பேச்சு:தோடம்பழம்
நரந்தம்பழமும் தோடம்பழமும் ஒன்றா? எந்த சொல் வழக்கில் இருக்கிறது. --Natkeeran 22:06, 21 நவம்பர் 2008 (UTC)
- நாரத்தம் பழம் என்ற பெயரில் பழம் உள்ளது. இலங்கையில் தோடம்பழம் என்று குறிக்கப்படுவது பச்சை நிறமாக இருக்கும். நரந்தம்பழம் என்பது குறித்துக் கேள்விப்படவில்லை.--Kanags \பேச்சு 00:17, 22 நவம்பர் 2008 (UTC)
இரண்டும் வெவ்வேறு பழவகைகள். இனக்குழுமம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தோடம்பழத்தில் பலவகைகள் இருப்பது போலவே நாரந்தம் பழத்தில் பலவகைகள் உள்ளன,--HK Arun 09:28, 15 சனவரி 2011 (UTC)
ஆரஞ்சுப் பழம் என்பதற்கு [பெரும்பாலும் பிரிக்கும் போது 6,5 சுளைகள் இருப்பதால் இப்பெயரென்பர்]ஆங்.விக்கிப்பீடியாவிலிருந்து இங்கு வர இணைப்புள்ளது. இவை இரண்டும் ஒன்றா? இன்னரந்தம் என்றும் ஆரஞ்சு பழத்தை அழைப்பரா?தமிழகத்தில் கமலாஆரஞ்சு என்று உண்டு. அதன் உயிரியல் பெயர் அறிய ஆவல்.--த* உழவன் 07:07, 15 சனவரி 2011 (UTC)
நாரத்தம்பழம் என்பது Grapefruit என்றே நினைக்கிறேன். ஜேர்மனியில் இதன்(Grapefruit) நிறம் மஞ்சள். தோடம்பழத்தை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். உள்ளே செந்நிறமாக, Rose நிறமாக, வெளிர்மஞ்சள் நிறமாக என்று அதன் வகைக்கேற்ப இருக்கும். பழம் தோடம்பழச் சுளைகள் போலவே இருக்கும். புளிப்புச்சுவை கொண்டது. மெல்லிய கசப்புச் சுவையும் சாப்பிட்ட பின் வாயில் இருக்கும். இதன் அதீத புளிப்புக் காரணமாக இதைத் தோடம்பழம் சாப்பிடுவது போல யாரும் சாப்பிடுவதில்லை. இதன் சாறைப் பிழிந்தெடுத்தோ அன்றிக் கரண்டியால் அழுத்தி எடுத்தோ பருகுவார்கள். கலியம் அதிகமாகக் கொண்ட பழங்களில் இது ஒன்று என்று கருதப்படுவதால் ஜேர்மனியர் இதை விரும்பி உண்கிறார்கள். இலங்கையில் இதன் நிறம் வெண்பச்சையாக இருந்த ஞாபகம். தோடம்பழத்தை விட இரட்டிப்பு பெரிதாக இருக்கும். --Chandravathanaa 14:40, 15 சனவரி 2011 (UTC)
- இது ஆரஞ்சுப்பழத்துக்கான தமிழ் சொல்லா, அல்லது சந்திரவதனா சுட்டியபடி Grapefruit ?? --Natkeeran 03:10, 9 நவம்பர் 2011 (UTC)
- நாரத்தை வேறு grapefruit வேறு. இரண்டும் ஒன்றல்ல. நாரத்தைக்கான சொல்லை மறந்து விட்டேன். அது இந்தோனேசியாவின் பாலித் தீவிலும் கிடைக்கிறது. அதற்கான சரியான ஆங்கிலச் சொல்லைத் தேடிப் பார்க்க வேண்டும்.--பாஹிம் 03:19, 9 நவம்பர் 2011 (UTC)
முக்கியமான பழம். பயனர்கள் தங்கள் கருத்தை இறுதி செய்தால் தலைப்பை மாற்றலாம். --இரவி (பேச்சு) 11:22, 2 ஏப்ரல் 2012 (UTC)
நாரத்தை: தமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற பயன்பாடுள்ளது. ஆனால் அது ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்காது. இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. எலுமிச்சை அல்ல அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும்.
