மச்சக்கெண்டை

மீன் இனம்
மச்சக்கெண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
தாவ்கின்சியா
இனம்:
தா. பிளமெண்டோசா
இருசொற் பெயரீடு
தாவ்கின்சியா பிளமெண்டோசா
வாலென்சியென்சிசு, 1844
வேறு பெயர்கள் [2]
  • பார்பசு பிளமெண்டோசா (வலென்சியென்சு, 1844)
  • பார்பசு பிளமெண்டோசசு (வலென்சியென்சு, 1844)
  • லூசிசுகசு பிளமெண்டோசசு வலென்சியென்சு, 1844
  • புன்டியசு பிளமென்டோசசு (வலென்சியென்சு, 1844)
  • சிசுடோமசு பிளமென்டோசசு (வலென்சியென்சு, 1844)
  • சிசுடோமசு மேடராசுபேடென்சிசு, செருடன், 1849
  • சிசுடோமசு மெட்ராசுபேடென்சிசு, செருடன், 1849

மச்சக்கெண்டை (தாவ்கின்சியா பிளமெண்டோசா)(Dawkinsia filamentosa),[3] இறகிழை மீன் சிற்றினம் ஆகும். இளம் மீன்களில் நிறமோ கரும் புள்ளிகளோ இல்லை. மூன்று மாதம் ஆன நிலையில் நிறத்தைப் பெறத் தொடங்கும். இம்மீன் வேகமாக நீந்தக்கூடியது.[4] ஆண் மச்சக்கெண்டை பெண் மீனைவிடப் பெரியவை. ஆண் மீன், நீரில் இடப்பட்ட முட்டைகளின் மீது நீந்துவதன் மூலம் முட்டைகளைக் கருவுறச் செய்கின்றன.[5] இந்தியாவின் தென்மேற்கு மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் இந்தச் சிற்றினம் பொதுவாகக் காணப்படுகிறது . இந்த சிற்றினம் கரும்புள்ளி பார்ப் என்றும் அழைக்கப்படுகிறது.[6]

சொற்பிறப்பியல்

தொகு

இதன் பேரினப் பெயரான, தாவ்கின்சியா என்பது அறிவியல் மற்றும் குறிப்பாக, பரிணாம அறிவியலின் இவருடைய பங்களிப்பு செய்த புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்சு நினைவாக இடப்பட்டது.[7]

கண்டறிதல்

தொகு

பெரிய மீன்கள் மற்ற தெற்காசிய புன்டியசு மீன்களிலிருந்தும் பின்வரும் எழுத்துக்களின் பண்புகளால் வேறுபடுகிறார்கள்:

கிளைத்த முதுகு -துடுப்புக் கதிர்கள், வயது வந்த ஆண்களுக்கு மட்டும் இழை போன்ற நீண்டு காணப்படும்; ஒவ்வொரு வால் துடுப்பிலும் மடலின் நுனிக்கு அருகில் கண்ணைப் போல அகலமான ஒரு கருப்பு பட்டை; கீழ் உதடு தொடர்ச்சியானது; குத-துடுப்பு பின்புறமாக 2 முதல் 5 வால் செதில்கள், குத-துடுப்பிற்கு முன்னதாக உடலில் தனித்த அடையாளங்கள் இல்லை. பு. அசிமிலிசிலிருந்து முன்முனைக்கு முன் அமைக்கப்பட்ட வாய் மூலம் வேறுபடுத்தப்பட்டது (பிற - தாழ்வான); மேக்சில்லரி பார்பெல்சு சிறியது, 0.5-2.2 நிலையான நீளம் % (Vs. 5.5-9.3%); பிந்தைய சுற்றுப்பாதை தலை நீளம் நிலையான நீளத்தின் 11.0-12.1% (பிற 8.7-10.4%); மற்றும் கண்குழியிடை விட்டம் 11.2-12.2% நிலையான நீளத்தில் (10.0-11.1%) . விளக்கம்: ஒரு எளிய மற்றும் 14 அல்லது 15 கிளைக் கதிர்களைக் கொண்ட இடுப்பு துடுப்பு. உடலில் 18,19 அல்லது 20 செதில்கள் கொண்ட பக்கவாட்டுக் கோடு, 1-3 செதில்கள் வால் துடுப்பின் அடிப்பகுதியினை தாண்டி நீட்டிக்கப்படுகிறது.[8]

பரவல்

தொகு

தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் காணப்படுகிறது. இது ஒரு அகணிய உயிரி.

தென்மேற்கு இந்தியாவின் கேரள மாநிலம், வேம்பநாட்டு ஏரிக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஆலப்புழா இதன் மாதிரி இருப்பிடம் ஆகும்.[7]

வாழ்விடம்

தொகு

இந்த சிற்றினம் தாழ் நில கரையோர வெள்ளப்பெருக்கு பகுதிகளில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது. இது ஆறுகள், கயவய், கடலோர சதுப்புநிலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நன்னீர் மற்றும் உவர் நீர் என இரண்டிலும் காணப்படுகிறது.[7]

மீன்பிடித்தல்

தொகு

கேரளாவின் ஆறுகளில், இந்த மீன்கள் மிகுதியாக வளர்வதோடு, புழுக்கள் மற்றும் பூச்சிகளின் அதிக உணவு காரணமாக, மழைக்காலத்தில் இவை அதிகமாகக் காணப்படும். இக்காலங்களில் மீனவர்கள் தூண்டில் மூலம் எளிதில் பிடிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Abraham, R. (2015). "Dawkinsia filamentosa". IUCN Red List of Threatened Species 2015: e.T172459A70086605. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T172459A70086605.en. https://www.iucnredlist.org/species/172459/70086605. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Dawkinsia filamentosa". Global Biodiversity Information Facility (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  3. Pethiyagoda, R., Meegaskumbura, M. & Maduwage, K. (2012): A synopsis of the South Asian fishes referred to Puntius (Pisces: Cyprinidae). பரணிடப்பட்டது 2012-11-19 at the வந்தவழி இயந்திரம்
  4. All About Tropical Fish. Harrap Limited.
  5. "Filament Barb". Tropical Fish Keeping. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.
  6. "Puntius filamentosus - Filament Barb". Seriously Fish. Archived from the original on 2011-01-09. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.
  7. 7.0 7.1 7.2 "Dawkinsia filamentosa – Filament Barb (Puntius filamentosus, Systomus maderaspatensis) — Seriously Fish". பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
  8. "Dawkinsia filamentosa (Valenciennes, 1844)". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சக்கெண்டை&oldid=4110794" இலிருந்து மீள்விக்கப்பட்டது