பூஜா வைத்தியநாத்

பூஜா வைத்தியநாத் (Pooja Vaidyanath) என்பவர் இந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றிய ஒரு பின்னணி பாடகி ஆவார்.[1] இவர் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் பல மெய்க்காட்சி பாடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, ஏ. ஆர். ரகுமான், டி. இமான் மற்றும் எஸ். தமன் உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

பூஜா வைத்தியநாத்
பிற பெயர்கள்ஏ. வி. பூஜா
பிறப்பு15 பிப்ரவரி 1988
சென்னை, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2013–முதல்

தொழில்

தொகு

சென்னையில் வங்கி ஊழியரான மருத்துவர் வைத்தியநாத் மற்றும் கீதா ஆகியோருக்கு மகளாகப் பூஜா பிறந்தார். குழந்தையாக இருந்தபோது கருநாடக மற்றும் இந்துசுதானி இசையில் ஆர்வம் கொண்ட பூஜா தொடர்ந்து பாடும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் 2006ஆம் ஆண்டில் மா தொலைக்காட்சியில் எஸ். பி. பாலசுப்ரமணியம் தொகுத்து வழங்கிய தெலுங்கு நிகழ்ச்சியான பாடலனி உண்டியில் முதன்முதலில் பங்கேற்று பரிசினை வென்றார். பின்னர் இவர் ஜீ தெலுங்கு சா ரே கா மா பா வாய்ஸ் ஆப் யூத் நிகழ்ச்சியில் போட்டியிட்டார். இதில் இவர் 2008-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2010-இல் தமிழ் மொழி தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வானம்பாடி போட்டியிலும் வென்றார். 2011ஆம் ஆண்டில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் இதன் மூலம் இவருக்குத் திரைப்படத் துறையிலிருந்து வாய்ப்புகளை வழங்கியது. ஏ. ஆர். ரகுமானின் இந்தி படமான ராஞ்சனாவில் பணியாற்றிய பூஜா, பிலிம்பேர் விமர்சகர் ஒருவர் "வெற்றியாளர்" என்று விவரித்த "தும் தக்" பாடலைப் பாடினார்.[2][3] ரகுமான் இவருடன் மீண்டும் தமிழில் பாடலையும், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாபதியில் "கானவே" என்ற பாடலையும் பாடினார்.

வருத்தப்படாதா வாலிப சங்கம் படத்தில் "பார்க்காதே" (2013), ஜில்லாவின் திரைப்படத்தில் "எப்ப மாமா ட்ரீட்டு" (2014) எனும் பாடலையும், ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் மெர்சல் (2017) திரைப்படத்தின் "ஆளப்போரான் தமிழன்" உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பூஜா பாடியுள்ளார்.[4][5][6]

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொகு
ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர் பங்கு தொலைக்காட்சி
2024 சூப்பர் சிங்கர் சீசன் 10 போட்டியாளருடன் இணைந்து பாடுதல் விஜய் தொலைக்காட்சி

குறிப்பிடத்தக்க இசைத்தொகுப்புகள்

தொகு
ஆண்டு பாடலின் தலைப்பு திரைப்படம் மொழி இசையமைப்பாளர் குறிப்புகள்
2013 "தலைவா" தலைவா தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
2013 "தும் தக்" ராஞ்சனா இந்தி ஏ. ஆர். ரகுமான்
2013 "கனவே" "உன்னால்" அம்பிகாபதி தமிழ் ஏ. ஆர். ரகுமான்
2013 "அன்னமே" "நரிங்கா உறங்கா"
அன்னக்கொடி தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
2013 "பார்காதேய் பார்காதேய்" வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழ் டி. இமான் விஜய் தொலைக்காட்சி விருது-பிடித்த பாடகி
2014 "எப்ப மாமா ட்ரீட்டு" ஜில்லா தமிழ் டி. இமான்
2014 "மொசலே மொசலே" என்னமோ ஏதோ தமிழ் டி. இமான்
2014 "நெஞ்சங்குழி" நவீன சரஸ்வதி சபதம் தமிழ் பிரேம் குமார்
2014 "மனமே மனமே" வன்மம் தமிழ் எஸ். தமன்
2014 "பேசாதே" திருடன் போலீஸ் தமிழ் யுவன் சங்கர் ராஜா
2014 "ஏன் இங்கு வந்தான்" மீகாமன் தமிழ் எஸ். தமன்
2015 "ஜிங்கிலியா ஜிங்கிலிய" புலி தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
2016 "வணக்கம் சார்" முடிஞ்சா இவன புடி தெலுங்கு டி. இமான்
2016 "இளந்தாரி" "கன்னடிக்கலா"
மாவீரன் கிட்டு தமிழ் டி. இமான்
2017 "ஆளப்போரான் தமிழன்" மெர்சல் தமிழ் ஏ. ஆர். ரகுமான்
2019 "வேற லெவல் யு" அயோக்யா தமிழ் எஸ். தமன்
2022 "மாலே பூவு" தி லைப் ஆப் முத்து (வெந்து தணிந்தது காடு) தெலுங்கு ஏ. ஆர். ரகுமான்

தனி இசை

தொகு
ஆண்டு பாடல். இசையமைப்பாளர் பாடல் வரிகள் பாடகர்கள். குறிப்புகள்
2014 முன்னே வா தா (மாணவர் கீதம்)
ராகேஷ் சேதுலிங்கம் ராகேஷ் சேதுலிங்கம் ராகேஷ் சேதுலிங்கம், பூஜா வைத்தியநாத், சைசரன், நித்யஸ்ரீ இசை வீடியோவை வெளியிட்டது டிரம்ஸ் சிவமணி, & ஐசரி கணேஷ்
2016 ஆலாபானா
திரோன் பெர்னாண்டோ வைராபாரதி பூஜா வைத்தியநாத், கிரிஷ் மனோஜ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Complete List Of Pooja Vaidyanath Songs | Singer Pooja Vaidyanath Song Database". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  2. "Tamil singers hot in Bollywood". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Tamil-singers-hot-in-Bollywood/etarticleshow/21084336.cms. பார்த்த நாள்: 8 June 2019. 
  3. "Music Review: Raanjhanaa". filmfare.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  4. "Music to mitigate pain". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  5. "Audio beat: Jilla - Big stars and some great music". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  6. "Audio Beat: Varuthapadatha Vaalibar Sangam - Songs to lift your mood". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_வைத்தியநாத்&oldid=3910187" இலிருந்து மீள்விக்கப்பட்டது