பூதிமுட்லு
பூதிமுட்லு (Bothimutlu) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது சிகரமாகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
பூதிமுட்லு | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635121 |
பெயராய்வு
தொகுபோசள மன்னன் வீர இராமநாதன் தன் படைகளுக்கு உணவு சமைக்க இந்த இடத்தைப் பயன்படுத்தினான். அதற்காக இந்த இடத்தில் விரகு அடுப்பு பயன்படுத்தப்பட்டது. அச்சாம்பல் இப்பகுதியில் குவியலாக கொட்டபட்டதாக கூறப்படுகிறது. சாம்பல் குவியலாக இப்பகுதியில் இருந்ததால் (பூடுதி+முட்லு = பூதிமுட்லு) இப்பெயர் வந்தது எனப்படுகிறது.
பூடுதி என்ற தெலுங்குச் சொல்லுக்குச் சாம்பல் என்று பொருள். அதேபோல முட்லு என்ற தெலுங்கு சொல்லுக்கு குவியல் என்பது பொருளாகும். ஆக சாம்பல் குவியல் என்ற பொருளில் இந்த ஊருக்கு பூதிமுட்லு என்ற பெயர் வந்ததாக கோ. சீனிவாசன் கூறுகிறார்.[1]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், வேப்பனபள்ளியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 259 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 377 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,604 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 782 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 822 என்றும் உள்ளது. கிராம மக்களில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 72.38% என்றும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 53.20% என்றும் உள்ளது. ஆக கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 63.03% ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 132.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Bothimutlu Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ "Budhimutlu Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help)