பேச்சு:சூசன் எம். ஆன்ட்ரூசு
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by AntanO in topic சோதனை முயற்சி?
இக்கட்டுரை 2024 ஆம் ஆண்டு, 100விக்கிநாட்கள் திட்டத்தில் பங்குபெறும் பயனர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரையாகும் |
சோதனை முயற்சி?
தொகு@~AntanO4task ், சோதனை முயற்சி என்று கூறியுள்ளீர்கள். என்ன சோதனை ? புரியவில்லை. இருப்பினும உங்கள் அறிவிப்புக்கு பிறகு புதிய பயனர் கட்டுரையை விரிவு படுத்தியுள்ளார். நானும் சிறு சொற்றொடர் மாற்றம் செய்துள்ளேன். வேறு என்ன மேம்பாடு செய்ய வேண்டும்.இந்த வார்ப்புரு வேண்டாம். தேவையான மாற்றங்களைக் கூறுங்கள். செய்து கட்டுரையையும், புதிய பயனரையும் பேணுவோம். அவசரப் படவேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். த♥உழவன் (உரை) 15:48, 5 மார்ச்சு 2024 (UTC)
- இயந்திர மொழிபெயர்ப்பு என்பதற்காக நீக்கல் வார்ப்புரு இடப்பட்டதாகத் தெரிகிறது. பயனரின் பேச்சுப் பக்கத்தில் இது பற்றி குறிப்பிடும்போது, அவர் கற்று வருவதாக தெரிவித்ததால், சோதனை முயற்சி எனும் குறிப்பினை அண்டன் இங்கு இட்டிருக்கிறார். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:02, 6 மார்ச்சு 2024 (UTC)
- @Selvasivagurunathan m கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் மட்டுமே பார்த்தேன். இனி கட்டுரையாளர் பேச்சுப்பக்கத்தினையும் காண வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இருப்பினும் கட்டுரைக் குறித்து அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடினால் மற்றவருக்கு பின்னாளில் பயிலங்கின் போது நாம் எப்படி கலந்துரையாடி கட்டுரையை மாற்றுகிறோம் என்பதை காட்ட இயலும். த♥உழவன் (உரை) 16:33, 7 மார்ச்சு 2024 (UTC)
- அங்குள்ள தொகுப்பு சுருக்கத்தையும் கவனியுங்கள். ஏன் தானியங்கி மொழிபெயர்ப்புக்கள் அவசரமாக, முறையாக மொழிபெயர்ப்புச் செய்யாமல் உருவாக்கப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை. இவ்வாறானவர்கள் தாராளமாக மணல் தொட்டியைப் பயன்படுத்தலாம். அவசரப் படவேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். மேம்படுத்தியதற்கு நன்றி. சூசன் எம். ஆன்ட்ரூசு என்பவர் இங்கிலாந்து நாட்டு சார்ந்த பெண் தாவரவியலாளரும், தோட்டக்கலை ஆய்வாளரும் ஆவார். நாட்டு சார்ந்த என்பது சரியா? ~AntanO4task (பேச்சு) 18:35, 6 மார்ச்சு 2024 (UTC)
- தானியங்கி மொழிபெயர்ப்பு அவர் செய்வதில்லை என்றே எண்ணுகிறேன். British என்பதை இங்கிலாந்து என மாற்றியுள்ளார். பிரித்தானிய என மாற்ற வேண்டும் சரியா? தொடர்ந்து புதுப்பயனர்களை காப்பது சற்று சிரமமாகவே உள்ளது. வார்ப்புரு நீக்கியமைக்கு நன்றி. அதற்கு பிறகு விக்கத்தரவு அடிப்பிடையில் செயற்படும் தகவற்பெட்டியை இணைத்துள்ளேன். மேலும் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் செய்கிறேன். பின்பு இதனை மாதிரியாகக் கொண்டு பல கட்டுரைகளை பலரால் எழுத பயலிரங்கு அன்று பயிற்சி அளிப்பேன். நேரடியாக ஒரு பயனருடன் பேசி செயற்படும் போது பலன் அதிகம் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயற்பட முதலில் கற்க விரும்புகிறேன். த♥உழவன் (உரை) 16:47, 7 மார்ச்சு 2024 (UTC)
- நான் ஏதோ கேட்க, நீங்கள் ஏதோ பதிலளிக்கிறீர்கள்!? AntanO (பேச்சு) 17:59, 7 மார்ச்சு 2024 (UTC)
- தானியங்கி மொழிபெயர்ப்பு அவர் செய்வதில்லை என்றே எண்ணுகிறேன். British என்பதை இங்கிலாந்து என மாற்றியுள்ளார். பிரித்தானிய என மாற்ற வேண்டும் சரியா? தொடர்ந்து புதுப்பயனர்களை காப்பது சற்று சிரமமாகவே உள்ளது. வார்ப்புரு நீக்கியமைக்கு நன்றி. அதற்கு பிறகு விக்கத்தரவு அடிப்பிடையில் செயற்படும் தகவற்பெட்டியை இணைத்துள்ளேன். மேலும் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் செய்கிறேன். பின்பு இதனை மாதிரியாகக் கொண்டு பல கட்டுரைகளை பலரால் எழுத பயலிரங்கு அன்று பயிற்சி அளிப்பேன். நேரடியாக ஒரு பயனருடன் பேசி செயற்படும் போது பலன் அதிகம் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயற்பட முதலில் கற்க விரும்புகிறேன். த♥உழவன் (உரை) 16:47, 7 மார்ச்சு 2024 (UTC)
தொடர்புடையன
தொகுஇக்கட்டுரை தொடர்புடைய கலைச் சொற்கள் குறித்து இங்கு இணைப்புகளைத் தந்துள்ளேன். அங்கு உரிய மாற்றங்கள் கலந்துரையாடலுக்கு பிறகு மாறும் போது இங்கும் மாறும்.
