முன்னறிவிப்புப் பேராலயம்

முன்னறிவிப்புத் தேவாலயம் (எபிரேயம்: כנסיית הבשורה‎, அரபு மொழி: كنيسة البشارة‎, கிரேக்க மொழி: Εκκλησία του Ευαγγελισμού της Θεοτόκου) வட இசுரேலின் நாசரேத்திலுள்ள ஓர் தேவாலயமாகும். இது முன்னறிவிப்புப் பேராலயம் எனவும் அழைக்கப்படும். இங்கே இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது. அதாவது; இந்தப் பகுதியில் தான் கபிரியேல் தேவதூதர் கன்னி மரியாவுக்கு தோன்றி அவர் இயேசுவை பெற்றெடுக்கப்போவதை அறிவித்தார்.

முன்னறிவிப்புத் தேவாலயம்
முன்னறிவிப்பு பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் நாசரேத், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°42′08″N 35°17′52″E / 32.70222°N 35.29778°E / 32.70222; 35.29778
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1969
நிலைபேராலயம்

இந்த ஆலயம் கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி கன்னி மரியாவின் இல்லம் இருந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ளதாகும்.

வரலாறு

தொகு

பாரம்பரியம்

தொகு

பாரம்பரிய வழக்கத்தின்படி பேராலயம் அமைந்துள்ள இந்த இடத்தில்தான் இயேசு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்ந்தது. மற்றோரு பாரம்பரிய வழக்கமானது யாக்கோபு நற்செய்தியை வைத்து, இந்த நிகழ்வு நசரேத்தில் மரியா ஒரு நீரூற்றின் அருகே நீர் இறைத்துக் கொண்டிருக்கும்போது நடந்ததாக கருதுகிறது.

பிற்கால உரோம / பைசாந்திய திருத்தலங்கள்

தொகு

பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனால் ஒரு கட்டமைப்பு நியமிக்கப்பட்டது என்று கிறிஸ்தவ பாரம்பரியம் தெரிவிக்கிறது, அவரது தாயார் புனித எலேனா, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் தேவாலயங்களை நிறுவ உதவினார். இயேசு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு பேராலயமானது; கிறிஸ்து பிறப்பு தேவாலயம் (பிறப்பிடம்) மற்றும் புனித கல்லறை தேவாலயம் (இயேசு கிறிஸ்துவின் கல்லறை) ஆகியவை நிறுவப்பட்ட அதே நேரத்தில் நிறுவப்பட்டது. அதன் சில பதிப்புகள் 570 வாக்கில் இன்னும் இருந்ததாக அறியப்படுகிறது.[1]

சிலுவைப்போர் தேவாலயம்

தொகு

இரண்டாவது தேவாலயமானது சிலுவைப் போர்களின் போது 1102 ஆம் ஆண்டில்  கலிலேய இளவரசர் டான்கிரெட் நாசரேத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பைசண்டைன் கால தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது. சிலுவைப்போர் கால தேவாலயம் ஒருபோதும் முழுமையாக முடிக்கப்படவில்லை. வடக்கு பிரான்சைச் சேர்ந்த கலைஞர்களால் செதுக்கப்பட்டு, 1909 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து ரோமனெஸ்க் போதிகைகள், 1187 ஆம் ஆண்டில் கட்டின் போரில் சலாவுதீனின் வெற்றி பற்றிய செய்தி நகரத்தை அடைந்தபோது இன்னும் நிறுவப்படவில்லை.[2] பிரான்சிஸ்கன் சபை பாதிரியார்கள் நாசரேத்தில் தங்கி தேவாலய சேவைகளை மேற்பார்வையிட சலாவுதீன் அனுமதி அளித்தார்.[2]

1260 ஆம் ஆண்டில், பேபர்ஸ் மற்றும் அவரது மம்லூக் இராணுவம் நாசரேத் மீதான தாக்குதலின் போது தேவாலயத்தை அழித்தது.[2]

