பேச்சு:இந்தியா
இந்தியா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
இந்தியா ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
இந்தியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
இந்தியா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
இந்தியா என்பது விக்கித்திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம். |
பதிப்பு 0.1 | |
---|---|
நாடுகள் தொடர்பான இந்தக் கட்டுரை குறுந்தட்டு திட்டத்திற்கு (பதிப்பு 0.1) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
இந்தியா: நாளாந்தப் பக்கப்பார்வைகள் |
மொழி பெயர்க்கும் போது ஏன் தற்போதைய ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கக் கூடாது. அங்குள்ள தற்போதைய கட்டுரை அருமையாக உள்ளது. -- Sundar 05:11, 28 ஏப் 2005 (UTC). For ease of editing, I was tranlating the previous english text already found in this page. hereafter I will try to translate from the original english wikipedia article.--ரவி (பேச்சு) 05:41, 28 ஏப் 2005 (UTC)
உள்ளடக்கம்
- 1 தகவல் பெட்டக்த்தில் புதிய விவரங்களை இணைத்தல்
- 2 சிறப்புக் கட்டுரைத் தகுதி
- 3 தரமுயர்த்துதல்
- 4 Infobox
- 5 இந்தியா: சில சந்தேகங்கள்
- 6 இந்திய வரலாறு முதல் வசனத்தை யாராவது சற்று விளக்குவீர்களா?
- 7 அண்மைய மாற்றங்களும் ஐயங்களும் ஆலோசனைகளும்
- 8 65.113.143.60 இன் தொகுப்பு
- 9 தேசிய மொழி
- 10 பிரதமர் கூட்டணியின் தலைவரா
- 11 புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்
தகவல் பெட்டகம் புதிப்பிக்க பட வேண்டும். மேலும் மக்கட்தொகை கணெக்கெடுப்பின் புதிய விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்--முஹம்மது அம்மார் (பேச்சு) 13:29, 4 ஆகத்து 2014 (UTC)Reply
என்னுடைய ஆங்கில விக்கிபீடியா பேச்சுப் பக்கத்தில் ஒருவர் தமிழ் விக்கிபீடியாவில் ஐக்கிய இராச்சியம் போன்ற கட்டுரைகள் சிறப்பு கட்டுரை நிலையை பெற்றுள்ளபோது இந்தியா கட்டுரை ஏன் இன்னும் எட்டவில்லை என்று கேட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியா என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, பிரிவினரையோ பற்றி மட்டுமே எழுதவேண்டிய ஆவணமில்லையெனினும் இந்தியாவைப் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கும்போது அக்கட்டுரையை நாம் ஏன் சிறப்புக் கட்டுரைத் தகுதிக்கு கொண்டு வரக் கூடாது என்று தோன்றுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் தற்போதுள்ள India கட்டுரை மிக நன்றாக உள்ளதால் நாம் அதன் பெரும் பகுதியை மொழிபெயர்த்தும் வேறு சில தமிழ் மேற்கோள்களைச் சேர்த்தும் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் வரவேற்கிறேன். -- Sundar \பேச்சு 12:14, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
- சுந்தர், உங்கள் எண்ணம் சரிதான். இந்தக்கட்டுரையை தரமுயர்த்த வேண்டியது அவசியம். முதன்முதலாக இந்த வாரக்கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவிக்கப்பட்ட கட்டுரை இது தான். ஆனால், அப்பொழுது அவ்வளவாக தரமுயர்த்த முடியவில்லை. இன்னொரு முறை இந்த வாரக்கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவித்து செயல்படலாம்--ரவி (பேச்சு) 14:37, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
- இப்பொழுது "இந்தியா" சிறப்புக்கட்டுரைத் தரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அக்கட்டுரையைக் கட்டாயமாக அந்தத் தரத்துக்கு உயர்த்தியாக வேண்டும். இந்தவாரக் கூட்டுமுயற்சியாக இன்னொருமுறை அறிவியுங்கள். Mayooranathan 17:47, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
மேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கலாமா? -- Sundar \பேச்சு 05:18, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply
அரசியல், மற்றும் பண்பாடு பகுதிகளை தமிழாக்க முயன்றிருக்கின்றேன்.
