பேச்சு:சோழர்
சோழர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சோழர் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சோழர் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சோழர் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சோழர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
சோழர் ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
உள்ளடக்கம்
ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள சோழருக்கான கட்டுரையில் இருக்கும் கருத்துக்களில் பல இங்கே இல்லை. அவற்றை இங்கேயும் எழுதலாமா? --59.92.44.50 17:43, 9 ஏப்ரல் 2006 (UTC)
பொதுவாக, சரியான ஆங்கில விக்கிபீடியா தகவல்களையும் சேர்ப்பதில் எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. --Natkeeran 18:29, 9 ஏப்ரல் 2006 (UTC)
- ஆங்கில விக்கி கட்டுரை en:Chola dynasty இப்போது சிறப்புக் கட்டுரை நிலையை அடைந்துள்ளது. முடிந்தால் அங்கிருந்து தகவல்களைத் தரலாம். -- Sundar \பேச்சு 12:36, 17 மே 2006 (UTC)Reply
கட்டுரையை மேம்படுத்தியதற்கு நன்றியும் பாராட்டுக்களும், மயூரனாதன். கட்டுரையில் உள்ள அதிகப்படியான, விரைவில் தனிக்கட்டுரைகள் உருவாக்க சாத்தியமில்லாத சிகப்பு இணைப்புகளை நீக்கலாமே. இது வாசிப்பனுபவத்தை எளிமையாக்க உதவும். சோழர் வார்ப்புருவுக்கும் இக்கருத்து பொருந்தும். ஆங்கில விக்கியில் உள்ள மேலதிக வார்ப்புருக்கள், படங்களையும் இணைத்து இன்னும் கட்டுரையை மேம்படுத்த பிற பயனர்கள் உதவலாம். உண்மையில், ஆங்கில விக்கியில் சிறப்புக்கட்டுரை காட்சிப்படுத்தப்படும்போது எத்தனை பேர் இங்கு வருகிறார்கள் என்று பார்ப்போம். இது வருங்காலத்தில் இது போன்ற கட்டுரைகளுக்கு அதிக கவனம் கொடுத்து மேம்படுத்த உதவும் --ரவி 14:09, 13 அக்டோபர் 2006 (UTC)Reply
- ரவி, இக்கட்டுரையிலுள்ள சிவப்பு இணைப்புகளுக்கு முடிந்தவரை குறுங்கட்டுரைகளாவது உருவாக்கும் எண்ணம் உண்டு. வேலை முடிந்தபின்னர் அதிகப் படியானவற்றை நீக்கிவிடலாம். Mayooranathan 14:22, 13 அக்டோபர் 2006 (UTC)Reply
- ரவி, நான் பார்த்தவரை இங்கு வரும் புது வருணர்கள் சிவப்பு இணைப்புகளை எதிர்நோக்கும்போது அக்கட்டுரைகளைத் துவக்கக் கூடுதல் உந்துதல் ஏற்படுவதை உணர்கிறேன். முக்கிய தலைப்புக்களுக்காவது இணைப்புக்கள் இருக்கட்டும். -- Sundar \பேச்சு 15:03, 13 அக்டோபர் 2006 (UTC)Reply
சரி சுந்தர். மயூரனாதனுக்கு இக்குறுங்கட்டுரைகள் உருவாக்கம் எண்ணம் இருப்பதால் அவற்றை நீக்கும் அவசியமில்லை. ஆனால், பொதுவாக கட்டுரைகளில் இப்படி அதிகப்படியான சிகப்பு இணைப்புகளை தவிர்க்கலாம். மறுமொழிகளுக்கு நன்றி.--ரவி 15:08, 13 அக்டோபர் 2006 (UTC)Reply
