பெண்டாங் மக்களவைத் தொகுதி

பெண்டாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pendang; ஆங்கிலம்: Pendang Federal Constituency; சீனம்: 彭当联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பெண்டாங் மாவட்டத்தில் (Pendang District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P011) ஆகும்.[4]

பெண்டாங் (P011)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Pendang (P011)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் பெண்டாங் மக்களவைத் தொகுதி
மாவட்டம்பெண்டாங் மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிபெண்டாங் தொகுதி
முக்கிய நகரங்கள்பெண்டாங்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அவாங் அசிம்
(Awang Hashim)
வாக்காளர்கள் எண்ணிக்கை94,547[1][2]
தொகுதி பரப்பளவு629 ச.கி.மீ[3]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பெண்டாங் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (88.6%)
  சீனர் (5.3%)
  இதர இனத்தவர் (4.2%)

பெண்டாங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெண்டாங் தொகுதி 44 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[5]

பொது

தொகு

பெண்டாங் மாவட்டம்

தொகு

பெண்டாங் மாவட்டம் (Pendang District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார்; இந்த மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ளது.

கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 103 கி.மீ. தொலைவில், கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில்; தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது.

வரலாறு

தொகு

வரலாற்று ரீதியாக, தாய்லாந்திற்கு விளைப் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் யானைகளை இனப்பெருக்கம் (Elephants Breeding Grounds) செய்வதற்கான மிகப்பெரிய இடமாக பெண்டாங் இருந்தது.

பெண்டாங் முன்பு அலோர் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி 1975-இல் சொந்த மாவட்டமாக மாறியது.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

பெண்டாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  • ஆயர் பூத்தே (Air Puteh)
  • புக்கிட் ராயா (Bukit Raya)
  • குவார் கெப்பாயாங் (Guar Kepayang)
  • பாடாங் கெர்பாவ் (Padang Kerbau)
  • பாடாங் பெலியாங் (Padang Peliang)
  • பாடாங் பூசிங் (Padang Pusing)
  • ரம்பாய் (Rambai)
  • தோபியார் (Tobiar)

பெண்டாங் நாடாளுமன்றத் தொகுதி

தொகு
பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
உலு மூடா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது 1986–1990 ஒசுமான் அப்துல்
(Othman Abdul)
பாரிசான் (அம்னோ)
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2002 பாட்சில் நூர்
(Fadzil Noor)
பாஸ்
2002–2004 ஒசுமான் அப்துல்
(Othman Abdul)
பாரிசான் (அம்னோ)
11-ஆவது 2004–2008 முகமட் அயாத்தி
(Mohd Hayati Othman)
பாஸ்
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 ஒசுமான் அப்துல்
(Othman Abdul)
பாரிசான் (அம்னோ)
14-ஆவது 2018–2020 அவாங் அசீம்
(Awang Hashim)
பாஸ்
2020–2022 பெரிக்காத்தான் (பாஸ்)
15-ஆவது 2022 – தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பெண்டாங் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
94,547 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
76,381 79.95%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
75,594 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
137 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
650 -
பெரும்பான்மை
(Majority)
31,289 41.39%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்

பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பெண்டாங் தொகுதி)
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
அவாங் அசிம்
(Awang Hashim)
பெரிக்காத்தான் (PN) 49,008 64.83%
சுராயா யாக்கோப்
(Suraya Yaacob)
பாரிசான் (BN) 17,719 23.44%
சுல்கிப்லி முகமது
(Zulkifly Mohamad)
பாக்காத்தான் (PH) 8,058 10.66%
அப்துல் ரசீது இயூப்
(Abdul Rashid Yub)
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA) 809 1.07%

சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N18 தொக்காய்
(Tokai)
முகமது அயாத்தி ஒசுமான்
(Mohd Hayati Othman)
பெரிக்காத்தான் (பி.என்)
N19 சுங்கை தியாங்
(Sungai Tiang)
சுராயா யாக்கூப்
(Suraya Yaacob)
பாரிசான் (அம்னோ)

மேற்கோள்கள்

தொகு
  1. "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

தொகு

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்