மம்லுக், ஆரம்பகால ஒட்டோமான் காலம்

தொகு

1291 ஆம் ஆண்டில் ஏக்கரின் வீழ்ச்சிக்கு முன்புவரை ஒரு சிறிய எண்ணிக்கையிலான பிரான்சிஸ்க்கான் சபையினர்களால் நாசரேத்தில் தங்க முடிந்தது. அதைத் தொடர்ந்து வந்த மூன்று நூற்றாண்டுகளில், உள்ளூர் அரசியல் சூழ்நிலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்ததை பொறுத்து பிரான்சிஸ்கன் சபையினர் நாசரேத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்துகொண்டிருந்தனர். இந்த காலகட்டத்தின் பிரான்சிஸ்கன் 1363 இல் அவர்கள் வெளியேற்றப்பட்டதையும், 1468 இல் அவர்கள் திரும்பி வந்ததையும், 1542 இல் அவர்களின் சில உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் ஆவணப்படுத்துகின்றன. பிரான்சிஸ்கன் சபையினர் ஆதரவுடன் உள்ளூர் கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த கடினமான காலகட்டத்தில் கூட புனித தளத்தை கவனித்துக்கொண்டனர்.[3]

17, 18 ஆம் நூற்றாண்டு தேவாலயங்கள்

தொகு
 
இயேசு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு பேராலயம், உட்புறம் (1925 ஆண்டு வாக்கில்)

அரேபியா சிற்றரசர் எமிர் பகர் அத்தின் 1620 ஆம் ஆண்டில் நாசரேத் மற்றும் தேவாலய இடிபாடுகளுக்குத் திரும்ப பிரான்சிஸ்கன்களுக்கு அனுமதி வழங்கினார், அந்த நேரத்தில் அவர்கள் மரியாவின் வீடு என்று போற்றப்படும் புனித குகையை மூடுவதற்கு ஒரு சிறிய கட்டமைப்பைக் கட்டினர்.[3]

1730 ஆம் ஆண்டில், தாகிர் அல்-உமர் ஒரு புதிய தேவாலயத்தை கட்ட அனுமதித்தார், இது நாசரேத் இலத்தீன் சமூகத்தின் மைய ஒன்றுகூடல் இடமாக மாறியது. இந்த தேவாலயம் 1877 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது.[3]

20 ஆம் நூற்றாண்டு பேராலயம்

தொகு

புதிய பேராலயம் கட்டுவதற்காக 1954 ஆம் ஆண்டில் பழைய தேவாலயம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. புதிய பேராலயத்தை இத்தாலிய கட்டிடக் கலைஞர் ஜியோவானி மியூசியோ வடிவமைத்தார். இஸ்ரேலிய கட்டிட நிறுவனமான சோலெல் போனே 1960–1969 ஆண்டுகளில் இந்த பேராலயத்தை காட்டியது.[4] இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் இங். ஸ்லோமோ லோபாட்டின் ஆவார், அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேராலய கட்டிட செயல்முறைக்கு தன்னை அர்ப்பணித்தார், இது உண்மையில் அவரது வாழ்க்கைத் திட்டமாகும். இது சில நேரங்களில் இத்தாலிய புருடலிசம்  என்று வகைப்படுத்தப்படும் பாணியில் கட்டப்பட்டுள்ளது.

திருத்தந்தை ஆறாம் பவுல் 1964 ஆம் ஆண்டு புனித பூமிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இந்த புதிய ஆலயத்தில் திருப்பலி கொண்டாடினார்.[5] இந்த பேராலயம் 1969 ஆம் ஆண்டு முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது.[3]

இலத்தீன் திருச்சபையால் பயன்படுத்தப்படும் இந்த ஆலயம் பிரான்சிஸ்கன் சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது கீழைத்தேய திருச்சபைகளுக்கான சபையின் மேற்பார்வையின் கீழ் மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலய கட்டிடம் அல்லது சரணாலயமாகும்.[6]

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொண்டு 2000ம் ஆண்டு பெரிய ஜூபிலியில் மார்ச் 25ம் நாள் இயேசு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார்.[7][8]

முக்கியத்துவம்

தொகு

திருச்சபை சட்டத்தின் கீழ், இந்த தேவாலயம் ஒரு சிறிய பசிலிக்காவின் அந்தஸ்தைப் பெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் கிறிஸ்தவத்தின் சில வட்டங்களில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் புனிதமாகக் கருதப்படுகிறது.[9] இந்த பேராலயம் ஒவ்வொரு ஆண்டும் பல கத்தோலிக்க, ஆங்கிலிகன் மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ பக்தர்களை ஈர்க்கிறது.

