புனித மரியன்னை கல்லூரி, திருச்சூர்
புனித மரியன்னை கல்லூரி, திருச்சூர், என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். [1] சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கார்மேல் அன்னை சபையின் நிர்மலா மாகாணத்தின்[2] கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரி,கோழிக்கோடு பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. [3]
படிமம்:St Marys College Logo.jpg | |
குறிக்கோளுரை | "சிறப்பு மற்றும் சேவை" |
---|---|
வகை | அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி |
உருவாக்கம் | 1946 |
சார்பு | கோழிக்கோடு பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை , பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
தலைவர் | முனைவர் மாரியட் ஏ தெரட்டில் |
முதல்வர் | முனைவர் டி.எல்.பீனா |
அமைவிடம் | , , 680020 , 10°31′31″N 76°13′07″E / 10.525299°N 76.218723°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
வரலாறு
தொகுகார்மேல் அன்னை சபையின் சகோதரிகள் பல்கலைக்கழக கல்வித் துறையில் முதன்முதலாக 1946 ஆம் ஆண்டு திருச்சூரில் புனித மரியன்னை கல்லூரியை தொடங்கியதன் மூலம் நுழைந்துள்ளனர். இம்மாவட்டத்தின் முன்னோடியான முதல் தர மகளிர் கல்லூரி இதில் அரசு உதவியோடும், சுயநிதியோடும் 15க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
1967 ஆம் ஆண்டில், இந்த புனித மரியன்னை கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, திருச்சூரில் எஞ்சியிருந்த பட்டப்படிப்புக்கு முந்தைய பிரிவு மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகள் விமலா கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு இக்கல்லூரியானது இளங்கலையில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளின் தொடக்கத்துடன் முதல் தரக் கல்லூரியாக மீண்டும் தனது நிலையைப் பெற்றது. கணிதம் மற்றும் வரலாறு துறைகளில் முதுகலை படிப்புகள் முறையே 1995 மற்றும் 1998 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1987 ஆம் ஆண்டில், இந்த கல்விச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் புனித மரியன்னை கல்லூரி மேலும் பிரிக்கப்பட்டு கார்மேல் கல்லூரி என்ற புதிய கல்லூரி தொடங்கப்பட்டது. புனித மரியன்னை, கார்மேல் மற்றும் விமலா கல்லூரிகள், என மொத்தம் மூன்று கல்லூரிகளின் வழியாக திருச்சூர் சிஎம்சி கல்விச் சங்கமானது இம்மாநிலத்தின் கல்வித் துறையில் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டதாக மாறியுள்ளது.
அங்கீகாரம்
தொகுபல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் தன்னாட்சி அங்கீகாரம்[4] பெற்றுள்ள இக்கல்வி நிறுவனம், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) நான்காவது சுழற்சியில் 2022 ஆம் ஆண்டில் 3.41 சி.ஜி.பி.ஏ மதிப்பெண்ணுடன் ஏ+ தரத்தை பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [5]
கிறித்தவ சிறுபான்மை கல்வி நிறுவனமான இது, 1946 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி, 1957 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்துடனும், 1968 ஆம் ஆண்டு முதல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ளது.
.
துறைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Convent History" (PDF). Trichurarchdiocese. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
- ↑ "History". StMarysCollegThrissur. Archived from the original on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-30.
- ↑ "கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள் - 2023".
- ↑ "UGC சட்டம், 1956 இன் 2(f ) & 12(B) இன் கீழ் அங்கீகாரம்" (PDF).
- ↑ "நான்காவது சுழற்சி- நாக் கமிட்டி" (PDF).