பேச்சு:இலங்கை
இலங்கை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
இலங்கை ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
இலங்கை என்பது விக்கித்திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம். |
இலங்கை: நாளாந்தப் பக்கப்பார்வைகள் |
If anyone could translate இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு in better tamil, please make the correction in the essay. Thanks.--ரவி (பேச்சு) 04:34, 1 மே 2005 (UTC)Reply
This is the official Tamil translation. I think we should leave it as it is. Mayooranathan 18:10, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
உள்ளடக்கம்
- 1 கல்வி தரப்படுத்தல்
- 2 கட்டுரை மீள்கட்டமைப்பு
- 3 தரப்படுத்தப்பட்ட சொற்கள்
- 4 வழங்கிய அல்லது வளங்கிய?
- 5 pls update prime minister name
- 6 தகவல் சட்டம்
- 7 உரை திருத்தம் தேவை
- 8 பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
- 9 இலங்கையின் முழுப்பெயர்........!
- 10 வெளியிணைப்புகள்
- 11 பழைய விடயங்கள்
- 12 பெடூயின்ஸ்/புனோ
- 13 உசாத்துணை
- 14 காரணம்
கல்வி தரப்படுத்தல் முழு தமிழர்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தவில்லை. இது யாழ்ப்பாணத்து தமிழருக்கே பாதகமாக அமைந்தது. இப்பொது கல்வி தரப்படுத்தல் காரணமாகதான் மலையக, கொழும்பு, கிழக்கு தமிழர்களுக்கு பல்கலைகழகங்களில் கூடியளவில் இடம் கிடைக்கின்றது. இல்லாவிடில் அணைத்தும் ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களுக்கே கிடைக்கும். - சுரேன்
- சுரேன், இக்கட்டுரையில் தரப்படுத்தல் முறை முழுத்தமிழர்களுக்கும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடவில்லை. இலங்கையில் இன முரண்பாடுகளின் வளர்ச்சிக்குத் தரப்படுத்தலும் ஒரு காரணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்கத் தரப்படுத்தல் இல்லாவிடில் இலங்கையின் ஏனைய பகுதித் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தவருக்கே கிடைக்கும் என்ற பொருள்படும் கூற்றுத் தரப்படுத்தல் முறையின் அடிப்படை பற்றிய விளக்கக் குறைவையே காட்டுகிறது. தரப்படுத்தல் முறை அறிமுகப் படுத்தப்பட முன் பல்கலைக் கழகங்களுக்கான மாணவர் தெரிவு முற்றுமுழுதாகத் திறமை அடிப்படையிலேயே நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு இவ்வளவு இடங்கள் என்று கோட்டா முறையும் கிடையாது. எனவே ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை யாழ்ப்பாண மாணவர் தட்டிப் பறித்தார்கள் என்று சொல்வது சரியாகாது. 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகப் படுத்தப்பட்ட மாணவர் தெரிவு முறை தரப்படுத்தல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று மொழி அடிப்படையிலான தரப்படுத்தல். மற்றது மாவட்ட வாரியான கோட்டா முறை. மொழி அடிப்படையிலான தரப்படுத்தல் என்பது தமிழ் மொழி மூலமும், சிங்கள மொழி மூலமும் பரீட்சை எழுதிய மாணவர்களின் மொத்தப்புள்ளிகளைத் தனித் தனியாக வரிசைப் படுத்தி, இரண்டு பட்டியல்களினதும் இடைப் (mean) புள்ளிகள் சமமாக இருக்கும்படி ஒரு பட்டியலிலுள்ள எல்லாப் புள்ளிகளையும் ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கிப் புள்ளிகளை மாற்றுவதாகும். எப்பொழுதுமே தமிழ் மாணவர்கள் பெறும் புள்ளிகளின் இடை (mean)சிங்கள மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் இடையிலும் கூடுதலாகவே இருந்து வந்ததால். மேற் சொன்ன முறை எல்லாச் சிங்கள மாணவர்களதும் புள்ளிகளை எல்லாத்தமிழ் மாணவர்களினதும் புள்ளிகளுக்கு எதிராக அதிகரிக்கச் செய்தது. இவ்வாறு மாற்றப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் தெரிவு செய்யப் பட்டனர். இது எல்லாத் தமிழ் மாணவர்களையுமே பிரதேச வேறுபாடின்றி ஒரே வகையில் பாதித்ததென்பது சொல்லாமலே விளங்கும். தகுதி அடிப்படையில் பெருமளவு மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவந்த யாழ்ப்பாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு யாழ்ப்பாண மாணவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றேனும் மலையக அல்லது கிழக்கு மாகாண மாணவனுக்குக் கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பேதும் இல்லை. எனவே தகுதி அடிப்படையில் யாழ்ப்பாண மாணவர் இழந்த இடங்கள் அனைத்துமே சிங்கள மாணவர்களுக்கே கிடைத்தன. ஆனால் மாவட்ட வாரியான கோட்டா முறைப்படி, இலங்கையிலிருந்த 22 மாவட்டங்களினதும் குடித்தொகை விகிதாசார அடிப்படையில், ஒரு பகுதி பல்கலைக் கழக இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டன. இதன்படி, கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கும், மலையக மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒருபகுதியையே அப்பகுதித் தமிழ் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். கிழக்குமாகாணத்தில் குடித்தொகை மிகவும் குறைவு இதனால் அம்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் குறைவுதான். அத்துடன் அங்கு மூன்றிலொருபங்கு அளவுக்கு உள்ள சிங்களவருடன் போட்டியிட்டுத்தான் கிடைக்கக் கூடியதைப் பெற வேண்டும். எனவே பிற பகுதித் தமிழர்கள் முன்பு 10 இடங்களைப் பெற்றவர்கள் இப்பொழுது 30 இடங்களைப் பெற்றிருக்கக் கூடும் இதற்காகவே தரப்படுத்தலினால் தமிழ் மாணவர்கள் நூற்றுக்கணக்கான இடங்களை இழந்ததை நியாயப் படுத்த முயல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. Mayooranathan 19:50, 18 செப்டெம்பர் 2005 (UTC)Reply
இலங்கை பற்றிய இந்த கட்டுரை மிக பெரியதாக வளர்ந்துள்ளது, அகவே இதை வாசிப்பதற்கு கடினமாகவுள்ளது. அகவே உபதலைப்புகளின் சிறிய சாராம்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மிகுதியை அந்த அந்த பகுதியின் முதன்மைக் கட்டுரையின் கீழ் கொடுத்தால் நன்றாகவிருக்கும் - சுரேன்
- உண்மைதான். கட்டுரைகள் அதிக நீளமில்லாது இருந்தால் வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும். இது பற்றி மற்றவர்களுடைய அபிப்பிராயத்தையும் அறிவோம். ஏனெனில் இது இந்தக் கட்டுரைக்கு மட்டுமல்ல இது போன்ற எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தக் கூடியது. கட்டுரைகளை எவ்வளவு நீளத்துக்கு வளர விடலாம், ஏற்கெனவே நீளமாக இருக்கும் கட்டுரைகளை சிறு கட்டுரைகளாக்குவதற்கான வழி முறைகள் என்பன பற்றிய பொதுக்கருத்து ஒன்றை உருவாக்கினால் நல்லது. Mayooranathan 18:23, 18 செப்டெம்பர் 2005 (UTC)Reply
இந்த கட்டுரையை திருத்தும் போதோ, விஸ்தரிக்கும் போதோ இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் தரப்படுத்தப்பட்ட சொற்களை பயன்படுத்தவும். இது தேவையற்ற குழப்பத்தை தடுக்கும். - சுரேன்.
