பேச்சு:குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கற்பனைக் கண்டம்? தொகு

Lemuria is a myth. There is no scientific evidence to show that such a continent existed. This being the case, I don't think this article presents clearly that this is a myth/hypothetical land mass. --Madhu 15:45, 16 மார்ச் 2007 (UTC)

ஆம். இக்கருத்து தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.--Sivakumar \பேச்சு 15:52, 16 மார்ச் 2007 (UTC)

இக்கட்டுரையில் நூற்குறிப்புகளில் உள்ளன எனவே கூறியுள்ளேன் தவிர அவை அப்படி இருந்திருக்கலாம் எனக் கூறவில்லை. ஆனாலும் உணமையாக இருந்திருக்கலாம். இராமாயணத்தினை வைத்து ராமரையும். இராவணனையும் எந்த அளவிற்கு நம்ப முடியுமோ அதே அளவிற்கு இப்பண்டைத் தமிழ் இலக்கியங்களை நம்பலாம் என நினைக்கின்றேன். மேலும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் தமிழனின் நாடகம்,இலக்கணம் போன்ற பல தகவல்கள் உள்ளன. இவற்றினையும் போல் இக்குமரிக்கண்டத் தகவல் இருந்திருக்கலாம் அதனால் அது myth ஆக இருக்க முடியாது என நினைக்கின்றேன். ஆனாலும் இக்கட்டுரையில் காப்பியங்களில் கூறப்பட்டுள்ளன எனவே குறித்துள்ளேன். தவறுகள் இருந்தால் திருத்தவும்.--நிரோஜன் சக்திவேல் 16:06, 16 மார்ச் 2007 (UTC)

மேலும் இத்தகவல்களைக் கூறும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வெறும் கற்பனையென்றால் இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் கூட வெறும் myth ஆகவே இருத்தல் வேண்டும் ஆனால் இன்று தமிழ் myth அல்ல.--நிரோஜன் சக்திவேல் 16:08, 16 மார்ச் 2007 (UTC)

இந்துப் பெருங்கடல், பசுபிக் கடல் ஆகிவற்றினால் பிரிக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகள் சிலவற்றில் வாழும் உயிரினங்களின் ஒற்றுமையை விளக்க முற்பட்ட 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் இபகுதிகளை எல்லாம் இணைத்த பாரிய நிலப்பகுதியொன்று இருந்திருக்கக்கூடும் என்ற எடுகோள் ஒன்றை முன் வைத்தனர். இதற்கு லெமூரியா என்றும் பெயர் இடப்படது. பிற்காலத்தில் இந்தக் கொள்கை அடிபட்டுப் போய்விட்டது என்றே கூறப்படுகிறது. இது உண்மையாகக் கூடவே இருந்தாலும், இந்நிலம் கடல் கொள்ளப்பட்டுப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகியிருக்க வேண்டும் என்பதே கருத்து. இது நிச்சயமாக மனிதன் தோன்றுவதற்கு முந்திய காலமாகும். எனவே சில தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குமரிக் கண்டம் என்பதை இதனுடன் இணைக்க முடியாது. குமரிக்கண்டம் என்ற தலைப்பில் கட்டுரை இருக்கலாம். ஆனால் குமரிக்கண்டமும் லெமூரியா என்பதும் ஒன்று என்பதற்கு ஆதாரம் கிடையாது. அதனால் இப்படிச் சிலர் முன்னர் கருதினார்கள் என எழுதலாமே ஒழிய அதுதான் உண்மை என்பது போல் எழுதுவது சரியல்ல. Mayooranathan 16:25, 16 மார்ச் 2007 (UTC)
நிரோ, இது myth-ஆ அல்லது உண்மையாகவே இருந்த ஒரு கண்டமா என நம்மால் கூற இயலாது. ஆனால், நமக்கு தெரிந்த, நம்மிடம் உள்ள ஆதாரங்களை கட்டுரையில் தந்து விட்டோமானால், இக்கட்டுரையைப் படிப்பவர்கள் அதிலிருந்து ஒரு 'informed conclusion'-க்கு வர முடியும். அந்த வகையில் இக்கட்டுரையில், இந்த இரு காப்பியங்களில் மட்டுமே குமரிக் கண்டத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளதென தெளிவாக குறிப்பிட வேண்டும்... அல்லது, இக்கண்டம் உண்மையில் இருந்தது என கூற எந்த 'scientific' ஆதாரமும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. Wikipedia is NOT the place for original research. இங்கு பார்க்கவும்[1]. --Madhu 16:28, 16 மார்ச் 2007 (UTC)
நிரோ, it looks much better now, நன்றி. ஒரே ஒரு suggestion - தற்போது கட்டுரையில், இலெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்று தான் என சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது... தவறல்லவா? இந்த வாக்கியத்தைத் திருத்தினால் கட்டுரை தெளிவாக இருக்கும். --Madhu 17:04, 16 மார்ச் 2007 (UTC)

நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை போலும். ஆங்கில ஆராய்ச்சியாளர்களின் குமரிக்கண்டத்தினைத் தான் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் லெமூர் இனம் இருந்த காரணத்தினால் லெமூரியா என அழைத்தனர். மேலும், அவ்வாறு இவர்கள் அழைத்த இலெமூரியாக் கண்டம் என்பது தமிழ் இலக்கிய நூல்களில் தகவல்களின் உதவியுடன் எனக் கருதுகின்றேன்.இரண்டும் ஒரே பகுதியிலேயே உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 17:15, 16 மார்ச் 2007 (UTC)

நிரோஜன், நீங்கள் எழுதிய லெமூரியா என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை சரியான கருத்துக்கள். ஆனால் குமரிக் கண்டம் கட்டுரையில் தான் முரண்பாடு. உங்களுடைய லெமூரியா கட்டுரையிலேயே லெமூரியாக் கொள்கை கைவிடப் பட்டது பற்றியும் அவ்வாறு இருந்திருக்கக்கூடிய நிலம் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மூழ்கிவிட்டது என்று இருப்பதையும் கவனித்தீர்களா? தமிழ் இலக்கியங்கள் பேசுவது சில ஆயிரம் ஆண்டுகளைத் தான். மில்லியன் ஆண்டுக் கணக்குகள் எல்லாம் தமிழர் வரலாற்றுக்குப் பொருந்தி வராது. நிற்க. ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பழமை காட்டக்கூடிய சங்ககாலத் தமிழ் இலக்கியமான கலித்தொகையிலும், அதற்கும் பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் தான் கடல்கோள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. கலித்தொகையில் இது பற்றி ஒரேயொரு வரி தான் உள்ளது.
மலிதிரையூர்ந்து தன்மண் கடல் வௌவலின்

இதன்படி பாண்டியனுடைய நிலம் கடல் கொள்ளப்பட்டது என்றே உள்ளது. குமரிக் கண்டம் பற்றிய கதை இல்லை.

