மு. ராஜேந்திரன்
டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப (Dr. M. Rajendran IAS) இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்திலிருந்தே தன் தீவிரமான அரசாங்கப் பணிகளுடன், இலக்கியம் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டு இவர் உருவாக்கும் வரலாற்று நூல்கள் எளிமையான மொழி நடையில் வரலாற்று ஆவணங்களை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கி வருகின்றன. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2]
டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப Dr. M. Rajendran IAS | |
---|---|
பிறப்பு | 6 May 1959 (age 63) வடகரை, திருமங்கலம், மதுரை |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | வரலாறு, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு |
கல்வி கற்ற இடங்கள் | மதுரை, தஞ்சாவூர் |
விருதுகள் | சாகித்ய அகாடமி விருது, டான்சிறீ சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, சிலம்புச் செல்வர் இலக்கிய விருது, இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது உள்ளிட்ட பல அறக்கட்டளை விருதுகள். |
பிள்ளைகள் | 2 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் தாலுக்கா வடகரை கிராமத்தில் ராஜேந்திரன் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்து இந்திய ஆட்சிப்பணியாளராக உயர்ந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
இலக்கியப் பணிகள்
தொகுதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த 1500 கல்வெட்டுகளை பணியெடுக்கும் பணியை துவக்கி வைத்த பெருமை இவருக்கு உரியதாகும். வரலாற்றுச் செப்பேடுகள் சொல்லும் செய்திகளை அனைத்து நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் தொடர்ந்து எழுதிவருகிறார். சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் முதலியவை தொடர்பான இவருடைய நூல்கள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சிகளாக அமைந்தவையாகும்.
அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இவருடைய மூதாதையரின் கதையில் இருந்து தொடங்கி, மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’[3] என்ற தன் வரலாற்று நூலாக எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வில் இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.[4]
1801ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் நடந்த காளையார் கோயில் போரை மையமாக வைத்து,1801 என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார்.[5] 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வு இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சியில் முதன்முதலில் மன்னர்களை நாடு கடத்துதல், காளையார் கோயில் போரில்தான் தொடங்கியது. அப்போது சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவரையும் அவருடன் போராளிகள் 71 பேரையும், தங்களின் வெற்றிக்குப் பிறகு பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இப்போராட்டத்தினை மையமாகக் கொண்டு ‘காலா பாணி’ என்ற நாவலை இவர் எழுதியுள்ளார்.[6] 1857 சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்கும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வரலாறு தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த 1801 போர்களிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதால் காலா பாணி நூல் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நூலாக உள்ளது.
எழுதிய நூல்கள்
தொகுநாவல்
தொகு- காலா பாணி[7]
- 1801
- வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு
சிறுகதை
தொகு- பாதாளி
கட்டுரை
தொகு- வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்
- கம்பலை முதல் (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
பயண நூல்
தொகு- யானைகளின் கடைசி தேசம்
பணி அனுபவம்
தொகு- செயலே சிறந்த சொல்
செப்பேடுகள்
தொகு- பல்லவர் காலச் செப்பேடுகள்
- சேரர் காலச் செப்பேடுகள்
- பாண்டியர் காலச் செப்பேடுகள்
- சோழர் காலச் செப்பேடுகள்
ஆய்வு நூல்
தொகு- சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
பதிப்பித்த நூல்
தொகு- ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படிசேதிக்குறிப்பு 12 தொகுதிகள் (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
தொகுத்த நூல்கள்
தொகு- வந்தவாசிப் போர் - 250 (கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து)
- திருவண்ணாமலை
- மகாமகம்
- காவிரி தந்த கலைச் செல்வம்
மொழி பெயர்ப்பு
தொகு- இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை (ஆங்கிலத்திலிருந்து)
இலக்கியப் பணி விருதுகள்
தொகு1801 – நூலுக்காக
தொகு- மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர்(ரூ 7 லட்சம்)[8]
- கவிதை உறவு - முதல் பரிசு
- கவிமுகில் அறக்கட்டளை பரிசு
- தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது
வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக
தொகு- எசு.ஆர்.எம் பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. பரிசுத் தொகை ரூ. 1,50,000
- கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது
பாண்டியர் காலச் செப்பேடுகள் நூலுக்காக
தொகு- தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு
சோழர் காலச் செப்பேடுகள் நூலுக்காக
தொகு- கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது
- கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது.
- கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது
சமூகப் பணிகள்
தொகுதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த நேரத்தில் கவுத்தி-வேடியப்பன் மலைகளைத் தனியாருக்கு 99 ஆண்டுகள் குத்தகை விட இருந்த நிகழ்வை மக்களிடம் கருத்துக் கேட்டறிந்து, அவர்கள் சக்தியுடன் தடுத்து நிறுத்தினார்.[9][10][11]
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகளின் பசுமையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 10 இலட்சம் விதைகளை திருகிறக்கை வானூர்தி மூலம் தூவினார்.
