மலேசிய பொருளாதார அமைச்சர்
மலேசிய பொருளாதார அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Economy of Malaysia; மலாய்: Menteri Ekonomi Malaysia) என்பவர் மலேசிய பொருளாதார அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.
மலேசிய பொருளாதார அமைச்சர் Minister of Economy Menteri Ekonomi Malaysia | |
---|---|
மலேசிய பொருளாதார அமைச்சு | |
சுருக்கம் | EKONOMI |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 21 மே 2018 |
முதலாமவர் | அசுமின் அலி (Mohamed Azmin Ali) |
இணையதளம் | https://ekonomi.gov.my |
மலேசிய பொருளாதார அமைச்சு தொடக்கத்தில் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாக இருந்தது; மற்றும் ஓர் அமைச்சரால் நிர்வகிக்கப்பட்டது. அப்போது அந்தத் துறையின் கீழ் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (Economic Planning Unit) இயங்கி வந்தது.
பின்னர் 21 மே 2018-ஆம் தேதி, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மகாதீர் பின் முகமதுவால் பொருளாதார அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டது.
ராபிசி ராம்லி
தொகு2020-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாக, மலேசியாவின் அரசியல் அதிகாரத்தை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி கைப்பற்றியது. அரசாங்கம் மாறியதும், இந்தப் பொருளாதார அமைச்சு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது.
பின்னர் அன்வார் இப்ராகிம் ஆட்சிக்கு வந்ததும், அவரின் அமைச்சரவையில் அதே அமைச்சு மீண்டும் நிறுவப்பட்டது. 2 டிசம்பர் 2022 அன்று, பிரதமர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதிய பொருளாதார அமைச்சராக ராபிசி ராம்லியை நியமித்தார்.[1]
அமைச்சர்களின் பட்டியல்
தொகுபொருளாதார அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
தோற்றம் | பெயர் | கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | பிரதமர் (அமைச்சரவை) | ||
---|---|---|---|---|---|---|---|---|
அசுமின் அலி (Mohamed Azmin Ali) |
பாக்காத்தான் (பிகேஆர்) | பொருளாதார துறை அமைச்சர் | 21 மே 2018 | 24 பிப்ரவரி 2020 | மகாதீர் பின் முகமது (VII) | |||
ராபிசி ராம்லி (Rafizi Ramli) |
பாக்காத்தான் (பிகேஆர்) | பொருளாதார அமைச்சர் | 3 டிசம்பர் 2022 | பதவியில் உள்ளார் | அன்வார் இப்ராகிம் (I) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- https://www.ekonomi.gov.my/
- பொதுவகத்தில் Ministry of Economy Malaysia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.