சிலப்பதிகாரத்தில் பின்வரும் இரண்டு வரிகள் உள்ளன.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள....

இங்கேயும் பஃறுளி ஆற்றையும், குமரி மலையையும் கடல் கொண்டதாகத் தான் உள்ளது. பிற்காலத்தில் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவற்றுக்கு உரை எழுதியவர்கள் இதனுடன் தங்கள் கருத்துக்களையும் சேர்த்துப் பெருப்பித்துள்ளார்கள். எப்படிப் பார்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் கூறும் கடல் கொண்ட தென்னாடு மிகப்பெரிய நிலம் அல்ல. இதற்கும் 19 நூற்றாண்டில் கருதப்பட்ட லெமூரியாவுக்கும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் வேறுபாடு உண்டு. உங்கள் கட்டுரையில் இரண்டும் ஒன்று எனக் கருதப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய முரண்பாடு. Mayooranathan 18:25, 16 மார்ச் 2007 (UTC)

இக்கட்டுரையின் நோக்கம் குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியத்தை யூக அடிப்படையில் நிருபிப்பதற்கே. இதற்கு நமது இதிகாசபுராணங்களும் ISIAC INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS வெளியிட்ட புத்தகங்களும் மிகவுமுதவி புரிவன -தென்காசி சுப்பிரமணியன்

சடைச்சங்க ஆதாரங்கள்:

1. சடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற புத்தகத்தில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம் கிருதம் (4864) வருடங்கள். திரேதம் (3648) வருடங்கள். துவம் (2432) வருடங்கள். கலி (1216) வருடங்கள். மொத்தம் (12160) வருடங்கள். அதன்படி முருகனின் கலியுகம் கி.மு.16475-15259 ஆகும். ISIACயின் “ancient India” புத்தகத்தில் முருகனின் காலம் கி.மு.16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெறும் கால ஒற்றுமை ஆதாரமாகும்.

2. சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பக்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன. பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எரும்புகள் என இலக்கியம் கூறுகிறது. மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.

3. முருகனின் வரலாற்றுப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம். இஃது ஒரு ஒப்பிலக்கண யூக ஆதாரமாகும்.

4. குமரிக்கண்டத்தின் யூக வரைபடம் “GOOGLE IMAGES “ மற்றும் ISIACயின் “ANCIENT INDIA” புத்தகத்திலும் கிடைக்கின்றன.

இடைச்சங்க ஆதாரங்கள்:

1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயனத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயனத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.

2. ராமாயனத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது. இது மிகப்பெறும் கால ஒற்றுமை ஆதாரமாகும்.

கடைச்சங்க ஆதாரங்கள் பல உள்ளதால் அவை இங்கு இல்லை.

பொது ஆதாரங்கள்:

1. ISIACயின் “ANCIENT INDIA” புத்தகத்தில் இந்தியாவின் யூக வரைபடங்கள் கி.மு.30000, கி.மு.8000, கி.மு.4400, கி.மு.3100 மற்றும் கி.மு.2700 வரை கிடைக்கிறது. இதன் காலங்களும் சங்க இலக்கிய இதிகாசபுராணங்களில் கூறப்பட்டுள்ள காலங்களும் மிகவும் ஒத்து வருவதால் குமரிக்கண்டமும் சங்க வரலாறும் உண்மை என்பது தெளிவே.

2. சங்க ஆதாரங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வட மொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருவதால் சங்க வரலாற்றினை உண்மை என்றே கொள்ள வேண்டும்.

தொகுப்பாளர் சு.மு. ராஜா சுப்பிரமணியன், த\பெ சு.முத்தையா, 18, என்.ஜி.ஓ. காலனி, மேலகரம்-627818, தென்காசி தாலுகா. மின்னஞ்சல்  : rajasbrmnn@yahoo.co.in கைபேசி எண்  : 9659462137

பொய்யும் புரட்டும் தொகு

குமரிக்ண்டம் இருந்ததற்கான எந்த விதமான அறிவியல் அடிப்படையுள்ள ஆதாரமும் கட்டுரையில் சுட்டப்படவில்லை. மாறாக, வெறும் கற்பனைக் கதையான இராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி அதனை அறிவியல் ஆதாரம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. இராமாயணம் போன்ற கற்பனைகளோ அல்லது சமய நூல்களோ அறிவியல் அல்லது வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ளத் தக்கனவன்று. முறையான ஆதாரம் தராமல், "இது எளிய ஆதாரம், எவரும் புரிந்து கொள்ளத் தக்கது, கந்தபுராணம் கூறுகிறது..." போன்ற வார்த்தைகளைக் கொண்டு ஆதாரம் சமர்ப்பிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முருகன் என்னும் கதாபாத்திரம் வரலாற்றில் இருந்ததற்கான ஆதாராம் எதுவும் இல்லை. அது பார்ப்பன சமயம் இந்தியாவிற் புகுத்தப்பட்ட பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை. அதனையும் இங்கு கட்டுரையில் அறிவியல் ஆதாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே, சீன மொழி ஆதாரம் என்று கூறிப் பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது. முறையான சீனமொழி வசனங்களையும் நூல்களையும் தாருங்கள்.--பாஹிம் 23:58, 17 சூலை 2011 (UTC)Reply

இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாறு தொகு

இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றின்படி, இலங்கைத் தீவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரேயே இந்திய நிலத்தட்டிலிருந்து பிரிந்து விட்டது. இதுபற்றி, இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள் கட்டுரையில் பின்வருமாறு உள்ளது: "இலங்கையானது ஆசியாக் கண்டத்தின் பெருநிலப் பரப்பிலிருந்து மிக ஒடுங்கிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம் சார் தீவாகும்[3]. இலங்கை ஒரு காலத்தில் கோண்டுவானாவின் பகுதியாக இருந்து பின்னர் கிரீத்தேசியக் காலத்தில் அதிலிருந்து பிரிந்து வடக்காக நகர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிலிருந்து 55 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் இந்தியப் புவித்தட்டுடன் இணைந்து ஆசியாக் கண்டத்துடன் இணைந்தது. இதனாலேயே இலங்கையில் பல்வேறு புராதன கோண்டுவானா இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் இலங்கை மீண்டும் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நிலவிய உலர் காலநிலை காரணமாக இலங்கையின் தென்மேற்கு மழைக்காடுகளுக்கும் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள காடுகளுக்குமிடையில் வித்தியாசங்கள் உருவாகின[3]. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிந்த பின்னர் நிலத்தொடர்களால் இலங்கைத் தீவு இந்தியாவுடன் காலத்துக்குக் காலம் தொடர்பு பட்டிருந்த போதும், இலங்கையின் ஈரப்பதன் மிக்க காடுகளும் அவற்றின் உயிர்ப்பல்வகைமையும் சூழலியல் தொடர்பில் மிகவும் வேறுபட்டனவாகக் காணப்படுகின்றன." இது இவ்வாறிருக்க, மிகச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவும் இலங்கையும் குமரிக்கண்டமெனும் ஒரு கண்டத்தின் பகுதிகளாக இருந்ததாகக் கூறுவது எப்படி ஏற்புடையதாகும்? பின் மயோசீன் காலத்தில், அதாவது கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரேயே இலங்கை இந்திய நிலத் தட்டிலிருந்து பிரிந்ததற்கு ஆதாரமாக, தென்னிலங்கையில் வெலிகமை பட்டினம் உட்பட பல்வேறு கரையோரப் பகுதிகளிலும் நிலத்திற்குக் கீழே வெகு தூரம் வரையில் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகவும் பரவலாகவும் கிடைப்பதனைக் கூறலாம். இதனை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம். குமரிக்கண்டம் என்ற ஒன்று உண்மையிலேயே இருந்திருக்குமாயின் இவ்வாறு நிலத்துக்குக் கீழே பல கிலோமீற்றர் தொலைவிற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் எப்படிக் கிடைக்க முடியும்?--பாஹிம் 01:47, 18 சூலை 2011 (UTC)Reply

பாஹிம்,இராமாயண அறிவியல் ஆதாரமற்றதென்பது ஏற்புடையதே. "பாண்டியர்" என்னும் கட்டுரையில்ta.wikipedia "இராமாயனத்தில்" என்ற துனைத்தொகுப்பு வருகிறது. அதை போலிங்கு தரலாமா? (ஆதாரமென்று கூறாமல்) தென்காசி சுப்பிரமணியன்

பாஹிம், மேலும் "இது எளிய ஆதாரம், எவரும் புரிந்து கொள்ளத் தக்கது" என்று நான் கூரிய பகுதி school atlas-ல் உள்ளதாலேயே. வேறெங்குமப்படிக் கூறவில்லை.தென்காசி சுப்பிரமணியன்

தென்காசி சுப்பிரமணியன்! இராமாயணம், புராணங்கள், சங்க நூல்கள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் செய்திகளை குமரிக்கண்டம் பற்றிய இலக்கியப் பதிவுகள் என்று தலைப்பிட்டு நீங்கள் தாராளமாகத் தரலாம். அவ்வாறானவற்றுக்கு இலக்கிய ஆதாரங்களைச் சுட்டுவது நல்லது. எனினும், அறிவியல் அல்லது வரலாற்று ஆதாரம் கேட்க வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை. மற்றப்படி, இப்படி உறுதியற்ற செய்திகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் கோரப்படுவது மிகப் பொதுவானதே. அவ்வாறே, நீங்கள் முன்னர் சுட்டிய ISIAC என்னும் அமைப்புக்கு எந்தவித அறிவியல் அங்கீகாரமும் இல்லையென்றே கருதுகிறேன். காரணம், அவர்கள் வெளியிட்டதாகக் கூறும் நூலில் இராமாயணம், கந்தபுராணம் போன்ற கற்பனைகளிலிருந்து அறிவியல் ஆதாரம் காட்டப்பட்டிருப்பதாக நீங்களே முன்னர் கூறியிருந்தீர்கள். நான் இங்கு ஆதாரம் கேட்டது உங்களைப் புண் படுத்தவோ உங்களது முயற்சியை மட்டுப்படுத்தவோ அன்று. மாறாக, நாமெல்லாம் வருத்தப்பட்டு உருவாக்கும் இந்தக் கலைக்களஞ்சியத்தின் உண்மைத் தன்மையைப் பேணுவதே என் நோக்கம். பாண்டியர் கட்டுரையிலும் சில இடங்களில் ஆதாரம் தேவை என்பதை இணைப்பதற்குக் காரணமும் அதுவே. அவ்வாறின்றேல், நாமே நமது முயற்சியை வீணடித்தோராக மாட்டோமா? விக்கிப்பீடியா என்பது எம் எதிர்காலச் சந்ததியினரும் நாமும் படித்துப் பயன் பெறுவதற்காகவன்றோ. எம்மிடையே பல கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். எனினும், நாம் இங்கு ஒரு பொது நோக்கில் இக்கலைக்களஞ்சியத்தை ஆக்குகிறோம். என் சொற்கள் உங்களுக்கு மனக் கிலேசத்தை ஏற்படுத்தியிருப்பின், அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்.--பாஹிம் 14:47, 18 சூலை 2011 (UTC)Reply

