பேப்இந்தியா
பேப்இந்தியா (ஃபேப் இந்தியா, Fabindia அல்லது Fabindia Overseas Pvt. Ltd.) துணி, தளபாடம், கைத்தறி ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஊரக இந்தியாவின் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இனஞ்சார்ந்த பொருட்களின் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தொடர் பண்டகசாலை நிறுவனமாகும். இது புது தில்லி ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஜான் பிசெல் என்பவரால் 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. துவக்கத்தில் தளபாடங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது; 1976ஆம் ஆண்டிலிருந்து தான் உள்நாட்டிலும் விற்பனையைத் தொடங்கியது. இதன் முதல் சில்லறை விற்பனை மையத்தை புதுதில்லியின் கிரேட்டர் கைலாசில் திறந்தது. தற்போது இதற்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக 170 கடைகள் உள்ளன. இதன் மேலாண் இயக்குநராக, தற்போது நிறுவனர் பிசெலின் மகன் வில்லியம் பிசெல் உள்ளார்.
வகை | தனியார்/சமூக உரிமை |
---|---|
பிந்தியது | வில்லியம் பிசெல் (மேலாண் இயக்குநர், 1999) |
நிறுவுகை | 1960 |
நிறுவனர்(கள்) | ஜான் பிசெல் |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
தொழில்துறை | துணி, தளபாடம், கைத்தறி ஆடைகள், ஆபரணங்கள் |
வருமானம் | $65 மில்லியன் (2008)[1] |
இணையத்தளம் | www.fabindia.com |
2008ஆம் ஆண்டில், பேப்இந்தியாவின் வருமானம் $65 மில்லியனாக இருந்தது. தனது விற்பனைப் பொருட்களை 17 சமுதாய நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றது; இந்த கூட்டுறவு சமுதாயங்களின் சில விழுக்காடு பங்குகள் கைவினை கலைஞர்களின் பால் உள்ளது.[1]
இதன் விற்பனைப் பொருட்கள் பெரும்பாலும் சிற்றூர்களிலிருந்து பெறப்படுவதால் ஊரக இந்தியாவின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பிற்கும் வழிவகுக்கின்றது. கிட்டத்தட்ட 40,000 கைவினை மற்றும் கைத்தறி கலைஞர்கள் பயனடைவதாக அறிவித்துள்ளது. பழமையான,இனஞ்சார்ந்த பொருட்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் விளங்குகின்றது.[2][3][4]
சர்ச்சை
தொகுஏப்ரல் 3, 2015 அன்று நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சர், இசுமிருதி இரானி கோவாவின் கண்டோலிம் பகுதியில் அமைந்திருந்த பேப்இந்தியா கடையில் உடைமாற்றும் அறையில் நடப்பவற்றைக் கண்காணிக்கும் வகையில் படம்பிடி கருவி பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். உடனே தனது கணவருக்கும் உள்ளூர் நகரமன்ற உறுப்பினரான மைக்கேல் லோபோவிற்கும் இதனை அறிவித்தார்.[5]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Manjeet Kripalani (March 12, 2009). "Fabindia Weaves in Artisan Shareholders". Bloomberg, Business Week. பார்க்கப்பட்ட நாள் February 5, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "The Fabindia Story". SPAN magazine. July–August 2010. Archived from the original on 2010-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-04-11.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Sethi, Sunil (July–August 2010). "A Connecticut Yankee in India". SPAN Magazine. Archived from the original on November 27, 2010.
- ↑ Case study, p. 1
- ↑ who lodged an FIR or First Information Report.
நூற்றொகை
தொகு- Mira Kamdar (2007). Planet India: How the Fastest Growing Democracy Is Transforming America and the World. Scribner. pp. 185–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4165-3863-9.
- Radhika Singh (2010). The Fabric of Our Lives: The Story of Fabindia. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-08434-0.
- Mukti Khaire; Prabakar Pk Kothandaraman (2010). Fabindia Overseas Pvt. Ltd. Harvard Business School Publishing.
- William Nanda Bissell (2010). Making India Work. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-393-6.