ஆலயத்தின் தோற்றம்

தொகு

தற்போதைய கத்தோலிக்க ஆலயம் 1969 ஆம் ஆண்டில் பைசாந்திய, சிலுவைப்போர் மற்றும் இஸ்ரேலிய கால தேவாலயங்களின் முந்தைய தளத்தில் மீது கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடமாகும்.

கீழ் தேவாலயம்

தொகு

கீழ்தளம் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு குகையை கொண்டுள்ளது, இது பல கிறிஸ்தவர்களால் மரியாவின் சிறுவயது இல்லத்தின் மீதங்களை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.[10]

மேல் தேவாலயம்

தொகு

மேல்தளத்தில் மரியாவின் பல படங்கள் உள்ளன, முக்கியமாக மொசைக்குகள், ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க கத்தோலிக்க மக்கள்தொகை கொண்ட வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவை.

மரியன்னையின் புகைப்படங்கள் கொண்ட முற்றத்து காட்சிக்கூடம்

தொகு

பேராலயத்தின் முற்றத்தைச் சுற்றியுள்ள சுவர்களில், பல்வேறு நாடுகளில் மிக முக்கியமான மரியன்னை பக்திகளைக் குறிக்கும் சின்னங்கள் (முக்கியமாக சித்திரவடிவு, மற்றும் சில பீங்கான் ஓடுகளால் செய்யப்பட்டவை) கொண்ட ஒரு காட்சியகம் உள்ளது. ஸ்பெயினில் இருந்து சில முக்கிய மரியன்னை வணக்கத்தின் படங்களாவன: கேண்டேலாரியாவின் கன்னி மரியா, கேனரி தீவுகளின் பாதுகாவலி, மோண்ட்சேர்ரட்டின் கன்னி மரியா, காத்தலோனியாவின் பாதுகாவலி, கைவிடப்பட்டவர்கள் கன்னி மரியா, வாலேன்சியாவின் பாதுகாவலி, குவாதலூப் அன்னை, எஸ்ட்ரேமதுராவின் பாதுகாவலி.[11][12]

திருப்பலி ஏற்பாடுகள்

தொகு

நவம்பர் 2018 நிலவரப்படி, கத்தோலிக்க திருப்பலிகள் குகை, மேல் பேராலயம் மற்றும் அருகிலுள்ள புனித யோசேப்பு தேவாலயத்தில் அரபு, ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வழங்கப்படுகின்றன.

உசாத்துணை

தொகு
  1. Meistermann, Barnabas. "Nazareth." The Catholic Encyclopedia Vol. 10. New York: Robert Appleton Company, 1911. 4 February 2021   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. 2.0 2.1 2.2 Emmett, 1995, p. 100.
  3. 3.0 3.1 3.2 3.3 Emmett, 1995, p. 101.
  4. Schieller, Eli. Nazareth and its sites, Ariel, 1982
  5. "The Pilgrimage of Pope Paul the Sixth", Life (magazine), January 17, 1964, pp.18–29
  6. "Roman Curia". The Spiritual Life. பார்க்கப்பட்ட நாள் November 20, 2020.
  7. "Jubilee Pilgrimage of His Holiness John Paul II to the Holy Land (March 20-26, 2000)". Vatican archives. பார்க்கப்பட்ட நாள் November 20, 2020.
  8. "Pray the Rosary with St. John Paul II, Jubilee pilgrimage to Rosary sites". பார்க்கப்பட்ட நாள் November 20, 2020.
  9. Norms for the Granting of the Title of Minor Basilica பரணிடப்பட்டது 2016-10-09 at the வந்தவழி இயந்திரம், Adoremus Bulletin, December 31, 2007. Adoremus, Society for the Renewal of the Sacred Liturgy. Retrieved 9 April 2020.
  10. "Basilica of the Annunciation", Nazareth Cultural and Tourism Association
  11. Cristianos en Tierra Santa பரணிடப்பட்டது 2014-12-05 at the வந்தவழி இயந்திரம்
  12. La patrona extremeña será entronizada en la basílica de la Anunciación

துணைநூல்

தொகு

மேலதிக வாசிப்பு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Church of the Annunciation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.