போத்துராஜூ

ஒரு இந்து நாட்டுப்புற தெய்வம்

போத்துராஜூ ( தெலுங்கு: పోతరాజు) ஒரு இந்து நாட்டுப்புற தெய்வம், அவரை வணங்குபவர்களால் விஷ்ணுவின் ஒரு அவதாரமாக கருதப்படுகிறார். அவர் மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவின் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடுகளில் சில கிராமப்புறங்களில் ஒரு கிராமதேவதையகக் கருதப்படுகிறார், மேலும் சில சமயங்களில் கங்கம்மா மற்றும் யெல்லமா போன்ற பெண் நாட்டுப்புற தெய்வத்தின் சகோதரராகவும் கருதப்படுகிறார். [1]

போத்துராஜூ
போத்துராஜுவின் உருவம்
வகைவைஷ்ணம்
துணைகாமவல்லி
சகோதரன்/சகோதரிஎல்லம்மா
சமயம்தென்னிந்தியா

புராண கதை தொகு

இந்த தெய்வத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் பற்றி பல்வேறு புராணக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன, ஆனால் அவர் பொதுவாக அவர்களின் கோவில்கள் மற்றும் ஊர்வலங்களில் உள்ள தெய்வங்களின் சக்தியை பாதுகாக்கும் பாதுகாவலராகக் கருதப்படுகிறார், [2]

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், விவசாய சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் சப்த கன்னிகைகளின் தேவதைகளை வணங்குகிறார்கள்: ஏழு கன்னி தெய்வங்களான போலேரம்மா அங்கம்மா, முத்தியாலம்மா, போச்சம்மா, பங்காரம்மா, மாதம்மா மற்றும் எல்லம்மா, இவர்களுடைய ஒரே சகோதரன் என போத்துராஜுவை கருதுவதும் உண்டு. [3] அவர் மூத்த சகோதரியான போச்சம்மாவின் ஆண் உருவமாக கருதப்படுகிறார். [4]

ஒருமுறை, லட்சுமி, சீதையாக, ராமனைக் கண்டு மயங்கி, அவனுடன் காட்டில் விளையாட விரும்பினாள் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. ராமர் அதற்கு மறுத்ததால், அடுத்த ஜென்மத்தில், ராமர் எப்பொதும் கெட்ட மனிதர்களால் சூழ்ந்தே வாழும்படி  சபித்தார், பதிலுக்கு ராமரோ பெருந்தன்மையாக, லட்சுமி அடுத்த ஜென்மத்தில் காமேஸ்வரியாக (காமவல்லியாக) பிறப்பாள் என்றும் எப்போதெல்லாம் ராமரின் பெயர் உச்சரிக்கப்படுமோ அப்போதெல்லாம் அவள் புன்னகைப்பாள் என்றும் கூறினார். அவரது வேண்டுகோளின் பேரில், சிவன் லக்ஷ்மியின் சக்தியை ஒரு குளத்தில் வைத்தார், அதில் இருந்து பார்வதி கவனக்குறைவாக ஏழு குடங்களை எடுத்து, ஏழு சகோதரி-தெய்வங்களை உருவாக்கினார். அவர்களை தத்தெடுப்பது குறித்து தெய்வீக தம்பதிகளால் முடிவு செய்ய முடியாததால், சகோதரிகளைப் பாதுகாக்க போத்திராஜு பிறந்தார். [5] பிரம்மா மூன்று சகோதரிகளை ஒன்றுபோல  குளத்திலிருந்து உருவாக்கும்போது, அவர்களில் ஒருவரான காமவல்லியை போத்திராஜு தனது மனைவியாக எடுத்துக்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் சில கிராமப்புற சமூகத்தினரால் முனியாண்டியின் தம்பியாகக் கருதப்படுகிறார் . [6]

மேற்கோள்கள் தொகு

  1. Veda, Gunjan (2020-02-24). The Museum of Broken Tea Cups: Postcards from India's Margins (in ஆங்கிலம்). SAGE Publishing India. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5388-340-9.
  2. "bonalu celebrations in twin cities". 2019-07-14. Archived from the original on 2019-07-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  3. Singh, K. S. (1992). People of India: Andhra Pradesh (in ஆங்கிலம்). Anthropological Survey of India. p. 2073. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7671-006-0.
  4. Hatcher, Brian A. (2015-10-05). Hinduism in the Modern World (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-04630-9.
  5. "'అమ్మ దేవతల' తమ్ముడు మన పోతురాజు". 2019-07-14. Archived from the original on 2019-07-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  6. Splendours of Tamil Nadu (in ஆங்கிலம்). Humanities Press. 1982. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02524-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போத்துராஜூ&oldid=3657424" இலிருந்து மீள்விக்கப்பட்டது