புரு வன ஈப்பிடிப்பான்
புரு வன ஈபிடிப்பான் (Buru jungle flycatcher)(யூமியாசு அடிடிடசு), என்பது வரி மார்பு வன ஈபிடிப்பான் என்று அழைக்கப்படும் பழைய உலக ஈப்பிடிப்பான் பறவைச் சிற்றினமாகும். இது முயூசிகாபிடே குடும்பத்தினைச் சார்ந்த இந்தோனேசியத் தீவான புருவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும். இது 500 முதல் 1,500 மீட்டர் உயரமுடைய வெப்பமண்டல காடுகளில் வசித்து வருகின்றது.
புரு வன ஈபிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. அடிடிடசு
|
இருசொற் பெயரீடு | |
Eumyias அடிடிடசு (ஹார்ட்டெர்ட், 1900) | |
வேறு பெயர்கள் | |
|
முன்னர் இந்த சிற்றினமானது ரைனோமியாசு பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டு யூமியாசு பேரினத்திற்கு 2010க்கு பிறகு மூலக்கூறு இனவரலாறு ஆய்வின் அடிப்படையில் மாற்றப்பட்டது. ரைனோமியாசு பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் கொண்ட பேரினமாகும்.[2][3]
பாதுகாப்பு
தொகுகுறிப்பிட்ட வாழிடம், காடுகளை வெட்டுதல் மற்றும் தீவில் மனித செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் காரணமாக, 1994இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் இந்தச் சிற்றினத்தினை அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டது. இந்த வகைப்பாடு 2000 மற்றும் 2004இல் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கான காரணம், இந்தப் பறவைகள் காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்டன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Eumyias additus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709117A94193116. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709117A94193116.en. https://www.iucnredlist.org/species/22709117/94193116. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatcher reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.