பூவன்குறிச்சி
பூவன்குறிச்சி (Poovankurichi) என்பது திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஒரு பண்டைய குக்கிராமம் ஆகும். பூவன் என்பதன் பொருள் காற்று, குறிச்சி என்பதன் பொருள் மலை மற்றும் மலை அருகே அமைந்துள்ள இடங்கள். பொதிகை மலையைப் புகைப்படம் எடுத்து ஒரு சிறந்த இடம். பூவன்குறிச்சி, கருணை ஆற்றுக் (கடநா நதி ) கரையில் அமைந்துள்ளது. கருணை ஆறு ஆண்டு முழுவதும் பாயும் ஒரு வற்றாத ஜீவ நதி.[சான்று தேவை] பூவன்குறிச்சியை ஒரு கால்வாய், மூன்று ஏரிகள், மலைகள் மற்றும் குன்றுகள் சூழ்கின்றன.
பூவன்குறிச்சி | |||||||
ஆள்கூறு | 8°49′N 77°24′E / 8.81°N 77.4°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 90 மீட்டர்கள் (300 அடி) | ||||||
குறியீடுகள்
|
புவியியல் தகவல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 8°45'35"N 77°22'56"E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 90 மீட்டர் (293 அடி) உயரத்தில் இருக்கின்றது. கிராமத்தை காகயன் நல்லூர், கோவன் குளம், ஆம்பூர், மற்றும் தாட்டன் பட்டி போன்ற பல கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் சூழ்கின்றன. திருநெல்வேலி நகரத்தில் இருந்து 50கி. மீ மேற்கில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
போக்குவரத்து தகவல்
தொகுபூவன்குறிச்சிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆம்பூர். இவ்வூரின் முக்கிய போக்குவரத்துகள் ரயில் மற்றும் பேருந்து.
தொழில்
தொகுபண்டைய காலத்தில் இக்கிராமத்தின் முக்கிய தொழில் நெசவு மற்றும் விவசாயம் ஆகும். ஆனால் இப்போது விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.
வரலாறு
தொகுபூவன்குறிச்சி இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.[சான்று தேவை] பூவன்குறிச்சி தோன்றிய காலத்தில் இருந்து ஒரே பெயரைக் கொண்ட ஒரு சிற்றூர் என்பது ஒரு சிறப்பு ஆகும்.[சான்று தேவை] 1950ல் முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டது.[சான்று தேவை]
பூவன்குறிச்சி அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்
தொகுபூவன்குறிச்சி பல சுற்றுலாத் தளங்களின் இடையே அமைந்துள்ளது.
- 5.5 கிலோமீட்டர் தொலைவில் சிவசைலம் கோவில்
- 8.5 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் (திருநெல்வேலி)
- 10 கிலோமீட்டர் தொலைவில் கடனாநதி (கருணை ஆறு)அணை
- 11 கிலோமீட்டர் தொலைவில் அகத்தியர் நீர்வீழ்ச்சி
- 21 கிலோமீட்டர் தொலைவில் முண்டன்துரை மற்றும் கலக்காடு புலிகள் சரணாலயம்
- 23 கிலோமீட்டர் தொலைவில் பாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி
- 25 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அணை
- 27 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
- 35 கிலோமீட்டர் தொலைவில் தென்காசி
- 38 கிலோமீட்டர் தொலைவில் குற்றாலம்
- 40 கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டை (நகரம்)
- 41 கிலோமீட்டர் தொலைவில் மாஞ்சோலை
- 43 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
- 112 கிலோமீட்டர் தொலைவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.