ஆரஞ்சு:இது பொதுவான ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்கிறது.
சாத்துக்குடி:sour orange or Bitter orange இது பொதுவாகப் வெளிர்பச்சை அல்லது பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே வெண்சுளைகள் இருக்கும்.
கமலாப் பழம் அல்லது கமலா ஆரஞ்சு:இது குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. இது அளவில் சிறியதாக இருக்கும்.
- சில இணைப்புகள்
- http://en.wikipedia.org/wiki/Citrus#List_of_citrus_fruits
- http://www.foodsubs.com/Fruitcit.html
- http://www.thefruitpages.com/citrus.shtml
- http://waynesword.palomar.edu/ecoph6.htm
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:40, 8 சூலை 2012 (UTC)
- இந்த இணைப்பைப் பாருங்கள். சாத்துக்குடி பற்றி இங்கு சில தகவல் கூறப்பட்டுள்ளது. சாத்து என்பது வணிகர்களை குறிப்பதாகவும், சாத்துக்குடி என்பது வணிகர்களின் குடியிருப்பை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. சாத்துக்குடி என்ற சொல் வணிகர்கள் கொண்டு வந்த பழவகையாகக்கூட இருக்கலாம். சாத்துக்குடி நாரத்தம் பழம் என்பதை சுருக்கி வழக்கில் சாத்துக்குடி என மாறியதோ என்னவோ தெரியவில்லை! --இராஜ்குமார் (பேச்சு) 08:11, 14 மே 2013 (UTC)
- ஆங்கில அகராதியில் பார்த்தீர்கள் என்றால் ஆரஞ்சு என்ற சொல் நாரத்தம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது என கூறப்படுகிறது. கீழே உள்ள சொற்பிறப்பியல் பகுதியை பாருங்கள். இவ்வகையான அனைத்து பழவகைக்கும் நாரத்தம் என்பதே அடிப்படையான சொல்லா என தோன்றுகிறது.
செம்மஞ்சள் நாரத்தம்பழம் / தோடம்பழம் = Orange
நாரத்தங்காய் = May be grapefruit or someother thing
சாத்துக்குடி நாரத்தம்பழம் = sour orange or Bitter orange
கமலா நாரத்தம்பழம் / குடை நாரத்தம்பழம் = Kamala Orange
இது போன்று பெயரிடலாமா ? --இராஜ்குமார் (பேச்சு) 08:21, 14 மே 2013 (UTC)
பெயர் மாற்றம்
தொகு- நாரத்தை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் தோடம்பழம் என்பது ஆரஞ்சுப்பழம் (Orange) இன் தமிழ்ச்சொல். ஆரஞ்சுப்பழம் என்பது தமிழ்ச் சொல்லல்ல என்றே நினைக்கின்றேன். ஆனால் இந்தக் கட்டுரை குறிப்பது தோடம்பழத்தை (Orange) அல்ல என்பதனாலும், பலரும் நாரத்தையும் தோடம்பழமும் ஒன்றல்ல எனக் கூறியிருப்பதனாலும், இதன் பெயரை மாற்றுவதே சரியென நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 06:51, 31 ஆகத்து 2012 (UTC)
மற்றக் கட்டுரையின் உள்ளடக்கம்
தொகுதோடை மரம் ஆனது, எலுமிச்சை மரத்தை போன்றதுதான் , ஆனால் இதன் முள்கள்,இலைகள் சற்று பெரிதாகவே காணப்படும். இதன் தோடம்பழம் நல்ல சுவையாக இருக்கும் அதே வேளை கோவில் பூசைகளிலும் இந்த பழத்தை அதிகம் பயன் படுத்துவார்கள். தோடை மரம் பல நிறங்களில் பழம் இருந்தாலும் யாழ்ப்பாணத்து தோடை மரங்களின் பழங்கள் பச்சை நிறத்தை உடையன.
