மஹேஷ் மஹாதேவ்

இந்திய இசையமைப்பாளர்

மஹேஷ் மஹாதேவ் [1](பிறப்பு: அக்டோபர் 28, 1981 ) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார் இவர் திரைப்படங்கள், கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி சங்கீதத்தில் புதிய ராகங்களை உருவாக்கி, மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத பல அரிதான ராகங்களில் மிக அழகான பாடல்களை இசையமைத்திருக்கிறார்[2]. இவர் தமிழ், கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மராட்டி, உருது, சமஸ்கிருதம், மொழிகளில் இசையமைத்திருக்கிறார்.

மஹேஷ் மஹாதேவ்
பிறப்பு(1981-10-28)28 அக்டோபர் 1981
பிறப்பிடம்பெங்களூரு, கர்நாடகா
இசை வடிவங்கள்திரை இசை, கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம்
தொழில்(கள்)இந்திய இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்
இசைத்துறையில்2001 – முதல்
இணையதளம்https://maheshmahadev.com/

ஆரம்ப வாழ்க்கை

தொகு

மஹேஷ் மஹாதேவ் அக்டோபர் 28, 1981 மஹாதேவ ராவ், மஞ்சுளா ஜாதவ் தம்பதியருக்கு மூத்த மகனாக பெங்களூரில் பிறந்தார். சிறு வயதுமுதல் கலை மற்றும் இசையில் மிக்க ஆர்வம் கொண்டவர்.

எந்த கலையையும் மிக வேகமாக கிரஹித்து அதில் தனக்கென ஒரு இடம் பிடித்து சாதனை புரியும் தன்மையுடையவர். இவர் ஓவியங்கள் வரைவதில் மற்றும் சிற்ப கலையிலும் திறமை கொண்டவர்.

இவர் பிரபல திரைப்பட கிட்டார் இசை கலைஞர்களான இசை மேதைகள் சதா சுதர்சனம் மற்றும் ராதா விஜயன் அவர்களிடம் மேற்கத்திய சங்கீதத்தை பயின்றிருக்கிறார்.

இவர் சமஸ்கிருத மொழியில் எழுதி இசையமைத்த 'மஹாருத்ரம் மஹாதேஸ்வரம்' என்ற இசை ஆல்பம் கர்நாடக சங்கீத மேதைகள் திரு. பாலமுரளி கிருஷ்ணா, திருமதி சரோஜா (பம்பாய் சகோதரிகள்), திரைப்பட இயக்குநர் திரு பி வாசு, இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், தினா, மேலும் பல இசை பிரபலங்களால் பாராட்டப்பட்டது.

தற்பொழுது இவர் பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்து வரும் 'மாளிகை' என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் ஒரு கிளாசிக்கல் பாடலுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவர் 'ஜான்சி ஐ.பி.ஸ்'  கன்னட திரைப்படத்தில் பாடலை எழுதியுள்ளார்[3]. திரைப்பட இசை துறையில் மேலும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.[4][5]

இந்துஸ்தானி இசைக்கான பங்களிப்புகள்

தொகு

இவர் உருவாக்கிய 'பீம் சென்' என்கிற புதிய ராகத்தில் விளம்பித் மற்றும்

மத்திய லயங்களில் 'கிரிதர் கோபால் ஷ்யாம்', 'மன் கே மந்திர் ஆயோரே' என்கிற திருத் லயத்தில் பந்திஷ்களை எழுதி இசையமைத்துள்ளார். இந்த பந்திஷ்களை பிரபல ஹிந்துஸ்தானி பாடகரான

பண்டிட் ஜெயதீர்த் மேவுண்டி பாடியுள்ளார்[6]. இவர் உருவாக்கிய 'முக்தி ப்ரதாயினி' என்ற ராகத்தில் 'தயான் கரு ஸ்யாத' என்ற அபங் '91st Annual Musical Conference and Concerts’, மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் படைக்கப்பட்டது[7].[8]

கர்நாடக இசைக்கான பங்களிப்புகள்

தொகு

இவர் தன்னுடைய பாடல்களில் ஸ்ரீ ஸ்கந்தா என்ற முத்திரையை கையாள்கிறார்.

