மாரமண்
கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டதில் உள்ள சிற்றூர்
மாரமண் (Maramon) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள கோழஞ்சேரி நகரத்திற்கு எதிரே திருவல்லா வட்டத்தில் பம்பை ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இது திருவல்லா நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
மாரமண் | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°20′0″N 76°41′0″E / 9.33333°N 76.68333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பத்தனம்திட்டா |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 689549 |
வாகனப் பதிவு | KL-27 |
அருகில் உள்ள நகரம் | கோழஞ்சேரி |
மக்களவை தொகுதி | ஆற்ன்முளா |
மாரமண் மாநாடு
தொகுஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ மாநாடான மாரமண் மாநாட்டின் காரணமாக இந்த ஊர் பிரபலமானது [சான்று தேவை] . மாரமண் மார் தோமா சிரிய தேவாலயத்தின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது.
கிராமங்கள்
தொகுபின்வரும் கிராமங்கள் மாரமண்ணின் ஒரு பகுதியாக உள்ளன: -
- நெடும்பரையறு
- செட்டிமுக்கு
- சாலைக்காரா
- தொட்டபுழசேரி.
போக்குவரத்து
தொகுடி.கே. சாலை ( திருவல்லா - பத்தனம்திட்டா - கும்பா சாலை / மா.நெ -07) நகரத்தை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் செங்கனூர் (14) கி.மீ). அருகிலுள்ள வானூர் நிலையங்கள் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் .