நாரந்தை எனப்படுவது தோடை இனத்தை சேர்ந்ததுதான், ஆனால் இந்த மரத்தில் தோடை மரத்தை விட அதிகமான முள்கள் உள்ளன, அதே வேளை நாரந்தை பழங்கள் தோடம் பழத்தை விட சற்று சிறியனவாக இருக்கும்,செம்மஞ்சள், பச்சை நிறத்தை கொண்டது, இதன் சுவை புளிப்புத்தன்மை அதிகமாக இருக்கும், இந்த நாரந்தம் பழத்தை யாரும் பழமாக சாப்பிடுவது இல்லை. இப் பழம் கோடை காலத்தில் மட்டும் தான் கிடைக்கும் அதனால் மக்கள் கோடை காலத்து வெக்கை காலம் என்பதால் இதை புளிந்து சாறை மட்டும் எடுத்து சர்க்கரை அல்லது சீனி போட்டு குடிப்பார்கள். இதற்க்கு தமிழ் நாட்டில் வேறு ஒரு பெயரும் உண்டு சென்னை வீதிகளில் இந்த பழத்தை புளிந்து சாறாக விற்பதை காணலாம். இதற்க்கு தமிழ் நாட்டில் சாத்துக்குடி என பெயர் இருக்கலாம் என்று நினைக்கின்றேன். இம் மரமானது எலுமிச்சை, தோடை மரங்களை விட சற்று பெரியது என்றே சொல்லலாம். அத்தோடு நாரந்தை ஆனது அதிகளவான காய் கைக்க கூடியது மரம் ஒன்றாகும்.--Sivam29 (பேச்சு) 15:33, 6 செப்டெம்பர் 2012 (UTC)
சொற்பிறப்பியல்
தொகு- Orange : through Old French orenge, Medieval Latin orenge and Italian arancia from Arabic نارنج naranj, via Persian نارنگ narang and Sanskrit नारङ्ग naranga-s meaning "an orange tree", derived either from Tamil நாரத்தம் naaraththam orange, நரந்தம் narantham orange, or நாரங்கம் naarangam mandarin-orange, with நாரத்தம் + காய் = நாரத்தங்காய் naaraththangaay in current popular usage .[1][2] --இராஜ்குமார் (பேச்சு) 07:49, 14 மே 2013 (UTC)
- ஆங்கிலச் சொற்பிறப்பியல் இணையஅகரமுதலி ≈ த♥உழவன் ( கூறுக ) 13:29, 13 மே 2013 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ "J. P. Fabricius Tamil and English Dictionary". Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House, 1972 via Univ. of Chicago's Digital Dictionaries of South Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-21.
- ↑ Harper, Douglas. "orange". Online Etymology Dictionary.
பார்க்க : List of English words of Tamil origin --இராஜ்குமார் (பேச்சு) 11:43, 13 மே 2013 (UTC)
வழிமாற்று
தொகுஆரஞ்சுப் பழம் என்பதே பெருவழக்கு
ஆரஞ்சுப் பழம் என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைவதே சிறப்பு.
வழிமாற்றம் செய்யும்படி வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:56, 10 ஆகத்து 2015 (UTC)
உரையாடலைக் காணவில்லை
தொகுஇந்தப் பக்கத்தில் நேற்று சில கருத்துக்கள் இட்டிருந்தேன். அதற்கு Anton பதிலும் கொடுத்திருந்தார். ஆனால் அவற்றை இப்போ காணவில்லையே? :( --கலை (பேச்சு) 21:29, 13 மே 2013 (UTC)
- உரையாடலைக் கண்டு பிடித்துவிட்டேன். அது பேச்சு:ஆரஞ்சுப் பழம் என்ற பக்கத்தில் இருந்தது. அந்த உரையாடலையும் இங்கே இணைத்து விட்டு அந்தப் பக்கத்தை நீக்கியுள்ளேன்.--கலை (பேச்சு) 21:57, 13 மே 2013 (UTC)
இரு கட்டுரைகளும் இனம் பற்றியா பேரினம் பற்றியா பேரினம் பற்றியா என்று குழப்பமாக உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 05:03, 24 சனவரி 2012 (UTC) குழப்பம்தொகு
எனக்கும் இதில் பல குழப்பங்கள் உண்டு.
கருத்துக்களைத் தந்தால், தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். --கலை (பேச்சு) 11:38, 12 மே 2013 (UTC)
|