இக் கட்டுரையின் உள்ளடக்கம் பல தகவல்களை கொண்டிருந்தாலும், தரம் போதவில்லை. குறிப்பாக, பண்பாட்டு கூற்றுக்கள் பல வழிகளில் விபரிக்கபட வேண்டியிருக்கின்றது.
பல தகவல்கள் இன்னும் சேற்கப்பட வேண்டும். குறிப்பாக:
- காலநிலை
- கல்வி
- தொழில் துறை (விவசாயம், ஏற்றுமதி, இறக்குமதி)
- சட்டமைப்பு
- பாதுகாப்பு/இராணுவம்
- மக்கள்/சமூகம்/சமூக அமைப்பு
- சமூக பிரச்சினைகள் (சாதி, சமய தீவரவாதிகள், பிரிவினைவாதம்)
- வெளியிறவு கொள்கை
என பல கோணங்களில் இக் கட்டுரை விரிவு படுத்தப்பட வேண்டும்.
இக் கட்டுரை ஒரு பொது அறிமுக கட்டுரையாக செயல்பட வேண்டும். விபரிக்க பட வேண்டியங்கள் தனி கட்டுரையாகவும், அக் கட்டுரைகளுக்கு இக் கட்டுரையில் சுட்டி மூலம் ஒரு சுட்டுதல் வேண்டும்.
மேலும் சுந்தர் ஆரம்பத்தில் சுட்டியது சரி. பழைய ஆங்கில கட்டுரையின் தரம் மத்திமம். தற்போதைய கட்டுரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மொழி பெயர்த்த பின்னரே இதை அவதானித்தேன். பரவாயில்லை.
--Natkeeran 03:46, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
- உங்கள் மொழியாக்கம் பார்த்தேன். மிக நன்று. நானும் ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டபடி இது ஒரு பொது அறிமுக நடையிலேயே (எவரேனும் en:Wikipedia:Summary style-ஐ மொழிபெயர்த்து இச்சிவப்பு இணைப்பை நீலமாக்குங்களேன்) இருக்க வேண்டும். ஆங்கில விக்கியின் தற்போதைய கட்டுரையிலிருந்து மேலும் சில தகவல்களைப் பெறலாம். -- Sundar \பேச்சு 09:35, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
Hi, could you use the wikisyntax for the infobox table? The history text overlaps with the table. PS. the flag and emblem are incorrect. en:Nichalp 05:31, 2 செப்டெம்பர் 2005 (UTC)
Ok Kareemmalik (பேச்சு) 14:08, 26 சூன் 2015 (UTC)Reply
- சிந்து சமவெளி நாகரிகம் வேறு ஹரப்பா, மொகஞ்ச்தாரோ நாகரிகங்கங்கள் வேறா? வேற கால கட்டங்களுக்கு உரியனவா? சில வித்தியாசங்கள் சுட்ட முடியுமா?
- ஹந்தியை இந்தி என்றுதானே பொதுவாக எழுதுவார்கள். (இயன்றவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது நல்லது அல்லவா?) விக்கிபீடியாவில் எது சரியான வழக்கு?
- ஆம். இந்தி என்று தான் குறிப்பிட வேண்டும். (விக்கிபீடியா:நடைக் கையேடு) -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- ஹந்தியை இந்தி என்றுதானே பொதுவாக எழுதுவார்கள். (இயன்றவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது நல்லது அல்லவா?) விக்கிபீடியாவில் எது சரியான வழக்கு?
- வரலாறு பகுதியின் ஆரம்பம் சற்று பிசகி இருப்பது போல் எனக்கு தோன்றுகின்றது.
- கி.மு 300 என்றால் 2305 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சாஞ்சி ஸ்தூபம் -> சரி
- 40, 000 வருடங்களுக்கு முந்திய பாறை ஓவிய மருப் -> சரி
- தொடர்பு என்ன? வரலாற்று தொன்மையின் சாட்சிகள்?