குமரிமன்னன் தொகு

பாஹிம்,உங்கள சொற்கள் மனக் கிலேசத்தை தரவில்லை.நான் இக்கலைக்களஞ்சியத்தில் நுழைந்து மூநாட்களே ஆகியது. எப்பகுதியை எங்கினைப்பது என்றறிய நாளாகும். இனி இராமாயணம், புராணங்கள், சங்க நூல்கள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் செய்திகளை குமரிக்கண்டம் பற்றிய இலக்கியப் பதிவுகள் என்று தலைப்பிட்டுத்தருவேன்.மேலும் ancient india bookல் ஒரு செய்தி. அது

"it is said that chinese labourers were employed by the pandyan king and when they went down the mines they appeared like a huge army of small ants. therefore, they were called pon thondi erumbukal. this is confirmed by ancient chinese chronicles"

என்று வந்துள்ளதை வைத்தே எழுதினேன். அது எந்த பழங்கதை என்றறிய நாளாகும். மேலும் அந்நூல் தமிழே முதல் மொழி என்று கூறுவதால் அது ஆரியச்சார்பற்றது.

மேலும் தமிழர்ச்சமுதாயம் என்னும் நூலில் முருகன் என்ற மன்னனுக்கு நடுகல் வழிபாடு நடத்தப்பட்டதாகவும் பிற்பாடு ஆரியர் வருகையால் ஆரியக்கடவுள் கார்த்திகேயனுடனினைக்கப்பட்டானென்கிறது.

முருகன் என்ற மன்னனுக்கு நடுகல் வழிபாடு நடத்தப்பட்டதற்கு அந்நடுகல்லின் வரிவடிவமும் நூலில் இருக்கிறது. அதை வைத்தே எழுதினேன்.

இவை கட்டுரையில் இணைக்கக்கூடியதா?தென்காசி சுப்பிரமணியன்

குறித்த நூலின் ஆசிரியர் பெயர், நூற் பெயர், வெளியீட்டாளர் பெயர், வெளியீட்டு ஆண்டு, இடம், பக்க எண் முதலானவற்றைத் தந்து, (குறித்த நூல்) ... எனக் குறிப்பிடுகிறது/கூறுகிறது என்று நீங்கள் அதனை இணைக்கலாம். மறுப்பேதுமில்லை. எனினும், சங்ககால அல்லது சங்ககாலத்துக்கு முந்திய எழுதப்பட்ட வரலாறுகள் தமிழில் இல்லையல்லவா? சங்ககால வரலாறே சங்க இலக்கியங்களிலிருந்துதான் பெறப்படுகிறது. அவ்வாறிருக்க, முருகன் எனும் வேந்தன் ஒருவன் இருந்தானெனக் கூறும்போது அதற்குரிய வரலாற்று ஆதாரமும் கட்டாயம் காட்டப்பட வேண்டும். வெறுமனே அப்படி ஒருவன் இருந்தானென அந்நூல் குறிப்பிடுவதாயின் அவ்வாறானவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.--பாஹிம் 00:56, 19 சூலை 2011 (UTC)Reply

புறவய நோக்கு தொகு

வணக்கம் தென்காசி சுப்பிரமணியன். குமரிக்கண்டம் என்பது இன்றுவரை ஒரு தொன்மவியல் கருப்பொருளாகவே இருந்துவருகிறது. நிலவியல் சார்ந்து ஆதாரங்கள் அங்கு வாழ்ந்த மக்கள், மொழி, வரலாறு பற்றி எந்த தகவலையும் தரவில்லை. எனவே நாம் மிகவும் புறவய அடிப்படையிலேயே தகவல்களைச் சேர்ப்பது பொருத்தமானது. குறிப்பாக ஊகங்கள் மிகுந்த கூற்றுக்களை மிகவும் அவதானத்தோடு பயன்படுத்த வேண்டும். இராமாயணம் என்பது ஒரு தொன்மம். தற்கால நாவல்கள் போலவே சில கூறுகள் நிசமாக இருக்கலாம், ஆனால் இராமாயணத்தையோ அல்லது அது நடந்தாக கூறப்படும் கால கட்டத்தையோ யதார்த்தாமக் கொள்தல் அறிவியல் சார் முறையன்று. உங்கள் ஆதாரங்களை, நிலவியல், கடலியல், இலக்கிய என்று வகுத்து தகுந்த ஆதராங்களை மேற்கோள்களாக காட்டுதல் நன்று. மேலும் குமரிக்கண்டம் நோக்கிய விமர்சனங்களை சேர்த்தல் வேண்டும். --Natkeeran 00:27, 20 சூலை 2011 (UTC)Reply

Natkeeran, புறவய நோக்கு, தொன்மம் என்றாலென்ன?தென்காசி சுப்பிரமணியன்

Natkeeran, குமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு கட்டுரையின் பகுதியை சேர்த்துள்ளேன் செம்மைப்படுத்த வேண்டுகிறேன்?தென்காசி சுப்பிரமணியன்


  • புறவய நோக்கு - with an objective outlook or objectively
  • தொன்மம் - புராணம்/mythology

--Natkeeran 23:03, 21 சூலை 2011 (UTC)Reply

natkeeran, what is the perfect tamil word for chronicles?தென்காசி சுப்பிரமணியன்

//உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன்// புராணம் என்று சொல்லுதல் பிழையானது. இலக்கியத் தரவுகள் என்று குறிப்பிடலாம். புராணங்கள் என்பவை கடவுளர் குறித்து எழுப்பப்பட்ட கட்டுக் கதைகள். தமிழரின் இலக்கியச் சான்றுகளை புராணம் என்று புறங்கையால் தள்ளுதல் கூடாது. ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