கட்டுரையின் இரண்டாம் பத்தியில் வளங்கிய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது வழங்கிய என்று வரவேண்டுமெனத் தோன்றுகிறது. எது சரி? -- Sundar \பேச்சு 10:54, 20 செப்டெம்பர் 2005 (UTC)Reply
- "வழங்கிய" என்பதே சரி. Mayooranathan 16:50, 20 செப்டெம்பர் 2005 (UTC)Reply
pls update the prime minister name in the info box and if possible create a stub on him . I am not sure whether ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே is correct spelling. If yes, I can proceed to implement the suggestiion myself
Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள் இன் படி எல்லா நாட்டுகும் ஒரே தகவல் சட்டம் என்றக் கருத்துப் படி இதில் காணப்பட்ட தகவல்சட்டத்தை நீக்கி வார்ப்புரு:Infobox Country ஐ இட்டேன். எதேனும் கருத்துக்கள் இருப்பின் இங்கே தெரிவிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 10:26, 3 செப்டெம்பர் 2006 (UTC)Reply
கட்டுரையில் அளவுக்கு அதிகமாக சிகப்பு, நீல இணைப்புகள் சேர்ந்துள்ளது வாசிப்பனுபவத்துக்கு ஊறாக உள்ளது. தேவையற்ற வெளியிணைப்புகள் (எடுத்துக்காட்டு - பத்திரிக்கைகளுக்கான இணைப்புகள்), தகவல்கள் (எ.கா. - விடுமுறைகள்) நீக்கப்பட வேண்டும் அல்லது உரித்த கட்டுரைக்கு நகர்த்தப்பட வேண்டும். துணைத்தலைப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். இக்கட்டுரை சிறப்புக் கட்டுரையாகவும் அதிகம் பார்க்கப்படும் கட்டுரையாகவும் உள்ளதால், இலங்கை பயனர்கள் இந்த ஆலோசனையை முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த வேண்டுகிறேன்--ரவி 19:02, 18 அக்டோபர் 2006 (UTC)Reply
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:00, 14 மே 2007 (UTC)Reply
தளத்தின் முகவரி பிழையாகத்தரப்பட்டுள்ளது.அதன் சரியான முகவரி http://www.slbc.lk/ ஆகும்.--Shameermbm 06:16, 12 ஜூலை 2009 (UTC)
ஒரு சிறு ஐயம் சனநாயகம், குடியரசு, மக்களாட்சி இவை அனைத்தும் Republic என்று ஒருபொருள் தரும் சொல் தானே. அதே போல சோசலிசம் என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் சொல் சமதர்மம், சமத்துவம் என்பதாகும். அதனால் "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு" என்பதை "இலங்கை சமத்துவக் குடியரசு" என்று கூறலாம் அல்லவா? உங்கள் கருத்து...!--Rnarendr 14:35, 14 பெப்ரவரி 2008 (UTC)
- இலங்கையில் சனநயகமும் இல்லை, சோசலிசமும் இல்லை என்பது ஒரு புறம் இருக்க பெயரளவில் தமிழில் அதிகாரபூர்வமாக "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு" என்றே அழைக்கப்படுகிறது.--Kanags \பேச்சு 12:10, 15 பெப்ரவரி 2008 (UTC)
- இது Sri Lanka Democratic Socialist Republic என்பதன் உத்தியோகபூர்வ (official) மொழி பெயர்ப்பு. இதில் நாம் விரும்பியபடி மாற்றம் செய்யக்கூடாது. இங்கே சொற்கள் இடம் மாறுவதில் கூட வேறுபாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக 1977க்கு முன் இலங்கை சோசலிச முகாம் பக்கம் கூடுதலாகச் சார்ந்திருந்தபோது அதன் பெயர் "இலங்கை சோசலிச சனநாயகக் குடியரசு" என்றிருந்தது. இதிலே சோசலிசம் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். 1977ல் எதிர் முகாம் சார்ந்த அரசு இப் பெயரை, சனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு" என மாற்றியது. நீங்கள் சொல்வதுபோல் "இலங்கை சமத்துவக் குடியரசு" என மாற்றினால் இவ்வாறான வேறுபாடுகளைக் காட்ட முடியாது. மயூரநாதன் 14:41, 15 பெப்ரவரி 2008 (UTC)
- இப்போதும் கட்டுரையில் //இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு// என தவறான தகவல் தொடர்ந்து வந்துள்ளது. தமிழில் அதிகாரபூர்வ பெயர் எனில் நடப்பில் உள்ள இரண்டாம் குடியரசு (1978 இலிருந்து) அரசியலமைப்பின் படி "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு" எனவுள்ளதே. எவ்வெந்த அரச ஆவணங்களில் (காட்டாக கடவுச்சீட்டு) எல்லாம் அதிகாரபூர்வ பெயர் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் அவ்வாறே தமிழில் எழுத்தப்படுவதே நடைமுறை. எனவே "சமத்துவ" எனவிருப்பதை 'சோசலிசக்' என திருத்த வேண்டும். மயூரநாதன் குறிப்பிட்டதில் : //எடுத்துக்காட்டாக 1977க்கு முன் இலங்கை சோசலிச முகாம் பக்கம் கூடுதலாகச் சார்ந்திருந்தபோது அதன் பெயர் "இலங்கை சோசலிச சனநாயகக் குடியரசு" என்றிருந்தது.// அது தவறு முதல் குடியரசின் (1972 - 1978) அரசியலமைப்பில் முதலில் எழுதப்படும் கோட்பாடுகளில்தான் இறையாண்மை (sovereignty), சோசலிசம் மற்றும் சனநாயகம் பற்றி குறிப்பிட்டிருந்தாக நினைவு. ஆனால் அதிகாரபூர்வ பெயரை இலங்கை குடியரசு (Republic of Sri Lanka) எனவே சூட்டியிருந்தனர். இதற்கான ஆதாரம் இலங்கை அரசின் இவ் ஆவணத்தில் வரலாற்று குறிப்புகளில் காணலாம் : http://www.priu.gov.lk/Cons/1978Constitution/ConstitutionalReforms.htm . (//The country was renamed the Republic of Sri Lanka (meaning 'Resplendent Island').//) என்னிடம் உள்ள 1974 இல் எடுத்திருந்த எனது காலாவதியான பழைய கடவுச்சீட்டில் அவ்வாறே மும் மொழிகளிலும் 'இலங்கைக் குடியரசு' என மட்டுமே குறிப்பிடப்படுள்ளது. சோசலிச, சனநாயக அடைமொழிகள் எல்லாம் இல்லை!
