மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition in Rajya Sabha- IAST: ராஜ்ய சபா Rājya Sabhā ke Vipakṣa ke Netā ) என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியை வழிநடத்தும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். இவர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களவையில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆவார்.
{{{body}}} மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் | |
---|---|
Emblem of India | |
வாழுமிடம் | புது தில்லி |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | சியாம் நந்தன் பிரசாத் மிசுரா (1969–1971) |
ஊதியம் | ₹3,30,000 (US$4,100) (கூடுதல் சலுகைகள்) /மாதம் |
இணையதளம் | rajyasabha |
வரலாறு
தொகுமாநிலங்களவையில் 1969 வரை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி நடைமுறையில் மட்டுமே இருந்தது மற்றும் முறையான அங்கீகாரம், தகுதி அல்லது சிறப்புரிமை எதுவும் இல்லை. பின்னர், எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சட்டம் 1977 மூலம் நீட்டிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, மாநிலங்களவை தலைவர் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், அதாவது,
- இவர் மாநிலங்களைவை உறுப்பினராக இருக்க வேண்டும்
- மிகப் பெரிய எண்ணிக்கை பலம் (10% உறுப்பினர்) கொண்ட அரசாங்கத்திற்கு எதிரான கட்சி மற்றும்
- மாநிலங்களவைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
திசம்பர் 1969-ல், காங்கிரசு கட்சி பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் தலைவராக சியாம் நந்தன் மிசுரா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சியாம் நந்தன் பிரசாத் மிசுரா பதவிக் காலம் முடித்த பின்னர் எம். எஸ். குருபாதசுவாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், குருபாதசாமி நியமனம் குறித்து முறையான அறிவிப்பு ஏதுவுமின்றி பதவி வகித்தார்.
செயல் மற்றும் பொறுப்புகள்
தொகுஎதிர்க்கட்சித் தலைவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கக் கொள்கைகளை அலசிப் பார்க்கிறார். இதன் மீது தேவை என்றால் விவாதத்தைக் கோருவார். இத்தகைய கொள்கை மீதான விவாதங்களை ஆளும் கட்சி தவிர்க்க முயன்றால் அரசாங்கத்தை விமர்சிக்கிறார். தேசியப் பாதுகாப்புக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்போது, நாட்டின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்தும் விவாதிக்க வழிவகுக்கின்றார்.[1][2]
சலுகைகள் மற்றும் சம்பளம்
தொகுஎதிர்க்கட்சித் தலைவர் அரசின் கொள்கைகளிலும், ஆளும் கட்சியால் செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கின்றனர். சில நேரங்களில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர்.[3] 1977ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கென தனிச் சட்டம் இயற்றிய பிறகு, சம்பளம் அதிகரிக்கப்பட்டது.[4]
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் பட்டியல்
தொகுபின்வரும் உறுப்பினர்கள் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தனர்.
எண் | படம் | பெயர் | பதவிக்காலம்[5] | பிரதமர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|---|
காலியிடம் | 13 மே 1952 | 17 திசம்பர் 1969 | |||||
1 | ஷியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா | 18 திசம்பர் 1969 | 11 மார்ச் 1971 | இந்திரா காந்தி | நிறுவன காங்கிரசு | ||
2 | எம். எஸ். குருபாதசாமி | 24 மார்ச் 1971 | 2 ஏப்ரல் 1972 | ||||
– | காலியிடம் | 2 ஏப்ரல் 1972 | 30 மார்ச் 1977 | ||||
3 | கமலாபதி திரிபாதி | 30 மார்ச் 1977 | 15 பிப்ரவரி 1978 | மொரார்ஜி தேசாய் | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | போலா பாஸ்வான் சாசுதிரி | 24 பிப்ரவரி 1978 | 23 மார்ச் 1978 | ||||
(3) | கமலாபதி திரிபாதி | 23 மார்ச் 1978 | 8 சனவரி 1980 | மொரார்ஜி தேசாய் சரண் சிங் | |||
5 | லால் கிருஷ்ண அத்வானி | 21 சனவரி 1980 | 7 ஏப்ரல் 1980 | இந்திரா காந்தி | ஜனதா கட்சி | ||
– | காலியிடம் | 7 ஏப்ரல் 1980 | 18 திசம்பர் 1989 | இந்திரா காந்தி இராஜீவ் காந்தி |
No Official Opposition | ||
6 | பி.சிவ் சங்கர் | 18 திசம்பர் 1989 | 2 சனவரி 1991 | வி. பி. சிங் | இந்திய தேசிய காங்கிரசு | ||
(2) | எம். எஸ். குருபாதசாமி | 28 சூன் 1991 | 21 சூலை 1991 | பி. வி. நரசிம்ம ராவ் | ஜனதா தளம் | ||
7 | ஜெயபால் ரெட்டி | 22 சூலை 1991 | 29 சூன் 1992 | ||||
8 | சிக்கந்தர் பக்த் | 7 சூலை 1992 | 16 மே 1996 | பாரதிய ஜனதா கட்சி | |||
9 | எசு. பி. சவாண் | 23 மே 1996 | 1 June 1996 | அடல் பிகாரி வாச்பாய் | இந்திய தேசிய காங்கிரசு | ||
(8) | சிக்கந்தர் பக்த் (அரசியல்வாதி) | 1 சூன் 1996 | 19 மார்ச் 1998 | தேவ கௌடா ஐ. கே. குஜரால் |
பாரதிய ஜனதா கட்சி | ||
10 | மன்மோகன் சிங் | 21 மார்ச் 1998 | 22 மே 2004 | அடல் பிகாரி வாச்பாய் | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 | ஜஸ்வந்த் சிங் | 3 சூன் 2004 | 16 மே 2009 | மன்மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
12 | அருண் ஜெட்லி | 3 சூன் 2009 | 26 மே 2014 | ||||
13 | குலாம் நபி ஆசாத் | 8 சூன் 2014 | 15 பிப்ரவரி 2021 | நரேந்திர மோதி | இந்திய தேசிய காங்கிரசு | ||
14 | மல்லிகார்ச்சுன் கர்கெ | 16 பிப்ரவரி 2021 | 1 அக்டோபர் 2022 | 17 டிசம்பர் 2022 | பதவியில் |
மேலும் பார்க்கவும்
தொகு- இந்திய துணை ஜனாதிபதி (மாநிலங்களவைத் தலைவர்)
- மாநிலங்களவைத் துணைத் தலைவர்
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
- மாநிலங்களவை அவைத் தலைவர்
- மக்களவை அவைத் தலைவர்
- மாநிலங்களவை பொதுச் செயலாளர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Leader of Opposition: His role and responsibilities – India News". Latest News India. 17 June 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
- ↑ "Rajya Sabha – Role of The Leader of The House, Leader of the Opposition and Whips Brief History". rajyasabha.nic.in.
- ↑ Kumar, Sanjay. "Why India Needs an Opposition Leader". thediplomat.com.
- ↑ Salary and other suitable facilities are extended to them through a separate legislation brought into force on 1 November 1977
- ↑ "FORMER OPPOSITION LEADERS OF THE HOUSE – RAJYA SABHA". rajyasabha.nic.in.
மேலும் படிக்க
தொகு- Manisha, M. (2010–2011), Parliamentary Efficacy and the Role of the Opposition: A Comparative Study of the 2nd and 14th Lok Sabha (PDF), Rajya Sabha Fellowship for Parliamentary Studies, rajyasabha.nic.in