மருத்துவர் சர்மிளா
மருத்துவர் சர்மிளா (Dr. Sharmila) என்பவர் இந்திய மருத்துவர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் இரவு நேர விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான புதிரா புனிதமா மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் இவர் என். மாத்ருபூதத்துடன் நடித்தார்.[6] இந்த தொடர் இவரைப் பிரபலமாக்கியது. இதன் பின்னர், இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.
மருத்துவர் சர்மிளா | |||||||
---|---|---|---|---|---|---|---|
தனிப்பட்ட தகவல் | |||||||
பிறப்பு | சர்மிளா கோதண்டராமன் 15 நவம்பர் 1974[1][2] | ||||||
கல்வி | இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் | ||||||
தொழில் | நடிகை, தொகுப்பாளர், மருத்துவர்,சமூகச் செயற்பாட்டாளர், யூடியூபர் | ||||||
Spouse(s) |
| ||||||
Relatives | ரித்விகா (மகள்)[4][5] | ||||||
வலைதளம் | Twitter | ||||||
யூடியூப் தகவல் | |||||||
வலைதளம் | Sharmila Talkies | ||||||
செயலில் இருந்த ஆண்டுகள் | 2022–தற்போது வரை | ||||||
காணொளி வகை(கள்) | அரசியல், சமூகம், கலை, இலக்கியம், உணவு, வாழ்வியல், உடல்நலன், நாடகத் தொடர், திரைப்படம் | ||||||
சந்தாதாரர்கள் | 55,600+ (திசம்பர் 2022) | ||||||
மொத்தப் பார்வைகள் | 8,652,446 (திசம்பர் 2022) | ||||||
|
வாழ்க்கை வரலாறு
தொகுசர்மிளா மருந்து சம்பந்தப்பட்ட தொழில் புரியும் கோதண்டராமன் என்பவரின் மகளாகப் பிறந்தார்.[7] இவர் சிஎஸ்ஐ பள்ளியில் படித்து பின்னர் மருத்துவ பட்டம் பெற்றார். இவர் கோபாலகிருஷணன் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் பத்து வருடங்கள் பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டார்.[7]
சர்மிளா ஜெயா தொலைக்காட்சியில் (பின்னர் ஜேஜே தொலைக்காட்சி) வினாடி வினா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து ”இந்த வாரம் இவர்” என்ற உரை நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் இவர் பல பிரபலங்களை நேர்காணல் செய்தார்.[7] பின்னர் தொலைக்காட்சியில் பாலியற் கல்வி தொடர்பான விவாதங்களை நடத்த விரும்பிய பிரபல மனநல மருத்துவர் மருத்துவர் என். மாத்ருபூதம் இவரைக் கடிதங்களைப் படிக்கத் தேர்ந்தெடுத்தார். இந்நிகழ்ச்சி, புதிரா புனிதமா? எனும் தலைப்பில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக "தைரியமானவர்" என்று அழைக்கப்பட்ட சர்மிளா பிரபலமானார்.[7] இதன் மூலம், இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்களான ஜன்னல் மற்றும் இரண்டாம் சாணக்கியன் தொடர்களில் நடித்தார். நடிப்பின் நுணுக்கங்களைக் கற்பித்த பாலசந்தரை தனது வழிகாட்டியாகவும் குருவாகவும் சர்மிளா கருதுகிறார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசர்மிளா பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.[8] இவர் தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகியான ஏ. எல். மோகனை மணந்தார், ஆனால் பின்னர் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.[9][10]
தொலைக்காட்சி வாழ்க்கை
தொகுஇவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஹீரோ ஹீரோயின் (சன் தொலைக்காட்சி), கேண்டிட் கேமரா (சன் தொலைக்காட்சி), புதிரா புனிதமா? (விஜய் தொலைக்காட்சி), வினாடி வினா நிகழ்ச்சி (ஜெயா தொலைக்காட்சி), இந்த வாரம் இவர் (விஜய்) உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர் ஒரு சில மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த மலையாள தொலைக்காட்சித் தொடர்களாக நந்தினி ஊப்பால், தேவிமாக்த்மியம், கருத்தமுத்து, அம்மே மகமாயி முதலியன. அண்மையில் இவர் நடித்துவரும் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களாகக் கடைக்குட்டிச் சிங்கம் (விஜய் தொலைக்காட்சி), தாழம்பூ, தமிழ்செல்வி, சந்திரலேகா (சன் தொலைக்காட்சி), பூவே உனக்காக, மகராசி முதலியன. தமிழ் மலையாளம் என இருமொழியிலும் 50க்கும் மேற்பட்டத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