தகுந்த இடங்களில் நூலாதரங்கள், உசாத்துணைக் குறிப்புகள் தந்து, இக்கட்டுரையை இன்னும் தரமுயர்த்தலாம். மன்னர்களின் விரிவான வரலாறுகளை தனிப்பக்கங்களுக்கு நகர்த்தி கட்டுரையை சுருக்கலாம். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நிலவிய அரசியல், சமூக, பண்பாட்டு நிலைகளை கட்டுரையில் குறிப்பிடலாம். தற்காலத்தில் சோழர்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றி குறிப்பிடலாம். இவற்றை செய்த பின் நிச்சயம் இதை சிறப்புக்ட்டுரையாக்கலாம்--ரவி 10:20, 15 அக்டோபர் 2006 (UTC)Reply
ஆங்கில விக்கியில் இக்கட்டுரை முகப்புப் பக்கச் சிறப்புக் கட்டுரையாக உள்ளது. இதனை ஒட்டி இந்த தமிழ் விக்கி கட்டுரைக்கான வருகைகளை பதிவு செய்ய இக்குறிப்பு இடப்படுகிறது. தற்பொழுது வருகைகள் எண்ணிக்கை - 290 (1 செப்டம்பர் 2006 முதல்)--ரவி 08:01, 16 அக்டோபர் 2006 (UTC)Reply
இன்று வருகை எண்ணிக்கை 317. கடந்த 24 மணி நேரத்தில் 27 வருகைகள், அதுவும் வழக்கமானோர் வருகையை கழித்துப் பார்த்தால், எதிர்ப்பார்த்ததை விட மிகவும் குறைவு தான். எனினும், இதனை முன்னிட்டு நல்ல கட்டுரை ஒன்றை இங்கு உருவாக்க முடிந்தது மகிழ்ச்சி தான். வருங்காலத்தில் இது போல் தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் கட்டுரைகள் ஆங்கில விக்கியில் முகப்புப் பக்க சிறப்புக் கட்டுரையாக வரும்போது தொடர்ந்து கவனித்தால் சில வருகை போக்குகள் புலப்படலாம்.--ரவி 08:40, 17 அக்டோபர் 2006 (UTC)Reply
- இது எதிர்பார்த்தைதைவிட சற்று குறைவான எண்ணிக்கையே. இருப்பினும், நீங்கள் பதித்த துவக்கத்திற்கு சற்று முன்னரே கட்டுரை ஆ.வி. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன். மேலும், தற்போது எண்ணிக்கை 327 (இன்னமும் ஆ.வி. முதல் பக்கத்தில் கடந்த சி.கக்களின் இணைப்பு உள்ளது.) ரவி கூறியபடி வேறுசில கட்டுரைகளையும் பார்த்தபின் போக்கு விளங்கலாம். இந்த சாக்கில் மயூரநாதன் கட்டுரையை மிக அழகாக விரிவுபடுத்தியுள்ளார். பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 07:08, 18 அக்டோபர் 2006 (UTC)Reply
குறிப்பிட்ட நாளின் வருகைகளைப்பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. கட்டுரையில் உள்ள சிவப்பு இணைப்புக்களையும் பயனுள்ள கட்டுரைகள் ஆக்கினால், இந்தக் கட்டுரைகள் அனைத்துக்கும் வருகைகள் அதிகரிக்கும். கட்டுரைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பான தொகுதிகளாக இருப்பது எல்லாப் பக்கங்களுக்குமே பயனர் வரவை அதிகரிக்கும். இப்பொழுது சோழர் என்ற சொல்லையிட்டுத் தேடினால், தமிழ் விக்கிபீடியாதான் முதலாவதாக வருகிறது. Mayooranathan 13:15, 18 அக்டோபர் 2006 (UTC)Reply
சோழர் இராணுவம் பற்றியும் சோழர் கடற்படை குறித்தும் எழுதுவது கட்டுரைக்கு மேலும் மெருகூட்டும். --Sivakumar \பேச்சு 06:27, 27 அக்டோபர் 2006 (UTC)Reply
