பொத்தேரி தொடருந்து நிலையம்
பொத்தேரி தொடருந்து நிலையம் (Potheri railway station, நிலையக் குறியீடு:POTI) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.
பொத்தேரி | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடர்வண்டி நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை - 45, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°49′18″N 80°2′14″E / 12.82167°N 80.03722°E | ||||
ஏற்றம் | 45 மீட்டர்கள் (148 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு & தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | POTI | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பொத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 43 கி.மீ. (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் பொத்தேரியில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 45மீ (148 அடி) உயரத்தில் உள்ளது.
வரலாறு
தொகுதாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
இதன் எதிர்திசையிலேயே எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் உள்ளதால், இந்நிலையம் கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)