--கா. சேது 14:32, 4 திசம்பர் 2011 (UTC)Reply
இங்குள்ள வெளியிணைப்புகளை முற்றிலுமாக வலைவாசல்:இலங்கை க்கு நகர்த்திவிடலாம். கட்டுரைக்கு தொடர்பில்லாதவையாக தெரிகிறது? -- மாஹிர் 13:18, 25 நவம்பர் 2010 (UTC)Reply
பழைய விடயங்கள் முதன்மைப் பக்கத்திலிருந்து இங்கு நகர்த்தப்பட்டுள்ளது:
இந்நாடு கடந்த ஐம்பது ஆண்டுகளாக இன முரண்பாடுகளுக்குள் சிக்கித் திணறிக் கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. நோர்வேயின் அனுசரணையோடு 2002 இன் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது . இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும், பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[1][2]. போர் மீண்டும் தொடங்கியது.
--Anton (பேச்சு) 13:26, 7 சூன் 2013 (UTC)Reply
..பெடூயின்ஸ் என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களது மன்னன் விஜயசிம்மனை வரவேற்று, அவனுக்குத் தன் மகளையும் திருமணம் செய்து வைத்தான்..ஓர் இரவில் புனோ அரசனையும் அவனைச் சார்ந்தவர்களையும் கொன்று இலங்கையைக் கைப்பற்றி மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான்.அவனது கொடுமை அத்துடன் நிற்கவில்லை..[3]
..இங்கு மக்கள் அத்வைதம்,வீர சைவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்து என்று சொல்வதற்குப் பதிலாக ’சைவம்’ என்று சொல்ல வேண்டும்...இலங்கைத் தமிழ் தூய தமிழ்; இலங்கை மதம் தூய தமிழ் மதம்..[4]
வரலாற்றுப் பதிவில் ஒரு பகுதியாக இலங்கை பற்றி விவேகானந்தரின் பிரயாணக்குறிப்புகளையும் கணக்கிலெடுக்கலாமே? --Kuzhali.india (பேச்சு) 05:30, 3 ஆகத்து 2014 (UTC)Reply
- Kuzhali.india, கட்டுரையில் தகவல்களை மட்டுமே சேர்க்க வேண்டும். விவேகானந்தரின் குறிப்புகளை தனிப் பகுதியாக குறிப்பிட முடியாது. தேவையிருப்பின், ”பிற நாட்டவரின் கருத்துகள்” என்ற பிரிவில் சில வரிகளில் குறிப்பிடலாம். ”இவ்வாறு விவேகானந்தர் குறிப்பிட்டார்” என்றே எழுதே வேண்டும். தவறான/மிகைப்படுத்திய கருத்துகளை எழுதினால் நீக்கப்படும். சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பலமான ஆதாரம் தேவைப்படும். Kanags உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:22, 3 ஆகத்து 2014 (UTC)Reply
எதன் அடிப்படையில் தவறான/மிகைப்படுத்திய கருத்துகள் என்று தாங்களாகவே அடிக்கடி முடிவெடுக்கிறீர்கள்? ஆச்சரியமாக உள்ளது. தமிழ் விக்கியைப் புரிந்து கொள்ள இயலவில்லை --Kuzhali.india (பேச்சு) 15:51, 3 ஆகத்து 2014 (UTC)Reply