வெவ்வேறு தாளங்களில் கர்நாடக சங்கீதத்தில் வர்ணங்கள், கிருதிகள், தில்லானாக்கள், தாச  கீர்த்தனங்கள், விருத்தங்கள் போன்றவற்றை இசையமைத்துள்ளார். இவர் உருவாக்கிய 'ஸ்ரீரங்கப்ரியா' என்ற ராகத்தில்  'கண்டேனு ஸ்ரீரங்க நாதனா' என்ற பாடலை இசையமைத்து அதை பிரபல பின்னணி பாடகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத பல அரிதான ராகங்கள் ருத்ர பஞ்சமம், மாதவி, ஓம்கார கோஷினி போன்றவற்றில் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். மேலும் சில பாடல்களில் 'கிரக பேதம்' என்ற முறையையும் கையாண்டுள்ளார்.[9] [10] [11][12]

  1. ஜான்சி ஐ.பி.ஸ்
  2. பிரபல கன்னட செய்தி தொலைக்காட்சி திக்விஜயாவிற்காக ராஜ்யோத்சவா ஸ்பெஷல் பாடல் வரிகள்[13]
  3. நவராத்ரிய ஈ நவ வைபவதி
  4. அனுராகத அலேயலி

புதிய ராகங்கள் உருவாக்கம் [14]

தொகு
  1. முக்திப்ரதாயினி - வாகுளாபரணம் ஜன்யம்
  2. ஸ்ரீரங்கப்ரியா - சரசாங்கி ஜன்யம்
  3. பீம் சென் - கோகிலப்ரியா ஜன்யம்
  4. ஸ்ரீ ஸ்கந்தா
  5. பிந்து ரூபிணி
  6. நாத கல்யாணி -  மேச்ச கல்யாணி ஜன்யம்
  7. தபஸ்வி
  8. மயூரப்ரியா
  9. அம்ருத கல்யாணி -  மேச்ச கல்யாணி ஜன்யம்
  10. ராஜ சாதகா - மேச்ச கல்யாணி ஜன்யம்

டிஸ்கோகிராபி

தொகு
ஆண்டு திரைப்படம் / ஆல்பம் மொழி பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் ಆಡಿಯೋ ಲೇಬಲ್
2016 மோதகப்ரிய கணராஜா சமஸ்கிருதம் மூஷிக வாஹனா மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி சாம்பிரதாய பாடல் பி. ம் ஆடியோஸ்
முதகராத்த மோதகம் பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
மஹாகணபதிம் பிரியதர்ஷினி முத்துசுவாமி தீட்சிதர் பி. ம் ஆடியோஸ்
ப்ரணம்ய ஷிரசா தேவம் பிரியதர்ஷினி சாம்பிரதாய பாடல் பி. ம் ஆடியோஸ்
கைலாச ஷிகரவரே பிரியதர்ஷினி சாம்பிரதாய பாடல் பி. ம் ஆடியோஸ்
2016 மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் சமஸ்கிருதம் ஸ்ரீ மஹாதேஷ்வர சுப்ரபாதம் பிரியதர்ஷினி மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
ஓம்கார ப்ரணவ மந்த்ர ஸ்வரூபம் பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ்,

சுனில், வேணு

மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ மஹாதேஷ்வர பஞ்சரத்னம் பிரியதர்ஷினி மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ மஹாதேஷ்வர அஷ்டாதச நாமாவளி மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ மஹாதேஷ்வர லாலி பிரியதர்ஷினி மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமஸ்கிருதம் கணேஷ பஞ்சரத்னம் பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ சிவா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ சாரதா புஜங்கம் பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ்