நற்கீரன், சோழர் காலத்தில் அடிமைகள் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புக்குக் கொடுத்திருந்த இணைப்புக்குச் சென்று பார்த்தேன். அங்கே இருந்த குறித்த கட்டுரையின் சுருக்கத்தில், வேழத்தில் பெண்கள் பாலியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பு இல்லை. அத்துடன் ஆண் அடிமைகள் சிலர் இருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பெண்கள் அடிமைகளாக இருந்தது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த வேழம் பற்றிய குறிப்பை அடிமைகள் என்ற தலைப்பின் கீழ் தரலாமா என்பது சந்தேகமாக உள்ளது. சிலவேளை நீங்கள் முழுமையான கட்டுரையைப் படித்திருக்கக்கூடும். படித்திருந்தால் அக்கட்டுரையில் நீங்கள் கொடுத்த விபரங்கள் உள்ளனவா என்பதை அறியத்தாருங்கள். Mayooranathan 18:03, 27 அக்டோபர் 2006 (UTC)Reply
மயூரநாதன், அந்த மாநாட்டுக்கு போயிருந்து அவரது பேசியவற்றின் நினைவு சாரம்சம் எனலாம். என்னிடம் முழுக்கட்டுரை தற்சமயம் இல்லை. வேழம் என்றாலும் அக்கட்டுரையின் புலம் பரந்துபட்டது. Concubines என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார் என்று நினைக்கின்றேன். அதனை பாலியல் அடிமைகள் என்று தமிழ்ப் படுத்தலமா? மேலும் அவர் சோழர்கள் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததாக அறிகின்றேன். அவரை மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால் உங்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கலாம். தலைப்பை பொருத்தமான ஒன்றாக மாற்றியோ அல்லது குறிப்பை வேறு எங்கேனும் சேர்தோவிடுவதில் எனக்கு ஆட்சோபனை இல்லை. நன்றி. --Natkeeran 18:40, 27 அக்டோபர் 2006 (UTC)Reply
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:29, 14 மே 2007 (UTC)Reply
"சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது."????
நீங்கள் சொல்வதற்கு எந்த ஆதரமும் இல்லை. குறிப்பாக பெண்கள் அடக்கப்பட்டே இருந்தார்கள் என்பதுவே என் ஊகம். இல்லாவிட்டால் சமூக விளைவுகள் வேறாக இருந்திருக்கும். --Natkeeran 23:44, 3 செப்டெம்பர் 2007 (UTC)Reply
நற்கீரன் மேற்சொன்ன தகவல், K.A. நீலகண்ட சாஸ்திரியின் புத்தகத்தில் உள்ள ஒரு விஷயம் தான். பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்ததும், அடக்கம் பெரிய அணிகலனாக சோழர் காலத்தில் பெண்களுக்கு இருந்ததும் உண்மையே.மோகன்தாஸ் 11:17, 4 செப்டெம்பர் 2007 (UTC)Reply
- எப்படி அப்படி உறுதியாக கருத்து சொன்னேனோ தெரியாது. என்றாலும், இன்னும் சந்தேகமாக இருக்கு. வேறு எதாவாது வழயில் இதை ஆதாரப்படுத்த முடியுமா? --Natkeeran 00:57, 5 செப்டெம்பர் 2007 (UTC)Reply
- கோவில்களில் பல நற்செயல்களுக்கு பெண்கள் முன்னின்று கொடை வழங்கியும், ஏற்பாடுகள் செய்தும் இருந்ததற்கான கல்வெட்டு செய்திகள் ஏராளம். 12-13 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் பெண்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது, அதுவும் 14-16 ஆம் ஆண்டுகளில்தான் வலுப்பட்டது. ----செல்வா 01:25, 5 செப்டெம்பர் 2007 (UTC)--செல்வா 01:27, 5 செப்டெம்பர் 2007 (UTC)Reply