- உங்களுடைய உரைகளில் மிகைப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். இந்து சமயம் தொடர்பான கட்டுரைகளில் மற்றவர்களின் தொகுப்புகளை கவனியுங்கள். அவர்கள் எவ்வளவு இயல்பாக, நடுநிலையுடன் எழுதியிருக்கின்றனர் எனத் தெரியும். உங்களுடைய உரைக்கும், மற்றவர்களின் உரைக்கும் உள்ள வேறுபாட்டைக் காணலாம். அண்மையில் கூட, ”புத்த மத ஜால்ராக்கள்“ என்றும் இழிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் படிக்கும் நூல்களை எழுதியவர் தன் சொந்த கருத்தை தெரிவிப்பார். அவற்றில் மிகைப்பாடு அதிகம் இருக்கும். அதை எளிமைப்படுத்தி, நடுநிலையாக்கி நீங்கள் தான் எழுத வேண்டும். அப்படியே நகலெடுக்கக் கூடாது. நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. மிகைப்படுத்திய கருத்துகளை யாராக இருந்தாலும் நீக்குவோம். நான் பார்த்ததால் நீக்கினேன். வேறு யாராவது பார்த்திருந்தாலும் நீக்கியிருப்பார்கள். உங்கள் உரைகளை மற்றொருவர் இயல்பான நடையில் மாற்றித் தருவார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழ் விக்கி என்றில்லை, எந்த மொழி விக்கிப்பீடியாவாக இருந்தாலும், நடுநிலை காக்கப்பட வேண்டும். கனகு,கவனிக்க. பூங்கோதை: குழலியின் உரைகளை திருத்தி அவருக்கு காட்டி உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:12, 3 ஆகத்து 2014 (UTC)Reply
இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இயக்கர், நாகர் என்னும் இரு இனத்தினர் வாழ்ந்ததாகவும் அவர்களில் ஒரு குழுவாகிய இயக்கர் இனக் குழுவின் தலைவரின் மகளாகிய குவேனி என்பவளையே அப்போது வட இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட விஜயன் என்ற இளவரசன் தன் எழுநூறு தோழர்களுடன் வந்திறங்கிய பின் மணந்து கொண்டதாகவும் ஓரிரவில் குவேனியின் தந்தையையும் ஏனைய தலைவர்களையும் கொன்று இலங்கையில் தனது ஆட்சியை அவன் ஏற்படுத்தியதாகவும் பின்னர் அவன் குவேனியையும் துரத்திவிட்டதாகவும் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த இரு பிள்ளைகளின் வழிவாறுகளே இன்றைய வேடுவர் எனும் ஆதிவாசிகள் என்பதாகவும் இலங்கை வரலாறு குறிப்பிடுகிறது. இவ்விடயத்தைக் குறிப்பிடுகையில் பெயர்களைச் சற்று மாற்றிக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.--பாஹிம் (பேச்சு) 01:45, 4 ஆகத்து 2014 (UTC)Reply
- ↑ போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்
- ↑ Colombo to annul CFA
- ↑ எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; இலங்கையும் புத்தமதமும்; பக்கம் 60;61;
- ↑ எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; இலங்கையும் புத்தமதமும்; பக்கம் 65;
[1] இந்த பக்கத்திற்கு மேற்கோள் தானே இணைத்துள்ளேன், அதை ஏன் நீக்கியுள்ளீர்?? காரணம் சொல்லுங்கள் .. .. Gowtham Sampath (பேச்சு) 07:38, 6 மார்ச் 2018 (UTC)
- @Gowtham Sampath: மேற்கோள்கள் இணைக்க முன்னர் அது நம்பத்தகுந்ததா எனப் பாருங்கள். இணைப்பில் உள்ள கட்டுரை முழுக்க முழுக்க இலங்கை பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையை அப்படியே copy paste பண்ணியிருக்கிறார்கள். அதனை மீண்டும் அதே விக்கிப்பீடியா கட்டுரையில் மேற்கோளாகத் தரலாமா?--Kanags (பேச்சு) 07:42, 6 மார்ச் 2018 (UTC)