மலபார் குழி விரியன்

மலபார் கட்டு விரியன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஊர்வன
வரிசை:
குடும்பம்:
வைப்பெரிடே
பேரினம்:
கிராசுபிடோசெபாலசு
இனம்:
கி. மலபாரிகசு
இருசொற் பெயரீடு
கிராசுபிடோசெபாலசு மலபாரிகசு
(ஜெர்டன், 1854)

கிராசுபிடோசெபாலசு மலபாரிகசு (Craspedocephalus malabaricus) பொதுவாக மலபார் குழி விரியன், மலபார் பாறை குழி விரியன்,[2] அல்லது பாறை விரியன்[3] என அழைக்கப்படுகிறது. இது தென்மேற்கு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்-மிதமான உயரப் பகுதிகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது நச்சுப்பாம்பான குழி விரியன் சிற்றினமாகும். சமீபத்தில் இந்தச் சிற்றினம் மூன்று வெவ்வேறு சிற்றினங்களாகப் பிரிக்கப்பட்டது. இவை கிராசுபிடோசெபாலசு மலபாரிக்கசு (பாலக்காட்டு கணவாய் இடைவெளியின் வடக்கு), கிராசுபிடோசெபாலசு திராவன்கோரிகசு (செங்கோட்டை இடைவெளியின் தெற்கு), கிராசுபிடோசெபாலசு ஆனாமலென்சிசு (பாலக்காட்டுக் கணவாயின் தெற்கிலிருந்து செங்கோட்டை இடைவெளி வரை).

பச்சை உருவில்
மலபார் குழி விரியன் நீல நிறத்தில்
மாறுபட்ட மலபார் குழி விரியன்

விளக்கம்

தொகு

மலபார் குழு விரியன் முன் பகுதியிலிருந்து குதம் வரை 105 செ.மீ. நீளம் உடையது. வால் சுருளும் தன்மையுடையது.[4]

பலவீனமாக மூட்டுடன் கூடிய முதுகெலும்பு செதில்கள் நடுப்பகுதியில் 21 அல்லது 19 வரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும். ஆண்களில் வயிற்றுப்புறச் செதில்கள் 143-158 மற்றும் பெண்களில் 136-159 என்ற எண்ணிக்கையில் காணப்படும். குத செதில் முழுமையாகக் காணப்படும். வாலடிச் செதில்கள் இணையாகக் காணப்படும். ஆண்களில் இவை 50-63 என்ற எண்ணிக்கையிலும், பெண்களில் 44-54 என்ற எண்ணிக்கையிலும் காணப்படும். உள்மூக்கு பெரியவை. பொதுவாக இணைக்கப்பட்டிருக்கும். 9 அல்லது 10 மேலு தடுச்செதில்கள் உள்ளன. இவற்றில் முதலாவது முற்றிலும் நாசியிலிருந்து பிரிக்கப்பட்டுக் காணப்படும். மூளைப் பக்கச் செதில்கள் மென்மையானவை மற்றும் சாய்ந்த நிலையில் இருக்கும்.[5]

மலபார் குழு விரியன் மஞ்சள், பச்சை மற்றும் பழுப்பு போன்ற நிறங்கள் உட்பட பல்வேறு வண்ண உருவங்களில் இருப்பதாக அறியப்படுகிறது.

பரவழும் வாழிடமும்

தொகு

மலபார் குழு விரியன் சிற்றினம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழக்கூடியது. இது தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 600–2,000 மீட்டர்கள் (2,000–6,600 அடி) உயரப் பகுதிகளில் காணப்படுகிறது. தென்மேற்கு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இதன் வகை இடமாகும் . இந்த சிற்றினத்தின் பதிவுகள் அமைதிப் பள்ளத்தாக்கு, மேற்கு நீலமலை, வயநாடு, குடகு மாவட்டம், கருநாடகாவின் மலைநாடு, கோட்டைப்பாறை, கோவா மற்றும் வடக்கே கோலாப்பூர் பகுதிகளில் அம்போலி மலை (மகாராட்டிம் வரை) காணப்படுகின்றன.[6] இது கரையோர காடுகளில் வாழ்கிறது. மலை நீரோடைகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் அடர்ந்த ஈரமான மழைக் காடுகளில் காணப்படுகிறது. சில சமயங்களில் பசுமையான மற்றும் இலையுதிர் காடுகளில் தரை, ஓடை படுக்கைகள், குறைந்த தாவரங்கள் அல்லது புதர்களில் காணப்படும்.[4]

சூழலியல்

தொகு

மலபார் குழி விரியன் இரவாடுதல் வகையினது. இது பொதுவாகப் பகலில் செயலற்றது. சில சமயங்களில் நீரோடைகளுக்கு அருகில் உள்ள பாறைகள் அல்லது மரங்களில் குதிப்பதைக் காணலாம். மழைக்காலங்களில் இதனை அதிகமாகக் காணலாம். இந்த சிற்றினம் தவளை, பல்லி, பறவை, மூஞ்சூறு, எலி மற்றும் பிற சிறிய விலங்குகளை வேட்டையாடுகிறது.[4]

விசம்

தொகு

கி. மலபாரிகசு மெதுவாக நகரும், ஆனால் வேகமாகத் தாக்கும் திறன் கொண்டது. இதன் விசம் மனிதர்களுக்கு மிதமான வலியையும் கடித்த இடத்தில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் ஓரிரு நாட்களில் மறைந்துவிடும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Srinivasulu, C.; Srinivasulu, B.; Shankar, G.; Thakur, S.; Kulkarni, N.U.; Jose, J. (2013). " Craspedocephalus malabaricus". IUCN Red List of Threatened Species 2013: e.T172708A1372028. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172708A1372028.en. https://www.iucnredlist.org/species/172708/1372028. 
  2. Gumprecht A, Tillack F, Orlov NL, Ashok Captain, Ryabov S. 2004. Asian Pitvipers. Geitje Books. Berlin. 1st Edition. 368 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-937975-00-4.
  3. Mehrtens, John M. (1987). Living snakes of the world in color. Sterling Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806964607.
  4. 4.0 4.1 4.2 Das, Indraneil. 2002. A Photographic Guide to Snakes and Other Reptiles of India. Ralph Curtis Books. Sanibel Island, Florida. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-056-5. (Trimeresurus malabaricus, p. 66.)
  5. 5.0 5.1 Whitaker R, Captain A. 2004. Snakes of India, The Field Guide. Draco books.
  6. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).

மேலும் படிக்க

தொகு
  • Thomas C. Jerdon. 1854 ["1853"]. Catalogue of Reptiles inhabiting the Peninsula of India. Journ. Asiat. Soc. Bengal 22: 522-534.
  • Smith, M.A. 1943. The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. Secretary of State for India. (Taylor and Francis, Printers.) London. xii + 583 pp. (Trimeresurus malabaricus, p. 513.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_குழி_விரியன்&oldid=3875308" இலிருந்து மீள்விக்கப்பட்டது