- எப்படி அப்படி உறுதியாக கருத்து சொன்னேனோ தெரியாது. என்றாலும், இன்னும் சந்தேகமாக இருக்கு. வேறு எதாவாது வழயில் இதை ஆதாரப்படுத்த முடியுமா? --Natkeeran 00:57, 5 செப்டெம்பர் 2007 (UTC)Reply
பயனர் பார்வதி [[பேச்சு:தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர்#உ.தி|இஅக்கத்தில் கீழ்க்காணுமாறு கேட்டுள்ளார்:
- "அதே போல் சோழர் கட்டுரையில் அடிமைகள் பகுதியில் வேழம் என்ற சொல்லின் பயன்பாடு குறித்து அதன் பேச்சுப் பக்கத்தில் எனது கருத்தை குறித்திருந்தேன்.கலிங்கத்துப் பரணியில் இருந்து ஆதாரமும் தந்திருந்தேன். வேழம் என்று வரக் கூடாது வேளம் என்பதே சோழர் பிற நாடுகளில் இருந்து கொணர்ந்த மங்கையர்களை குடியமர்த்திய இடம் எனக் கூறியிருந்தேன். ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ??? அதே போல மன்னர்களின் ஆண்டுகளிலும் சில பிழைகள் இருப்பதை அறிந்தேன். அதனைத் திருத்தலாமா? சோழர்கள் பற்றிய நிறைய செய்திகள் இதில் விடுபட்டுள்ளன. அவற்றை இணைக்கலாமா? ஏனெனில் விரிவாக்கம் தேவையில்லை என விதியில் உள்ளது. நான் என்ன செய்வது ? கூறுங்கள்."
- மேலும் பயனர் பேச்சு:Parvathisri#சோழர் என்னும் பக்கத்திலும் உரையாடியுள்ளார்.
- "மேலே நீங்கள் குறிப்பிட்டது சரியே. வேழம் என்றால் யானையல்லவா. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது வேளம் என்பதைப் பற்றி. வேளக்காரப் படை என்பதுவும் சோழர் சிறப்புப் படையணிகளுள் ஒன்றல்லவா" என்று பயனர் பாஃகிம் அவர்களும் குறிப்பிட்டார்.
- இது பற்றி அறிந்தவர்கள் அவருக்கு உதவ வேண்டுகிறேன். எனக்கு இதன் வரலாறு தெரியாது. மேலும் அவருடைய கருத்துகள் எவ்வாறு, ஏன் நீக்கப்பட்டன?
--செல்வா 22:42, 28 சனவரி 2012 (UTC)Reply
- அனைவரும் என்னைப் பொருத்தருள வேண்டும். நான் சோழர் கட்டுரைப் பற்றிய எனது ஐயங்களை நற்கீரன் அவர்களில் பேச்சுப்பக்கத்தில் இட்டிருந்தேன். தவறுதலாக சோழர் கட்டுரைப் பேச்சுப் பக்கம் எனக் குறிப்பிட்டு விட்டேன். அதன் விவரங்கள் கீழே:
- //வணக்கம். ( நற்கீரன், சோழர் காலத்தில் அடிமைகள் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புக்குக் கொடுத்திருந்த இணைப்புக்குச் சென்று பார்த்தேன். அங்கே இருந்த குறித்த கட்டுரையின் சுருக்கத்தில், வேழத்தில் பெண்கள் பாலியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பு இல்லை. அத்துடன் ஆண் அடிமைகள் சிலர் இருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பெண்கள் அடிமைகளாக இருந்தது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த வேழம் பற்றிய குறிப்பை அடிமைகள் என்ற தலைப்பின் கீழ் தரலாமா என்பது சந்தேகமாக உள்ளது. சிலவேளை நீங்கள் முழுமையான கட்டுரையைப் படித்திருக்கக்கூடும். படித்திருந்தால் அக்கட்டுரையில் நீங்கள் கொடுத்த விபரங்கள் உள்ளனவா என்பதை அறியத்தாருங்கள். Mayooranathan 18:03, 27 அக்டோபர் 2006 (UTC))