திரைப்படவியல்
தொகுதொலைக்காட்சித் தொடர்களைத் தவிர சர்மிளா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1997இல் காதலி என்னும் திரைப்படத்தில் நடிக்க துவங்கிய இவரின் திரைப்படங்களின் பட்டியல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டு | தலைப்பு | வேடம் | குறிப்புகள் |
---|---|---|---|
1997 | காதலி | நேர்காணல் செய்பவர் | |
1998 | பொன்மனம் | பிரியா | |
2000 | சின்ன சின்ன கண்ணிலே | ||
2001 | சிட்டிசன் | பாயின் மனைவி | |
2001 | பார்த்தாலே பரவசம் | ||
2002 | ஒன்னமான் | ரவிசங்கரின் சகோதரி | மலையாள படம் |
2009 | படிக்காதவன் | கவிதா | |
2010 | பலே பாண்டியா | பாண்டியாவின் தாய் | |
2011 | மாப்பிள்ளை | சரவணனின் சகோதரி | |
2011 | நர்த்தகி | ||
2013 | கல்யாண சமையல் சாதம் | ரகுவின் அத்தை | |
2014 | மருமுனை | ||
2014 | ஐந்தம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | ||
2016 | பூஜ்யம் | சர்மிளா | |
2017 | காதலி | பாந்தவியின் தாய் | தெலுங்கு படம் |
2018 | யெண்ட தலையில யென்ன வெக்கல | ||
2020 | என்டா தலைமேலே என்ன வெக்கிலே |
- குறிப்பிட்டப் படங்களைத் தவிர பிற படங்கள் தமிழ் மொழித் திரைப்படங்கள் ஆகும்
விருதுகள்
தொகுஇவர் Www.isai24x7.com இணையதள நிறுவனத்திலிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதினையும், கருத்தமுத்து தொடரில் நடித்ததற்காக சிறந்த கதாநாயகிக்கான 2015ஆம் ஆண்டு ஆசியநெட் தொலைக்காட்சி விருதினை பெற்றார். பகல் நிலவு தொலைக்காட்சி தொடருக்காக 2017ஆம் ஆண்டு சிறந்த எதிர்மறை பாத்திரத்திற்கான விஜய் தொலைக்காட்சி விருதுகளுக்காப் பரிந்துரைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்வளவன் [TamilvalavanM] (15 November 2022). "Happy b day mam 💙 @DrSharmila15 t.co/1jIkDk6cEl" (Tweet) (in ஆங்கிலம்). Archived from the original on 15 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
- ↑ Dr SHARMILA [DrSharmila15] (19 September 2021). "@gmuruganraj1979 @annamalai_k Naan inge thaan 47 varushama irukken bro😀😀" (Tweet) (in டச்சு). Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Dr SHARMILA [DrSharmila15] (5 February 2022). "Happy Anniversary ❤️❤️❤️@VckBalaji t.co/BsAlFb67Lk" (Tweet) (in ஆங்கிலம்). Archived from the original on 9 February 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "விகடன் TV: "மக்கள் சினிமாவையும் அரசியலையும் குழப்பிக்கலை!"". ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
- ↑ Bigg Boss விட மோசமா எங்க வீட்ல சண்ட நடக்கும்! - Dr Sharmila & her Daughter Laughter Ride Interview. BehindwoodsTV. 10 September 2020. Archived from the original on 3 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022 – via YouTube.
- ↑ "Mathrubhootham Dead". தி இந்து (Chennai). 24 February 2006 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041121044808/http://www.hindu.com/2004/11/19/stories/2004111908840500.htm.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 [1]
- ↑ "'என் அடையாளம் மனிதமும் சமூக நீதியும்தான்… பிராமணராக பிறந்தது அல்ல!' டாக்டர் ஷர்மிளா காரசாரம்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
- ↑ "Dr Sharmila gets a divorce". Music India Online. 27 Mar 2007. Archived from the original on 27 March 2007.
- ↑ Staff (2004-04-02). "விவகாரத்து பெற்றார் புதிரா புனிதமா ஷர்மிளா". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.