சுனில் மஹாதேவ்

ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
நாராயண ஸ்தோத்ரம் பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ் ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
காலபைரவாஷ்டகம் மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
அச்யுதாஷ்டகம் பிரியதர்ஷினி ஆதி சங்கரர் பி. ம் ஆடியோஸ்
2017 தேவி ராக தாள லய மாலிகா சமஸ்கிருதம் தேவி தயாலினி பவமோசனி பிரியதர்ஷினி மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
தாசாம்ருதா கன்னடம் பேக பாரோ நீல மேக வர்ண பாரோ மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி வாதிராஜ தீர்த்தர் ப்ரிசம் போவுண்டேஷன்
சகல பலம்புலு நீவே தெலுங்கு மொழி சகல பலம்புலு நீவே சர்வேஸ்வரா பிரியதர்ஷினி அன்னமாச்சாரியார் பி. ம் ஆடியோஸ்
ஹரிஹர சுதன் தமிழ் ஹரிஹர சுதனே சரணம் மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி அகத்தியர் பி. ம் ஆடியோஸ்
2018 சுர் சந்தியா இந்தி ஆயா சமை ஜவானோன் ஜாகோ உமா சேஷகிரி ர.ஸ்.ஸ் சாம்பிரதாய பாடல் ப்ரிசம் போவுண்டேஷன்
இந்தி ஜெய துர்கே துர்கதி பரிஹாரிணி உமா சேஷகிரி ப்ரஹ்மானந்தா ப்ரிசம் போவுண்டேஷன்
கன்னடம் பாலிசோ ஸ்ரீ ஹரி உமா சேஷகிரி ஹரப்பனஹள்ளி பீமவா ப்ரிசம் போவுண்டேஷன்
உருது தில் கா தியா ஜலாய உமா சேஷகிரி சாம்பிரதாய பாடல் ப்ரிசம் போவுண்டேஷன்
சமஸ்கிருதம் அஜம் நிர்விகல்பம் உமா சேஷகிரி ஆதி சங்கரர் ப்ரிசம் போவுண்டேஷன்
கன்னடம் ஓ நன்னா சேதனா உமா சேஷகிரி குவெம்பு ப்ரிசம் போவுண்டேஷன்
2018 சந்தாஞ்சே அபங் மராத்திய மொழி தயான் கரு ஸ்யாதா ஜெயதீர்த் மேவுண்டி ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் பி. ம் ஆடியோஸ்
ஐயப்பன் சரண கோஷம் தமிழ் கடலலையாம் பக்தர் கூட்டம் பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ்,