- மேற்கண்ட உரையாடலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள 'வேழம்' என்ற சொல் 'வேளம்' என்றே இருக்க வேண்டும். வேழம் என்ற சொல்லின் பொருள்-யானை,நாகம்,மகுடி,தடி,கயிறு,கரும்பு. ஆகியன. ஆனால் வேளம் என்ற சொல் சோழரால் சிறை பிடிக்கப்பட்ட மகளிரைக் குடியமர்த்தும் மாளிகையைக் குறிக்கும். 3
சோழர்காலத்தில் அரசர்கள் பகைவரை வென்றபின், தாம் பற்றிக் கொணர்ந்த அவர்களது மகளிர் வாழ்வதற்கென்றே தனி மாளிகை அமைப்பர். அது வேளம் எனப்பட்டது. கலிங்கத்துப் பரணியில் இதற்கான ஆதாரம் உள்ளது. கடை திறப்பு பகுதியில், "மீனம்புகு கொடிமீனவர் விழிஅம்புக ஓடிக் கானம்புக வேளம்புகு மடவீர் கடை திறமின்" என வருதலைக் காணலாம். [பாண்டியர் தோற்றோட அவர்தம் நாட்டுப் பெண்கள் வேளம் புகுந்தனர்.]--Parvathisri 19:27, 11 திசம்பர் 2011 (UTC)//
இதுவே நான் குறிப்பிட்டிருந்த செய்தி. வேழம் என்பது உறுதியாகத் தவறு. எனவே நான் தேவையான திருத்தங்களைச் செய்து விடுகிறேன்.--Parvathisri 11:55, 30 சனவரி 2012 (UTC)Reply
தளிச்சேரி பெண்டிர் குறித்தும் கருதுமாறு வேண்டுகிறேன். (பழந்தமிழ் ஆட்சி- பாவாணர் நூல்)--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:08, 30 சனவரி 2012 (UTC)Reply
இக் கட்டுரையின் பல பகுதிகளை தனிக்கட்டுரைகளாக இட்டு இங்கு அறிமுகச் சுருக்கம் தரலாம். அந்த வகையின் அந்த விடயங்கள் மேலும் விரித்துச் செல்ல வாய்ப்புப் பெறுவதுடன், இக் கட்டுரையின் அளவையும் பேணலாம். --Natkeeran 18:29, 8 பெப்ரவரி 2012 (UTC)
//கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர்.//
அதிகாரப்போட்டி என்று எதை வைத்துக் கூறப்பட்டுளது? எனக்கு அப்படி ஏதும் சங்க நூல்களிலும் வரலாற்று நூல்களிலும் படித்ததாக நினைவில்லை. தகுந்த இலக்கிய சான்றுகளையோ, வரலாற்று நூல் மேற்கோள்களையோ முன் வைக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:25, 30 மே 2012 (UTC)Reply
இளஞ்சேட்சென்னி மௌரியரை வென்றானா? அகநானூற்று பாடல் கூறுகிறதா? எந்த பாடல் அப்படி கூறூகிறது. கரிகாலம் 2ஆம் நூற்றாண்டவன் என்றால் அவன் தந்தை சென்னி எப்படி மோரியரோடு போர் புரிந்தானாம்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:56, 14 அக்டோபர் 2012 (UTC)Reply
ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) இக்கட்டுரையின் ஒலி வடிவத்தை இப்போது தயாரித்து வருகின்றார். மேலும் அறிய பேச்சு விக்கியைக் காணவும். This notice is dated 14:36, 8 ஏப்ரல் 2023 (UTC). If a significant amount of time has passed, please check with ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) to see if he or she is still working before removing this message. |
ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 14:38, 8 ஏப்ரல் 2023 (UTC)