- எனது கருத்தில் தென்னாசியாவின் ... என்ற வசனத்துடன் ஆரம்பிகலாம் போல தோன்றுகின்றது. ஏன் என்றால், நவீன மனிதனே 6000 வருடங்களுக்கள் வரலாறு கொண்டதாகத்தான் எங்கேயோ படித்ததாக நியாபகம்.
- அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்கள் நன்று.
- ஜி.டி.பி தலை $ 2540 ? புள்ளி விபர ஆதாரங்கள் தர முடியுமா. பொதுவாக புள்ளி விபரங்களுக்கு ஆதாரங்கள் தருவது நன்று.
- ஆங்கில விக்கிபீடியாவின் en:Economy of India-கட்டுரை சிறப்புக் கட்டுரையாகும். அங்கிருந்து இந்த மேற்கோள் கிடைத்தது. இதன் படி தனி நபர் வருவாய் $3100 ஆகும். -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- ஜி.டி.பி தலை $ 2540 ? புள்ளி விபர ஆதாரங்கள் தர முடியுமா. பொதுவாக புள்ளி விபரங்களுக்கு ஆதாரங்கள் தருவது நன்று.
- நான் பொருளாதார பகுதியில் ஒரு பந்தியை இணைத்துள்ளேன். அதில் தரப்பட்டிருக்கும் தரவுக்கான மேலும் நம்பிக்கைக்கு உரிய அல்லது அதிகாரபூர்வமான ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கின்றேன்.
- பண்பாடு பற்றிய விரிவு ஒரு அறிமுக கட்டுரைக்கு அவசியமற்றது என நான் கருதியால், முதல் இரண்டு பகுதிகளையும் இந்தியாவின் பண்பாடு கட்ரையுடன் இணைத்துவிட்டேன். ஆட்சோபனை இருந்தால் தெரிவுயுங்கள்.
- விக்கிபீடியா:பொது அறிமுக நடை கொள்கையின்படி நீங்கள் செய்தது முற்றிலும் சரியே. -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- பண்பாடு பற்றிய விரிவு ஒரு அறிமுக கட்டுரைக்கு அவசியமற்றது என நான் கருதியால், முதல் இரண்டு பகுதிகளையும் இந்தியாவின் பண்பாடு கட்ரையுடன் இணைத்துவிட்டேன். ஆட்சோபனை இருந்தால் தெரிவுயுங்கள்.
- அறிவியலை ஒரு தனி பிரிவு ஆக்கலாமா??
- கண்டிப்பாக செய்யலாம். -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- அறிவியலை ஒரு தனி பிரிவு ஆக்கலாமா??
- மேலும், ரவி அவர்கள் இரு பந்திகளுக்கு இடையே ஆங்கில விக்கி போல் ஒரு இடைவெளியும் விட தேவையிலை என்று பரிந்துரைத்தார். எனினும், தமிழில் ஆங்கிலம் போல் Capital Letters இல்லாததால் பந்திகளுக்கு இடையே ஒரு வரி வெற்றிடம் (தொகுத்தலின் போது இரு வரிகள்) விடுவது அழகு என்பது என் தனிப்பட்ட கருத்து. வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கின்றது. இக் கட்டுரையின் பண்பாட்டு sub section னை பிற sub sections உடன் ஒப்பிட்டு நோக்குக. சில வேளைகளில் நாம் பார்க்க உபயோகிக்கும் browsers இலும் இது தங்கி இருக்கலாம்.