- பேச்சு:மரக்கட்டைத் தாவரங்கள் த♥உழவன் (உரை) 07:10, 6 மார்ச்சு 2024 (UTC)
- Nursery என்ற பொதுச் சொல் தாவரங்களுக்கும், மனிதருக்கும் பயன்படுத்துகின்றனர். plant nursery என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு நாற்றுமேடை என்ற கட்டுரை உள்ளது. சில தாவர வளர்ப்புக்கே நாற்று (வேரோடு எடுத்து நடக்கூடிய பயிர்) தேவை. எனவே நாற்றுமேடை என்ற சொல் முழுமையானது அல்ல. மழலகம் (எ-கா: பட்டாம்பூச்சி மழலகம் என்ற சொல் பயன்பாட்டை விலங்கியல் துறை பேராசிரியர், பயனர்:சத்திரத்தான். கொல்கத்தா அறிவியல் நகரம் என்ற கட்டுரையில் பயன்படுத்தியுள்ளார். எனவே, plant nursery என்பதற்கு நாற்றுமேடை என்பது முழுமையாகப் பொருந்தவில்லை. தாவர மழலகம் என்ற சொல்லைப் பயன்படுத்த விருப்பம். பிறரின் எண்ணமறிய ஆவல். இம்முடிவுக்குப் பிறகு கட்டுரைகளில் மாற்றவேண்டும்.--த♥உழவன் (உரை) 07:42, 6 மார்ச்சு 2024 (UTC)
- தாவர நாற்றங்கால் என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஏனெனில் மழலகம் என்பது மழலையர் (மாந்தர்-மனிதன்/ர்) என்பதிலிருந்து எடுத்ததாகும்--சத்திரத்தான் (பேச்சு) 08:06, 6 மார்ச்சு 2024 (UTC)
- தெளிவு படுத்தியமைக்கு நன்றி. விக்சனரியிலும் Nursery என்ற சொல்லுக்கு மாற்றங்களை உருவாக்குவேன். கொல்கத்தா அறிவியல் நகரம் கட்டுரையில் பட்டாம்பூச்சி மழலகம் என்ற விலங்கியல் சொல்லாக்கத்தையும் பரிந்துரைக்கவும். த♥உழவன் (உரை) 01:58, 7 மார்ச்சு 2024 (UTC)
- தாவர நாற்றங்கால் எனும் கலைச்சொல் பயன்பாடு ஏற்கத்தக்கது. வரவேற்கின்றேன். நேயக்கோ (பேச்சு) 10:45, 6 மார்ச்சு 2024 (UTC)
- நாற்றுமேடை என்ற கட்டுரையை தாவர நாற்றங்கால் என்ற சொல்லுக்கு மாற்றுவது குறித்து இவ்வார இறுதியில் பார்ப்போம்.த♥உழவன் (உரை) 01:58, 7 மார்ச்சு 2024 (UTC)
- தாவர நாற்றங்கால் என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஏனெனில் மழலகம் என்பது மழலையர் (மாந்தர்-மனிதன்/ர்) என்பதிலிருந்து எடுத்ததாகும்--சத்திரத்தான் (பேச்சு) 08:06, 6 மார்ச்சு 2024 (UTC)
- விக்கித்தரவு அடிப்படையில் தகவற்பெட்டியை மாற்றியுள்ளேன். இருப்பினும், விக்கித்தரவிலும் தமிழாக்கம் செய்ய வேண்டும்.த♥உழவன் (உரை) 01:58, 7 மார்ச்சு 2024 (UTC)