சதிஷ் ஆர்யன், சுனில்

சுமதி பி. ம் ஆடியோஸ்
மஹாலக்ஷ்மி பாரம்மா கன்னடம் மஹாலக்ஷ்மி பாரம்மா பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
மஹாலக்ஷ்மி தாயே வா தமிழ் பொன் மழை தனிலே பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ் ஜி கிருஷ்ணகுமார் பி. ம் ஆடியோஸ்
2019 சாவன் கே பாதல் இந்தி நீலே ககன் மென் பிரியதர்ஷினி அபிஷேக் சோகானி பி. ம் ஆடியோஸ்
கஜல் உருது ஜிந்தகி பர் தந்தர் கி கஞ்சர் சலே பிரியதர்ஷினி மஹ் ஜபீன்
நாரேயண நாமாம்ருதம் தெலுங்கு மொழி ஸ்ரீ நாரேயண நாமாம்ருதம் பிரியதர்ஷினி கைவார தாத்தா ஸ்ரீ யோகி நாரேயணா பி. ம் ஆடியோஸ்
தெலுங்கு மொழி திமி திமி தண தண ஸ்.பி பாலசுப்ரமணியம், பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ், ரகுராம் பி. ம் ஆடியோஸ்
கன்னடம் நானேனு பல்லேனோ பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
கன்னடம் மரேயலாரேநம்மா பதரி பிரசாத் பி. ம் ஆடியோஸ்
தெலுங்கு மொழி ராம ராம முகுந்த மஹேஷ் மஹாதேவ், ப்ரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
கன்னடம் ஈ தேஹதொளகித்து பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
கன்னடம் மங்களம் அமர நாரேயணகே மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
2019 கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா தெலுங்கு மொழி நருடு குருடனி நம்மே வாரமு ஸ்.பி பாலசுப்ரமணியம், பிரியதர்ஷினி கைவாரா தாத்தா ஸ்ரீ யோகி நாரேயணா பி. ம் ஆடியோஸ்
கன்னடம் ஆத்ம த்யானிஸோ மனுஜ பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
தெலுங்கு மொழி அண்டஜ வாகன குண்டலி சயன பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
கன்னடம் இல்லி நீ நிவாஸ மாடிருவுதேனோ பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
கன்னடம் கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா ஸ்.பி பாலசுப்ரமணியம் பி. ம் ஆடியோஸ்
தெலுங்கு மொழி ஏகாக்ஷரமே ப்ரஹ்மாக்ஷரமாய் பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
தெலுங்கு மொழி மங்களம் சதகோடி மன்மதா காருனகு மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி பி. ம் ஆடியோஸ்
வன்புலி வாகன சபரீஷா தமிழ் வருவாய் விரைவாய் மஹேஷ் மஹாதேவ், பிரியதர்ஷினி சாம்பிரதாய பாடல் பி. ம் ஆடியோஸ்
2020 ரங்கன மரேயலாரேநம்மா கன்னடம் ரங்கன மரேயலாரேநம்மா பதரி பிரசாத் கைவாரா தாத்தா பி. ம் ஆடியோஸ்
கைவார யோகி (சிங்கிள்) தெலுங்கு மொழி திமி திமி பேரிநௌபத்து ஸ்.பி பாலசுப்ரமணியம் பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ், ரகுராம் கைவாரா தாத்தா ஸ்ரீ யோகி நாரேயணா பி. ம் ஆடியோஸ்
நமோ வெங்கடேஷாய தெலுங்கு மொழி நருடு குருடனி ஸ்.பி பாலசுப்ரமணியம், பிரியதர்ஷினி கைவாரா தாத்தா பி. ம் ஆடியோஸ்
கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா (சிங்கிள்) கன்னடம் கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா செலுவ மூருதி ஸ்.பி பாலசுப்ரமணியம் கைவாரா தாத்தா பி. ம் ஆடியோஸ்
மாளிகை

(வெளியீடுக்கு தயாராகிருக்கும் திரைப்படம்)

தமிழ் ஓம்கார பிரணவ மந்த்ர பிரியதர்ஷினி பிரியதர்ஷினி, மஹேஷ் மஹாதேவ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahesh Mahadev". Discogs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  2. https://archive.org/details/saamagana-indian-classical-music-magazine-july-2018/page/12/mode/2up?q=Mahesh+Mahadev
  3. https://music.apple.com/us/album/jhansi-ips-original-motion-picture-soundtrack-ep/1477095774
  4. ಮಹೇಶ್ ಮಹದೇವ್ https://www.imdb.com/name/nm11862300/
  5. https://www.filmibeat.com/celebs/mahesh-mahadev.html#upcoming
  6. https://www.indiantalentmagazine.com/2019/02/05/mahesh-mahadev/
  7. https://music.apple.com/in/album/santanche-abhang-single/1485681835
  8. https://www.indiantalentmagazine.com/2019/02/05/mahesh-mahadev/. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help); Missing or empty |title= (help)
  9. https://music.apple.com/us/album/kandenu-sri-ranganathana-single/1505277465
  10. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் https://www.youtube.com/watch?v=X0-GkOdHitQ
  11. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் https://www.youtube.com/watch?v=X0-GkOdHitQ
  12. https://www.indiantalentmagazine.com/2019/02/05/mahesh-mahadev/. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help); Missing or empty |title= (help)
  13. ರಾಜ್ಯೋತ್ಸವಕ್ಕೆ ದಿಗ್ವಿಜಯ ನ್ಯೂಸ್ ವಿಶೇಷ ಹಾಡು https://www.youtube.com/watch?v=G4aeXYsaXYA
  14. https://archive.org/details/saamagana-indian-classical-music-magazine-july-2018/page/12/mode/2up?q=Mahesh+Mahadev
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹேஷ்_மஹாதேவ்&oldid=4060433" இலிருந்து மீள்விக்கப்பட்டது