- போக்குவரத்திற்கு வசதியில்லாமலிருந்த சவ்வாது மலையின் 55 கிலோமீட்டர் மலைப்பாதையை சீரமைத்து போக்குவரத்திற்கு உகந்த பாதையாக மாற்றிக் கொடுத்தார்.
சமூகப்பணி விருதுகள்
தொகு- தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 110 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2 கோடி ரூபாய் கிரிஷி கர்மான் விருது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் 19, பிப்ரவரி 2015 அன்று பெற்றார்.
- தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 121 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2 கோடி ரூபாய் கிரிஷி கர்மான் விருது (2013-2014) மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பெற்றார்.
- தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 137 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2015 -2016 ஆம் ஆண்டிற்கான ரூ.5 கோடி பணப் பரிசுடன் கிருஷி கர்மான் விருதினைப் பெற்றார்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 2011-ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரிடம் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- திருவண்ணாமலை ஆட்சியராக இருந்தபோது 2010-ஆம் ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப் படுத்தியதற்காக இந்தியாவில் உள்ள 650 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டமாகும். இச்சிறப்பிற்காக வழங்கப்பட்ட விருதை மாண்புமிகு பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோரிடம் இருந்து பெற்றார்.
- மின் ஆளுமையை (e-governance) விவசாயத் துறையில் சிறப்பாக பயன்படுத்தியதற்காக தங்க விருதும் ரூ.2 லட்சம் ரொக்கம் பரிசும் துறையின் மற்ற 5 அலுவலர்களோடு சேர்ந்து பெற்றார்.
- 2001 - ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை தனி அலுவலராக இருந்தபோது தொழில் நுட்பத் திறமைக்காக இந்திய அளவில் முதல் பரிசும், கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாம் பரிசும் பெற்றார்.
வகிக்கும் பதவிகள்
தொகு- தலைவர்- தமிழக - கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு.[12]
- தலைவர் – மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை, கம்பம்.
- தேசியத் தலைவர் – இந்திய மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம்
- தலைவர் – தமிழ்நாடு ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள் சங்கம்.
வகித்த பதவிகள்
தொகு- மேலாண்மை இயக்குநர், சேலம் சேகோசெர்வ்.
- ஆணையர்- வேளாண்மைத் துறை, சென்னை.
- ஆணையர்-பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
- ஆணையர், ஒழுங்கு நடவடிக்கைகள், சென்னை
- மாவட்ட ஆட்சித் தலைவர், திருவண்ணாமலை
- உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை
- இணை மேலாண்மை இயக்குநர், ஆவின், சென்னை
- மாவட்ட வருவாய் அலுவலர், தேனி
- தனி அலுவலர், (கோயில் நிலங்கள்) இந்து சமய அறநிலையத் துறை
- தனி அலுவலர், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை
- தனி அலுவலர், தஞ்சாவூர் நகராட்சி
- மாவட்ட வழங்கல் அலுவலர், தஞ்சாவூர்
- வருவாய் கோட்ட ஆட்சியர், ராணிப்பேட்டை மற்றும் தஞ்சாவூர்
- கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் - திருவள்ளூர்
- மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞர் பணி
மேற்கோள்கள்
தொகு- ↑ Codingest (2022-12-22). ""காலா பாணி " நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிப்பு". Malaimurasu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.
- ↑ "'காலா பாணி' நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.
- ↑ "விருதாளர்கள்-2017". www.srmist.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
{{cite web}}
: Text "Tamil Perayam" ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ http://www.sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf
- ↑ Tracking Indian Communities : An award for the love of global Tamil writing - https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/an-award-for-the-love-of-global-tamil-writing/
- ↑ "முதலுக்கும் முதலான இந்திய சுதந்திரப் போர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ வெ.நீலகண்டன். "படிப்பறை - காலா பாணி". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ நவ 02, பதிவு செய்த நாள்:; 2018 04:28. "தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மலேசிய இலக்கிய விருது - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "தமிழ்நாட்டில் இரண்டு மலைகளைக் காப்பாற்றிய மக்கள் சக்தி". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ "किस तरह लोगों ने दो पहाड़ों को रेत बनने से बचाया". BBC News हिंदी (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ "ఇరవై ఊళ్లు కలిసి రెండు కొండలను కాపాడుకున్నాయి.. ఈ పాత కథ మనం ఇప్పుడు ఎందుకు తెలుసుకోవాలంటే..." BBC News తెలుగు (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ Tamilnadu-Kerala Kannagi temple federation created -https://www.vikatan.com/spiritual/temples/128867-tamilnadukerala-kannagi-temple-federation-created