வணக்கம் தொகு

தங்கள் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் பன்னெடுங்காலம் ஆய்வுகள் செய்து குமரிக்கண்டம் என்பதை நிறுவுகிறார். அதில் பல்வேறு வரலாற்று ஆதாரங்களை அவர் சுட்டுகிறார். அமிழ்தம் பதிப்பகத்தார் வெளியீடான ந.சி.க. நூல் திரட்டு வரிசையில் 'தமிழகம்' என்னும் நூலை வாசிக்கவும். கிடைக்குமிடம் தமிழ்மண் பதிப்பகம். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017 தொ.பேசி. 55183162. --Parvathisri 13:13, 13 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி அம்மா. அவர் எழுதிய மற்ற சில புத்தகங்களிலும் இதை கண்டதுண்டு. நீங்கள் கூறிய புத்தகத்தலைப்பை நான் நூலகங்களில் கண்டதாக நினைவு. தமிழகம் என்ற தலைப்பை பார்த்துவிட்டு தமிழக வரலாறு என்று விட்டுவிட்டேன். இனி அதை முழுவதுமாக படித்து விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 14:42, 13 திசம்பர் 2011 (UTC)Reply

உடைந்த நிலத்தட்டா குமரி கண்டம்? தொகு

கூகுள் எர்த்தில் தற்போதைய குமரிமுனைக்கு தெற்கே கடலின் ஆழம் 10 அடிகளில் கீழே நிலத்தட்டு இருப்பதை போல் காட்டுகிறது. இதுவே தெற்கே செல்ல செல்ல அது ஆழம் அதிகரிக்கிறது. என்றாலும் அதிகபட்சமாக 700 அடிகள்தான். அனால் 120௦ கிலோமீட்டர்வரை தெற்கில் சென்றால் அதுவரை 750அடிக்குள் காட்டும கடற்படுகை திடீரென் கடலின் ஆழத்தை 7000 அடியாக கட்டுகிறது. இதைவைத்து பார்க்கும்பொது ஒருவேளை இந்த இடம் மூழ்கிப்போன லேமுரியாவாக இருக்குமோ...!?! -- எஸ்ஸார் (after all, i'm not "in" on this game. but I just cant stop imagine this)


14:42, 13 திசம்பர் 2011 (UTC)

இலங்கை புவியியல் மீளுருவாக்கம் தொகு

  1. சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
  2. 27,000 ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் உயர்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் பிரிந்தன.
  3. 17,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல்மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.(இதற்கான ஆண்டுகள் பின்வரும் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை)

//குமரிக்கண்டம் என்ற ஒன்று உண்மையிலேயே இருந்திருக்குமாயின் இவ்வாறு நிலத்துக்குக் கீழே பல கிலோமீற்றர் தொலைவிற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் எப்படிக் கிடைக்க முடியும்?//

ஒருவேளை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் போது இப்பகுதியில் கடலிருந்தும் குமரிக்கண்ட காலத்தில் அங்கு நிலமும் இருந்திருக்கலாம். ஆதாரம்: தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94

அப்பத்தகத்தில் சோம. இரமசாமி என்பவர் செய்த ஆராய்ச்சிகள் என்று கூறப்பட்டுளது.

--தென்காசி சுப்பிரமணியன் 07:58, 29 திசம்பர் 2011 (UTC)Reply

பொதுக்காலம் தொகு

குமரிக்கண்ட காலம் எனப்படுவது சங்க காலத்துக்குச் சற்று முந்திய காலம். அது இன்றைய பொதுக் காலத்தின் முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என்ற கருத்தே நிலவுகிறது. எனினும் இலங்கையின் எழுதப்பட்ட வரலாறாகிய மகாவம்சம் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் பொ.கா.மு. 570 ஆம் ஆண்டு வாக்கில் நிகழ்ந்த விஜயனின் வருகையிலிருந்து கூறுகிறது. அதாவது, சங்க காலம் எனக் குறிக்கப்படும் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முந்திய எழுதப்பட்ட வரலாற்றை மகாவம்சம் கொண்டுள்ளது. மகாவம்சத்தின் படி, துட்டகைமுனு மன்னனின் தாயான விகார மகாதேவியை அக்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளின் காரணமாக அச்சம் கொண்ட இலங்கை மக்கள் கடலுக்குக் காணிக்கையாக அனுப்பினர் என்றும் அவரை ஏற்றியனுப்பிய கப்பல் தென்னிலங்கை அரசான உறுகுணை அரசின் தலைநகரான மாகாமம் (அஃதாவது, இன்றைய திஸ்ஸமகாராமய) என்ற இடத்திற் கரையொதுங்கியதாகவும் உறுகுணையின் அப்போதைய மன்னன் காவந்தீசன் அவளைக் காப்பாற்றித் திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கவனிக்க வேண்டிய செய்தி யாதெனில், மாபெரும் கடற் பிரளயம் ஏற்பட்டது என்ற செய்தியும் அப்போது இலங்கையின் முதன்மையான தீவு ஒரு தீவாகவே இருந்ததென்பதும் ஆகும். மகாவம்சம் கூறும் கடற்கோள் ஏற்பட்ட காலமும் சங்க காலச் செய்திகளும் ஒத்துப் போகின்றன. எனினும், அப்போது தீவாகவே இலங்கை இருந்ததென்பதும் குமரிக்கண்டம் இருந்ததற்கான எவ்விதச் சான்றும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கன. அவ்வாறே, நீங்கள் மேலே கொடுத்துள்ள பதிலில் வெறுமனே ஊகமே தவிர ஆணித்தரமான உண்மை என எதுவும் குறிப்பிடப்படவில்லை.--பாஹிம் 12:53, 29 திசம்பர் 2011 (UTC)Reply

நீங்கள் கூறியபடியே அப்பத்தகம் ஆதாரத்தை தரவில்லை. அப்புத்தகத்தில் அவ்வாய்வை பற்றிய சில குறிப்புகளே உள்ளதால் அதில்தெளிவில்லை. அக்குறிப்புகள் மொத்தமாக கிடைத்தால் படிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள பொ.கா.மு. 570 ஆம் எனபது எந்தாண்டு. மகாவம்சம் ஆறாம் நூற்றாண்டு எழுதப்பட்டதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் 13:14, 29 திசம்பர் 2011 (UTC)Reply

