பெருவள்ளூர்

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பெருவள்ளூர் (Peruvallur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தின் திருரங்கடி வட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். [1] பெருவள்ளூரில் ஏராளமான விவசாய நிலங்களும், தூய நீர் கொண்ட சுமார் 35 குளங்கள் உள்ளன. [2]

பெருவள்ளூர்
கணக்கெடுப்பு ஊர்
பெருவள்ளூர் is located in கேரளம்
பெருவள்ளூர்
பெருவள்ளூர்
கேரளத்தில் அமைவிடம்
பெருவள்ளூர் is located in இந்தியா
பெருவள்ளூர்
பெருவள்ளூர்
பெருவள்ளூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°6′0″N 75°55′40″E / 11.10000°N 75.92778°E / 11.10000; 75.92778
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்30,624
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673638, 676317
வாகனப் பதிவுKL-10,KL-55, KL-65, KL-80
எப்.எம்.எஸ் மார்ட் பல்பொருள் அங்காடி, பரம்பில்பீடிகா

கோழிகோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் பெருவள்ளூர் அருகே உள்ளது. இதன் அருகில் கொண்டோட்டி, செம்மாட், தேஞ்ஞிப்பாலம் ஆகிய நகரங்கள் உள்ளன. பரம்பில் பீடிகா மற்றும் கடப்பாடி ஆகியவை பல மாடி கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களுடன் வளர்ந்து வரும் சந்தை மையங்களாக உள்ளன. இங்குள்ள பல கிராமவாசிகள் வளைகுடாவில் குடியேறியவர்களாக உள்ளனர். பெருவள்ளூர் ஊராட்சி என்பது ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும், மேலும் இது சிறப்பு நிலை ஊராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெருவள்ளூர் ஊராட்சி அக்டோபர் 2000ல் உருவாக்கப்பட்டது. ஐ.யு.எம்.எல்., ஊராட்சிகளின் முக்கிய அரசியல் கட்சியாகும்.

மக்கள்தொகையியல்

தொகு

2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, பெருவள்ளுரின் மொத்த மக்கள் தொகை 30,624 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 15,005 என்றும், பெண்களின் எண்ணிக்கை 15,619 என்றும் உள்ளது.[1]

பள்ளிகள்

தொகு
  • நஜாத் இஸ்லாமிய பள்ளி உங்குகல்
  • அரசு சர்வதேச உயர்நிலைப் பள்ளி பெருவள்ளூர் [3]
  • ஜி.எல்.பி. பள்ளி பெருவள்ளூர் நடுக்கரை [4]
  • அல்ஃபாலா இஸ்லாமிய ஆங்கில வழி பள்ளி [5]
  • ஜி.எல்.பி. பள்ளி பரம்பில்பீடிகா [4]
  • ஐ.எம்.யு.பி பள்ளி பரச்செனபுரயா
  • நவபத் மத்திய பள்ளி வாழகண்டி
  • ஃபுல்பிரைட் முன் மழலையர் பள்ளி
  • அக்முப் பள்ளி சத்திரத்தோடி
  • ஏ.எம்.எல்.பி பள்ளி வட்டப்பரம்
  • அரசு எல்பி பள்ளி ஒலக்கரா
  • டியோ அப் பள்ளி வாழக்கண்டி
  • பிஎம்எஸ்ஏ எல்பி பள்ளி வாழக்கண்டி'

தொழில்கள்

தொகு
  • பிஸ்மி அவில் உணவு உற்பத்தியகம்
  • சன் உணவுகள்
  • பெரிஞ்சீரி எண்ணெய் ஆலைகள்
  • பெருவள்ளூர் மர தொழிற்சாலைகள்
  • மெஸ்ஸா உணவு பொருட்கள்
  • ஸ்கை லார்க் மாடுலர் மரச்சாமான்கள்
  • ஆல்ஃபா இனிப்பு
  • ஏ.எம் மரம் அறுக்கும் ஆலை
  • அரக்கல் மரத் தொழில்கள்
  • பேமஸ் உணவுப் பொருட்கள்

பல்பொருள் அங்காடிகள்

தொகு
  • எப்.எம்.எஸ் மார்ட் பல்பொருள் அங்காடி
  • எம்.கே ஸ்டோர்ஸ்

போக்குவரத்து

தொகு

பெருவள்ளூர் கிராமம் மேற்கில் உள்ள ஃபெரோக் நகரம் மற்றும் கிழக்கில் உள்ள நிலம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 புலிக்கல் வழியாக செல்கிறது. இதன் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் ஃபெரோக்கில் உள்ளது.

மருத்துவமனைகள்

தொகு
  • சி.எச்.சி பரம்பில் பீடிகா
  • பூக்கோயா தங்கல் டயாலிசிஸ் மையம் - கடப்பாடி
  • ஸ்மைல் லவுஞ்ச் பல் மருத்துவமனை-பரம்பில் பீடிகா
  • அரக்கல் ஹாஜிஸ் ஆயுர்வேதா - பரம்பில் பீடிகா
  • பல்ஸ் ஹோமியோபதி சுகாதார பராமரிப்பு - பரம்பில் பீடிகா
  • ஏ.ஆர். மருத்துவமனை பரம்பில்பீடிகா
  • ஏ.ஆர். பாலி கிளினிக் கடப்பாடி
  • சூர்யா பல்நோக்கு பல் மருத்துவமனை கடப்பாடி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. Peruvallur history
  3. official websiteபரணிடப்பட்டது 2013-12-31 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 school list
  5. official website
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவள்ளூர்&oldid=3884846" இலிருந்து மீள்விக்கப்பட்டது