73°E / 12.42; 75.73ல் சுமார் 1525 மீட்டர் உயரத்தில் உள்ளது.
  • குசால் நகர்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ன் படி குசால் நகர் மக்கள் தொகை 26,487 ஆகும்.[4] இதில் ஆண்கள் 53%, பெண்கள் 47% ஆகும். குசால் நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இது தேசியச் சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவானது 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். குசால் நகரில் சுமார் 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
குசால் நகர் 12°28′N 75°58′E / 12.47°N 75.97°E / 12.47; 75.97 அமைவிடத்தில் சராசரியாக 831 உயரத்தில் அமைந்துள்ளது.

காலநிலை நிலை

தொகு

இப்பகுதியில் பொதுவாகக் குளிர்ச்சியான ஈரமான காலநிலை நிலவும். உயர்ந்த நிலப்பரப்பில் காணப்படும் காலநிலை மாறுபாடுகள் அதிகமில்லாமல் காணப்படும். வருடத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிக மழை பெய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை இப்பகுதி முழுவதும் மூடுபனியால் போர்த்தப்பட்டுக் காணப்படும்.

  • மழைப்பொழிவு: குடகு மலையில் மழைப்பொழிவானது மிகுந்த வேறுபாட்டுடன் காணப்படும். மழையளவானது மேற்குப்பகுதியில் ஆண்டுக்கு 3500மிமீ ஆகவும், கிழக்கு பீடபூமிக்கு அருகில் ஆண்டுக்கு 1000மிமீ ஆக உள்ளது.
  • வெப்பநிலை: நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் மாதங்களாகவும்; பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை சராசரியாக 7 ° முதல் 20° சென்டிகிரேட் வரை இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்களாக இருக்கின்றன. இந்த மாதங்களில் சராசரி வெப்பநிலை 29° சென்டிகிரேடாக இருக்கும். மெமெர்கரா மற்றும் விராஜ்பேட்டையின் வெப்பநிலை குசால் நகரை விடக் குறைவாக உள்ளது.
  • தெரிநிலை: இந்த இடம் பெரும்பாலும் நல்ல தெரிநிலையைப் பெறுகிறது, இருப்பினும் மூடுபனி சில நேரங்களில் தெரிநிலையைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் காண்க

தொகு

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pushpagiri history".
  2. ர் ந
  3. https://www.census2011.co.in/data/town/803187-madikeri-karnataka.html
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்பகிரி_(மலை)&oldid=4079630" இலிருந்து மீள்விக்கப்பட்டது