- இது ஒரு கவனிக்கத்தக்க கருத்து. தமிழ் எழுத்துருக்களில் இன்னமும் இடைவெளிகள் சீராக இல்லாமல் இருப்பதும் ஒரு குறையே. இது போன்ற சில சிறப்புக் காரணங்களுக்காக சில நடை உத்திகளைக் கையாள்வதில் தவறில்லை. அனைவருக்கும் ஏற்புண்டென்றால் நடைக் கையேட்டிலேயே பரிந்துரைக்கலாம். -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- இந்த விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட விருப்பம், கருத்து கிடையாது. விக்கிபீடியா செயற்பாடுகளை நன்கு அறிந்த சுந்தர் நடைக்கையேட்டில் முன்மொழியும் விஷயங்களுக்கு என் ஆதரவு உண்டு :)--ரவி (பேச்சு) 16:17, 4 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- மேலும், ரவி அவர்கள் இரு பந்திகளுக்கு இடையே ஆங்கில விக்கி போல் ஒரு இடைவெளியும் விட தேவையிலை என்று பரிந்துரைத்தார். எனினும், தமிழில் ஆங்கிலம் போல் Capital Letters இல்லாததால் பந்திகளுக்கு இடையே ஒரு வரி வெற்றிடம் (தொகுத்தலின் போது இரு வரிகள்) விடுவது அழகு என்பது என் தனிப்பட்ட கருத்து. வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கின்றது. இக் கட்டுரையின் பண்பாட்டு sub section னை பிற sub sections உடன் ஒப்பிட்டு நோக்குக. சில வேளைகளில் நாம் பார்க்க உபயோகிக்கும் browsers இலும் இது தங்கி இருக்கலாம்.
--Natkeeran 16:06, 2 செப்டெம்பர் 2005 (UTC)Reply
--Natkeeran 19:54, 14 செப்டெம்பர் 2005 (UTC)Reply
புள்ளி விவரங்கள் பகுதியில் உள்ள தகவல்கள் ஏற்கனவே கட்டுரையில் இடம் பெற்றிருந்ததால் அதை நீக்கி விட்டேன். அரசியல் அமைப்பு பகுதியில் ஆள் வரை என்ற சொல் வருகிறது. அப்படி என்றால் என்ன என்று தயை செய்து விளக்குங்கள். இந்திய மகளிர் பற்றிய பகுதி பெரிதும் எதிர் மறையாக எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. நற்கூறுகளையும் எழுதலாம். மகளிருக்கான சிறந்த எடுத்துக்காட்டாக மூன்று அரசியல் பின்புலம் உள்ள மகளிர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது சரி இல்லை. வேண்டுமானால் இப்பெண்மணிகள் அரசியலில் சாதனை புரிந்துள்ளார்கள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.
இந்திய பொருளாதாரப் பகுதியில் இந்திய தொழிற் துறை பற்றி சரியாக விளக்கப்பட வில்லை எனக் கருதுகிறேன். இம்மாற்றங்களையும் செயற்படுத்தி மேலும் இக்கட்டுரையை செம்மை செய்து பின்னர் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கலாம். சுரேன் சொன்னது போல் அங்கங்கு கட்டுரை தொனி முரண்படுவது உண்மை தான். இயன்ற அளவு மாற்ற முயலலாம். எனினும் அது பெரிய குறையாகத்தோன்றவில்லை--ரவி (பேச்சு) 14:27, 23 அக்டோபர் 2005 (UTC)Reply
[1] இவர் சில பகுதிகளை பேச்சு பக்கத்தில் கூறாமல் நீக்கியுள்ளார். 14:27, 21 ஜூலை 2006 Ganeshk இன் தொகுப்புக்கு முன்னிலை படுத்தினேன்.--டெரன்ஸ் \பேச்சு 02:17, 19 ஆகஸ்ட் 2006 (UTC)
இந்தியவிற்க்கு தேசிய மொழி என்பது இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 21 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். அரசன் 19:16, 18 ஏப்ரல் 2007 (UTC)
You are correct. But the Union Government uses Hindi and English for official purposes, whereas State Governments can legislate any language of their choosing. I think that we should follow the English page for the India article in this regard. We should not mention 'Tamil' right away; it should be listed alongside other Schedule 8 languages (alongside the '21' or, in this case 22, other languages which are constitutionally recognized as official). I just think it looks misleading and random; as if Tamil is used by the Union Government. We might as well randomly throw in Telugu or Assamese instead of Tamil. Moreover, there is no reason to put Chennai as 'Periya Nagaram', because Mumbai is, without doubt, the biggest city of India. And before Chennai, one would have to list both Kolkata and Pudhu Dhilli. I just want this article to appear professional and formal. When I read this, I get the feeling that I am reading something written by Tamil people for Tamil people, as opposed to the universal and more objective outlook that the English article gives. Although I am aware only Tamils will read this article, it still shouldn't show regional biases.