பொ.கா. (பொதுக் காலம்) என்பது சிலர் கி.பி. (கிறித்துவுக்குப் பின்) என்று பயன்படுத்துவதற்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறே பொ.கா.மு. (பொதுக் காலத்துக்கு முன்) எனப்படுவது (கிறித்துவுக்கு முன்) என்பதற்கு மாற்றீடாகும். இவ்வாறு பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் கிறித்து என்ற பதத்தை நாம் ஏற்றுக்கொள்வதில்லை என்பதும் கிறிஸ்துவின் காலம் என்று கிறிஸ்தவர்களே குறிக்கும் காலத்தில் உள்ள குளறுபடியும் ஆகும். அதாவது, ஈசா (இயேசு) பிறந்த ஆண்டு கி.பி. 4 என்று குறிப்பிடப்படுகிறது. அப்படியாயின் கிறிஸ்து எனப்படுபவர் யார்? எவரது பிறப்பை வைத்துக் காலம் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதோ, அவர் பிறந்த காலத்திலிருந்து சரியான கணிப்பு நிகழவில்லை என்பதே இதிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், இக்காலத்தில் மேற்படி அடிப்படையிலான நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது என்பதுடன் கிறித்தவரல்லாதோரும் அதனைப் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, கிறிஸ்து என்பவரில் நம்பிக்கை கொள்ளாத நாம் ஏன் அதனைக் கிறிஸ்தவர்களின் வழக்கத்தையொட்டிப் பயன்படுத்த வேண்டும்? அதனாற்றான், பொதுவான பயன்பாடு கருதி மேற்படி காலக் கணிப்பைப் பொதுக் காலம் (Common Era) என்று குறிப்பிடப்படுகிறது.--பாஹிம் 13:30, 29 திசம்பர் 2011 (UTC)Reply

மகாவம்சம் தொகு

மகாவம்சம் தொகுக்கப்பட்டது ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு ஆயிருப்பினும் அதற்குரிய மூலச் சுவடிகள் பொ.கா.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளன. மகாவிகாரையில் எழுதப்பட்டிருந்த அட்டக்கத்தா என்ற சுவடிகளின் தொகுப்பினாலேயே மகாவம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்கோள் ஏற்பட்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் மகாவம்சத்தில் விபரிக்கப்பட்டுள்ளமையும் மகாவம்சம் கூறும் காலமும் சங்க இலக்கியங்கள் கூறும் காலமும் ஒன்று என்பதும் குறிப்பிடத் தக்கவை.--பாஹிம் 13:41, 29 திசம்பர் 2011 (UTC)Reply

பொ.கா.மு., makavamcam பற்றி தெரியப்படுத்தியதற்கு நன்றிகள். எனக்கு தெரிந்த மட்டும் கி.மு. 2400ல் [2] தமிழ்கம் இலங்கை கடைசியாக பிரிந்தது என்று ஒரு தொன்ம ஆய்வாளர் குறிப்பிட்டுளார். ஆனால் அவர் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் அல்ல. மேலும் இதைப்பற்றி தெரிந்து கொண்டு வருகிறேன். இப்பக்கத்தை உங்கள் கவனிப்பு பட்டியலில் வைத்திருக்க வேண்டுகிறேன்--தென்காசி சுப்பிரமணியன் 13:51, 29 திசம்பர் 2011 (UTC)Reply

சரி, அப்படியே செய்யலாம். எப்படியாயினும், நம்பகமான வரலாற்று ஏடுகளிலிருந்து அல்லது அறிவியல் ஏடுகளிலிருந்து உங்கள் கட்டுரைகளுக்கு வலுச் சேர்க்க முயன்றால் மிக்க நன்றாயிருக்கும். அப்போது, உங்களது கருத்துக்களுக்கு நியாயமான எதிர்ப்புக்கள் குறைவாக இருக்கும் என்பதுடன் ஏற்படும் கேள்விகளுக்கும் நீங்கள் தக்க முறையிற் பதிலளிக்க வசதியாக இருக்கும் அல்லவா?--பாஹிம் 14:01, 29 திசம்பர் 2011 (UTC)Reply

செயற்படாத தொடுப்புக்கள் தொகு

இக்கட்டுரையிற் தரப்பட்டுள்ள http://www.urbandictionary.com/define.php?term=kumari%20kandam என்ற தொடுப்பில் அப்படி எதுவும் இல்லை என்ற பதில் வருகிறது.--பாஹிம் 08:12, 30 திசம்பர் 2011 (UTC)Reply

பின்வரும் தொடுப்பும் இயங்கவில்லை - http://www.tamilvu.org/library/lA46G/html/lA46Gind.htm/ --பாஹிம் 08:16, 30 திசம்பர் 2011 (UTC)Reply

இங்கே விக்சனரியில் சேர்க்குமாறு ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுளது.[3] தகவலுலவன் அதைப்பார்க்கும் போது அவ்விணைப்பில் நான் கொடுத்த தகவல்களிருந்தன. தற்போது என்னானதென தெரியவில்லை.

பாவாணர் தொகு

தமிழ் வூ என்பது இணைய பல்கலைக்கழகம். நிரோஜ்ன் சக்திவேல் இக்கட்டுரையை எழுதும் பொது சேர்த்த தகவல் அது. நான் தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களை சேர்த்து வைத்திருந்தென். அவ்விணைப்பும் தற்போது செயல் படவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் 09:15, 30 திசம்பர் 2011 (UTC)Reply

[4] பாவாணர் நூல்கள் இங்குளது.

