புதுமடம்
புதுமடம் (Pudumadam) இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம்-இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உச்சிப்புளி என்னும் இடத்தில் இருந்து சரியாக 4 கிமீ தொலைவில் தெற்கில் அமைந்துள்ள கடலோர கிராமம்.
புதுமடம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°16′37″N 78°59′38″E / 9.27702°N 78.993845°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
ஊராட்சி தலைவர் | காமில் உசேன் [4] |
கல்வியறிவு | 65% |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.pudumadam.net |
வரலாறு
தொகுஇராமநாதபுரத்தை ஆட்சிசெய்த சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி புதுமடம்.இந்த ஊரின் ஆரம்பகால பெயர் மறவர்மானாங்குடி என அழைக்கப்பட்டது.வடநாட்டை சேர்ந்த ரங்காசாரி என்பவர் தன்னுடைய நேர்ச்சைக்காக தற்போதுஉள்ள மடத்தை கட்டினார்.அந்த புது“மடத்“தாலேயே புதுமடம் எனப்பபடுகிறது.இதன் எஞ்சிய பகுதி மானங்குடி என தற்போது தனி கிராமமாக இருந்து வருகிறது இந்த பகுதியை அரசரின் சார்பாக நிர்வகித்துவந்த குடும்பமும்,சில முஸ்லிம் குடும்பங்களும் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள்.பின்னர் மற்ற மக்கள் இப்பகுதிக்கு குடிவந்துள்ளனர் இலக்கியங்களில் தென்புதுவை என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தற்பொழுது மேற்கே மக்கள் வசிக்கும் பகுதி அக்காலங்களில் கருவேலங்காடுகளாக இருந்தாகவும் தற்பொழுது இப்பகுதியில் இருந்து பெரியபட்டினம் என்கிற ஊர் வரை இணைந்து இருந்ததாகவும் வரலாறு உண்டு. அக்காலங்களில் சுண்ணாம்புக் காளவாசல் இருந்தது.
மக்கள்
தொகுஇங்கு 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பான்மையாக இசுலாமியர்களும், இந்துக்களும் கிறித்தவர்களும் ஒன்றாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுமடத்தில் மூன்று இஸ்லாமிய ஜமாஅத்தும், பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ, தமுமுக, மக்கள் தேசம் கட்சி, தவ்ஹீத் ஜமாஅத் பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம் போன்ற இசுலாமிய இயக்கங்களும் இயங்கி வருகின்றன. மூன்று ஜமாஅத் வீதம் ஒரு பள்ளிவாசலும் ஒரு தவ்ஹீத் மர்கசும் பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம் செயல்படுகின்றன. கிறித்தவ CSI தேவாலயமும், சில இந்துக் கோவில்களும் உள்ளன.
தொழில்
தொகுமன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு ஆரம்ப காலத் தொழிலாக மீன்பிடித் தொழிலை புதுமடம் மக்கள் செய்து வருகின்றனர். மற்றும் அதிக அளவில் வளைகுடா நாடுகளிலும் பணிபுரிகின்றனர். கிறித்தவர்களில் பெரும்பான்மையினர் கட்டுமானத் தொழில் செய்து வருகின்றனர். இந்துக்களில் சிலர் வெற்றிலை பயிரிட்டனர். தற்போது இத்தொழில் நலிவடைந்து விட்டது. தற்போது உள்ள இஸ்லாமியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர், சிலர் உள்ளுரில் கூலி தொழில் செய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் காலணி வியாபாரத்தில் உள்ளனர். சிலர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் பணியில் உள்ளனர்.
கல்வி
தொகுபுதுமடத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும் இரண்டு தொடக்கப் பள்ளிகளும் இரண்டு தனியார் மழலையர் பள்ளி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மீன்வள ஆராய்ச்சிக்கானத் துணை மீன்வள ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமும் உள்ளன.
சிறப்புகள்
தொகுபுதுமடத்தின் சிறப்பு இராமநாதபுர மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் கிடைக்காத சுத்தமான குடிநீர் ஆதாரத்தினை கொண்டுள்ளது.[சான்று தேவை]
<div class="thumb tnone" style="margin-left: auto; margin-right:auto; width:100%; max-width:Expression error: Unrecognized word "x".px;">
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பஞ்சாயத்து தலைவர் [1].