Apologies for writing in English.
" நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்."
1. Hindi should also be considered as an 'iNaippu mozhi' that is spoken throughout India. Nearly every state teaches the language mandatorily, and one of the two states that do not teach it, Tamil Nadu, has a high number of people who voluntarily study the language - and quite easily pass.
2. Tamil, then Sanskrit, then Telugu and Kannada are all Classical Languages (Semmozhi) according to the Government of India. You can list the chronology of their acceptance as a Classical Language to be more accurate; Tamil (2004) -> Sanskrit (2005) -> Telugu & Kannada (2008).--−முன்நிற்கும் கருத்து 129.97.137.183 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சமயம் முதன்மைக் கட்டுரை: இந்திய சமயங்கள் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 80 கோடிக்கும் மேலான இந்தியர்கள் (80.5%), இந்துக்கள் ஆவர். மற்ற மதத்தினவர்கள், இசுலாமியர்கள் (13.4%), கிறித்தவர்கள் (2.3%), சீக்கியர்கள் (1.9%), பௌத்தவர்கள்(0.8%), சமணர்கள் (0.4%) ஆவர்.[20] மக்கள்தொகையில் 8.1% ஆதிவாசிகள் ஆவர்.[21] இசுலாமியர் அதிகம் வாழும் நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
I Want Latest Report(2010 to 2011) please Help me
கட்டுரையின் அரசியல் அமைப்பு பகுதியில் //பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார்// என உள்ளது. கூட்டணித் தலைவராக ஒருவரும் பிரதமராக கட்சியில் உள்ள வேறொருவரும் இருக்கும் நடைமுறையை நாம் தற்போது பார்க்கிறோம். கட்டுரையில் இந்த இடத்தில "பெரும்பான்மை பெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார்" என மாற்றலாமா. --எஸ்ஸார் (பேச்சு) 14:53, 24 சூன் 2012 (UTC)Reply
- ஆமாம். அதுவே நடைமுறை என்றால் அப்படியே மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 17:03, 24 சூன் 2012 (UTC)Reply
//பெரும்பான்மை பெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை// என்பதும் பொருந்தாது. மூன்றாவது அணிக் காலத்தில் குறைவான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உடைய கட்சியைச் சேர்ந்தவரும் தலைமை அமைச்சராக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டு: தேவ கவுடா. எனவே, ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உடைய கட்சி அல்லது கூட்டணி முன்மொழிபவரை தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்க குடியரசுத் தலைவர் அழைப்பார் என்று கூறலாம். இது நியமனப் பதவி இல்லை என்பதால் நியமிப்பார் என்பதும் சரியான சொல் அன்று. --இரவி (பேச்சு) 17:59, 24 சூன் 2012 (UTC)Reply
- இரவி கூறுவது நடைமுறையில் சரி என்றாலும் சட்டப்படி மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டவரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்பதே சரியான நிலை. பெரும்பான்மையினர் ஒரு கருதுகோளுக்காக சுயேட்சைகளாகக் கூட இருக்கலாம். மேலும் இவர் மக்களவை உறுப்பினராக இருக்கத் தேவையில்லை. --மணியன் (பேச்சு) 19:08, 24 சூன் 2012 (UTC)Reply
கடல் மட்டத்திலிருந்து சுமார் 531 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் புவியியல் ஆள்கூறுகள் 22.800000°N, 79.600000°E (அதாவது, 22°48'00"N, 79°36'00"E) ஆகும். Almightybless (பேச்சு) 11:28, 7 நவம்பர் 2022 (UTC)Reply