  1. தமிழர் வரலாறு
  2. தமிழ் வரலாறு 1
  3. தமிழ் வரலாறு 2

இம்மூன்று நூல்கள்லுமே அவர் குமரிக்கண்டம் பற்றி எழுதியுள்ளார். அப்பாத்துரை என்பவரும் இவர் வாதங்களையே பின்பற்றியுள்ளாஅர்.--தென்காசி சுப்பிரமணியன் 09:30, 30 திசம்பர் 2011 (UTC)Reply

பாவாணர் கூற்றுகள் சில குமரியில் இருந்து தமிழன் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தான் என்று கூறுகின்றன். காப்புரிமை சிக்கல் கருதி அவற்றை மொத்தமக தராமல் சிறிதாக கொடுக்கப்பட்டது. 15 வாதங்கள் [5] [6]--தென்காசி சுப்பிரமணியன் 10:27, 30 திசம்பர் 2011 (UTC)Reply

மாறிய இணைப்புகள் தொகு

அர்பன் ட்ச்னரி இங்கு மாற்றப்பட்டுளது.http://www.urbandictionary.com/define.php?term=Tamil&defid=1700246

அங்குள்ள வாக்கியம்

Tamil is the oldest language in the world. It is the mother of all Indo European languages including Sanskrit. Recent archaeological (Adhichanalloor and Indian ocean) evidence shows that the language is related to sumerian and that Tamil was spoken in South India more than 5000 years ago. The language has changed very little over these years and old tamil is still comprehensible to tamil speakers. Tamil legend says speaks of a lost continent, "Kumari Kandam" which is believed to be submerged under Indian Ocean. Recent excavations in Indian Ocean seem to support this legend.

a sumerian sentence:

"gi ri a gi bad du ri a"

old tamil sentence:

"ka ri a ra va na da" --தென்காசி சுப்பிரமணியன் 09:39, 30 திசம்பர் 2011 (UTC)Reply

கூகுள் தேடலில் சில வெளியில் தெரிவது போல் உள் தெரிவதில்லை.http://www.google.co.in/#sclient=psy-ab&hl=en&site=&source=hp&q=urban+dictionary+sumeria+kumarikandam&oq=urban+dictionary+sumeria+kumarikandam&aq=f&aqi=&aql=&gs_sm=e&gs_upl=8510l22798l0l23517l37l31l0l0l0l0l0l0ll0l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=40f04f0c97159462&biw=1366&bih=624--தென்காசி சுப்பிரமணியன் 09:42, 30 திசம்பர் 2011 (UTC)Reply

பாவாணர் தொகு

பாவாணர் குமரிக்கண்டத்திலிருந்து மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு 15க்கும் மேற்பட்ட சான்றுகளை மேலுள இணைப்புகளில் குறிப்பிடுளார். அதை இங்கு தந்தால் காப்புரிமை சிக்கல் வருமா?--தென்காசி சுப்பிரமணியன் 08:01, 22 பெப்ரவரி 2012 (UTC)

மறுப்பு வாதங்கள் தொகு

இக் கட்டுரையில் மறுப்பு வாதங்கள் விரிவாகச் சேர்க்கப்பட வேண்டும். பண்டைச் சமூகங்களுக்கு தொல்லியல், தொல்பொருள் ஆதாரங்களே கூடிய பலன் தருபவை. இலக்கிய ஆதாரங்களில் கால எல்லை கேள்விக்கு உட்படுத்தப்படுவதாலும், கற்பனைத் தன்மைகள் உள்ளதாலும் அவை போதிய சான்றுகளாக பல சூழ்நிலைகளில் அமைவதில்லை. --Natkeeran (பேச்சு) 03:21, 14 ஏப்ரல் 2012 (UTC)

சில சான்றுகள் தொகு

குமரிக்கண்டம் பற்றிய மறுப்பு வாதம் செய்வோர் ஒன்றை மட்டுமே முன் வைக்கின்றனர். அது அதற்கான அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை என்பதே. அதே சமயம் அதை மறுப்பதற்கான அறிவியல் ஆதாரமும் எதுவும் இல்லை. இங்கு ஆதாரமென்று எதுவும் இல்லை என்றாலும் சான்றுகள் என்று சிலவற்றை கூறிதான் ஆக வேண்டும். அவை,

  1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியமுற்றும் செறிந்தும் இருத்தலும்.
  1. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென் சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தலும். முழுத்தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென் கோடியில் வழங்குதல்.
  1. தமிழ்நாட்டுள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்லத் திருந்தியும் சிறந்தும் இருத்தல். ("திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்" என்னும் வழக்கும் இதை உணர்த்தும்.)
  1. வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வல்லொலிகள் தமிழிலின்மையும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த தீவுகளிலும் வழங்குதலும்.
  1. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட தலைக்கழகம், குமரிக்கண்டத்தின் தென் கோடிப் பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும்.
  1. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.
  1. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத்(Tasmania) தீவில் இன்றுமிருத்தல்.
  1. வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) உயிர்களுந் தவிர, மற்றல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகைகளு மாகிய முதற் பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.
  1. மக்களின் நாகரிகத் தொடக்கத்தையுணர்த்தும் ஐந்திணை மக்கட் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாட்டாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டிருத் தலும், ஐந்திணை நிலப் பாகுபாடு தமிழ் நாட்டிற்போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைந் திராமையும்.
  1. தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டி லேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும்.
  1. தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒருசான்று மின்மை.
  1. தென்னாடு, தென்னர்(தென்னாட்டார்), தென் மொழி, தென்றமிழ். தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளமை.
  1. பண்டைத் தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றழைத்தமையும்; இறந்த முன்னோரிடம் தென் புலம், தென்னுலகு என்றும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் என்றும் பெயர் பெற்றிருத்தலும்.
  1. தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில், தென்றிசை முற்குறிக்கப் பெறுதல்.
  1. அகப்பொருளில் தலைக்கழகத்தில் நிறைய புலவர்கள் இருந்ததும் அடுத்து வந்த க்ழகங்களில் புலவர்களின் எண்ணிகை திடுமென குறைந்ததும். தலைக்க்ழகம் போது குமரி மிகப்பெறும் நாடாயிருந்தது. அதனால் நிறைய புலவர்கள் வந்தனர். இடைக்கழகம் போதே கபாடபுரம் பொருநை ஆறான தாமிரபரணி அருகில் வரை சுருங்கிவிட்டது. அதனால் சில புலவர்களே இருந்தனர்.

மேற்ச்சொன்னவை அனைத்தும் பாவாணர் என்பவரால் குறிப்பிடப்பட்டவை.

இன்னும் சிலவற்றையும் கூற விரும்புகிறேன். இவை யார் சொன்னது என்பது மறந்துவிட்டது.

  1. பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
  1. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
  1. நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது. பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது. இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது. இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது. மேலும் அறிய இவ்விணைப்பைப் பாருங்கள்.[7]
  1. ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் விட்ஃசெல் (Michael Witzel) அண்மையில் பகிர்ந்த மடலில் உள்ள செய்தி குறிப்பிடத் தகுந்தது:

Vaclav Blažek, Was there an Australian substratum in Dravidian? Mother Tongue XI, 2006. சுருக்கம் The matter of immigration from Africa via S. India to Indonesia and Australia (via Flores around 50,000 BCE) is complex: earliest skeletons from that period in Australia at Lake Mungo, some "Australian" genes have been detected in Tamil Nadu a few years ago, and apparently some "modern" (Homo Sap. sap.) Paleolithic tools in the same area go back some 74,000 years. More on all of this if you ask… இவை ஆலமரத்தடியில் கூறப்பட்டவை.

  1. இதைக் கொண்டே விக்டர் என்பவர் தென்னிந்தியாஅவும் ஆஸ்திரேலியாவும் இணைந்திருந்தது என்று கூறுகிறார்.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்) எழுதியுள்ளார்.

நான் கூற வருவது என்னவென்றால் ஏற்பு வாதங்கள் இருக்குமளவு மறுப்பு வாதங்கள் இல்லை என்பதே. இவை அனைத்தும் விஞ்ஞான ஆதாரங்கள் என்று கூறவரவில்லை. இவை அனைத்தும் தற்போதும் தாங்கள் வழக்கத்தில் காண்பவையே.

எதிர்ப்பு வாதங்கள் கூறுபவர்கள் ஒன்றை மட்டூமே கூறுகின்றனர். அது இதற்கான விஞ்ஞான ஆதாரம் இல என்ன்பதே. இதை மறுப்பதற்கு விஞ்ஞான ஆதாரங்கள் ஏதுமிருந்தால் தரவும்.

மேலும் இதற்கான எதிர்ப்புக்கட்டுரைகளுக்கான இணைப்பையும் வெளியிணைப்புகளில் முதலிரண்டில் ஏற்கனவே இணைத்துளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:30, 14 ஏப்ரல் 2012 (UTC)

சோம இராமசாமி தொகு

முன்பொருமுறை இந்திய இலங்கை புவிசரிதவியல் தொடர்பாக உரையாடல்கள் நிகழ்ந்தன. அந்த புத்தகத்தில் சோம இராமசாமி என்பவர் இந்தியாவும் லங்கையும் பிரிந்து சேர்ந்ததன் காலங்களை குறிப்பிட்டிருந்தார் என்றுளேன். அந்த இராமசாமி யாரென தற்போது ஒரு தகவல் கிடைத்தது. அவர் தான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர். அவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலரில் பதிவாகியுள்ளது. அதிலுள்ள செய்திகள்,

  1. சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
  2. சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
  3. சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
  4. சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
  5. சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.;
    நிற்க.
  6. கடைசியாக மீண்டும் இரண்டு கண்டங்களும் எப்போது சேர்ந்தது என்று அவர் கூறவில்லை. ஆனால் வேறொரு தொன்ம ஆய்வாளர் இது பொ.மு. 2400ல்[8] சேர்ந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் இது மேலுள்ளது போல் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வா என்பதில் தெளிவில்லை. அதனால் பாஹிம் இலங்கை புவிச்சரிதவியலைக் கொண்டு குமரிக்கண்ட தகவல்கள் தவறெனக் கூறியதை மறுக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 24 ஏப்ரல் 2012 (UTC)

சு. கி. ஜெயகரன் தொகு

குமரிக்கண்டம் என்பது இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நிலவியல் அறிஞர் சு. கி. ஜெயகரன் 2007 ஆம் ஆண்டு ' குமரி நில நீட்சி ' எந்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ' காலச்சுவடு ' பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.அதில் குமரிக்கு தெற்கே சிறிய நிலப்பரப்பு இருந்திருக்கலாம் எனவும் அதையே குமரிக்கண்டம் அல்லது 'லெமுரியாக் கண்டம் ' எனத் தவறாக புரிந்துகொண்டோம் எனவும் பல்வேறு சான்றுகளின் மூலமும் அறிவியல் ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டும் முன்வைக்கிறார்.BALA.R,Sankaranputhoor. (பேச்சு)−முன்நிற்கும் கருத்து ‎Balurbala (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அதில் என்னென்ன ஆய்வுகளை முன் வைக்கிறார் என்று ஒரு பத்தியை நீங்களே கட்டுரையில் சேர்க்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:16, 29 சூலை 2012 (UTC)Reply

நிச்சயமாகச் செய்கிறேன். தற்போது சிங்கப்பூரில் இருக்கிறேன்.புத்தகம் இந்தியாவில் வீட்டில் இருக்கிறது. நவம்பரில் இந்தியா வரும்போது மேலதிக தகவல்களை இணைக்கிறேன். நன்றி.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) −முன்நிற்கும் கருத்து ‎Balurbala (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. இதைப்பற்றிய மேலதிக விவரங்களைப் பதிய காலச்சுவடு பதிப்பகத்தின் அனுமதியைக் கேட்டிருந்தேன் , ஆனால் இதுவரை சாதகமான பதில் கிடக்கப்பெறாததால் மேலதிக விவரங்களைப் பதிவிட இயலவில்லை. BALA.R,Sankaranputhoor. (பேச்சு)

குறிப்பிட்ட நூலை மேற்கோள் காட்டி நீங்கள் எழுதலாம். அதில் பதிப்புரிமைப் பிரச்சினை எழாது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:22, 3 மே 2013 (UTC)Reply

குமரி இடிபாடுகள் தொகு

குமரி கண்டத்தில் தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் போன்றவை இருந்தது என்றால் அவற்றின் கட்டிட இடிபடுகள் இருந்ததற்கான அடையலங்களின் படங்களை சேர்க்கலாம். குமரி கண்டத்தில் ஆறுகள் ஓடியது என்றால் அவற்றின் படுகைகளை வரைபடத்தில் காட்டலாம் சதீஸ் (பேச்சு) 09:34, 16 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குமரிக்கண்டம்&oldid=3780234" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குமரிக்கண்டம்" page.